காரிமங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பணை தொழிலாளர்கள் தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த ஏ. சப்பானிபட்டியில் கடந்த 4ம் தேதி பணை தொழிலாளர்கள் கள் பொங்கல் திருவிழா நடத்தினர். அப்போது பணை மரம் ஏறிகள் கள் இறக்கி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கள் அருந்தி கள் ஒரு இயற்கை மருந்து, இயற்கை உணவு இதனால் உடலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பொங்கல் கள் திருவிழா நடத்தியது தொடர்பாக சுரேஷ், சரவணன், சாமிநாதன், மாது உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து காவல் நிலையத்திற்க்கு இன்று கொண்டு வந்தனர். இதனை கண்டித்து 200க்கும் மேற்பட்ட பணை தொழிலாளர்கள் காரிமங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு விடுதலை செய், விடுதலை செய், போடாதே, போடாதே பொய் வழக்கு போடாதே, கள் எங்கள் உணவு, கள் எங்கள் உரிமை என்று கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
காரிமங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பணை தொழிலாளர்கள் தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த ஏ. சப்பானிபட்டியில் கடந்த 4ம் தேதி பணை தொழிலாளர்கள் கள் பொங்கல் திருவிழா நடத்தினர். அப்போது பணை மரம் ஏறிகள் கள் இறக்கி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கள் அருந்தி கள் ஒரு இயற்கை மருந்து, இயற்கை உணவு இதனால் உடலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பொங்கல் கள் திருவிழா நடத்தியது தொடர்பாக சுரேஷ், சரவணன், சாமிநாதன், மாது உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து காவல் நிலையத்திற்க்கு இன்று கொண்டு வந்தனர். இதனை கண்டித்து 200க்கும் மேற்பட்ட பணை தொழிலாளர்கள் காரிமங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு விடுதலை செய், விடுதலை செய், போடாதே, போடாதே பொய் வழக்கு போடாதே, கள் எங்கள் உணவு, கள் எங்கள் உரிமை என்று கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
- பொம்மிடியில் 30 லட்சத்திற்கு வெற்றிலை விற்பனை பொம்மிடியில் வியாழக்கிழமை நாட்களில் வெற்றிலை விற்பனைக்காக மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற வெற்றிலை வாரச்சந்தை நடைபெறுகிறது நேற்று ஜன 08 வியாழக்கிழமை நடைபெற்ற சந்தையில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் & வியாபாரிகள் வந்திருந்தனர் 128 கட்டுகளை கொண்ட ஒரு மூட்டை வெற்றிலை ரூ.10,000 - ரூ.20,000 வரை என 200 வெற்றிலை மூட்டைகள் 30 லட்சத்திற்கும் கடந்த வாரத்தை விட மூட்டைக்கு 2000 ரூபாய் அதிகரித்து விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்1
- காரிமங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பணை தொழிலாளர்களை தரதரவென இழுத்து சென்ற போலீசார்1
- கல்லாவி அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்குமார் உத்தரவின் பெயரில் மாவட்ட கல்வி முதன்மை அலுவலர் மதன்குமார் ஆலோசனையில் ஊத்தங்கரை அடுத்த கல்லாவி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கல்லாவி அரசு பள்ளி வளாகத்தில் தொடங்கப்பட்ட இப்பேரணி கல்லாவி பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக பதாகைகள் ஏந்தி மது அருந்துவதனால் ஏற்படும் தீமைகளை பற்றி பொதுமக்களிடையே எடுத்துரைத்து கோசமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் முன்னதாக பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் சிவசண்முகவேல், காவல் உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ், விழிப்புணர்வு ஒருங்கிணைப்பாளர்கள் ஆசிரியர்கள் கருணாநிதி, ஜெயச்சந்திரன், மருத்துவர் கௌதமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள் நிகழ்ச்சியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள 315 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.1
