logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

நெல்லையில் மாவீரர் அழகுமுத்துக்கோன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நெல்லை மாநகர மாவட்டம் சார்பில் அவரது திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு நெல்லை மாநகர மாவட்டக் கழகச் செயலாளர் எஸ். ஜெயச்சந்திரன், பி.ஏ., எல்.எல்.பி. தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்டக் கழக அவைத் தலைவர் பழனிகுமார், மாவட்டக் கழகத் துணைச் செயலாளர்கள் சுடலைமுத்து, ஆனந்தமணி, தவசி தம்பா, மாவட்ட நிர்வாகி எஸ்.பி. குமார், தச்சைப் பகுதி கழகச் செயலாளர் தமிழ்மணி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் அருள்மேரி மற்றும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் நவீன் ஜெயசிங் ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். மேலும் செல்வராஜ், முருகன், கப்பல் சதீஷ், மாரியப்பன், மணிகண்டன், சுப்பையா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்று மாவீரர் அழகுமுத்துக்கோனுக்கு அஞ்சலி செலுத்தினர்.

3 hrs ago
user_S.Maria selvam
S.Maria selvam
சேரன்மகாதேவி, திருநெல்வேலி, தமிழ்நாடு•
3 hrs ago
c57b318b-1c8e-4cb8-8906-3d25bb2d380f

நெல்லையில் மாவீரர் அழகுமுத்துக்கோன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நெல்லை மாநகர மாவட்டம் சார்பில் அவரது திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு நெல்லை மாநகர மாவட்டக் கழகச் செயலாளர் எஸ். ஜெயச்சந்திரன், பி.ஏ., எல்.எல்.பி. தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்டக் கழக அவைத் தலைவர் பழனிகுமார், மாவட்டக் கழகத் துணைச் செயலாளர்கள் சுடலைமுத்து, ஆனந்தமணி, தவசி தம்பா, மாவட்ட நிர்வாகி எஸ்.பி. குமார், தச்சைப் பகுதி கழகச் செயலாளர் தமிழ்மணி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் அருள்மேரி மற்றும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் நவீன் ஜெயசிங் ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். மேலும் செல்வராஜ், முருகன், கப்பல் சதீஷ், மாரியப்பன், மணிகண்டன், சுப்பையா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்று மாவீரர் அழகுமுத்துக்கோனுக்கு அஞ்சலி செலுத்தினர்.

  • user_Vijaykumar S
    Vijaykumar S
    நாங்குநேரி, திருநெல்வேலி, தமிழ்நாடு
    😡
    2 hrs ago
More news from தமிழ்நாடு and nearby areas
  • தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகேயுள்ள கட்டாலங்குளத்தில், வீரன் அழகுமுத்துக்கோனின் 316-வது பிறந்த தின விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில், அவரது நேரடி வாரிசுதாரர்களான மீனாட்சி தேவி, ராஜேஸ்வரி, ராம்பிசாத், ராம் விஷ்ணுபெருமாள், வாணி, அழகு சுப்பையா, புவனேஸ்வரி மற்றும் வெங்கடேஷ்வயன் ஆகியோர் கலந்துகொண்டு வீரன் அழகுமுத்துக்கோனின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த பிறந்த நாள் விழாவையொட்டி கட்டாலங்குளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
    2
    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகேயுள்ள கட்டாலங்குளத்தில், வீரன் அழகுமுத்துக்கோனின் 316-வது பிறந்த தின விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில், அவரது நேரடி வாரிசுதாரர்களான மீனாட்சி தேவி, ராஜேஸ்வரி, ராம்பிசாத், ராம் விஷ்ணுபெருமாள், வாணி, அழகு சுப்பையா, புவனேஸ்வரி மற்றும் வெங்கடேஷ்வயன் ஆகியோர் கலந்துகொண்டு வீரன் அழகுமுத்துக்கோனின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த பிறந்த நாள் விழாவையொட்டி கட்டாலங்குளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
    user_பூல்பாண்டி
    பூல்பாண்டி
    Grain Shop கயத்தாறு, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    11 hrs ago
  • தென்காசி மாவட்டம் சுரண்டையில், எஸ். தங்கப்பழம் இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி சார்பில் மாபெரும் இலவச இயற்கை மற்றும் யோகா மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமை தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே. ஜெயபாலன் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். சுரண்டை – பாவூர்சத்திரம் சாலையில், நகராட்சி அலுவலகம் அருகிலுள்ள பிள்ளைமார் மண்டபத்தில் இந்த முகாம் அமைக்கப்பட்டிருந்தது. இதில் பங்கேற்ற பொதுமக்களுக்கு இயற்கை மருத்துவ ஆலோசனைகள், உணவுமுறை வழிகாட்டுதல், யோகா மற்றும் மூச்சுப் பயிற்சி, பிசியோதெரபி மற்றும் அக்குபஞ்சர் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டன. மேலும், இரத்தப் பரிசோதனை, இரத்த அழுத்தம், உடல் எடை மற்றும் ஆக்சிஜன் அளவு உள்ளிட்ட உடல்நலப் பரிசோதனைகளும் இந்த முகாமின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டன.
    3
    தென்காசி மாவட்டம் சுரண்டையில், எஸ். தங்கப்பழம் இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி சார்பில் மாபெரும் இலவச இயற்கை மற்றும் யோகா மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமை தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே. ஜெயபாலன் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

