விருதுநகர் மாவட்டம் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் வருவாய் கோட்டங்களில் 19.05.2026 அன்று நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப, அவர்கள் தகவல் விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் வருவாய் கோட்டங்களில் 19.05.2026 அன்று முற்பகல் 11.00 மணி அளவில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் உதவி ஆட்சியர் சிவகாசி, வருவாய் கோட்டாட்சியர் அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் அவர்களின் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கோட்ட அளவிலான கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொள்வதுடன், விவசாயம் மற்றும் தனி நபர் தொடர்பான மனுக்களை வருவாய் கோட்டாட்சியர்களிடம் நேரடியாக அளித்து தீர்வு காணவும், வட்டார அளவிலான விவசாயம் மற்றும் விவசாயம் சாராத மனுக்களுக்கு விரைந்து தீர்வு காணப்பட்டு நடவடிக்கை விபரத்தினை மனுதாரருக்கு தெரிவித்திடவும் அனைத்து துறை அலுவலர்களை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப, அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் வருவாய் கோட்டங்களில் 19.05.2026 அன்று நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப, அவர்கள் தகவல் விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் வருவாய் கோட்டங்களில் 19.05.2026 அன்று முற்பகல் 11.00 மணி அளவில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் உதவி ஆட்சியர் சிவகாசி, வருவாய் கோட்டாட்சியர் அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் அவர்களின் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கோட்ட அளவிலான கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொள்வதுடன், விவசாயம் மற்றும் தனி நபர் தொடர்பான மனுக்களை வருவாய் கோட்டாட்சியர்களிடம் நேரடியாக அளித்து தீர்வு காணவும், வட்டார அளவிலான விவசாயம் மற்றும் விவசாயம் சாராத மனுக்களுக்கு விரைந்து தீர்வு காணப்பட்டு நடவடிக்கை விபரத்தினை மனுதாரருக்கு தெரிவித்திடவும் அனைத்து துறை அலுவலர்களை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப, அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
- தமிழகத்தின் 9வது முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றதை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியில் தமிழக வெற்றிக்கழகத்தினர் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், மேளதாளங்களுடன் பேரணி சென்றும் பொதுமக்கள் மற்றும் தலைவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.1
- TVK கட்சித் தலைவர் விஜய் 2026 மே 10 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றார். இந்த நிகழ்வு மாநில அரசியலில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.1
- சிங்கம்புணரி அரசு மருத்துவமனை குடியிருப்பில் அரசமரம் முறிந்து விழுந்து பரபரப்பு – கை குழந்தைகளுடன் அலறியடித்து ஓடிய பணியாளர்கள்! சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அரசு மருத்துவமனை பணியாளர் குடியிருப்பின் மீது பழமையான அரசமரத்தின் பெரிய கிளை திடீரென முறிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வீட்டிற்குள் இருந்த பெண்கள் உள்ளிட்ட பணியாளர்கள் கை குழந்தைகளை தூக்கிக்கொண்டு பதற்றத்துடன் வெளியே ஓடியதால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. சில தினங்களுக்கு முன்பே மரக்கிளைகள் ஆபத்தான நிலையில் இருப்பதாக அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், அதிகாரிகளின் அலட்சியத்தாலேயே இந்த விபத்து நடந்ததாக மருத்துவப் பணியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தற்போது குடியிருப்பு சேதமடைந்த நிலையில், மரத்தை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- தர்பூசணி பழத்தில் முதலமைச்சர் விஜய் புகைப்படத்தை செதுக்கி வடிவமைத்து வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்த சிற்பக் கலைஞர்* *தர்பூசணி பழத்தில் முதலமைச்சர் விஜய் புகைப்படத்தை செதுக்கி வடிவமைத்து வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்த சிற்பக் கலைஞர்* தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்று காலை முதலமைச்சராக பதவி ஏற்றார் அவருடன் அமைச்சர்களும் பதவியேற்றனர் தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் நேற்று முதல் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டாடினர் இந்த நிலையில் தேனி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்த காய்கறி சிற்பக் கலைஞரான இளஞ்செழியன் முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் தர்பூசணி பழத்தில் விஜயின் முகத்தை வடிவமைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் "தமிழ்நாடு அரசு" சின்னத்துடன் "முதலமைச்சர்" என்கிற வாசகத்துடனும் மற்றொரு தர்ப்பூசணி பழத்தில் விஜயின் புகைப்படத்துடன் வாழ்த்துக்கள் "தமிழ்நாடு சிஎம் 2026" என ஆங்கிலத்தில் வடிவமைத்து வித்தியாசமான முறையில் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்1
- தர்பூசணி பழத்தில் முதலமைச்சர் விஜய் புகைப்படத்தை செதுக்கி வடிவமைத்து வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்த சிற்பக் கலைஞர் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று காலை முதலமைச்சராக பதவி ஏற்றார் அவருடன் அமைச்சர்களும் பதவியேற்றனர் தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும் பொது மக்களுக்கு இடுப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டாடினர் இந்த நிலையில் தேனி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்த காய்கறி சிற்பக் கலைஞரான இளஞ்செழியன் முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் தர்பூசணி பழம் விஜயின் முகத்தை வடிவமைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் "தமிழ்நாடு அரசு" சின்னத்துடன் "முதலமைச்சர்" என்கிற வாசகத்துடனும் மற்றொரு தர்ப்பூசணி பழத்தில் விஜயின் புகைப்படத்துடன் வாழ்த்துக்கள் தமிழ்நாடு சிஎம் என ஆங்கிலத்தில் வடிவமைத்து வித்தியாசமான முறையில் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்1
- திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2 மாதங்களுக்குப் பிறகு நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரிகள் செல்போனில் மூழ்கியிருந்தனர். போதிய இருக்கை வசதியின்றி, அதிகாரிகளின் இந்த அலட்சியத்தால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து, ஆட்சியர் நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளனர்.1
- புரட்சித்தலைவர்எம்ஜிஆர்Vsதளபதிவிஜய் !!! யார் பார்த்த வேலை டா இது? !!!1
- நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சையது இப்ராஹிம் ஒரு லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது சிவகங்கை மாவட்டம் பெரிய கிளுகிச்சி கிராமத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் கந்தசாமி இவர் சிவகங்கை மாவட்டத்தில் சாத்தரசன்கோட்டை சிவகங்கை உள்ளிட்ட மூன்று பகுதிகளில் சாலை பணியை 2.5 கோடி மதிப்பில் மேற்கொண்டார். கடந்த ஓராண்டாக பல்வேறு கட்டங்களில் ஒப்பந்த தொகை பெறப்பட்டாலும் எஞ்சிய 18 லட்ச ரூபாய் தொகையை பெற நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சையது இப்ராஹிம் -யை சந்தித்து கேட்டு வந்துள்ளார் . அதற்கு ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டு அலைக்கழித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கந்தசாமி சிவகங்கை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் அளித்துள்ளார் . லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரசாயனம் தடவிய ஒரு லட்ச ரூபாயை கந்தசாமி மூலமாக இன்று உதவி கோட்ட பொறியாளர் சையது இப்ராஹிம் - யை சந்தித்து வழங்கியபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது இதனால் நெடுஞ்சாலைத்துறை அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது1