logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

சத்தியமங்கலத்தில் ஆதார் அட்டை வடிவத்தில் விநாயகர் சிலை சத்தியமங்கலம் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, செல்வ விநாயகர் சிலைக்கு ஆதார் அட்டை வடிவில் வைக்கப்பட்டுள்ள பதாகை பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. பதாகையில் செல்வ விநாயகர் என பெயரிட்டு, பிறந்த தேதி 14.09.2026, பாலினம் ‘ஆண்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஆதார் அட்டையில் இடம்பெறும் வகையில் கியூஆர் குறியீடும் வைக்கப்பட்டுள்ளது. “ஆதார் – சாதாரண மனிதனின் அடையாளம்” என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. விநாயகருக்கு வித்தியாசமான முறையில் ஆதார் அட்டை வடிவமைக்கப்பட்டிருப்பதை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர்.

1 hr ago
user_ஆனந்த
ஆனந்த
சத்தியமங்கலம், ஈரோடு, தமிழ்நாடு•
1 hr ago
a3d5b57a-7120-4b8d-b244-fe50464889a4

சத்தியமங்கலத்தில் ஆதார் அட்டை வடிவத்தில் விநாயகர் சிலை சத்தியமங்கலம் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, செல்வ விநாயகர் சிலைக்கு ஆதார் அட்டை வடிவில் வைக்கப்பட்டுள்ள பதாகை பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. பதாகையில் செல்வ விநாயகர் என பெயரிட்டு, பிறந்த தேதி 14.09.2026, பாலினம் ‘ஆண்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஆதார் அட்டையில் இடம்பெறும் வகையில் கியூஆர் குறியீடும் வைக்கப்பட்டுள்ளது. “ஆதார் – சாதாரண மனிதனின் அடையாளம்” என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. விநாயகருக்கு வித்தியாசமான முறையில் ஆதார் அட்டை வடிவமைக்கப்பட்டிருப்பதை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • கோபி நகர இந்து முன்னணியின் சார்பாக 35ஆம் ஆண்டு ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி விழாவானது இந்து எழுச்சித் திருவிழாவாக செப்டம்பர் 12 முதல் 14 வரை கோபி நகர பகுதிகளில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஈரோடு மேற்கு மாவட்ட இந்து முன்னணி, விநாயகர் சதுர்த்தி விழாவினை ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக கொண்டாடி வருகிறது. கோபி நகர இந்து முன்னணியின் சார்பாக 35ஆம் ஆண்டு ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி விழாவானது இந்து எழுச்சித் திருவிழாவாக செப்டம்பர் 12 முதல் 14 வரை கோபி நகர பகுதிகளில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவின் நிகழ்வாக பொதுக்கூட்டமானது ஈரோடு மெயின் ரோடு சீதா கல்யாண மண்டபம் அருகே இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. ஈரோடு மேற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி, மாவட்ட பொது செயலாளர் பாலமுருகன், மாவட்ட