சுரண்டை – பாவூர்சத்திரம் சாலையில், நகராட்சி அலுவலகம் அருகிலுள்ள பிள்ளைமார் மண்டபத்தில் இந்த முகாம் அமைக்கப்பட்டிருந்தது. இதில் பங்கேற்ற பொதுமக்களுக்கு இயற்கை மருத்துவ ஆலோசனைகள், உணவுமுறை வழிகாட்டுதல், யோகா மற்றும் மூச்சுப் பயிற்சி, பிசியோதெரபி மற்றும் அக்குபஞ்சர் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டன. மேலும், இரத்தப் பரிசோதனை, இரத்த அழுத்தம், உடல் எடை மற்றும் ஆக்சிஜன் அளவு உள்ளிட்ட உடல்நலப் பரிசோதனைகளும் இந்த முகாமின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டன.
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    9 hrs ago
  • தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகாவின் மிகப்பெரிய ஊரான புதியம்புத்தூருக்கு, சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களின் அடிப்படைத் தேவைகளுக்காக வந்து செல்வது வழக்கம். தற்போது புதியம்புத்தூரில் ஆனித் திருவிழா நடைபெற்று வருவதை ஒட்டி, வழக்கத்தை விட மிக அதிக அளவில் பொதுமக்கள் அங்கு வந்து செல்கின்றனர். இதனால், இன்று இரவு 7 மணியளவில் புதியம்புத்தூர் டூ தூத்துக்குடி சாலையில் மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த போக்குவரத்து நெரிசலானது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததால், அப்பகுதியைக் கடக்க முயன்ற பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகி, பெரும் அவதிக்கு ஆளாகினர்.
    1
    தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகாவின் மிகப்பெரிய ஊரான புதியம்புத்தூருக்கு, சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களின் அடிப்படைத் தேவைகளுக்காக வந்து செல்வது வழக்கம். தற்போது புதியம்புத்தூரில் ஆனித் திருவிழா நடைபெற்று வருவதை ஒட்டி, வழக்கத்தை விட மிக அதிக அளவில் பொதுமக்கள் அங்கு வந்து செல்கின்றனர்.

