logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 15 வது வார்டு பாரதிதாசன் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஏற்கனவே உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து விநியோகிக்கப்படும் தெரு தண்ணீர் முழுமையாக தனி நபர் வீட்டிற்கு செல்லாத காரணத்தினால் கடந்த பல மாதங்களாக தண்ணீர் வினியோகம் இல்லாமல் அந்தப் பகுதி மக்கள் தண்ணீர் பிரச்சனையில் பத்தலைத்து வருகின்றனர். இதற்கு தீர்வு காணும் பொருட்டு அந்த பகுதியின் ஒரு தெருவில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ஆழ்துளை கிணறு அமைக்காமல் மேல்நிலை நீர் தூக்கத் தொட்டி இணைப்பு கொடுக்காமல் வெறுமனே கண் துடைப்பிற்காக சின்டெக்ஸ் டேங்க் மட்டும் அமைத்துவிட்டு சென்றவர்கள் மீண்டும் அந்த சின்டெக்ஸ் டேங்க் இருந்து பொதுமக்களுக்கு தேவைப்படும் தண்ணீரை விநியோகம் செய்ய எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என அந்த பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன் வைத்து வருகின்றனர். இது சம்பந்தமாக நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

2 hrs ago
user_Suji
Suji
Tirupathur, Tamil Nadu•
2 hrs ago

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 15 வது வார்டு பாரதிதாசன் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஏற்கனவே உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து விநியோகிக்கப்படும் தெரு தண்ணீர் முழுமையாக தனி நபர் வீட்டிற்கு செல்லாத காரணத்தினால் கடந்த பல மாதங்களாக தண்ணீர் வினியோகம் இல்லாமல் அந்தப் பகுதி மக்கள் தண்ணீர் பிரச்சனையில் பத்தலைத்து வருகின்றனர். இதற்கு தீர்வு காணும் பொருட்டு அந்த பகுதியின் ஒரு தெருவில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ஆழ்துளை கிணறு அமைக்காமல் மேல்நிலை நீர் தூக்கத் தொட்டி இணைப்பு கொடுக்காமல் வெறுமனே கண் துடைப்பிற்காக சின்டெக்ஸ் டேங்க் மட்டும் அமைத்துவிட்டு சென்றவர்கள் மீண்டும் அந்த சின்டெக்ஸ் டேங்க் இருந்து பொதுமக்களுக்கு தேவைப்படும் தண்ணீரை விநியோகம் செய்ய எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என அந்த பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன் வைத்து வருகின்றனர். இது சம்பந்தமாக நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

More news from Tamil Nadu and nearby areas
  • திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் விஜய் (வயது 22), நாகராஜ் (வயது 21) இவர்கள் இருவரும் நண்பராக உள்ளனர். நாளை கோயில் திருவிழாவிற்காக துணி எடுப்பதற்காக ஆம்பூர் பகுதிக்கு சென்று மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது வளையாம்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு இரும்பு வேலி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அங்கிருந்தவர்கள் உடனடியாக இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு ஒரு நிலையில் இந்த விபத்து தொடர்பாக வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதே பகுதியில் கடந்த ஐந்து நாட்களில் மட்டும் 3 விபத்துக்கள் ஏற்பட்டு அதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் 15-ககும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    1
    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் விஜய் (வயது 22), நாகராஜ் (வயது 21) இவர்கள் இருவரும் நண்பராக உள்ளனர்.
நாளை கோயில் திருவிழாவிற்காக துணி எடுப்பதற்காக ஆம்பூர் பகுதிக்கு சென்று மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது வளையாம்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு இரும்பு வேலி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு  படுகாயம் அடைந்தனர்.
