திண்டுக்கல் அருகே வாலிபர் வெட்டி படுகொலை செய்த வழக்கில் மேலும் பெண் ஒருவர் கைது திண்டுக்கல் மேட்டுப்பட்டி சேர்ந்த பழனிசாமி மகன் ராஜா(27) இவர் கடந்த 27-ம் தேதி இரவு திண்டுக்கல், பழனி பைபாஸ் கணேசபுரம் பகுதியில் வெட்டி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு R.V.நகரை சேர்ந்த உதயா(19), முருகபவனத்தை சேர்ந்த பாண்டியராஜன்(19), நெட்டுதெருவை சேர்ந்த விமல்(19), R.V.நகரை சேர்ந்த ஹரிஷ்ராகவேந்திரன்(20) ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர் மேலும் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான கணேசபுரத்தை சேர்ந்த குமார் மனைவி சவரியம்மாள்(45) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் அருகே வாலிபர் வெட்டி படுகொலை செய்த வழக்கில் மேலும் பெண் ஒருவர் கைது திண்டுக்கல் மேட்டுப்பட்டி சேர்ந்த பழனிசாமி மகன் ராஜா(27) இவர் கடந்த 27-ம் தேதி இரவு திண்டுக்கல், பழனி பைபாஸ் கணேசபுரம் பகுதியில் வெட்டி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு R.V.நகரை சேர்ந்த உதயா(19), முருகபவனத்தை சேர்ந்த பாண்டியராஜன்(19), நெட்டுதெருவை சேர்ந்த விமல்(19), R.V.நகரை சேர்ந்த ஹரிஷ்ராகவேந்திரன்(20) ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர் மேலும் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான கணேசபுரத்தை சேர்ந்த குமார் மனைவி சவரியம்மாள்(45) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பழனி: திருவள்ளுவர் அரசு உதவிபெறு நடுநிலைப் பள்ளியில் அறுபது ஆண்டுகளுக்கு முன்னாள் பள்ளியில் பயின்ற மாணவ மாணவிகள் சந்திப்பு பழனியில் திருவள்ளுவர் அரசு உதவிபெறு நடுநிலைப் பள்ளி கடந்த 75 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 1965 ஆம் ஆண்டு முதல் 1973 ஆம் ஆண்டு வரை ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயின்ற முன்னாள் மாணவ மாணவியர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 60 ஆண்டுகளுக்குப் பின்னர் சந்தித்துக் கொண்ட முன்னாள் மாணவ மாணவியரும் இந்நாள் தாத்தா பாட்டிகளும் தங்களின் பள்ளி கால நினைவுகளை பகிர்ந்து கொண்டு மகிழ்ந்தனர்.1
- திண்டுக்கல் சோலைஹால் பகுதியில் உள்ள மீன் கடைகளை அகற்றி மேட்டுப்பட்டி சாலைகள் உள்ள குலசாலையில் மீன் மார்க்கெட் இயங்கி வருகிறது1
- பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை-திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றிய பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.1
- மகனை படுகொலை செய்த வழக்கில் தந்தைக்கு ஆயுள் தண்டனையும் தாய்க்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து தேனி நீதிமன்றம் தீர்ப்பு. தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள செங்கல்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அபிமன்னன் மனைவி ராஜா மணி தம்பதியருக்கு அஜித்குமார் (வயது 27) என்ற மகன் இருந்து வந்துள்ளார். அஜித் குமார் எந்த வேலைக்கும் போகாத நிலையில் நாள்தோறும் வீட்டிற்கு வந்து தாய் தந்தையுடன் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும், தந்தை இல்லாத நேரத்தில் தாயிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த தாய், தந்தை இருவரும் சேர்ந்து மகன் அஜித்குமாரை கயிற்றால் கழுத்தை இருக்கியதோடு அறிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளனர். இக்கொலை சம்பவம் தொடர்பாக வீரபாண்டி காவல் நிலையத்தில் தாய், தந்தை இருவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணை தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று வழக்கு விசாரணை முடிவு பெற்று மகனை கொலை செய்த குற்றத்திற்காக தாய், தந்தை இருவருக்கும் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் முதல் குற்றவாளியான தந்தை அபிமன்னனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 5000 ரூபாய் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் மூன்று மாத கால சிறை தண்டனையும், இரண்டாவது குற்றவாளியான தாய் ராஜாமணிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்ததோடு பத்தாயிரம் ரூபாய் அபராதம், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 மாத கால சிறை தண்டனையும் விதித்ததோடு, தண்டனையை ஏக காலத்திற்கு அனுபவிக்க வேண்டும் என மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சொர்ணம் ஜே. நடராஜன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.1
