logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

குலுங்கியது குன்றம் ஆவணி மாத முதல் பௌர்ணமி முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம் செல்ல குவிந்தனர் *குலுங்கியது குன்றம் ஆவணி மாத முதல் பௌர்ணமி முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம் செல்ல குவிந்தனர்* மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஆறுபடை வீடுகளின் முதல் படை வீடான இன்று ஆவணி மாத முதல் பௌர்ணமி முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்ல குவிந்தனர். இன்று காலை பௌர்ணமி திதி 9 52க்கு தொடங்கி நாளை காலை 10 மணி வரை உள்ளது. இதனால் மாலை 6 மணிக்கு முதல் திருப்பரங்குன்றத்தில் கிரிவலம் செல்ல ஏராளமான பெண் பக்தர்கள் ஆண்கள் பக்தர்கள் மற்றும் குடும்பத்துடன் வந்து கோயில் வாசல் முன்பாக சாமி கும்பிட்டு பக்தர்கள் கிரிவலம் வந்தனர். ' ஒரே நேரத்தில் ஏராளமான பக்தர்கள் வந்ததால் பக்தர்கள் கூட்டம் அலை மோதி குன்றம் குலுங்கியது. கிரிவலம் வந்த பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது. இதனால் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அன்னதானத்தை பெற்று சென்றார்கள்

47 min ago
user_Dr R.VIJAY
Dr R.VIJAY
Local News Reporter மதுரை வடக்கு, மதுரை, தமிழ்நாடு•
47 min ago

குலுங்கியது குன்றம் ஆவணி மாத முதல் பௌர்ணமி முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம் செல்ல குவிந்தனர் *குலுங்கியது குன்றம் ஆவணி மாத முதல் பௌர்ணமி முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம் செல்ல குவிந்தனர்* மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஆறுபடை வீடுகளின் முதல் படை வீடான இன்று ஆவணி மாத முதல் பௌர்ணமி முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்ல குவிந்தனர். இன்று காலை பௌர்ணமி திதி 9 52க்கு தொடங்கி நாளை காலை 10 மணி வரை உள்ளது. இதனால் மாலை 6 மணிக்கு முதல் திருப்பரங்குன்றத்தில் கிரிவலம் செல்ல ஏராளமான பெண் பக்தர்கள் ஆண்கள் பக்தர்கள் மற்றும் குடும்பத்துடன் வந்து கோயில் வாசல் முன்பாக சாமி கும்பிட்டு பக்தர்கள் கிரிவலம் வந்தனர். ' ஒரே நேரத்தில் ஏராளமான பக்தர்கள் வந்ததால் பக்தர்கள் கூட்டம் அலை மோதி குன்றம் குலுங்கியது. கிரிவலம் வந்த பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது. இதனால் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அன்னதானத்தை பெற்று சென்றார்கள்

More news from தமிழ்நாடு and nearby areas
  • குலுங்கியது குன்றம் ஆவணி மாத முதல் பௌர்ணமி முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம் செல்ல குவிந்தனர் *குலுங்கியது குன்றம் ஆவணி மாத முதல் பௌர்ணமி முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம் செல்ல குவிந்தனர்* மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஆறுபடை வீடுகளின் முதல் படை வீடான இன்று ஆவணி மாத முதல் பௌர்ணமி முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்ல குவிந்தனர். இன்று காலை பௌர்ணமி திதி 9 52க்கு தொடங்கி நாளை காலை 10 மணி வரை உள்ளது. இதனால் மாலை 6 மணிக்கு முதல் திருப்பரங்குன்றத்தில் கிரிவலம் செல்ல ஏராளமான பெண் பக்தர்கள் ஆண்கள் பக்தர்கள் மற்றும் குடும்பத்துடன் வந்து கோயில் வாசல் முன்பாக சாமி கும்பிட்டு பக்தர்கள் கிரிவலம் வந்தனர். ' ஒரே நேரத்தில் ஏராளமான பக்தர்கள் வந்ததால் பக்தர்கள் கூட்டம் அலை மோதி குன்றம் குலுங்கியது. கிரிவலம் வந்த பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது. இதனால் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அன்னதானத்தை பெற்று சென்றார்கள்
    1
    குலுங்கியது குன்றம்  ஆவணி மாத முதல் பௌர்ணமி முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம் செல்ல குவிந்தனர்

*குலுங்கியது குன்றம்  ஆவணி மாத முதல் பௌர்ணமி முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம் செல்ல குவிந்தனர்* 
மதுரை மாவட்டம் 
திருப்பரங்குன்றம் ஆறுபடை வீடுகளின் முதல் படை வீடான இன்று ஆவணி மாத முதல் பௌர்ணமி முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்ல குவிந்தனர்.