செய்தித் தொடர்பாளர் பிரபாகரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் விமல்குமார் ஆகியோர் முன்னிலையில் கீதா ரவீந்திரன்,டாக்டர் சித்ரா கணேசன், லோகிதா வெள்ளியங்கிரி, வழக்குரைஞர் கீர்த்தனா சித்தார்த்,ஸ்ரீவித்யா சீனிவாசன் ஆகியோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர். இப்பொதுக் கூட்டத்தில் இந்து முன்னணி பேரியக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வி.எஸ். செந்தில்குமார் சிறப்புரையும், திரௌபதி பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மோகன் எழுச்சியுரையும் ஆற்றினர். இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக, டாக்டர்.ரவீந்திரன்,சுபி தளபதி, பொன்மணி கார்த்தி, டாக்டர் ராஜா, சிற்பி மகேஸ்வரன், சக்திவேல், மாதேஸ் சிவா, காகுத் கார்த்திகேயன், சிவக்குமார், சுரேந்தர் Ex Army, மனோஜ்குமரன்,முரளிதரன், சதிஸ்குமார், பொன் விஸ்வநாதன் நாடார், மகாலிங்கம் ராமசாமி, குமரேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட செயலாளர் மணிகண்டபிரபு வரவேற்புரையும், முடிவில் நகர பொதுசெயலாளர் மதன்குமார் நன்றியுரையும் ஆற்றினர். அதனைத் தொடர்ந்து விசர்ஜன் விநாயகர் திருமேனிகள் ஊர்வலமானது மேளதாளங்கள் முழங்க பெண்கள் கொடி அணிவகுப்புடன் தெய்வம், ஆஞ்சநேயர் வேடம், நடன குதிரை ஆட்டம், கம்பீர யானை, காந்தார பஞ்சுர்லி கடவுள் வாராகி வாகன ரதம் போன்ற கலை நிகழ்ச்சிகளுடன், பெண்கள் முளைப்பாரி, ஒளிரும் விளக்குகள், பூ கரக கலசம் ஆகியவற்றை எடுத்து முன் செல்ல 2007 பெண்கள் விசர்ஜன விநாயகர் திருமேனிகளை கையில் எடுத்து பிரமாண்டமான ஊர்வலமாக அணிவகுக்க விசர்ஜன விநாயகர் திருமேனிகள் ஊர்வலத்தை ஆன்மீகச் செம்மல், தொழிலதிபர் கே.வி. சோமசுந்தரம் மரக்கடை உரிமையாளர் ஜி.எஸ். நடராஜன் மற்றும் தொழிலதிபர் திருநாவுக்கரசு ஆகியோர் காவிக் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். 2007 பெண்கள் விநாயகர் திருமேனி ஊர்வலத்தை இந்து முன்னணி மாவட்ட செயலாளர் கிருத்திகா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சரண்யா ஆகியோர் ஒருங்கிணைத்தனர். ஊர்வலமானது சீதா கல்யாண மண்டபத்திலிருந்து தொடங்கி ஜீவா செட், புதுப்பாளையம் பிரிவு, பஸ்நிலையம், சிக்னல், மார்க்கெட், எம்.ஜி.ஆர் சிலை, கடைவீதி, தேர்வீதி, வாய்க்கால் ரோடு வழியாக சென்று நஞ்சை புளியம்பட்டி ஆற்றில் கரைக்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை இந்து முன்னணியின் கோபி நகர தலைவர் கருப்புசாமி, நகர செயலாளர்கள் மௌலி, அர்ஜீன், சபரி நகர துணைத்தலைவர்கள் கோபால், கருப்புசாமி, நாகராஜ், நகர பொருளாளர் மனோஜ்குமார், இந்து வியாபாரிகள் சங்க தலைவர் மணிகண்டன், நகர பொறுப்பாளர்கள் பாஸ்கர், தங்கவேல் சுஜேஸ், சௌந்தர், முரளி, ரவி ஆகியோர் உடனிருந்து செய்தனர்.