- எடப்பாடி நகரத்தில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி சிறப்பு கூட்டம்... நாடாளுமன்ற உறுப்பினர் வீடு வீடாக சென்று தொண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு. சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி சிறப்பு கூட்டம் நடந்தது. இதில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி கலந்து கொண்டு பேசினார். எடப்பாடி நகர திமுக சார்பில் எடப்பாடி நகரத்தில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி சிறப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.எம்.செல்வகணபதி தலைமை வகித்து பேசினார். நாடாளுமன்ற உறுப்பினர் பேசுகையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் நிர்வாகிகள் எவ்வாறு செயல்பட வேண்டும், பொதுமக்களிடம் எவ்வாறு எடுத்துக் கூறி விழிப்புணர்வு செய்ய வேண்டும், திமுக அரசு செய்த சாதனைகளை எவ்வாறு பொதுமக்களிடம் எடுத்துக் கூற வேண்டும் என்று பல்வேறு ஆலோசனைகளை நிர்வாகிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் வழங்கினார். இதனைத் தொடர்ந்து எடப்பாடி நகரப் பகுதியில் உள்ள வீடுகளில் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி திமுக அரசு செய்த சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி விழிப்புணர்வு செய்தார். இதில் மாவட்ட துணைச் செயலாளர் சம்பத்குமார், எடப்பாடி நகர செயலாளர் பாஷா மற்றும் திமுக நிர்வாகிகள்,தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்...1
- கரூர் மாவட்ட திமுக செயலாளர் வி. செந்தில் பாலாஜி ஆணைக்கிணங்க, நாளை மறுநாள்(11/01/29) நடைபெறும் திமுக திராவிட பொங்கல் சமத்துவ விளையாட்டு போட்டி நடைபெறும் இடமான தமிழ் நகரில் விளையாட்டு மைதானத்தை இன்று தாந்தோணி மேற்கு ஒன்றிய செயலாளர் கோயம்பள்ளி பாஸ்கர் தலைமையில் பணியாட்கள் மற்றும் பொக்லைன் இயந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.1
- Post by சந்திரசேகர். D1
- முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு 10வயதிற்குட்பட்ட ஆண் பெண் பிள்ளைகளுக்கு தபால் அலுவலகத்தில் சேமிப்பு திட்டம் கணக்கினை அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ தொடங்கி பெற்றோரிடம் வழங்கினார். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாரண்டஅள்ளியில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் அம்மாவின் பிறந்தநாளையொட்டி 10வயதிற்குட்பட்ட ஆண் மற்றும் பெண் பிள்ளைகளுக்கு தன் சொந்த பணத்திலிருந்து தபால் அலுவலகத்தில் 444 ஆண் பிள்ளைகளுக்கு ரூபாய் 500 வீதம் செல்வ மகன் சேமிப்பு திட்டம் மற்றும் 159 பெண் பிள்ளைகளுக்கு ரூபாய் 250 வீதம் செல்வமகள் சேமிப்பு திட்டம் கணக்கினை அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் மாவட்ட கழக செயலாளர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்து. இன்று மாரண்டஅள்ளியில் ஆண் மற்றும் பெண் பிள்ளைகளின் பெற்றோரிடம் கணக்கு புத்தகத்தை வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட அவைத்தலைவர் தொ.மு.நாகராஜன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கே.வி.ரங்கநாதன், ஒன்றிய செயலாளர்கள் வழக்கறிஞர் செந்தில் கோபால்,செல்வராஜ்,செந்தில்குமார், மாரண்டஅள்ளி நகர செயலாளர் கோவிந்தன்,பாலக்கோடு நகர செயலாளர் ராஜா, தகவல் தொழில்நுட்ப மாவட்ட செயலாளர் கோவிந்தசாமி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.1
- தர்மபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் மாபெரும் விளையாட்டுப் போட்டிகள் சமூக நீதிக்கான திராவிட பொங்கல் திருவிழா தர்மபுரி எம்பி ஆ மணி போட்டியை தொடங்கி வைத்தனர் தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக கழகம் தர்மபுரி நகர கழகம் கிழக்கு மேற்கு தருமபுரி மேற்கு ஒன்றியம் சார்பில் நடத்தும் மாபெரும் விளையாட்டுப் போட்டிகள் சமூக நீதிக்கான திராவிட பொங்கல் திருவிழா மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வாலிபால் வாலிபால் கபடி தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் அ மணி அவர்கள் போட்டியினை தொடங்கி வைத்தனர் இந்த போட்டியில் முதல் பரிசு 15 ஆயிரம் ரூபாய் இரண்டாம் பரிசு பத்தாயிரம் ரூபாய் மூன்றாம் பரிசு ரூ.5000 வழங்கப்படுகிறது இந்த போட்டி இரண்டு நாள் நடைபெறுகிறது இந்த போட்டியில் 20 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகிறது இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடகம் சுப்பிரமணி .நகர செயலாளர். நாட்டான் மாது. கௌதம். தர்மபுரி ஒன்றிய கழக செயலாளர் காவேரி. நகர மன்ற உறுப்பினர்கள் மாதேஸ்வரன் ஜெகன். முல்லைவேந்தன் சுருளிராஜன். இளையராணி மாவட்ட இணை அமைப்பாளர் அசோக்குமார் கோவிந்தன். முன்னாள் நகர செயலாளர் அன்பழகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1