Shuru
Apke Nagar Ki App…
பொம்மிடியில் 30 லட்சத்திற்கு வெற்றிலை விற்பனை பொம்மிடியில் வியாழக்கிழமை நாட்களில் வெற்றிலை விற்பனைக்காக மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற வெற்றிலை வாரச்சந்தை நடைபெறுகிறது நேற்று ஜன 08 வியாழக்கிழமை நடைபெற்ற சந்தையில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் & வியாபாரிகள் வந்திருந்தனர் 128 கட்டுகளை கொண்ட ஒரு மூட்டை வெற்றிலை ரூ.10,000 - ரூ.20,000 வரை என 200 வெற்றிலை மூட்டைகள் 30 லட்சத்திற்கும் கடந்த வாரத்தை விட மூட்டைக்கு 2000 ரூபாய் அதிகரித்து விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்
Raja
பொம்மிடியில் 30 லட்சத்திற்கு வெற்றிலை விற்பனை பொம்மிடியில் வியாழக்கிழமை நாட்களில் வெற்றிலை விற்பனைக்காக மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற வெற்றிலை வாரச்சந்தை நடைபெறுகிறது நேற்று ஜன 08 வியாழக்கிழமை நடைபெற்ற சந்தையில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் & வியாபாரிகள் வந்திருந்தனர் 128 கட்டுகளை கொண்ட ஒரு மூட்டை வெற்றிலை ரூ.10,000 - ரூ.20,000 வரை என 200 வெற்றிலை மூட்டைகள் 30 லட்சத்திற்கும் கடந்த வாரத்தை விட மூட்டைக்கு 2000 ரூபாய் அதிகரித்து விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்
More news from Tamil Nadu and nearby areas
- தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கப் பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தர்மபுரி எம்எல்ஏ ஆதரவு தெரிவித்து பேச்சு தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர்கள் நல சங்கம் சார்பில் தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் முத்துசாமி தலைமை வகித்தார். . செயலாளர் சிவலிங்கம் பொருளாளர் பிரதீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் தங்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணித் திறன் மதிப்பீடு என்ற பெயரில் பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட்டு 15 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும். மகளிர் பணியாளர்களுக்கு 12 மாத கால மகப்பேறு விடுப்பு வழக்க வேண்டும். பணியின் போது உயிரிழந்த பணியாளர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும். அனைத்து நிலை பணியாளர்களுக்கும் மருத்துவ காப்பீடு விபத்து காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்த கவனிக்கப் ஆர்ப்பாட்டத்திற்கு தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்து பேசினார்.1
- பொம்மிடியில் 30 லட்சத்திற்கு வெற்றிலை விற்பனை பொம்மிடியில் வியாழக்கிழமை நாட்களில் வெற்றிலை விற்பனைக்காக மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற வெற்றிலை வாரச்சந்தை நடைபெறுகிறது நேற்று ஜன 08 வியாழக்கிழமை நடைபெற்ற சந்தையில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் & வியாபாரிகள் வந்திருந்தனர் 128 கட்டுகளை கொண்ட ஒரு மூட்டை வெற்றிலை ரூ.10,000 - ரூ.20,000 வரை என 200 வெற்றிலை மூட்டைகள் 30 லட்சத்திற்கும் கடந்த வாரத்தை விட மூட்டைக்கு 2000 ரூபாய் அதிகரித்து விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்1
- ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மடிக்கணினி வழங்கும் விழா. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழ்நாடு அரசு மடிக்கணினி திட்டம் சார்பில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் விழா நடந்தது. இவ்விழாவில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் கலநதுக்கொண்டு மடிக்கணினியை வழங்கி துவக்கி வைத்தார்.1
- எடப்பாடி நகரத்தில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி சிறப்பு கூட்டம்... நாடாளுமன்ற உறுப்பினர் வீடு வீடாக சென்று தொண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு. சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி சிறப்பு கூட்டம் நடந்தது. இதில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி கலந்து கொண்டு பேசினார். எடப்பாடி நகர திமுக சார்பில் எடப்பாடி நகரத்தில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி சிறப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.எம்.