    4
    கோபி நகர இந்து முன்னணியின் சார்பாக 35ஆம் ஆண்டு ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி விழாவானது இந்து எழுச்சித் திருவிழாவாக செப்டம்பர் 12 முதல் 14 வரை கோபி நகர பகுதிகளில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

ஈரோடு மேற்கு மாவட்ட இந்து முன்னணி, விநாயகர் சதுர்த்தி விழாவினை ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக கொண்டாடி வருகிறது. கோபி நகர இந்து முன்னணியின் சார்பாக 35ஆம் ஆண்டு ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி விழாவானது இந்து எழுச்சித் திருவிழாவாக செப்டம்பர் 12 முதல் 14 வரை கோபி நகர பகுதிகளில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவின் நிகழ்வாக பொதுக்கூட்டமானது ஈரோடு மெயின் ரோடு சீதா கல்யாண மண்டபம் அருகே இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. ஈரோடு மேற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி, மாவட்ட பொது செயலாளர் பாலமுருகன், மாவட்ட செய்தித் தொடர்பாளர் பிரபாகரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் விமல்குமார் ஆகியோர் முன்னிலையில் கீதா ரவீந்திரன்,டாக்டர் சித்ரா கணேசன், லோகிதா வெள்ளியங்கிரி, வழக்குரைஞர் கீர்த்தனா சித்தார்த்,ஸ்ரீவித்யா சீனிவாசன் ஆகியோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
இப்பொதுக் கூட்டத்தில் இந்து முன்னணி பேரியக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வி.எஸ். செந்தில்குமார் சிறப்புரையும், திரௌபதி பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மோகன் எழுச்சியுரையும் ஆற்றினர்.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக, டாக்டர்.ரவீந்திரன்,சுபி தளபதி, பொன்மணி கார்த்தி, டாக்டர் ராஜா, சிற்பி மகேஸ்வரன், சக்திவேல், மாதேஸ் சிவா, காகுத் கார்த்திகேயன், சிவக்குமார், சுரேந்தர் Ex Army, மனோஜ்குமரன்,முரளிதரன், சதிஸ்குமார், பொன் விஸ்வநாதன் நாடார், மகாலிங்கம் ராமசாமி, குமரேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாவட்ட செயலாளர் மணிகண்டபிரபு வரவேற்புரையும், முடிவில் நகர பொதுசெயலாளர் மதன்குமார் நன்றியுரையும் ஆற்றினர்.
அதனைத் தொடர்ந்து விசர்ஜன் விநாயகர் திருமேனிகள் ஊர்வலமானது மேளதாளங்கள் முழங்க பெண்கள் கொடி அணிவகுப்புடன் தெய்வம், ஆஞ்சநேயர் வேடம், நடன குதிரை ஆட்டம், கம்பீர யானை, காந்தார பஞ்சுர்லி கடவுள் வாராகி வாகன ரதம் போன்ற கலை நிகழ்ச்சிகளுடன், பெண்கள் முளைப்பாரி, ஒளிரும் விளக்குகள், பூ கரக கலசம் ஆகியவற்றை எடுத்து முன் செல்ல 2007 பெண்கள் விசர்ஜன விநாயகர் திருமேனிகளை கையில் எடுத்து பிரமாண்டமான ஊர்வலமாக அணிவகுக்க விசர்ஜன விநாயகர் திருமேனிகள் ஊர்வலத்தை ஆன்மீகச் செம்மல், தொழிலதிபர் கே.வி. சோமசுந்தரம் மரக்கடை உரிமையாளர் ஜி.எஸ். நடராஜன் மற்றும் தொழிலதிபர் திருநாவுக்கரசு ஆகியோர் காவிக் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். 2007 பெண்கள் விநாயகர் திருமேனி ஊர்வலத்தை இந்து முன்னணி மாவட்ட செயலாளர் கிருத்திகா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சரண்யா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
ஊர்வலமானது சீதா கல்யாண மண்டபத்திலிருந்து தொடங்கி ஜீவா செட், புதுப்பாளையம் பிரிவு, பஸ்நிலையம், சிக்னல், மார்க்கெட், எம்.ஜி.ஆர் சிலை, கடைவீதி, தேர்வீதி, வாய்க்கால் ரோடு வழியாக சென்று நஞ்சை புளியம்பட்டி ஆற்றில் கரைக்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை இந்து முன்னணியின் கோபி நகர தலைவர் கருப்புசாமி, நகர செயலாளர்கள் மௌலி, அர்ஜீன், சபரி நகர துணைத்தலைவர்கள் கோபால், கருப்புசாமி, நாகராஜ், நகர பொருளாளர் மனோஜ்குமார், இந்து வியாபாரிகள் சங்க தலைவர் மணிகண்டன், நகர பொறுப்பாளர்கள் பாஸ்கர், தங்கவேல் சுஜேஸ், சௌந்தர், முரளி, ரவி ஆகியோர் உடனிருந்து செய்தனர்.