இன்று காலை பௌர்ணமி திதி 
9 52க்கு தொடங்கி நாளை காலை 10 மணி வரை உள்ளது. 
இதனால் மாலை 6 மணிக்கு முதல்  திருப்பரங்குன்றத்தில் கிரிவலம்  செல்ல ஏராளமான பெண் பக்தர்கள் ஆண்கள் பக்தர்கள்  மற்றும் குடும்பத்துடன் வந்து கோயில் வாசல் முன்பாக சாமி கும்பிட்டு பக்தர்கள் கிரிவலம் வந்தனர். '
ஒரே நேரத்தில் ஏராளமான பக்தர்கள் வந்ததால் பக்தர்கள் கூட்டம் அலை மோதி குன்றம் குலுங்கியது. கிரிவலம் வந்த பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது. இதனால் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அன்னதானத்தை பெற்று சென்றார்கள்
    user_Dr R.VIJAY
    Dr R.VIJAY
    Local News Reporter மதுரை வடக்கு, மதுரை, தமிழ்நாடு•
    47 min ago
  • கர்ப்பிணிக்கு சிக்கலான முதுகுத்தண்டு அறுவைசிகிச்சை ஆரோக்கியமான குழந்தை பிறப்பு முதுகுத்தண்டுவட காசநோய் பாதிப்பால் நடக்க முடியாமல் அவதிப்பட்ட 28 வார கர்ப்பிணிக்கு, மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சவாலான முதுகுத்தண்டு அறுவைசிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. அறுவைசிகிச்சைக்குப் பின்னர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில், அந்த பெண் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்தார். 28 வயதான கர்ப்பிணிக்கு தொடர்ந்து கடுமையான முதுகுத்தண்டு வலி ஏற்பட்டதுடன், நடப்பதில் சிரமமும் மார்புக்குக் கீழ் உணர்விழப்பும் ஏற்பட்டது. மருத்துவப் பரிசோதனைகளில் முதுகுத்தண்டுவடத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக நரம்புகளுக்கு அதிக அழுத்தம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, முதுகுத்தண்டுவடத்தின் மீதான அழுத்தத்தை குறைக்கும் வகையில் Decompressive Laminectomy அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தாய் மற்றும் சேய் இருவரையும் காக்க வேண்டும் மற்றும் 28 வார கர்ப்பம் என்பதால் அறுவைசிகிச்சை மருத்துவர்களுக்கு மிகப்பெரும் சவாலாக இருந்தது தாயின் உயிருக்கும் உடல்நலத்திற்கும் சிகிச்சை அளிப்பதுடன், வயிற்றில் இருந்த கருவின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டியிருந்தது. பரிசோதனைகளில் T1–T2 பகுதியில் முதுகுத்தண்டு பாதிப்பு, முதுகுத்தண்டில் கூன் விழுந்தது போன்ற மாற்றம் மற்றும் நரம்பு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இது ‘பாட்ஸ் ஸ்பைன்’ எனப்படும் முதுகுத்தண்டுவட காசநோய் பாதிப்பாக இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். C3–T4 பகுதியில் சிக்கலான அறுவைசிகிச்சையை தொடர்ந்து முதுகுத்தண்டுவடத்தை நிலைநிறுத்தும் வகையில் C3–T4 பகுதியில் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பல மணி நேரம் நோயாளியை குப்புறப் படுக்க வேண்டியிருந்ததால், தாய் மற்றும் கருவின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகளின் போது கருவை கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்கவும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அறுவைசிகிச்சைக்குப் பின்னர் நோயாளியின் உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டது. அவர் மீண்டும் நன்றாக நடக்கத் தொடங்கினார். தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருந்த நிலையில், பின்னர் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்தார். முதுகுத்தண்டுவட அறுவைசிகிச்சை துறைத்தலைவரும் முதுநிலை நிபுணருமான டாக்டர் கே. செல்வகுமரன், முதுநிலை நிபுணர் டாக்டர் கே. எம். கவில் தலைமையிலான மருத்துவக் குழுவினர் அறுவைசிகிச்சையை மேற்கொண்டனர். இது மதுரையில் மருத்துவத் துறையின் மிகப்பெரிய சாதனையாக அமைந்துள்ளது.
