Shuru
Apke Nagar Ki App…
மொத்த தொகுதிகள்
Arasu Malar Editor V.Balamurugan
மொத்த தொகுதிகள்
More news from தமிழ்நாடு and nearby areas
- Post by ஆ.கார்த்திக் (P F H R.)1
- திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலை திருவெறும்பூர் ரயில்வே மேம்பாலம் மின்விளக்குகள் தெரியாததால் கல்லணை பிரிவு மற்றும் கூத்தைப்பார் பிரிவு சாலைகளில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் நிறுவனம் பராமரித்து வருகிறது. இந்த நிலையில் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் இரண்டு நிமிடத்திற்கு ஒரு புறநகர் பேருந்தும் ஐந்து நிமிடத்திற்கு ஒரு மாநகர் பேருந்து இயக்கப்படுகிறது. மேலும் திருவெறும்பூர் பகுதியில்மத்திய பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனம் பாதுகாப்பு துறை நிறுவனங்களான எச் இப்பி, துப்பாக்கி தொழிற்சாலை மற்றும் நூற்றுக்கணக்கான சிறு குறு நிறுவனங்கள் இயங்கி வருகிறது இதனால் திருச்சியில் தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் பல லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. இந்த நிலையில் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலை பராமரித்து வரும் தனியார் நிறுவனம் முறையாக பராமரிக்காமல் அடிக்கடி மின்விளக்குகள் பழுது ஏற்படுகிறது. இதனை சரி செய்வதில்லை இதனால் வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் திருச்சியில் தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சென்று மீடியனில் உள்ள மின்விளக்குகள் போதிய வெளிச்சம் இல்லாமல் உள்ளது. இந்நிலையில் திருவெறும்பூர் ரயில்வே மேம்பாலம் முதல் மலைக்கோயில் வரை சென்று மீடியனில் உள்ள மின் விளக்குகள் எரிவதில்லை மேலும் ரயில்வே மேம்பாலத்தில் கல்லணை பிரிவு சாலை மற்றும் கூத்தைப் பார் பிரிவு சாலை செல்லும் இடத்தில் உள்ள ஹைமாஸ் லைட்டும் எரிவதில்லை. இதனால் கல்லணை பிரிவு சாலை மற்றும் கூத்தைப்பார் பிரிவு சாலையிலிருந்து திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலைகள் வருவதற்காக பொது மகள் வாகனங்களில் வரும்பொழுது திருச்சியில் இருந்து தஞ்சை நோக்கி வரும் வாகனங்கள் கட்டுப்பாடு இல்லாமல் வருகிறது இதனால் அந்த பகுதியில் விபத்துக்கள் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இது குறித்துதிருச்சியில் தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை பராமரித்து வரும் தனியார் நிறுவனத்திற்கு அப்பகுதியைச் சேர்ந்த வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் புகார் தெரிவித்துள்ளதாகவும் ஆனால் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் அதனை கண்டு கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பழுதடைந்துள்ள மின்விளக்குகளை போர்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- திண்டுக்கல் மாவட்டம் குறும்பபட்டியைச் சேர்ந்த பாண்டி -42 சொந்த ஊரான செந்துறைக்கு செல்வதற்காக இன்று அதிகாலை 5 மணிக்கு துவரங்குறிச்சி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தபோது பேருந்து நிலையத்திலிருந்து மணப்பாறை செல்வதற்கு அரசு கிராம பேருந்து பேருந்து நிலையத்தில் உள்ளே சென்று திரும்பும் போது எதிர்பாராத விதமாக பாண்டியன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பாண்டியன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் பற்றிய தகவல் அறிந்த துவரங்குறிச்சி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான பாண்டியனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக பேருந்தின் ஓட்டுநர் கேசவன் 30 மற்றும் நடத்துனர் முருகேசன் 45 இவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.1
- திண்டுக்கல், திருச்சி ரோடு, என்ஜின் காலனியில் அமைந்துள்ள நாகா மில்லை அடுத்த பெட்ரோல் பங்க் அருகே உயர் நீதிமன்ற உத்தரவின்படி நெடுஞ்சாலை துறையினர் காவல்துறையினர் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.1
- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கல்லல் ஒன்றியம் கலிப்புலி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மாயாண்டி அய்யனார் புரவி எடுப்பு விழா மற்றும் ஸ்ரீ மாரியம்மன் கோவில் மது எடுப்பு மற்றும் முளைப்பாரி விழாவை முன்னிட்டு இன்று (29/4/26) புதன்கிழமை கலிப்புலி கிராமத்தில் மாபெரும் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பல்வேறு மாடுகள் களமிறங்கின. ஏராளமான மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு மாடுகளை அடக்கினர்.மஞ்சு விரட்டு நிகழ்ச்சியை காண திரளான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.1
- Post by Ashik2
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- Post by ஆ.கார்த்திக் (P F H R.)1
- திண்டுக்கல் அருள்மிகு அபிராமி அம்மன் சித்திரை திருவிழா திருத்தேரோட்டம் மேள தாளங்கள் முழங்க வீதி உலா வரும் திருத்தேர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு. திருத்தேரோட்டம் நிறைவுற்றவுடன் மதுரை புறப்பட்டார் அழகர் கள்ளர் வேடம் பூண்டு, தங்கப்பல்லக்கில் மதுரை நோக்கி புறப்பட்டார் அழகர் நாளை அழகரை மதுரை மக்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நாளை மறுநாள் அதிகாலையில், கள்ளழகர் வீற்றிருந்து வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார்1