Shuru
Apke Nagar Ki App…
கோட்டூர்கிராமத்தில் 20 ஆம்ஆண்டு மாபெரும் கன்று விடும் விழா கிருஷ்ணகிரி மாவட்டம் பெலவர்த்தி பஞ்சாயத்து கோட்டூர் கிராமத்தில் 20ஆம்ஆண்டு மாபெரும் கன்று விடும் விழாவில் 250 கன்றுகள் பங்கேற்பு,
FAYAZ
கோட்டூர்கிராமத்தில் 20 ஆம்ஆண்டு மாபெரும் கன்று விடும் விழா கிருஷ்ணகிரி மாவட்டம் பெலவர்த்தி பஞ்சாயத்து கோட்டூர் கிராமத்தில் 20ஆம்ஆண்டு மாபெரும் கன்று விடும் விழாவில் 250 கன்றுகள் பங்கேற்பு,
More news from தமிழ்நாடு and nearby areas
- தருமபுரி அடுத்த அதியமான்கோட்டை தட்சணகாசி கால பைரவர் கோயிலில் இன்று தட்சணகாசி கால பைரவருக்கு அஷ்ட பைரவ யாகம், அஷ்டலஷ்மி யாகம், தனகார்சன குபேர யாகம், அதிருந்ர யாகம் உள்ளிட்ட பல்வேறு யாகங்கள் நடந்தன. தொடர்ந்து, 64 வகையான அபிஷேகங்கள், 1,008 அர்ச்சனை, 28 ஆகம பூஜைகள் நடந்தன. அதை தொடர்ந்து தட்சணகாசி காலபைரவர் தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு விபூதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின் உற்சவ பைரவர் கோவிலை சுற்றி தேரில் வலம் வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாம்பல் பூசணியில் தீபம் ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து இரவு 12:00 மணிக்கு 1,008 கிலோ மிளகாய் வற்றல் கொண்டு யாக பூஜை நடைபெற உள்ளது. இதில், தமிழகம் மற்றும் கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.1
- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வீரவர்கோயில் பகுதியில் பெங்களூர் சென்னை ரயில்வே மார்க்கத்தின் அருகில் புதர் போல் இருந்த மஞ்சுபுல் தீப்பற்றி எரிவதை அறிந்த அப்பகுதி மக்கள் ரயில்வே துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர் தகவலின் பேரில் ரயில்வே போலீசார் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்ததின் பேரில் ஆம்பூர் தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று ரயில் தண்டவாளத்தின் அருகில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீர் பீய்ச்சியடித்து கட்டுக்குள் கொண்டு வந்தனர் தண்டவாளத்தின் அருகில் உயர் மின்னழுத்த கம்பிகள் செல்வதால் தீயணைப்புத் துறையினர் தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது மேலும் அதே பகுதியில் ஏற்கனவே தண்டவாளத்தின் மீது கற்கள் வைத்து ரயிலை கவிழ்க்க சதி திட்டம் தீட்டப்பட்டது மற்றொரு முறை இதே போன்று சமூக விரோதிகளால் தண்டவாளம் அருகில் உள்ள மஞ்சுபுல் தீயிட்டு கொளுத்தியது போன்ற தொடர் சமூக விரோத செயல்கள் அப்பகுதியில் நடைபெற்று வருவதால் ரயில்வே காவல் துறையினர் மற்றும் ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்1
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி தருமபுரி மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக துனை ராணுவ படையினர் அணிவகுப்பு எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் துனை ராணுவ படையினர் மற்றும் காவல்துறையினரின் அணிவகுப்பு நடைபெற்றது தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தருமபுரி கோட்டாச்சியர் திருமதி காயத்ரி கொடியசைத்து இப்பேரணியை துவக்கிவைத்தார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் துவங்கிய இப்பேரணி செந்தில் நகர், இலக்கியம்பட்டி, அரசு மருத்துவமனை, நேதாஜி சாலைவழியாக நான்கு ரோடு வரை சென்று மாவட்ட விளையாட்டு மைதானம் சென்று நிறைவடைந்தது இப்பேரணியில் கமேண்டோ தலைமையிலான துனை ராணுவ படையினர் மற்றும் காவல்துறையினர் 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஊர்வலமாக சென்றனர்1
- எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலை ஓரத்தில் ஆங்காங்கே நடத்தப்படும் இறைச்சி கடைகளை ஒரே இடத்தில் நடத்த வேண்டும் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் வைத்த கோரிக்கை... அனைவரது கோரிக்கையும் ஏற்றுக்கொண்டு ஒருமனதாக நிறைவேற்றலாம் என ஒத்துழைப்பு வழங்கிய நகர மன்ற தலைவர்... சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சியில் மன்றக் கூட்டம் நகர்மன்ற தலைவர் பாஷா தலைமையில் நடைபெற்றது.