    1
    கர்ப்பிணிக்கு சிக்கலான முதுகுத்தண்டு அறுவைசிகிச்சை ஆரோக்கியமான குழந்தை பிறப்பு
முதுகுத்தண்டுவட காசநோய் பாதிப்பால் நடக்க முடியாமல் அவதிப்பட்ட 28 வார கர்ப்பிணிக்கு, மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சவாலான முதுகுத்தண்டு அறுவைசிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. அறுவைசிகிச்சைக்குப் பின்னர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில், அந்த பெண் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்தார்.
28 வயதான கர்ப்பிணிக்கு தொடர்ந்து கடுமையான முதுகுத்தண்டு வலி ஏற்பட்டதுடன், நடப்பதில் சிரமமும் மார்புக்குக் கீழ் உணர்விழப்பும் ஏற்பட்டது. மருத்துவப் பரிசோதனைகளில் முதுகுத்தண்டுவடத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக நரம்புகளுக்கு அதிக அழுத்தம் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, முதுகுத்தண்டுவடத்தின் மீதான அழுத்தத்தை குறைக்கும் வகையில் Decompressive Laminectomy அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
தாய் மற்றும் சேய் இருவரையும் காக்க வேண்டும் மற்றும் 
28 வார கர்ப்பம் என்பதால் அறுவைசிகிச்சை மருத்துவர்களுக்கு மிகப்பெரும் சவாலாக இருந்தது தாயின் உயிருக்கும் உடல்நலத்திற்கும் சிகிச்சை அளிப்பதுடன், வயிற்றில் இருந்த கருவின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டியிருந்தது.
பரிசோதனைகளில் T1–T2 பகுதியில் முதுகுத்தண்டு பாதிப்பு, முதுகுத்தண்டில் கூன் விழுந்தது போன்ற மாற்றம் மற்றும் நரம்பு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இது ‘பாட்ஸ் ஸ்பைன்’ எனப்படும் முதுகுத்தண்டுவட காசநோய் பாதிப்பாக இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
C3–T4 பகுதியில் சிக்கலான அறுவைசிகிச்சையை
தொடர்ந்து முதுகுத்தண்டுவடத்தை நிலைநிறுத்தும் வகையில் C3–T4 பகுதியில் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பல மணி நேரம் நோயாளியை குப்புறப் படுக்க வேண்டியிருந்ததால், தாய் மற்றும் கருவின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகளின்
போது கருவை கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்கவும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அறுவைசிகிச்சைக்குப் பின்னர் நோயாளியின் உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டது. அவர் மீண்டும் நன்றாக நடக்கத் தொடங்கினார். தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருந்த நிலையில், பின்னர் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்தார்.