செல்வகணபதி தலைமை வகித்து பேசினார். நாடாளுமன்ற உறுப்பினர் பேசுகையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் நிர்வாகிகள் எவ்வாறு செயல்பட வேண்டும், பொதுமக்களிடம் எவ்வாறு எடுத்துக் கூறி விழிப்புணர்வு செய்ய வேண்டும், திமுக அரசு செய்த சாதனைகளை எவ்வாறு பொதுமக்களிடம் எடுத்துக் கூற வேண்டும் என்று பல்வேறு ஆலோசனைகளை நிர்வாகிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் வழங்கினார். இதனைத் தொடர்ந்து எடப்பாடி நகரப் பகுதியில் உள்ள வீடுகளில் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி திமுக அரசு செய்த சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி விழிப்புணர்வு செய்தார். இதில் மாவட்ட துணைச் செயலாளர் சம்பத்குமார், எடப்பாடி நகர செயலாளர் பாஷா மற்றும் திமுக நிர்வாகிகள்,தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்...1
- Post by சந்திரசேகர். D1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- ஆட்டுக்காரம்பட்டி பகுதியில் மாபெரும் விளையாட்டுப் போட்டிகள் சமூக நீதிக்கான திராவிட பொங்கல் திருவிழா தர்மபுரி எம்பி ஆ மணி போட்டியை தொடங்கி வைத்தனர் தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக கழகம் தர்மபுரி நகர கழகம் கிழக்கு மேற்கு தருமபுரி மேற்கு ஒன்றியம் சார்பில் நடத்தும் மாபெரும் விளையாட்டுப் போட்டிகள் சமூக நீதிக்கான திராவிட பொங்கல் திருவிழா ஆட்டுக்காரம்பட்டி பகுதியில் கிரிக்கெட் போட்டியினை தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் அ மணி அவர்கள் போட்டியினை தொடங்கி வைத்தனர் இந்த போட்டியில் முதல் பரிசு 15 ஆயிரம் ரூபாய் இரண்டாம் பரிசு பத்தாயிரம் ரூபாய் மூன்றாம் பரிசு ரூ.5000 வழங்கப்படுகிறது இந்த போட்டி இரண்டு நாள் நடைபெறுகிறது இந்த போட்டியில் 15 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகிறது இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடகம் சுப்பிரமணி .நகர செயலாளர். நாட்டான் மாது. கௌதம். தர்மபுரி ஒன்றிய கழக செயலாளர் காவேரி. நகர மன்ற உறுப்பினர்கள் மாதேஸ்வரன் ஜெகன். முல்லைவேந்தன் சுருளிராஜன். இளையராணி மாவட்ட இணை அமைப்பாளர் அசோக்குமார் கோவிந்தன். முன்னாள் நகர செயலாளர் அன்பழகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.1
- பாப்பிரெட்டிப்பட்டி அருகே இடுகாட்டுக்கு வழி இல்லாததால் இறந்த மூதாட்டியின் உடலை ஆபத்தானமுறையில் ஆற்றை கடந்து சென்று அடக்கம் செய்த பொதுமக்கள் : தொடரும் அவலநிலை தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள குமாரபாளையம் அருந்ததியினர் காலனியில் 500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் , இப்பகுதியில் இறந்தவர்களை அருகே உள்ள பீணியாற்றை கடந்து சென்று அங்குள்ள ஓடையின் அருகே உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்வது வழக்கம். கடந்த சில மாதத்திற்கு முன் பெய்த மழையின் காரணமாக பீணியாற்றில் தண்ணீர் செல்கிறது. இந்நிலையில் நேற்று அதே பகுதியை சேர்ந்த மாரி (85) என்கிற மூதாட்டி உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார். அவரை இன்று உறவினர்கள் பாடைக்கட்டி ஆபத்தான முறையில் ஆற்றில் இறங்கி ஆற்றை கடந்து தூக்கி சென்றனர். வெள்ளப்பெருக்கு காலங்களில் இது போன்று செல்லும் போது அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளதால், விரைந்து பாலம் அமைக்க வேண்டும் அல்லது குடியிருப்பு பகுதியின் அருகே சுடுகாடு அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்1
- கல்லாவி அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்குமார் உத்தரவின் பெயரில் மாவட்ட கல்வி முதன்மை அலுவலர் மதன்குமார் ஆலோசனையில் ஊத்தங்கரை அடுத்த கல்லாவி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கல்லாவி அரசு பள்ளி வளாகத்தில் தொடங்கப்பட்ட இப்பேரணி கல்லாவி பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக பதாகைகள் ஏந்தி மது அருந்துவதனால் ஏற்படும் தீமைகளை பற்றி பொதுமக்களிடையே எடுத்துரைத்து கோசமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் முன்னதாக பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் சிவசண்முகவேல், காவல் உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ், விழிப்புணர்வு ஒருங்கிணைப்பாளர்கள் ஆசிரியர்கள் கருணாநிதி, ஜெயச்சந்திரன், மருத்துவர் கௌதமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள் நிகழ்ச்சியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள 315 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.1