அங்கிருந்தவர்கள் உடனடியாக இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு ஒரு நிலையில் இந்த விபத்து தொடர்பாக வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
மேலும் இதே பகுதியில் கடந்த ஐந்து நாட்களில் மட்டும் 3 விபத்துக்கள் ஏற்பட்டு அதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் 15-ககும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    user_Suji
    Suji
    Tirupathur, Tamil Nadu•
    2 hrs ago
  • கிருஷ்ணகிரி அருகே உள்ள தானம்பட்டி கிராமத்தில்  5- ஆம் ஆண்டுமாபெரும் எருது விடும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
    1
    கிருஷ்ணகிரி அருகே உள்ள தானம்பட்டி கிராமத்தில்  5- ஆம் ஆண்டுமாபெரும் எருது விடும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர்அருகே கடந்த பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட சாலையை மீண்டும் தார்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுத்திட வேண்டும், இல்லையில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக கிராம மக்கள் பேட்டி. கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தோலம்பதி கிராமத்தில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் ஆனந்தூர் பிரதான சாலையை கடந்த பலத்தலை முறைகளாக பயன்படுத்தி வந்தனர். இந்த சாவை மிகவும் குண்டு குளியுமாக இருப்பதால் இந்த சாலையை தார்சாலையாக மாற்றிட வேண்டும் என்று கிராம சபைக் கூட்டத்தின் வாயிலாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பல லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அதற்கான பணிகளும் நடைபெற்றுள்ளது. ஆனால் தீடிரென அந்தப்பணிகளும் நிறுத்தப்படுள்ளதால் அந்த சாலையில் வாகனங்கள் மற்றும் இரண்டு சக்கர வண்டிகள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்கள மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் ஆகையால் கிடப்பில் போடப்பட்டுள்ள சாலையை தார்சாலையாக மாற்றிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரை கிராம மக்கள் பல முறை அனுகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் ராமன் தலைமையில் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கிடப்பில் போட்ட சாலைப்பணிகளை மீண்டும் செயல்படுத்திட வேண்டி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமாரிடம் புகார் மனுவினைக் கெடுத்தனர். இது குறித்து பேசிய கிராம மக்கள் மத்தூர் ஒன்றியம் தோலம்பதி கிராத்தில் வசித்து வரும் எங்களுக்கு முறையான சாலை வசதிகள் இன்றி வசித்து வருகிறோம். இந்த நிலையில் கரடுமுரடான சாலையை தார் சாலையாக மாற்றிடும் வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாசாலையாக மாற்றிட உரிய நிதியும் ஒதிக்கீடு செய்யபட்டும் அதற்கான பணிகளும் நடைப்பெற்ற நிலையில் தீடிரென அந்தபணியும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரியிடமும் கேட்டால் முறையான தகவல் ஏதும் இல்லை ஆகையால் கிடப்பில் போடப்பட சாலப்பணியை விரைவாக செயல்படுத்திட வேண்டும் இல்லையில் வீடுகளில் கறுப்பு கொடிகளை கட்டியும், குடும்ப அட்டை, அதார் அட்டைகளை அரசிடம் கொடுத்து விட்டு வருகின்ற சட்ட மன்றத் தேர்தலை புறக்கணிக்க போவதாக தெரிவித்தனர்.
    1
    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர்அருகே கடந்த பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட சாலையை மீண்டும்   
தார்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுத்திட வேண்டும், இல்லையில்
வருகின்ற சட்டமன்ற 
தேர்தலை புறக்கணிக்க போவதாக கிராம மக்கள் பேட்டி.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 
தோலம்பதி கிராமத்தில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றனர்.
இவர்கள் ஆனந்தூர் பிரதான சாலையை கடந்த பலத்தலை முறைகளாக பயன்படுத்தி வந்தனர். இந்த சாவை மிகவும் குண்டு குளியுமாக இருப்பதால் இந்த சாலையை தார்சாலையாக மாற்றிட வேண்டும் என்று கிராம சபைக் கூட்டத்தின் வாயிலாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 
பல லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அதற்கான பணிகளும் நடைபெற்றுள்ளது.
ஆனால் தீடிரென அந்தப்பணிகளும் நிறுத்தப்படுள்ளதால் அந்த சாலையில் வாகனங்கள் மற்றும் இரண்டு சக்கர வண்டிகள் செல்ல முடியாத நிலை உள்ளது.
இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்கள மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் ஆகையால் கிடப்பில் போடப்பட்டுள்ள சாலையை தார்சாலையாக மாற்றிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரை கிராம மக்கள் பல முறை அனுகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால்
ஆத்திரமடைந்த காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் ராமன் தலைமையில்  கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம்
கிடப்பில் போட்ட சாலைப்பணிகளை மீண்டும் செயல்படுத்திட வேண்டி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமாரிடம் புகார் மனுவினைக் கெடுத்தனர்.
இது குறித்து பேசிய கிராம மக்கள் மத்தூர் ஒன்றியம் தோலம்பதி கிராத்தில் வசித்து வரும் எங்களுக்கு  முறையான சாலை வசதிகள் இன்றி வசித்து வருகிறோம்.
