Shuru
Apke Nagar Ki App…
திருமயம் அருகே உள்ள அரியநாயகி அம்மன் ஸ்ரீ ராஜ யோக செல்வகணபதி ஆலய கும்பாபிஷேக விழா புதுக்கோட்டை மாவட்டம் கீழாநிலை அடுத்த திருமயம் வட்டம் கரையப்பட்டி அருள்மிகு அரியநாயகி அம்மன் , ஸ்ரீ ராஜயோக செல்வகணபதி ஆலய மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இனிய பிறந்து அனைவருக்கும் கோவில் வளாகத்தில் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.
Mayilvaganan
திருமயம் அருகே உள்ள அரியநாயகி அம்மன் ஸ்ரீ ராஜ யோக செல்வகணபதி ஆலய கும்பாபிஷேக விழா புதுக்கோட்டை மாவட்டம் கீழாநிலை அடுத்த திருமயம் வட்டம் கரையப்பட்டி அருள்மிகு அரியநாயகி அம்மன் , ஸ்ரீ ராஜயோக செல்வகணபதி ஆலய மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இனிய பிறந்து அனைவருக்கும் கோவில் வளாகத்தில் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.
More news from தமிழ்நாடு and nearby areas
- புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது அதன் ஒரு பகுதியாக ஆலங்குடி திருவரங்குளம் போன்ற பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஆலங்குடி வம்பன் வடகாடு போன்ற பகுதிகளில் தற்பொழுது மழை பெய்து வருகிறது அதன் தொடர்ச்சியாக குளங்கள் குட்டைகளில் நீர்த்தேக்கம் மெதுவாக உயர்கிறது கடும் வெயில் நிலவி வந்த நிலையில் தற்பொழுது மழை பொழிகிறது இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்1
- புதிய தீயணைப்பு நிலையத்தை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் காணொளி வாயிலாக திறந்து வைத்தார் சிங்கம்புணரியில் 40 ஆண்டுகளாக வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வந்த தீயணைப்பு நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. 1986-ல் துவங்கிய இந்த நிலையத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்ததை அடுத்து, 2021-ல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இன்று ₹2.46 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய நிலையத்தை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். தென் மண்டல துணை இயக்குநர் குமார் குத்துவிளக்கு ஏற்றி, மரக்கன்றுகள் நட்டார்.1
- கறம்பக்குடியில் கடும் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்ட 108 ஆம்புலன்ஸ் *புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் கடும் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்ட 108 ஆம்புலன்ஸ் அவசர தேவைக்கு செல்ல முடியாத சூழ்நிலை கூடுதல் காவலர்கள் மற்றும் போக்குவரத்து காவல்துறையை நியமிக்க கோரி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை* புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் சுப முகூர்த்த தினங்கள் மற்றும் கோயில் விசேஷ நாட்களில் அதிகளவில் பொதுமக்கள் கூடுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் 108 ஆம்புலன்ஸ் வாகனமும் சிக்கியது. இதனால் அவசர தேவைக்காக செல்ல வேண்டிய ஆம்புலன்ஸ் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கறம்பக்குடியில் போக்குவரத்து காவலர்கள் மற்றும் காவல்துறையினர் போதிய அளவில் பணியில் இல்லாததே போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணம் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே கறம்பக்குடி காவல் நிலையத்திற்கு கூடுதல் காவலர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்றும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து காவலர்களை நியமிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் பூதமங்கலத்தில் இப்போது மழை பெய்து வருகிறது துறலுடன் கூடிய மழை பெய்து வருகிறது! மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் பூதமங்கலத்தில் இப்போது மழை பெய்து வருகிறது. தூறலுடன் கூடிய லேசான மழை பெய்து வருகிறது. அதிகமான மழை பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. மேகம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. காலையிலிருந்து அதிக வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் இப்போது மழை பெய்து வருகிறது. மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.1
