Shuru
Apke Nagar Ki App…
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
Vinayagam Vinayagam
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
- NagarajN Mதுறையூர், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு14 hrs ago
- NagarajN Mதுறையூர், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு14 hrs ago
More news from தமிழ்நாடு and nearby areas
- ஸ்ரீபெரும்புதூர். ஸ்ரீபெரும்புதூரில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய நகரமன்ற தலைவர் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் நகராட்சியில் இயங்கி வரும் நியாய விலைக் கடைகளில் இன்று தமிழக அரசால் பொங்கல் பண்டிகை ஒட்டி வழங்கப்படும் ரூ.3ஆயிரம் ரொக்கப் பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொப்பினை குடும்ப அட்டைதாரர்களுக்கு ஸ்ரீபெரும்புதூர் நகரமன்ற தலைவர் சாந்தி சதீஷ்குமார் வழங்கினார்.இந்நிகழ்வின் போது ஸ்ரீபெரும்புதூர் நகர திமுக செயலாளர் சதீஷ்குமார்,வார்டு கவுன்சிலர்கள்,திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.4
- காரிமங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பணை தொழிலாளர்களை தரதரவென இழுத்து சென்ற போலீசார்1
- பாப்பாரப்பட்டியில் ஜனநாயகன் திரைப்பட வெளியீட்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற ரத்ததான முகாமில் 50க்கும் மேற்பட்ட தவெக-வினர் ரத்ததானம். தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பகுதியைச் சேர்ந்த தவெக நிர்வாகி ரமேஷ் என்பவர் கடந்த சில வருடங்களாக ரத்ததானம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை செய்து வருகிறார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்பட வெளியீட்டு விழாவை முன்னிட்டு இன்று பாப்பாரப்பட்டியில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த ரத்ததான முகாமில் தவெக தொண்டர்கள் கலந்து கொண்டு 50-க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் வழங்கினர். மேலும் தவெக தலைவர் விஜய் கட்சி அரசியல் பயணத்தை தொடங்கியதிலிருந்து திரைப்படத்தில் நடிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளது எங்களுக்கு மிகுந்த வேதனையாக உள்ளது. ஆனாலும் தலைவர் எடுத்துள்ள முடிவு மற்றும் அவர் செல்லும் பாதையில் துணை நின்று அவர் பயணம் வெற்றி பெற உறுதியாக இருப்போம் என தொண்டர்கள் தெரிவித்தனர். இந்த ரத்ததான முகாமில் தவெக நிர்வாகிகள் தொண்டர்கள், இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.1
- காரிமங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பணை தொழிலாளர்கள் தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த ஏ. சப்பானிபட்டியில் கடந்த 4ம் தேதி பணை தொழிலாளர்கள் கள் பொங்கல் திருவிழா நடத்தினர். அப்போது பணை மரம் ஏறிகள் கள் இறக்கி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கள் அருந்தி கள் ஒரு இயற்கை மருந்து, இயற்கை உணவு இதனால் உடலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பொங்கல் கள் திருவிழா நடத்தியது தொடர்பாக சுரேஷ், சரவணன், சாமிநாதன், மாது உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து காவல் நிலையத்திற்க்கு இன்று கொண்டு வந்தனர். இதனை கண்டித்து 200க்கும் மேற்பட்ட பணை தொழிலாளர்கள் காரிமங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு விடுதலை செய், விடுதலை செய், போடாதே, போடாதே பொய் வழக்கு போடாதே, கள் எங்கள் உணவு, கள் எங்கள் உரிமை என்று கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.1
- ஆத்தூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி1
- சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள பூலாம்பட்டியில் விசைப்படகு போக்குவரத்து படித்துறை பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளது. விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் படித்துறை பராமரிப்பு பணியினை விரைந்து முடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- ஸ்ரீபெரும்புதூர். ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்திற்கு தமிழ்நாடு மாநில அளவிலான பாதுகாப்பு விருது தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் C.V. கணேசன், தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் ஆனந்த்துடன் இணைந்து, தமிழ்நாடு மாநில அளவிலான பாதுகாப்பு விருதை HMIL நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவு துணைத் தலைவர் M.S.முகுந்தன் மற்றும் பாதுகாப்பு மற்றும் நலவாழ்வுத் துறை இணைத் துணைத் தலைவர் R.M.செந்தில்குமார் ஆகியோருக்கு வழங்கினர்.2
- தர்மபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் மாபெரும் விளையாட்டுப் போட்டிகள் சமூக நீதிக்கான திராவிட பொங்கல் திருவிழா தர்மபுரி எம்பி ஆ மணி போட்டியை தொடங்கி வைத்தனர் தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக கழகம் தர்மபுரி நகர கழகம் கிழக்கு மேற்கு தருமபுரி மேற்கு ஒன்றியம் சார்பில் நடத்தும் மாபெரும் விளையாட்டுப் போட்டிகள் சமூக நீதிக்கான திராவிட பொங்கல் திருவிழா மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வாலிபால் வாலிபால் கபடி தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் அ மணி அவர்கள் போட்டியினை தொடங்கி வைத்தனர் இந்த போட்டியில் முதல் பரிசு 15 ஆயிரம் ரூபாய் இரண்டாம் பரிசு பத்தாயிரம் ரூபாய் மூன்றாம் பரிசு ரூ.5000 வழங்கப்படுகிறது இந்த போட்டி இரண்டு நாள் நடைபெறுகிறது இந்த போட்டியில் 20 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகிறது இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடகம் சுப்பிரமணி .நகர செயலாளர். நாட்டான் மாது. கௌதம். தர்மபுரி ஒன்றிய கழக செயலாளர் காவேரி. நகர மன்ற உறுப்பினர்கள் மாதேஸ்வரன் ஜெகன். முல்லைவேந்தன் சுருளிராஜன். இளையராணி மாவட்ட இணை அமைப்பாளர் அசோக்குமார் கோவிந்தன். முன்னாள் நகர செயலாளர் அன்பழகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்1