முதுகுத்தண்டுவட அறுவைசிகிச்சை துறைத்தலைவரும் முதுநிலை நிபுணருமான டாக்டர் கே. செல்வகுமரன், முதுநிலை நிபுணர் டாக்டர் கே. எம். கவில் தலைமையிலான மருத்துவக் குழுவினர் அறுவைசிகிச்சையை மேற்கொண்டனர்.
இது மதுரையில் மருத்துவத் துறையின் மிகப்பெரிய சாதனையாக அமைந்துள்ளது.
    user_மதுரைக்காரன்
    மதுரைக்காரன்
    மதுரை வடக்கு, மதுரை, தமிழ்நாடு•
    5 hrs ago
  • ஆபத்தான ஆயுதங்களுடன் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டதாக 3 பேர் கைது விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆபத்தான ஆயுதங்களுடன் இருப்பது போன்ற காட்சிகளை பதிவு செய்து, அவற்றை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரப்பியதாக 3 இளைஞர்களை காரியாபட்டி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அச்சம்பட்டி முத்தாலம்மன் கோவில் கிழக்கு தெருவைச் சேர்ந்த முத்துராமன் (22), அதே பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (23) மற்றும் ஆவியூர் வடக்கு தெருவைச் சேர்ந்த கருப்பசாமி (23) ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஆபத்தான ஆயுதங்களுடன் இருப்பது போன்ற காட்சிகளை பதிவு செய்து, அதனை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதாகவும், அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்ததாகவும் கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் இளைஞர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும், பொதுமக்களின் பாதுகாப்புக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் இதுபோன்ற காட்சிகள் வெளியிடப்படுகிறதா என்பது குறித்து காவல்துறையினர் கண்காணிப்பு மேற்கொண்டு வந்தனர். இதன் அடிப்படையில், சம்பந்தப்பட்டவர்களை காரியாபட்டி காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து, முத்துராமன், ராமச்சந்திரன், கருப்பசாமி ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இதுபோன்ற ஆபத்தான ஆயுதங்களைக் காட்டி வீடியோக்களை வெளியிடுவது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருவதுடன், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
    1
    ஆபத்தான ஆயுதங்களுடன் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டதாக 3 பேர் கைது
விருதுநகர் மாவட்டம் 
காரியாபட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆபத்தான ஆயுதங்களுடன் இருப்பது போன்ற காட்சிகளை பதிவு செய்து, அவற்றை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரப்பியதாக 3 இளைஞர்களை காரியாபட்டி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அச்சம்பட்டி முத்தாலம்மன் கோவில் கிழக்கு தெருவைச் சேர்ந்த முத்துராமன் (22), அதே பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (23) மற்றும் ஆவியூர் வடக்கு தெருவைச் சேர்ந்த கருப்பசாமி (23) ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஆபத்தான ஆயுதங்களுடன் இருப்பது போன்ற காட்சிகளை பதிவு செய்து, அதனை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதாகவும், அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்ததாகவும் கூறப்படுகிறது.
சமூக வலைதளங்களில் இளைஞர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும், பொதுமக்களின் பாதுகாப்புக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் இதுபோன்ற காட்சிகள் வெளியிடப்படுகிறதா என்பது குறித்து காவல்துறையினர் கண்காணிப்பு மேற்கொண்டு வந்தனர்.
இதன் அடிப்படையில், சம்பந்தப்பட்டவர்களை காரியாபட்டி காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து, முத்துராமன், ராமச்சந்திரன், கருப்பசாமி ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேலும், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இதுபோன்ற ஆபத்தான ஆயுதங்களைக் காட்டி வீடியோக்களை வெளியிடுவது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருவதுடன், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
    user_குமார்
    குமார்
    Firefighter Kariapatti, Virudhunagar•
    2 hrs ago
  • மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் பூதமங்கலத்தில் இப்போது மழை பெய்து வருகிறது துறலுடன் கூடிய மழை பெய்து வருகிறது! மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் பூதமங்கலத்தில் இப்போது மழை பெய்து வருகிறது. தூறலுடன் கூடிய லேசான மழை பெய்து வருகிறது. அதிகமான மழை பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. மேகம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. காலையிலிருந்து அதிக வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் இப்போது மழை பெய்து வருகிறது. மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    1
    மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் பூதமங்கலத்தில் இப்போது மழை பெய்து வருகிறது துறலுடன் கூடிய மழை பெய்து வருகிறது!
மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் பூதமங்கலத்தில் இப்போது மழை பெய்து வருகிறது. தூறலுடன் கூடிய லேசான மழை பெய்து வருகிறது. அதிகமான மழை பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. மேகம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. காலையிலிருந்து அதிக வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் இப்போது மழை பெய்து வருகிறது. மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    user_R. மயூரி ராமேஸ்வரி
    R. மயூரி ராமேஸ்வரி
    மேலூர், மதுரை, தமிழ்நாடு•
    4 hrs ago
  • புதிய தீயணைப்பு நிலையத்தை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் காணொளி வாயிலாக திறந்து வைத்தார் சிங்கம்புணரியில் 40 ஆண்டுகளாக வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வந்த தீயணைப்பு நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. 1986-ல் துவங்கிய இந்த நிலையத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்ததை அடுத்து, 2021-ல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இன்று ₹2.46 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய நிலையத்தை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். தென் மண்டல துணை இயக்குநர் குமார் குத்துவிளக்கு ஏற்றி, மரக்கன்றுகள் நட்டார்.
    1
    புதிய தீயணைப்பு நிலையத்தை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்
சிங்கம்புணரியில் 40 ஆண்டுகளாக வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வந்த தீயணைப்பு நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. 1986-ல் துவங்கிய இந்த நிலையத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்ததை அடுத்து, 2021-ல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இன்று ₹2.46 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய நிலையத்தை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். தென் மண்டல துணை இயக்குநர் குமார் குத்துவிளக்கு ஏற்றி, மரக்கன்றுகள் நட்டார்.
    user_ABDUL SALAM
    ABDUL SALAM
    Photographer சிங்கம்புணரி, சிவகங்கை, தமிழ்நாடு•
    3 hrs ago
  • காஞ்சிபுரம் வடக்கு ஒன்றியத்தின் சார்பில் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது காஞ்சிபுரத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மறைந்த கழகத்தின் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 74 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள் விழாவானது கொண்டாடப்பட்டு வருகிறது அதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் ராஜேந்திரன் அவர்களின் வழிகாட்டுதலின்படி காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் விப்பேடு கிருபாகரன் தலைமையிலும் காஞ்சிபுரம் மாவட்ட இளைஞரணி செயலாளர் சிம்பு அவர்களின் முன்னிலையிலும் காஞ்சிபுரம் வடக்கு ஒன்றியத்தின் சார்பில் மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட 24 பஞ்சாயத்துகளிலும் இனிப்புகள் மற்றும் அன்னதானங்கள் வழங்கி கொண்டாடப்பட்டது அதன் தொடர்ச்சியாக பாலு செட்டி சத்திரம் பகுதியில் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 74 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 74 மரக்கன்றுகளை காஞ்சிபுரம் மாவட்ட விவசாய அணி செயலாளர் மகிமை மில்லர் ஏற்பாட்டில் காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் ராஜேந்திரன் கலந்து கொண்டு 74 மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கினார்கள் அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்டா ஏழை எளிய மக்களுக்கு அறுசுவை பிரியாணி வழங்கி தேமுதிக