- நேபாள நோக்கி பெருமளவு நீர் பாய்ந்து திடீர்வெள்ளப் பேரழிவுகாரணம் என்ன? போதேகோஷி ஆற்றை சக்திவாய்ந்த நிலச்சரிவு மறித்ததால், சீனப் பகுதியில் இருந்து நேபாளத்தை நோக்கி பெருமளவு நீர் பாய்ந்து திடீர் வெள்ளம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. • பனிப்பாறையின் ஒரு பகுதி உடைந்து பள்ளத்தாக்கில் விழுந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்; இது நிலச்சரிவைத் தூண்டியிருக்கலாம் அல்லது அதன் தாக்கத்தை மேலும் தீவிரப்படுத்தியிருக்கலாம்.1
- குலுங்கியது குன்றம் ஆவணி மாத முதல் பௌர்ணமி முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம் செல்ல குவிந்தனர் *குலுங்கியது குன்றம் ஆவணி மாத முதல் பௌர்ணமி முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம் செல்ல குவிந்தனர்* மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஆறுபடை வீடுகளின் முதல் படை வீடான இன்று ஆவணி மாத முதல் பௌர்ணமி முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்ல குவிந்தனர். இன்று காலை பௌர்ணமி திதி 9 52க்கு தொடங்கி நாளை காலை 10 மணி வரை உள்ளது. இதனால் மாலை 6 மணிக்கு முதல் திருப்பரங்குன்றத்தில் கிரிவலம் செல்ல ஏராளமான பெண் பக்தர்கள் ஆண்கள் பக்தர்கள் மற்றும் குடும்பத்துடன் வந்து கோயில் வாசல் முன்பாக சாமி கும்பிட்டு பக்தர்கள் கிரிவலம் வந்தனர். ' ஒரே நேரத்தில் ஏராளமான பக்தர்கள் வந்ததால் பக்தர்கள் கூட்டம் அலை மோதி குன்றம் குலுங்கியது. கிரிவலம் வந்த பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது. இதனால் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அன்னதானத்தை பெற்று சென்றார்கள்1
- மணப்பாறை அருகே சிலிண்டர் வெடித்து தீ விபத்து பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த பண்ணாங்கொம்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இன்று திடீரென சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதையறிந்த மணப்பாறை தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து சென்று போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் எந்த ஒரு அசாம்பாவிதம் ஏற்படவில்லை.1
- மணப்பாறையில் ரெயில்வே மேம்பாலத்தின் அடியில் பற்றி எரிந்த தீ : கடும் புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதி திருச்சி மாவட்டம் மணப்பாறை திண்டுக்கல் சாலையில் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் அருகே தனியார் பள்ளி, விடுதி, நுகர்பொருள் வாணிபக் கிடங்கு, தேவாலயம், - மருத்துவமனை மற்றும் குடியிருப்புகள் அதிக அளவில் உள்ளன. இந்நிலையில் பாலத்திற்கு அடியில் ரெயில்வே தண்டவாளம் அருகே மின் மாற்றிக்கு எதிரே அதிக அளவில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் பிளாஸ்டிக் கழிவுகள், கருப்பு சக்கை, பல்வேறு விதமான குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இந்த நிலையில் நேற்று மதியம் திடீரென அந்த குப்பையில் தீப்பற்றி எரிந்தது. இந்த தீ ரெயில்வே மின் இணைப்பு அருகேயும், மின் மாற்றி அருகேயும் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக தீ எரிந்ததோடு அந்த இடத்தில் இருந்து கரும் புகை கிளம்பியது. இதனால் அந்த பகுதியே கடும் புகை மூட்டமாக காட்சி அளித்ததுடன் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதுமட்டுமின்றி அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளையும் புகை சூழ்ந்து கொண்டதால் மக்கள் மூச்சு விட கூட கடும் சிரமப்பட்டனர். இவ்வாறு தீ பற்றி எரியும் சம்பவம் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. பாலத்தின் அடியில் குப்பைகளை கொட்டுவதால் தான் அடிக்கடி தீவிபத்து ஏற்பட்டு வருகிறது. இப்பகுதியில் பள்ளி உள்ளதால் மாணவ -மாணவிகள் தொற்று நோய்க்கு ஆளாகும் நிலையும் உள்ளது. ஆகவே திண்டுக்கல் சாலை ரெயில்வே மேம்பாலத்தின் அடியில் குப்பை கொட்டுவதை தடுக்க நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.4