இந்த நிலையில்
கரடுமுரடான சாலையை தார் சாலையாக மாற்றிடும் வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாசாலையாக மாற்றிட உரிய நிதியும் ஒதிக்கீடு செய்யபட்டும் அதற்கான பணிகளும் நடைப்பெற்ற நிலையில் தீடிரென அந்தபணியும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரியிடமும் கேட்டால் முறையான தகவல் ஏதும்
இல்லை ஆகையால் கிடப்பில் போடப்பட சாலப்பணியை விரைவாக செயல்படுத்திட வேண்டும் இல்லையில் வீடுகளில் கறுப்பு கொடிகளை கட்டியும், குடும்ப அட்டை, அதார் அட்டைகளை அரசிடம் கொடுத்து விட்டு வருகின்ற சட்ட மன்றத் தேர்தலை புறக்கணிக்க போவதாக தெரிவித்தனர்.
    user_செல்வம்
    செல்வம்
    பத்திரிகையாளர் Krishnagiri, Tamil Nadu•
    23 hrs ago
  • தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு தர்மபுரி மாவட்ட மகிளா காங்கிரஸ் கட்சியின் சார்பில் இன்று புதன்கிழமை காலை மத்திய அரசின் தவறான வெளிநாட்டு கொள்கையின் காரணமாக கேஸ் தட்டுப்பாடு நிலவி வருவதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மகிலா காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ரோஜா கோவிந்த சுவாமி தலைமையில், மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோவி.சிற்றரசு முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    1
    தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு தர்மபுரி மாவட்ட மகிளா காங்கிரஸ் கட்சியின் சார்பில் இன்று புதன்கிழமை காலை மத்திய அரசின் தவறான வெளிநாட்டு கொள்கையின் காரணமாக கேஸ் தட்டுப்பாடு நிலவி வருவதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மகிலா காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ரோஜா கோவிந்த சுவாமி தலைமையில், மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோவி.சிற்றரசு முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    user_Raja
    Raja
    செய்தியாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    1 hr ago
  • தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி தருமபுரி மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக துனை ராணுவ படையினர் அணிவகுப்பு எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் துனை ராணுவ படையினர் மற்றும் காவல்துறையினரின் அணிவகுப்பு நடைபெற்றது தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தருமபுரி கோட்டாச்சியர் திருமதி காயத்ரி கொடியசைத்து இப்பேரணியை துவக்கிவைத்தார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் துவங்கிய இப்பேரணி செந்தில் நகர், இலக்கியம்பட்டி, அரசு மருத்துவமனை, நேதாஜி சாலைவழியாக நான்கு ரோடு வரை சென்று மாவட்ட விளையாட்டு மைதானம் சென்று நிறைவடைந்தது இப்பேரணியில் கமேண்டோ தலைமையிலான துனை ராணுவ படையினர் மற்றும் காவல்துறையினர் 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஊர்வலமாக சென்றனர்
    1
    தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி தருமபுரி மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக துனை ராணுவ படையினர் அணிவகுப்பு
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் துனை ராணுவ படையினர் மற்றும் காவல்துறையினரின் அணிவகுப்பு நடைபெற்றது
தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தருமபுரி கோட்டாச்சியர் திருமதி காயத்ரி கொடியசைத்து இப்பேரணியை துவக்கிவைத்தார்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் துவங்கிய இப்பேரணி செந்தில் நகர், இலக்கியம்பட்டி, அரசு மருத்துவமனை, நேதாஜி சாலைவழியாக நான்கு ரோடு வரை சென்று மாவட்ட விளையாட்டு மைதானம் சென்று நிறைவடைந்தது
இப்பேரணியில் கமேண்டோ தலைமையிலான துனை ராணுவ படையினர் மற்றும் காவல்துறையினர் 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஊர்வலமாக சென்றனர்
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • Post by Vinayagam Vinayagam
    1
    Post by Vinayagam Vinayagam
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent ஆற்காடு, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    1 hr ago
  • ---------- காஞ்சிபுரம் மாநகராட்சி ஓரிக்கை பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மேல்நிலைப்பள்ளியில் இன்று 10ம் வகுப்பு தேர்வு எழுதும் அப்பள்ளி மாணவ மாணவிகள் தேர்வு எழுதுவதற்கு முன்னதாக இறை வணக்கம் செலுத்தினர்.பின் பள்ளி மாணவிகள் பள்ளியின் தாளாளர் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றும்,பள்ளி மாணவர்கள் தாளாளரை கட்டி அனைத்தும்,காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற பின் தேர்வு எழுத தேர்வு அறைக்கு சென்றனர்.பள்ளி தாளாரோ எவ்வித அச்சமும்,பயமுமின்றி தேர்வை நல்ல படியாக எழுத வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். பள்ளி மாணவர்களின் இந்த வினோத செயல் பள்ளி தாளாரரின் மீது வைத்துள்ள அன்பையும்,தனக்கு கல்வி கற்றுக்கொடுக்கும் குருவிற்கு உரிய மரியாதை செய்யும் விதமாக பார்க்கப்படுகிறது.