    user_Vengadesh
    Vengadesh
    கோபிசெட்டிபாளையம், ஈரோடு, தமிழ்நாடு•
    21 hrs ago
  • விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி நரசிம்மநாயக்கன்பாளையம் 10 லட்சத்தில் NSN பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு அலங்காரம் செய்து வழிபாடு விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெள்ளி கவசம் அணிவித்து கோவில் கருவறை முழுவதும் 10, 20, 50, 100, 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் 10 லட்சம் ரூபாயைக் கொண்டு அலங்காரம் செய்து வழிபாடு நடத்தினர். இதனை சுற்றுப் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து சென்றனர். விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழகத்திலும் விநாயகரின் பிரம்மாண்ட சிலைகளை வைத்தும், அன்னதானம், ஊர்வலம் நடத்தியும் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இதில் கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல், ரங்கம்மாள் காலனி, என் ஜி ஜி ஓ காலனி, நரசிம்மநாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், பன்னீர்மடை, ஏ பி எம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் 300 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெள்ளி கவசம் அணிவித்து கோவில் கருவறை முழுவதும் 10, 20, 50, 100, 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் 10 லட்சம் ரூபாயைக் கொண்டு அலங்காரம் செய்து வழிபாடு நடத்தினர். விழாவின் துவக்கமாக காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கி மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து தெய்வ விக்கிரகங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் சுற்றுப் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து சென்றனர். இவ்விழாவில் கைலாய வாத்தியங்கள் இசைத்தும், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கியும் கொண்டாடினர். இதற்கான ஏற்பாடுகளை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் கோயில் கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
    4
    விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி நரசிம்மநாயக்கன்பாளையம் 
10 லட்சத்தில் NSN பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு அலங்காரம் செய்து வழிபாடு

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெள்ளி கவசம் அணிவித்து கோவில் கருவறை முழுவதும் 10, 20, 50, 100, 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் 10 லட்சம் ரூபாயைக் கொண்டு அலங்காரம் செய்து வழிபாடு நடத்தினர். இதனை சுற்றுப் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து சென்றனர்.
விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழகத்திலும் விநாயகரின் பிரம்மாண்ட சிலைகளை வைத்தும், அன்னதானம், ஊர்வலம் நடத்தியும் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
இதில் கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல், ரங்கம்மாள் காலனி, என் ஜி ஜி ஓ காலனி, நரசிம்மநாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், பன்னீர்மடை, ஏ பி எம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் 300 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெள்ளி கவசம் அணிவித்து கோவில் கருவறை முழுவதும் 10, 20, 50, 100, 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் 10 லட்சம் ரூபாயைக் கொண்டு அலங்காரம் செய்து வழிபாடு நடத்தினர். விழாவின் துவக்கமாக காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கி மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து தெய்வ விக்கிரகங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் சுற்றுப் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து சென்றனர். 
இவ்விழாவில் கைலாய வாத்தியங்கள் இசைத்தும், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கியும் கொண்டாடினர். இதற்கான ஏற்பாடுகளை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் கோயில் கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
    user_ரமேஷ்குமார்
    ரமேஷ்குமார்
    பத்திரிகையாளர் கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர், தமிழ்நாடு•
    56 min ago
  • உதகை பழைய நீதிமன்றம் வழக்கத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு அனைவருக்கும் அன்னதான மதிய உணவு வழங்கப்பட்டது, இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் நீலகிரி மாவட்டம் இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை முன்னிட்டு உதகை பல்வேறு கோவில்களில் பூஜைகள் மற்றும் அலங்கார நுழைவாயில் வண்ண விளக்குகளாலும் வாழை மரங்களாலும் அலங்கரிக்கப்பட்டன இன்று உதகை பழைய நீதிமன்றம் வழக்கத்தில் உள்ள விநாயகர் கோவில் திருவிழா நடைபெற்றது பகுதியில் உள்ள நீதிமன்ற அலுவலர்கள், பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு அலுவலர்கள் மற்றும் மத்திய தபால் அலுவலர்கள், நீதிமன்ற வக்கீல்கள் சங்கம் நிர்வாகிகள் அனைவரும் இணைந்து இவ்விழாவினை சிறப்பாக கொண்டாடினர், இதில் மத்திய அன்னதான உணவு அனைவருக்கும் வழங்கப்பட்டு விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது
    1
    உதகை பழைய நீதிமன்றம் வழக்கத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு அனைவருக்கும் அன்னதான மதிய உணவு வழங்கப்பட்டது, இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
நீலகிரி மாவட்டம் இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை முன்னிட்டு உதகை பல்வேறு கோவில்களில் பூஜைகள் மற்றும் அலங்கார நுழைவாயில் வண்ண விளக்குகளாலும் வாழை மரங்களாலும் அலங்கரிக்கப்பட்டன இன்று உதகை பழைய நீதிமன்றம் வழக்கத்தில் உள்ள விநாயகர் கோவில் திருவிழா நடைபெற்றது பகுதியில் உள்ள நீதிமன்ற அலுவலர்கள், பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு அலுவலர்கள் மற்றும் மத்திய தபால் அலுவலர்கள், நீதிமன்ற வக்கீல்கள் சங்கம் நிர்வாகிகள் அனைவரும் இணைந்து இவ்விழாவினை சிறப்பாக கொண்டாடினர், இதில் மத்திய அன்னதான உணவு அனைவருக்கும் வழங்கப்பட்டு விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது
    user_A. ANTONY WILSON
    A. ANTONY WILSON
    Photographer உதகமண்டலம் (ஊட்டி), நீலகிரி, தமிழ்நாடு•
    23 hrs ago
  • தாராபுரம் இடை தேர்தலுக்கான வேட்பு மனுவை வழக்கறிஞர் சுகன்யா இன்று தாக்கல் செய்தார் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வழக்கறிஞர் சுகன்யா இன்று தாக்கல் செய்தார் . வேற அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் இன்று அண்ணா அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் சாமிநாதன் அவர்களும் ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் பிரகாஷ் அவர்களும் முன்னாள் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் என் கயல்விழி செல்வராஜ் அவர்களும் திருப்பூர் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வராஜ் அவர்களும் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்பு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திமுக சார்பில் வழக்கறிஞர் சுகன்யா வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
    1
    தாராபுரம் இடை தேர்தலுக்கான வேட்பு மனுவை வழக்கறிஞர் சுகன்யா இன்று தாக்கல் செய்தார் 
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வழக்கறிஞர் சுகன்யா இன்று தாக்கல் செய்தார் . வேற அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் இன்று அண்ணா அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் சாமிநாதன் அவர்களும் ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர்  பிரகாஷ் அவர்களும் முன்னாள் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் என் கயல்விழி செல்வராஜ் அவர்களும் திருப்பூர் மாவட்ட வழக்கறிஞர் அணி  அமைப்பாளர் செல்வராஜ் அவர்களும் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்பு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திமுக சார்பில் வழக்கறிஞர் சுகன்யா வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிகழ்வில்  கட்சி நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
    user_Dpm news
    Dpm news
    Photographer தாராபுரம், திருப்பூர், தமிழ்நாடு•
    2 hrs ago
  • மாற்றுக் கட்சியில் இணையும் முன்னாள் பாமக எம்எல்ஏ அருள்! சேலத்தில் பரபரப்பு... சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி பாமக முன்னாள் எம்எல்ஏ அருள் இன்று வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், தான் விரைவில் அனைவரும் வியக்கத்தக்க வகையில் மிகப்பெரிய அரசியல் இயக்கத்தில் சேர்ந்து அரசியல் பணி செய்ய உள்ளதாகவும், தன்னோடு இது நாள் வரை தோளோடு தோள் கொடுத்து பயணித்த அனைவருக்கும் பதவியை பெற்று தருவேன், விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும், தேர்தலுக்கு இன்னும் பல காலங்கள் உள்ளதால் பொறுமையுடன் தனது அறிவிப்பை அனைவரும் இயக்கத்தக்க வகையில் வெளியிடுவேன் என முன்னாள் எம்எல்ஏ அருள் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளார்.