இதனால், இன்று இரவு 7 மணியளவில் புதியம்புத்தூர் டூ தூத்துக்குடி சாலையில் மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த போக்குவரத்து நெரிசலானது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததால், அப்பகுதியைக் கடக்க முயன்ற பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகி, பெரும் அவதிக்கு ஆளாகினர்.
    user_Pooraja V
    Pooraja V
    ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    24 min ago
  • தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கட்டாலங்குளத்தில், சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் 316-வது பிறந்தநாள் அரசு விழா பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசு விழா என்று அறிவிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ஒரு முறையும், இரண்டு அமைச்சர்கள் தனித்தனியாக இரு முறையும் என மொத்தம் மூன்று முறை மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது விழாவிற்கு வந்திருந்தவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிமண்டபத்தில் உள்ள அழகுமுத்துக்கோனின் திருவுருவச் சிலைக்கு காலை 10:30 மணிக்கு அமைச்சர்கள் ஸ்ரீநாத், மதன் ராஜா மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் ஆகியோர் அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அமைச்சர்கள் வரத் தாமதமானதால் முதற்கட்டமாக மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அரசு சார்பில் தனியாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் சிறிது நேரம் கழித்து, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன்ராஜா ஆட்சியருடன் வந்து மாலை அணிவித்தார். இதனைத் தொடர்ந்து மேலும் சிறிது நேரம் கழித்து, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் ஆட்சியருடன் தனியாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஒரே நிகழ்ச்சியில் மூன்று முறை தனித்தனியாக நடந்த இந்த நிகழ்வு, அரசு விழா என்பதைத் தாண்டி த. வெ. க கோஷ்டி பூசல் விழாவாக மாறியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர்கள் ஒருங்கிணைந்து மாலை அணிவித்து மரியாதை செய்து, அழகுமுத்துக்கோனின் வாரிசுகளை கௌரவப்படுத்தி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆனால், இந்த முறை அதுபோன்ற எந்த விழாவும் நடைபெறவில்லை. மேலும், அமைச்சர்கள் வரத் தாமதமானதால் மற்றவர்களைச் சென்று மரியாதை செய்யச் சொல்வதில் காவல்துறையினருக்கும் தயக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
    1
    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கட்டாலங்குளத்தில், சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் 316-வது பிறந்தநாள் அரசு விழா பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசு விழா என்று அறிவிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ஒரு முறையும், இரண்டு அமைச்சர்கள் தனித்தனியாக இரு முறையும் என மொத்தம் மூன்று முறை மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது விழாவிற்கு வந்திருந்தவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மணிமண்டபத்தில் உள்ள அழகுமுத்துக்கோனின் திருவுருவச் சிலைக்கு காலை 10:30 மணிக்கு அமைச்சர்கள் ஸ்ரீநாத், மதன் ராஜா மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் ஆகியோர் அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அமைச்சர்கள் வரத் தாமதமானதால் முதற்கட்டமாக மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அரசு சார்பில் தனியாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் சிறிது நேரம் கழித்து, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன்ராஜா ஆட்சியருடன் வந்து மாலை அணிவித்தார். இதனைத் தொடர்ந்து மேலும் சிறிது நேரம் கழித்து, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் ஆட்சியருடன் தனியாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஒரே நிகழ்ச்சியில் மூன்று முறை தனித்தனியாக நடந்த இந்த நிகழ்வு, அரசு விழா என்பதைத் தாண்டி த. வெ. க கோஷ்டி பூசல் விழாவாக மாறியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர்கள் ஒருங்கிணைந்து மாலை அணிவித்து மரியாதை செய்து, அழகுமுத்துக்கோனின் வாரிசுகளை கௌரவப்படுத்தி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆனால், இந்த முறை அதுபோன்ற எந்த விழாவும் நடைபெறவில்லை. மேலும், அமைச்சர்கள் வரத் தாமதமானதால் மற்றவர்களைச் சென்று மரியாதை செய்யச் சொல்வதில் காவல்துறையினருக்கும் தயக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
    user_கோ.ரெங்கசாமி
    கோ.ரெங்கசாமி
    கோவில்பட்டி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • திருச்செந்தூர் அருகே ஆத்தூர் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் தொல்லியல் அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொள்ளக் கோரி எழுத்தாளர் தொடர்ந்த வழக்கில், மத்திய தொல்லியல் துறையினர் உள்ளிட்டோர் பதிலளிக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, கடந்த 12.10.2020 அன்று மதுரை உயர் நீதிமன்றத்தில் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார். மனுதாரர் தனது மனுவில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் ஆத்தூர் ஆற்றுப்படுகையில் உள்ள தொல்லியல் எச்சங்களைப் பார்வையிடவும், வறண்ட ஆற்றுப்படுகையில் காணப்படும் கல் கட்டமைப்புகளில் நவீன அறிவியல் முறைகளைப் பயன்படுத்தி தொல்லியல் அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொள்ளவும் நிபுணத்துவம் வாய்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் அடங்கிய குழுவை நியமிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கை மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் டாக்டர் அழகுமணி தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை முதன்மைச் செயலாளர், தொல்லியல் துறை ஆணையர், திருச்சி இந்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அடுத்த விசாரணை தேதிக்குள் இந்த மனுவின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
    1
    திருச்செந்தூர் அருகே ஆத்தூர் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் தொல்லியல் அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொள்ளக் கோரி எழுத்தாளர் தொடர்ந்த வழக்கில், மத்திய தொல்லியல் துறையினர் உள்ளிட்டோர் பதிலளிக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, கடந்த 12.10.2020 அன்று மதுரை உயர் நீதிமன்றத்தில் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