    1
    ----------
காஞ்சிபுரம் மாநகராட்சி ஓரிக்கை பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மேல்நிலைப்பள்ளியில் இன்று 10ம் வகுப்பு தேர்வு எழுதும் அப்பள்ளி மாணவ மாணவிகள் தேர்வு எழுதுவதற்கு முன்னதாக இறை வணக்கம் செலுத்தினர்.பின் பள்ளி மாணவிகள் பள்ளியின் தாளாளர் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றும்,பள்ளி மாணவர்கள் தாளாளரை கட்டி அனைத்தும்,காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற பின் தேர்வு எழுத தேர்வு அறைக்கு சென்றனர்.பள்ளி தாளாரோ எவ்வித அச்சமும்,பயமுமின்றி தேர்வை நல்ல படியாக எழுத வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.
பள்ளி மாணவர்களின் இந்த வினோத செயல் பள்ளி தாளாரரின் மீது வைத்துள்ள அன்பையும்,தனக்கு கல்வி கற்றுக்கொடுக்கும் குருவிற்கு உரிய மரியாதை செய்யும் விதமாக பார்க்கப்படுகிறது.
    user_E.LAKSHMI KANTHAN
    E.LAKSHMI KANTHAN
    பத்திரிகையாளர் காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    34 min ago
  • திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வீரவர்கோயில் பகுதியில் பெங்களூர் சென்னை ரயில்வே மார்க்கத்தின் அருகில் புதர் போல் இருந்த மஞ்சுபுல் தீப்பற்றி எரிவதை அறிந்த அப்பகுதி மக்கள் ரயில்வே துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர் தகவலின் பேரில் ரயில்வே போலீசார் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்ததின் பேரில் ஆம்பூர் தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று ரயில் தண்டவாளத்தின் அருகில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீர் பீய்ச்சியடித்து கட்டுக்குள் கொண்டு வந்தனர் தண்டவாளத்தின் அருகில் உயர் மின்னழுத்த கம்பிகள் செல்வதால் தீயணைப்புத் துறையினர் தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது மேலும் அதே பகுதியில் ஏற்கனவே தண்டவாளத்தின் மீது கற்கள் வைத்து ரயிலை கவிழ்க்க சதி திட்டம் தீட்டப்பட்டது மற்றொரு முறை இதே போன்று சமூக விரோதிகளால் தண்டவாளம் அருகில் உள்ள மஞ்சுபுல் தீயிட்டு கொளுத்தியது போன்ற தொடர் சமூக விரோத செயல்கள் அப்பகுதியில் நடைபெற்று வருவதால் ரயில்வே காவல் துறையினர் மற்றும் ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்
    1
    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வீரவர்கோயில் பகுதியில் பெங்களூர் சென்னை ரயில்வே மார்க்கத்தின் அருகில் புதர் போல் இருந்த மஞ்சுபுல் தீப்பற்றி எரிவதை அறிந்த அப்பகுதி மக்கள் ரயில்வே துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர் தகவலின் பேரில்  ரயில்வே போலீசார் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்ததின் பேரில் ஆம்பூர் தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று ரயில் தண்டவாளத்தின் அருகில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீர் பீய்ச்சியடித்து கட்டுக்குள் கொண்டு வந்தனர் தண்டவாளத்தின் அருகில் உயர் மின்னழுத்த கம்பிகள் செல்வதால் தீயணைப்புத் துறையினர் தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது 
மேலும் அதே பகுதியில் ஏற்கனவே  தண்டவாளத்தின் மீது கற்கள் வைத்து ரயிலை கவிழ்க்க சதி திட்டம் தீட்டப்பட்டது மற்றொரு முறை இதே போன்று சமூக விரோதிகளால் தண்டவாளம் அருகில் உள்ள மஞ்சுபுல் தீயிட்டு கொளுத்தியது போன்ற தொடர் சமூக விரோத செயல்கள் அப்பகுதியில் நடைபெற்று வருவதால் ரயில்வே காவல் துறையினர் மற்றும் ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்
    user_Suji
    Suji
    Tirupathur, Tamil Nadu•
    2 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.