இதில் நகராட்சி ஆணையாளர் கோபிநாத் , திமுக, அதிமுக நகர மன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்... இந்த நகர்மன்ற கூட்டத்தில் நகராட்சி முழுவதும் உள்ள பகுதிகளில் மின்விளக்கு பராமரிப்பு, தார் சாலை, சாக்கடை வசதி முறையாக செய்யப்படவில்லை எனக் கூறி அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனால் மன்றக் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது... மேலும் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட சாலையோர பகுதிகளில் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள இறைச்சி கடைகளை அகற்றி ஒரு பொதுவான இடத்தை தேர்வு செய்து அங்கு இறைச்சி கடைகளை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிமுக மன்ற உறுப்பினர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஒருமனதாக நிறைவேற்ற ஒத்துழைப்பு வழங்குமாறு நகர மன்ற தலைவர் கேட்டுக்கொண்டார்... அதனை தொடர்ந்து 82 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது...1
- நாமக்கல் மாவட்டம் வையப்பமலையில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள தார் சாலையை நேற்று மார்ச் 10 ஆம் தேதி ஸ்டாலின் முதல்வர் அவர்கள் காணொளி வாயிலாக திறந்து வைத்தார் அதனை தொடர்ந்து மலைப் பாதை வழியாக அமைச்சர் மதிவேந்தன், ஈஸ்வரன் எம் எல் ஏ, ஊர் பொதுமக்கள் ஆகியோர் பாலசுப்பரமணியன் சுவாமி தரிசனத்தை காண்பதற்கு பசு கன்றுடன் மேளதாளத்துடன் யாத்திரை செய்தனர்1
- Post by Vinayagam Vinayagam1
- கிருஷ்ணகிரி அருகே உள்ள தானம்பட்டி கிராமத்தில் 5- ஆம் ஆண்டுமாபெரும் எருது விடும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.1
- திருப்பத்தூர் மாவட்டம் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஐக்கிய சட்ட உரிமைகள் கழகம் சார்பில் மகளிர் மாநில மாநாடு திருப்பத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இந்த நிகழ்வினை இந்த அமைப்பின் மண்டல செயலாளர் புனித வெள்ளி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த மகளிர் மாநாட்டில் மகளிரை போற்றும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அடித்தட்டு மட்டத்திலிருந்து தன் சுய திறமையை பயன்படுத்தி சொந்த உழைப்பில் முன்னேறிய மகளிரையும் திருப்பத்தூர் மாவட்டத்தில் விளையாட்டு துறையில் மாநில மற்றும் உலக அரங்கில் சாதனை புரிந்த வீராங்கனைகளை பெருமைப்படுத்தும் விதமாகவும் உள்ளாட்சித் துறையில் நல்லாட்சி புரிந்த ஒன்றிய மற்றும் நகர மன்ற தலைவர்களையும் பெருமைப்படுத்தியும் துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை மற்றும் கையுறை முக கவசம் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை கொடுத்தும் மகளிரை பெருமைப்படுத்தும் விதமாக விழா நடைபெற்றது இந்த விழாவினை ஐக்கிய சட்ட உரிமைகள் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா சங்கர் வரவேற்புரையாற்றினார் இந்நிகழ்ச்சிக்கு மாநில அமைப்பாளர்கள் திருநாவுக்கரசு டிவிஎஸ் சம்பத்குமார் மாவட்ட பொறுப்பாளர்கள் வெங்கடேசன் ஞானசேகரன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர் மாநாட்டிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக அமைப்பின் தலைவர் ராஜ்கமல் மற்றும் அமைப்பின் நிறுவன பொதுச் செயலாளர் A நாகராஜன் மற்றும் மாநில பொறுப்பாளர்கள் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர் இறுதியில் வந்திருந்த அனைத்து மகளிர் உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் என 500 க்கும் மேற்பட்டோருக்கு மதிய விருந்து வழங்கப்பட்டது1
- தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேரூ ராட்சியிலுள்ள காளியம்மன் கோவில் தெரு, சம்புவ ராயன் கோவில் தெரு, மதுரை வீரன் கோவில் தெருக்களில் நேற்று மாலை சிறுவர், சிறுமியர் விளை யாடி அங்கு கொண்டிருந்தனர். வந்த வெறிநாய் ஒன்று, விளையாடி கொண் டிருந்த சிறுவர்கள் சூரியன், 7, ரித்திக், 7, மவுனீஸ், 14, மகிழன், 5, மற்றும் சிறுமி மிதுனா, 11, ஆகியோரை தலை, முகம், கை, கால் உள் ளிட்ட இடங்களில் கடித்தது. சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அருகில் இருந்த வர்கள் நாயை விரட்டினர். காயமடைந்த சிறுவர், சிறு மியர் பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டனர். இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: பாப்பி ரெட்டிப்பட்டி பேரூராட்சி பகுதிகளில் வெறிநாய் தொல்லை அதிகமாக உள் ளது. ஏற்கனவே பலரை, நாய் கடித்த சம்பவம் நடந் துள்ளது. தொடர்ந்து வெறி நாய்கள் தொல்லை அதி கரித்துள்ளது குறித்து பல முறை புகார் தெரிவித்தும் பேரூராட்சி எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு. அவர்கள் கூறினர்.1