- தேனி அருகே தாடிச்சேரியில் திமுக சார்பில் மாபெரும் கபடி போட்டி: தங்கம் தமிழ்செல்வன் எம்.பி தொடங்கி வைத்தார்! தேனி அருகே தாடிச்சேரியில் திமுகவின் தேனி வடக்கு மாவட்டம் தேனி வடக்கு ஒன்றியம் சார்பாக திராவிட பொங்கல் சமூக நீதிக்கான திருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது இந்த கபடி போட்டியில் தாடிச்சேரி, சிவலிங்க நாயக்கன்பட்டி ,கோட்டூர் சீலையம்பட்டி மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கபடி அணியினர் பங்கேற்றனர்.இந்த விழாவின் இரண்டாம் நாள் கபடி போட்டியினை தேனி பாராளுமன்ற உறுப்பினரும் திமுகவின் தேனி வடக்கு மாவட்ட செயலாளருமாகிய தங்க தமிழ்ச்செல்வன் பங்கேற்று கபடி போட்டிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து விளையாடிய கபடி வீரர்கள் ஆடுகளத்தில் சிறப்பான முறையில் விளையாடினார்கள் இந்தப் போட்டியில் சிறப்பான முறையில் மூன்றாம் இடம் பிடித்த கபடி அணியினருக்கு ரூபாய் 15,000 மற்றும் சுழல் கோப்பையும் இரண்டாம் இடம் பிடித்த கபடி அணியினருக்கு 20,000 மற்றும் சுழல் கோப்பையும், முதல் இடம் பிடித்த கபடி அணியினருக்கு ரூபாய் 25000 மற்றும் சுழல் கோப்பையும் தேனி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் சக்கரவர்த்தி வழங்கி சிறப்பித்தார்.மேலும் இந்த நிகழ்வில் தேனி வடக்கு ஒன்றிய விவசாய அமைப்பாளர் ரவி, கிளை செயலாளர்கள் தவசி, பாக்கியம், தேனி வடக்கு ஒன்றிய மீனவர் அணி அமைப்பாளர் போத்திராஜ் ,தேனி வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் முருக ஜெகதீஸ் ,ஆதிதிராவிட நல குழு அணி அமைப்பாளர் பால்ராஜ் ,தேனி வடக்கு ஒன்றிய விளையாட்டு மேம்பட்டிய அணி துணை அமைப்பாளர் தமிழரசன் ,திமுக பிரதிநிதிகள் சூரத் தேவன், ராஜவேல் சுரேஷ் மற்றும் திமுக நிர்வாகிகள்,விளையாட்டு வீரர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். மேலும் இந்த விழாவிற்கு வருகை புரிந்த பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வனுக்கு தேனீ வடக்கு ஒன்றியம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது1
- கரூர் மாவட்ட திமுக செயலாளர் வி. செந்தில் பாலாஜி ஆணைக்கிணங்க, நாளை மறுநாள்(11/01/29) நடைபெறும் திமுக திராவிட பொங்கல் சமத்துவ விளையாட்டு போட்டி நடைபெறும் இடமான தமிழ் நகரில் விளையாட்டு மைதானத்தை இன்று தாந்தோணி மேற்கு ஒன்றிய செயலாளர் கோயம்பள்ளி பாஸ்கர் தலைமையில் பணியாட்கள் மற்றும் பொக்லைன் இயந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.1
- இலுப்பூர் பணம் வைத்த சூதாடிய ஐந்து பேர் கைது இருந்திராபட்டி கருப்பசாமி கோயில் அருகே தர்மலிங்கம் (43), சுப்பிரமணியன் (59), குமார் (50), மகேஸ்வரன் (43), முத்துக்கருப்பன் (50) ஆகிய ஐந்து பேர் பணம் வைத்து சூதாடினர். இதையடுத்து இவர்களை இலுப்பூர் காவல் துணை ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூபாய் 300 மற்றும் ஒரு சீட்டுக்கட்டை பறிமுதல் செய்தனர்.1
- திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள மாரம்பாடியில் 300 ஆண்டுகள் பழமையான மாமுனிவர் புனித பெரிய அந்தோணியார் திருத்தலம் அமைந்துள்ளது இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 16,17,18 ஆகிய மூன்று நாட்களில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும் அதோபோல் இந்த ஆண்டும் திருவிழாவின் முதல் கொடி பவனி நேற்று இரவு தொடங்கியது இந்நிகழ்வில் ஊர் பெரியதனகாரர்கள், கிராம மக்கள், பங்கு தந்தையர்கள், அமலவை கன்னியர்கள், குருக்கள், பிரதர்கள், இருபால் துறவியர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்1