திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரத்தில் கலர் சின்னங்கள் அடங்கிய படிவம் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் வரும் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது அதனைத் தொடர்ந்து தமிழக தேர்தல் ஆணையம் வாக்குப் பதிவிற்கு தேவையான முன்னேற்பாடு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு 26 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நோட்டா சேர்த்து 27 சின்னங்கள் அடங்கும். இதனை தொடர்ந்து இரண்டு மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 312 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் புகைப்படம் பெயர் மற்றும் அவருக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்கள் முதல் முறையாக கலரில் படிவம் பொருத்தும் பணி திருவெறும்பூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அமுதா உதவி தேர்தல் அலுவலர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதனை திருச்சி டிஆர்ஓ பாலாஜி, தேர்தல் டிஆர்ஓ ரமேஷ் ஆகியோர் கண்காணித்தனர்.

- Post by பெரியசாமி1
- திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மணப்பாறையில் கருப்பு கொடி ஏந்தி நகலை எரித்து ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டமானது மணப்பாறை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ப.அப்துல் சமது தலைமையில் நடைபெற்றது. இதில் இப்பகுதியை சேர்ந்த கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.1
- மணப்பாறை அருகே திடீரென சில கோரிக்கைகளை செய்து கொடுக்க கூறி திமுக வேட்பாளர் காலில் விழுந்த நபரால் பரபரப்பு திருச்சி மாவட்டம், மணப்பாறை தொகுதி, வையம்பட்டி ஒன்றியபகுதிகளில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் அப்துல் சமது வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். ஆனாங்கரைப்பட்டியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது அங்கிருந்த மக்கள் சிலர் தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்று கூறி முறையிட்டனர். அப்போது அங்கிருந்த ஒருவர் திடீரென சாலை வசதி இல்லை, குடிநீர் வசதி இல்லை, ஜெயிச்சுட்டு போய் 5 வருடமா செஞ்சு தரவில்லை என்று கூறி எம்எல்ஏ காலில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.1
- புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக அமைச்சர் எஸ். ரகுபதி போட்டியிடுகின்றார். இதனை அடுத்து திருமயம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சார பணி மேற்கொண்டு வரும் அவர், இன்று பொன்னமராவதி அருகே திருமயம் அருகே உள்ள குறிச்சிபட்டி பகுதியில் தமிழக அரசின் நலத்திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தார்.1
- வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அதிமுக வேட்பாளர் டாக்டர் வி.பி.பி. பரமசிவத்திற்கு ஆதரவாக எரியோடு பேரூராட்சி மணியக்காரன்பட்டி கிராமத்தில் இன்று வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. இந்த நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் அதிமுகவின் தேர்தல் அறிக்கையை கூறி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.1
- மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். திண்டுக்கல் மாவட்டம் திமுக மாவட்ட கட்சி அலுவலகம் முன்பு ஆத்தூர் தொகுதி வேட்பாளர் ஐ பெரியசாமி மற்றும் திண்டுக்கல் தொகுதி வேட்பாளர் ஐ பி செந்தில்குமார் முன்னிலையில் மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள தொகுதி மறு வரையறை சட்ட மசோதாவினை எதிர்த்து கருப்புக் கொடி ஏந்தி மசோதாவின் நகலை எரித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.1
- இராசிபுரம் நகர் பகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக இராசிபுரம் சட்டமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் டாக்டர் பிரேம்குமார் அவர்களுக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வாய்ப்பு கேட்டு பொதுமக்கள் இடத்தில் இசை பாடலுடன் வாய்ப்பு கேட்டு வருகின்றனர்1
- திருச்சி மாவட்டம் மணப்பாறை தெற்கு ஒன்றிய வளநாடு , தேனூர், முருகப்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று (16-04-26) என்டிஏ கூட்டணியின் சார்பில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் பி.எல்.விஜயகுமாரின் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இதில் இப்பகுதியை அதிமுக ,பாஜக, அமமுக உள்ளிட்ட என்டிஏ கூட்டணி கட்சியை சேர்ந்த மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்று வருகின்றனர்.1