    1
    மாற்றுக் கட்சியில் இணையும் முன்னாள் பாமக எம்எல்ஏ அருள்! சேலத்தில் பரபரப்பு...
சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி பாமக முன்னாள் எம்எல்ஏ அருள் இன்று வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், தான் விரைவில் அனைவரும் வியக்கத்தக்க வகையில் மிகப்பெரிய அரசியல் இயக்கத்தில் சேர்ந்து அரசியல் பணி செய்ய உள்ளதாகவும், தன்னோடு இது நாள் வரை தோளோடு தோள் கொடுத்து பயணித்த அனைவருக்கும் பதவியை பெற்று தருவேன், விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும், தேர்தலுக்கு இன்னும் பல காலங்கள் உள்ளதால் பொறுமையுடன் தனது அறிவிப்பை அனைவரும் இயக்கத்தக்க வகையில் வெளியிடுவேன் என முன்னாள் எம்எல்ஏ அருள் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளார்.
    user_Rajendran
    Rajendran
    salem mail & City mail Reporter சேலம், சேலம், தமிழ்நாடு•
    9 hrs ago
  • ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் காற்றுடன் மிதமான மழை... ராசிபுரம் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் காற்றுடன் மிதமான மழை... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது. ராசிபுரம், பட்டணம், வடுகம், நாமகிரிப்பேட்டை, குருசாமிபாளையம், வெண்ணந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான காற்றுடன் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காலை முதலே வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது பெய்து வரும் மழையால் வெப்பம் தணிந்து, ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இதமான குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. மழை காரணமாக சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக மிதமான மழை பெய்து வருகிறது....
    1
    ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் காற்றுடன் மிதமான மழை...

ராசிபுரம்
ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் காற்றுடன் மிதமான மழை...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது.
ராசிபுரம், பட்டணம், வடுகம், நாமகிரிப்பேட்டை, குருசாமிபாளையம், வெண்ணந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான காற்றுடன் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
காலை முதலே வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது பெய்து வரும் மழையால் வெப்பம் தணிந்து, ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இதமான குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. மழை காரணமாக சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக மிதமான மழை பெய்து வருகிறது....
    user_ILAYARAJA
    ILAYARAJA
    Local News Reporter ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    2 hrs ago
  • வணிக சிலிண்டர் விலை  உயர்வால் ராக்கெட் விறகு  அடுப்புக்கு மாறும் கடை உரிமையாளர்கள் இராசிபுரம் : கேஸ்  தட்டுப்பாடு மற்றும்  வணிக சிலிண்டர் விலை உயர்வால் ராசிபுரம் பகுதியில் ராக்கெட் விறகு அடுப்புகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் கடந்த சில மாதங்களாக நிலவி வரும் கேஸ் தட்டுப்பாடு  மற்றும் விலை உயர்வின் காரணமாக, மாற்று சமையல் முறைகளை பொதுமக்கள் மற்றும்  வணிகர்கள் நாடத் தொடங்கியுள்ளனர்.