மனுதாரர் தனது மனுவில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் ஆத்தூர் ஆற்றுப்படுகையில் உள்ள தொல்லியல் எச்சங்களைப் பார்வையிடவும், வறண்ட ஆற்றுப்படுகையில் காணப்படும் கல் கட்டமைப்புகளில் நவீன அறிவியல் முறைகளைப் பயன்படுத்தி தொல்லியல் அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொள்ளவும் நிபுணத்துவம் வாய்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் அடங்கிய குழுவை நியமிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கை மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் டாக்டர் அழகுமணி தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை முதன்மைச் செயலாளர், தொல்லியல் துறை ஆணையர், திருச்சி இந்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அடுத்த விசாரணை தேதிக்குள் இந்த மனுவின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
    user_ThigazhYaazhan
    ThigazhYaazhan
    Local News Reporter திருச்செந்தூர், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் இன்று காலை நிலவரப்படி இதமான சூழல் நிலவுகிறது. அங்கு மிதமான சாரல் மழையுடன் லேசான காற்றும் வீசி வரும் நிலையில், இதமான வெயிலும் காணப்படுகிறது. குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக விழுந்து கொண்டிருக்கிறது. இன்று விடுமுறை தினம் என்பதால், குற்றாலத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. சீரான நீர்வரத்து மற்றும் இதமான காலநிலை காரணமாக சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.
    1
    தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் இன்று காலை நிலவரப்படி இதமான சூழல் நிலவுகிறது. அங்கு மிதமான சாரல் மழையுடன் லேசான காற்றும் வீசி வரும் நிலையில், இதமான வெயிலும் காணப்படுகிறது. குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக விழுந்து கொண்டிருக்கிறது.

இன்று விடுமுறை தினம் என்பதால், குற்றாலத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. சீரான நீர்வரத்து மற்றும் இதமான காலநிலை காரணமாக சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    10 hrs ago
  • தூத்துக்குடி அருகே உள்ள ஓட்டப்பிடாரம் பகுதியில், மனைவியைப் பிரிந்த துயரத்தில் தந்தை ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் மின்சாரம் பாய்ச்சி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக மனமுடைந்த நிலையில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். மனைவி பிரிந்து சென்றதால் ஏற்பட்ட மிகுந்த வேதனையின் காரணமாக, தந்தை தனது குழந்தைகளையும் தன்னுடன் சேர்த்து மின்சாரத்தை பாய்ச்சி இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் மிகுந்த அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
    1
    தூத்துக்குடி அருகே உள்ள ஓட்டப்பிடாரம் பகுதியில், மனைவியைப் பிரிந்த துயரத்தில் தந்தை ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் மின்சாரம் பாய்ச்சி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக மனமுடைந்த நிலையில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

மனைவி பிரிந்து சென்றதால் ஏற்பட்ட மிகுந்த வேதனையின் காரணமாக, தந்தை தனது குழந்தைகளையும் தன்னுடன் சேர்த்து மின்சாரத்தை பாய்ச்சி இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் மிகுந்த அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
    user_மா.கணேஷ்
    மா.கணேஷ்
    Photographer ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    7 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.