Shuru
Apke Nagar Ki App…
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
Vinayagam Vinayagam
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
More news from தமிழ்நாடு and nearby areas
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- ஸ்ரீபெரும்புதூர். வெங்காடு ஊராட்சியில் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் வெங்காடு ஊராட்சியில் அடங்கிய வெங்காடு மற்றும் இரும்பேடு நியாய விலை கடைகளில் தமிழ்நாடு அரசு வழங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.3000 ரொக்கம் ஆகியவைகளை வெங்காடு ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன் தலைமையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் ஸ்ரீபெரும்புதூர் கூட்டுறவு வங்கி தலைவரும், முன்னாள் வெங்காடு ஊராட்சி மன்ற தலைவரும்,ஏரி நீர் பாசன சங்கத் தலைவருமான வெங்காடு பி.உலகநாதன் கலந்து கொண்டார். மேலும் இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தமிழ்ச்செல்வி ரவிச்சந்திரன்,ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் அஸ்வினி வினோத் எத்திராஜன் முருகன் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கௌரி ராதாகிருஷ்ணன்,கிராம நாட்டான்மைதாரர்கள் மற்றும் பொது மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.1
- காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள கோவிலில் உத்திரமேரூர் பேரூராட்சி தலைவர் சசிகுமார் ஏற்பாட்டில் உத்திரமேரூர் பேரூர் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் கோலப்போட்டி நடைபெற்றது . இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பலவிதமான கோலங்கள் வரைந்து காட்டினர் . கோலப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் பரிசுகளை வழங்கினார்.1
- 05/01/26 பதினெட்டாம் படியில் பக்தர் கோடி பரவசம் #news1
- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிருஷ்ணகிரி குந்தாரபள்ளி ஆட்டு சந்தையில் 3கோடிக்கு ஆடுகள் விற்பனை, ஒரு ஜோடி ஆடுகள் 50 ஆயிரம் வரைவிற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி1
- ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மடிக்கணினி வழங்கும் விழா. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழ்நாடு அரசு மடிக்கணினி திட்டம் சார்பில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் விழா நடந்தது. இவ்விழாவில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் கலநதுக்கொண்டு மடிக்கணினியை வழங்கி துவக்கி வைத்தார்.1
- பாலக்கோடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2 வரலாற்று நூல்களை வெளியிட்டு மாவட்ட கலெக்டர் வாழ்த்துரை தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அறம் இலக்கிய அமைப்பு மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரி இணைந்து நடத்திய வரலாற்று நூல் வெளியீட்டு விழாவிற்க்கு மாவட்ட ஆட்சியர் சதிஷ் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் செல்வராணி வரவேற்று பேசினார். கூட்டுறவு சர்க்கரைஆலை செயலாட்சியர் ரவி முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் இராஜேந்திர சோழனின் அரிய தகவல்கள்-1001 என்ற வரலாற்று நூலை ஆட்சியர் வெளியிட முதன்மை கல்வி அலுவலர் ஜோதிசந்திரா பெற்றுக் கொண்டார். சோழன் வென்ற ஈழம் என்ற நூலை முன்னாள் தருமபுரி எம்.பி. மருத்துவர் செந்தில் வெளியிட சமூக ஆர்வலர் ரவிசொக்கலிங்கம் பெற்றுக் கொண்டார். நூல் வெளியீட்டு விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர் சதிஷ், தமிழ்நாடு அரசு வரலாற்றுக்கு அதிக முக்கித்துவம் கொடுத்து,கீழடி,பொருநை போன்ற அருங்காட்சியகங்களை உருவாக்கி வரலாற்று தடயங்களை பாதுகாத்து வருகிறது. சிந்துசமவெளி நாகரீகம் தொடங்கி இன்றைய காலம் வரை தொடர்ச்சியான தொல்லியல் ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. நூலாசிரியர் பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு வரலாற்று தரவுகளின் அடிப்படையில் இந்த இரு நூல்களையும் உருவாக்கியுள்ளார், இராஜேந்திர சோழன் பற்றி ஆயிரம் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளது மிகவும் பாராட்டுக்குறியதாகும் வருங்கால மாணவர்கள் இவரது பணிகளை முன்மாதிரியாக கொண்டு வெற்றி பெற வாழ்த்தினார். முதன்மைக் கல்வி அலுவலர் ஜோதி சந்திரா பேசுகையில் நூலாசிரியர் அறம் கிருஷ்ணன் இக் கல்லூரியின் முன்னாள் மாணவர், இவர் கடந்த ஆறு மாதங்களில் ஆறு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார், முக்கியமாக இராஜேந்திர சோழனின் கங்கையும்-கடாரமும்,மற்றும் அரிய தகவல்கள் -1001 போன்ற நூல்கள் வரலாற்றின் மீது மிகுந்த ஆர்வத்தை ஏற்படும் வகையில் மகவும் சிறப்பாக உள்ளன. இதன் மூலம் வரலாற்று களஞ்சியங்களை எளிதாக மாணவர்கள் அறிந்து கொள்ள முடியும் என பாராட்டினார். கல்லூரி மூத்த ஆசிரியர்கள் ரவி, உத்திரபதி, தீர்த்தலிங்கம், லோகநாதன், மற்றும் முக்கிய பிரமுகர்கள் வே.சிவக்குமார் வெற்றிஞானசேகரன், சம்பத், சுதாகர்,, சாய்ராம், பாபு, ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். அறம் இலக்கிய அமைப்பு தலைவர் மற்றும் நூலாசிரியர் அறம் கிருஷ்ணன் அவர்கள் ஏற்புரை நிகழ்த்தினார், அறம் இலக்கிய அமைப்பு செயலாளர் ராசு நன்றியுரையாற்றினார். இவ் விழாவில் பொதுமக்கள், எழுத்தாளர்கள்,கல்லூரி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1