குறிப்பாக வணிக சிலிண்டர்களின் விலை உயர்வால் உணவகங்கள், டீக்கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் ராக்கெட் விறகு அடுப்புகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். விறகு மூலம் இயங்கும் இந்த அடுப்பில், விறகை எரிப்பதுடன் மோட்டார் மூலம் காற்றை செலுத்தும் வகையில் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் சாதாரண விறகு அடுப்பை காட்டிலும் தீ அதிக வீரியத்துடன் எரிவதாகவும் தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். ராசிபுரம் பகுதியில் ராக்கெட் விறகு அடுப்புகளை தயாரித்து வரும் சங்கர் கணேஷ் கூறுகையில்,  வணிக சிலிண்டர் விலை உயர்வு காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக ராக்கெட் விறகு அடுப்புகளுக்கான உற்பத்தி அதிகரித்து வருவதாக தெரிவித்தார். மேலும், தற்போதைய கேஸ் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக வாடிக்கையாளர்கள் அதிகளவில் தங்களை அணுகி வருவதாகவும், வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப பல்வேறு அளவுகளில் அடுப்புகளை தயாரித்து வருவதாகவும் கூறினார். ஒரு அடுப்பை முழுமையாக தயாரிக்க சுமார் 3 முதல் 4 நாட்கள் வரை ஆகும் என்றும், பயன்பாடு மற்றும் அளவைப் பொறுத்து ரூ.3 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை விலை நிர்ணயம் செய்யப்படுவதாகவும் தெரிவித்தார். ராசிபுரத்தில் தயாரிக்கப்படும் இந்த அடுப்புகள் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி பிற மாநிலங்களுக்கும் ஆன்லைன் வர்த்தக தளங்கள் வாயிலாகவும் அனுப்பி வைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. வணிக பயன்பாட்டிற்காக அதிகளவில் ஆர்டர்கள் கிடைத்து வரும் நிலையில், கேஸ் விலை உயர்வுக்கு மாற்றாக குறைந்த செலவில் விறகை பயன்படுத்தி சமையல் செய்யக்கூடிய இந்த அடுப்பு மீதான வணிகர்களின் ஆர்வம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    1
    வணிக சிலிண்டர் விலை  உயர்வால் ராக்கெட் விறகு  அடுப்புக்கு மாறும் கடை உரிமையாளர்கள்
இராசிபுரம் :
கேஸ்  தட்டுப்பாடு மற்றும்  வணிக சிலிண்டர் விலை உயர்வால் ராசிபுரம் பகுதியில் ராக்கெட் விறகு அடுப்புகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் கடந்த சில மாதங்களாக நிலவி வரும் கேஸ் தட்டுப்பாடு  மற்றும் விலை உயர்வின் காரணமாக, மாற்று சமையல் முறைகளை பொதுமக்கள் மற்றும்  வணிகர்கள் நாடத் தொடங்கியுள்ளனர்.குறிப்பாக வணிக சிலிண்டர்களின் விலை உயர்வால் உணவகங்கள், டீக்கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் ராக்கெட் விறகு அடுப்புகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
விறகு மூலம் இயங்கும் இந்த அடுப்பில், விறகை எரிப்பதுடன் மோட்டார் மூலம் காற்றை செலுத்தும் வகையில் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் சாதாரண விறகு அடுப்பை காட்டிலும் தீ அதிக வீரியத்துடன் எரிவதாகவும் தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ராசிபுரம் பகுதியில் ராக்கெட் விறகு அடுப்புகளை தயாரித்து வரும் சங்கர் கணேஷ் கூறுகையில், 
வணிக சிலிண்டர் விலை உயர்வு காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக ராக்கெட் விறகு அடுப்புகளுக்கான உற்பத்தி அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.
மேலும், தற்போதைய கேஸ் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக வாடிக்கையாளர்கள் அதிகளவில் தங்களை அணுகி வருவதாகவும், வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப பல்வேறு அளவுகளில் அடுப்புகளை தயாரித்து வருவதாகவும் கூறினார்.
ஒரு அடுப்பை முழுமையாக தயாரிக்க சுமார் 3 முதல் 4 நாட்கள் வரை ஆகும் என்றும், பயன்பாடு மற்றும் அளவைப் பொறுத்து ரூ.3 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை விலை நிர்ணயம் செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.
ராசிபுரத்தில் தயாரிக்கப்படும் இந்த அடுப்புகள் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி பிற மாநிலங்களுக்கும் ஆன்லைன் வர்த்தக தளங்கள் வாயிலாகவும் அனுப்பி வைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
வணிக பயன்பாட்டிற்காக அதிகளவில் ஆர்டர்கள் கிடைத்து வரும் நிலையில், கேஸ் விலை உயர்வுக்கு மாற்றாக குறைந்த செலவில் விறகை பயன்படுத்தி சமையல் செய்யக்கூடிய இந்த அடுப்பு மீதான வணிகர்களின் ஆர்வம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    user_Aravinth
    Aravinth
    ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    3 hrs ago
  • ஸ்ரீ வரம் தரும் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விமர்சையாக கொண்டாட்டம் திராளான பொதுமக்கள் வந்து தரிசனம் செய்தனர் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கோவை துடியலூர் அருகே உள்ள ரங்கம்மாள் காலனி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வரம் தரும் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் சுற்று பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பொங்கல், கேசரி, புளிசாதம் அன்னதானமாக வழங்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழகத்திலும் விநாயகரின் பிரம்மாண்ட சிலைகளை வைத்தும், அன்னதானம், ஊர்வலம் நடத்தியும் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல், ரங்கம்மாள் காலனி, என் ஜி ஜி ஓ காலனி, நரசிம்மநாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், பன்னீர்மடை, ஏ பி எம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் 300 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக கோவை துடியலூர் அருகே உள்ள ரங்கம்மாள் காலனி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வரம் தரும் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. விழாவின் துவக்கமாக காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கி மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து தெய்வ விக்கிரகங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் சுற்று பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பொங்கல், கேசரி, புளிசாதம் அன்னதானமாக வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம்மாள் காலனி, பழனி கவுண்டர் காலனி, வேலம்மாள் காலனி, முருகன் நகர் ஊர் பொதுமக்கள் மற்றும் ஆலய நிர்வாக கமிட்டி செல்வகுமார், நாராயணசாமி, முருகேசன், சிவக்குமார், தட்சிணாமூர்த்தி, ஐயம்பெருமாள், ஓமேஸ்வர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
    4
    ஸ்ரீ வரம் தரும் வரசித்தி விநாயகர் ஆலயத்தில்
விநாயகர் சதுர்த்தி விமர்சையாக கொண்டாட்டம்
திராளான பொதுமக்கள் வந்து தரிசனம் செய்தனர்

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கோவை துடியலூர் அருகே உள்ள ரங்கம்மாள் காலனி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வரம் தரும் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் சுற்று பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பொங்கல், கேசரி, புளிசாதம் அன்னதானமாக வழங்கப்பட்டது.  
விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழகத்திலும் விநாயகரின் பிரம்மாண்ட சிலைகளை வைத்தும், அன்னதானம், ஊர்வலம் நடத்தியும் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல், ரங்கம்மாள் காலனி, என் ஜி ஜி ஓ காலனி, நரசிம்மநாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், பன்னீர்மடை, ஏ பி எம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் 300 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது.
இதன் ஒருபகுதியாக கோவை துடியலூர் அருகே உள்ள ரங்கம்மாள் காலனி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வரம் தரும் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. விழாவின் துவக்கமாக காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கி மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து தெய்வ விக்கிரகங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதில் சுற்று பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பொங்கல், கேசரி, புளிசாதம் அன்னதானமாக வழங்கினர்.  
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம்மாள் காலனி, பழனி கவுண்டர் காலனி, வேலம்மாள் காலனி, முருகன் நகர் ஊர் பொதுமக்கள் மற்றும் ஆலய நிர்வாக கமிட்டி செல்வகுமார், நாராயணசாமி, முருகேசன், சிவக்குமார், தட்சிணாமூர்த்தி, ஐயம்பெருமாள், ஓமேஸ்வர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
    user_ரமேஷ்குமார்
    ரமேஷ்குமார்
    பத்திரிகையாளர் கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர், தமிழ்நாடு•
    59 min ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.