மறைந்த தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள் விழா காஞ்சிபுரம் வடக்கு ஒன்றியத்தின் சார்பில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய கிளை செயலாளர் விநாயகம் ஒன்றிய நிர்வாகி ஆனந்த் காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய பொருளாளர் நரசிம்மன் காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர்கள் சந்தியப்பன் தினகரன் காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதி துளசிராமன் காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் நாகராஜ் புஷ்பராஜ் கோபி மோகன் ஜோதி பிரகாஷ் நவீன் முருகன் பெத்துராஜ் சுதாகர் ஜெகன் மற்றும் ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு கேப்டன் அவர்களின் பிறந்தநாள் விழா விமர்சியாக கொண்டாடப்பட்டது
    1
    காஞ்சிபுரம் வடக்கு ஒன்றியத்தின் சார்பில் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது
காஞ்சிபுரத்தில்  தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மறைந்த கழகத்தின் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 74 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு
தமிழ்நாடு முழுவதும் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள் விழாவானது கொண்டாடப்பட்டு வருகிறது அதன் தொடர்ச்சியாக 
காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் ராஜேந்திரன் அவர்களின் வழிகாட்டுதலின்படி 
காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் விப்பேடு கிருபாகரன் தலைமையிலும் 
காஞ்சிபுரம் மாவட்ட இளைஞரணி செயலாளர் சிம்பு அவர்களின் முன்னிலையிலும் 
காஞ்சிபுரம் வடக்கு ஒன்றியத்தின் சார்பில் மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட 24 பஞ்சாயத்துகளிலும் இனிப்புகள் மற்றும் அன்னதானங்கள் வழங்கி கொண்டாடப்பட்டது அதன் தொடர்ச்சியாக பாலு செட்டி சத்திரம் பகுதியில் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 74 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு  74 மரக்கன்றுகளை காஞ்சிபுரம் மாவட்ட விவசாய அணி செயலாளர் மகிமை மில்லர் ஏற்பாட்டில் 
காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் ராஜேந்திரன் கலந்து கொண்டு 74 மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கினார்கள் அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்டா ஏழை எளிய மக்களுக்கு 
அறுசுவை பிரியாணி வழங்கி தேமுதிக மறைந்த தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள் விழா காஞ்சிபுரம் வடக்கு ஒன்றியத்தின் சார்பில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது 
இந்த நிகழ்ச்சியில்
காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய கிளை செயலாளர் விநாயகம் ஒன்றிய நிர்வாகி ஆனந்த் காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய பொருளாளர் நரசிம்மன் காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர்கள் சந்தியப்பன் தினகரன் காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதி துளசிராமன் காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் நாகராஜ் புஷ்பராஜ் கோபி மோகன் ஜோதி பிரகாஷ் நவீன் முருகன் பெத்துராஜ் சுதாகர் ஜெகன் மற்றும் ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு கேப்டன் அவர்களின் பிறந்தநாள் விழா விமர்சியாக கொண்டாடப்பட்டது
    user_Virudhunagar
    Virudhunagar
    Virudhunagar, Tamil Nadu•
    4 hrs ago
  • திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி NCC AIRWING மாணவர்கள் கடலைப் பாதுகாப்போம் – எதிர்காலத் தலை முறையைக் காப்போம்” என்ற நோக்கத்தை வலியுறுத்தி கடலுக்கடியில் விழிப்புணர்வு. புதுச்சேரியில் 26.08.2026 அன்று SCUBA DIVING செயல்பாடு நடைபெற்றது. இந்நிகழ்வில் திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி NCC AIRWING மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, கடலுக்கடியில் நீர் மூழ்கிப் பயிற்சி மற்றும் கடல் சூழலியல் தொடர்பான விழிப்புணர்வை பெற்றனர். SCUBA DIVING மூலம் மாணவர்கள் கடல் உயிரினங்கள், பவளப்பாறைகள் மற்றும் கடல் சூழலின் முக்கியத்துவத்தை நேரடியாக அறிந்து கொண்டனர். மேலும், நீருக்கடியில் பாதுகாப்பாக செயல்படுதல், குழு ஒருங்கிணைப்பு, ஒழுக்கம், தன்னம்பிக்கை, துணிச்சல் மற்றும் பொறுப்புணர்வு போன்ற பண்புகள் வளர்க்கப்பட்டன. இந்த நிகழ்வு “கடலைப் பாதுகாப்போம் – எதிர்காலத் தலை முறையைக் காப்போம்” என்ற நோக்கத்தை வலியுறுத்தும் வகையில் அமைந்தது. கடல் மாசுபாட்டைக் குறைத்தல், கடல் வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் கடல் உயிரினங்களின் வாழ்விடங்களைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்வு மாணவர்களுக்கு புதிய அனுபவத்தையும் சவால்களை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தையும் வழங்கியது. NCC-யின் ஒழுக்கம், தலைமைத்துவம், குழு உணர்வு, துணிச்சல் மற்றும் நாட்டுப்பற்று போன்ற உயரிய பண்புகளை வளர்க்கும் வகையிலும் SCUBA DIVING செயல்பாடு பயனுள்ளதாக அமைந்தது. SCUBA DIVING நிகழ்வு மாணவர்களின் உடல் மற்றும் மனத் திறன்களை மேம்படுத்தியதுடன், கடலைப் பாதுகாக்க வேண்டிய சமூகப் பொறுப்புணர்வையும் ஏற்படுத்தியது. இந்நிகழ்வு மறக்க முடியாத பயனுள்ள அனுபவமாக அமைந்தது என மாணவர்கள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியினை, திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கம் மற்றும் திண்டுக்கல் புனித மேரி மேல்நிலைப் பள்ளி இன்டராக்ட் சங்கம். இணைந்து செய்திருந்தனர் தொடர்ந்து புனித மரியன்னை பள்ளி அருள்தந்தை ஸ்டீபன் லூர்து பிரகாசம் அவர்கள் நிர்வாகி மற்றும் தலைமை ஆசிரியர் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகளான சண்முகம் (உதவி ஆளுநர்), பால சுந்தர், ரெங்கையா (தலைவர்), மதன முனியப்பன் (தலைவர்), மாணவர்களை பாராட்டினர். நிகழ்ச்சியினை NCC அலுவலர் ஜெரோம் நிக்கோலஸ் அவர்கள் ஒருங்கிணைத்தார்.
    1
    திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி NCC AIRWING மாணவர்கள் கடலைப் பாதுகாப்போம் – எதிர்காலத் தலை முறையைக் காப்போம்” என்ற நோக்கத்தை வலியுறுத்தி கடலுக்கடியில் விழிப்புணர்வு. 
புதுச்சேரியில் 
26.08.2026 அன்று SCUBA DIVING செயல்பாடு நடைபெற்றது. இந்நிகழ்வில் திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி NCC AIRWING   மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, கடலுக்கடியில் நீர் மூழ்கிப் பயிற்சி மற்றும் கடல் சூழலியல் தொடர்பான விழிப்புணர்வை பெற்றனர்.
SCUBA DIVING மூலம் மாணவர்கள் கடல் உயிரினங்கள், பவளப்பாறைகள் மற்றும் கடல் சூழலின் முக்கியத்துவத்தை நேரடியாக அறிந்து கொண்டனர். மேலும், நீருக்கடியில் பாதுகாப்பாக செயல்படுதல், குழு ஒருங்கிணைப்பு, ஒழுக்கம், தன்னம்பிக்கை, துணிச்சல் மற்றும் பொறுப்புணர்வு போன்ற பண்புகள் வளர்க்கப்பட்டன.
இந்த நிகழ்வு “கடலைப் பாதுகாப்போம் – எதிர்காலத் தலை முறையைக் காப்போம்” என்ற நோக்கத்தை வலியுறுத்தும் வகையில் அமைந்தது. கடல் மாசுபாட்டைக் குறைத்தல், கடல் வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் கடல் உயிரினங்களின் வாழ்விடங்களைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வு மாணவர்களுக்கு புதிய அனுபவத்தையும் சவால்களை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தையும் வழங்கியது. NCC-யின் ஒழுக்கம், தலைமைத்துவம், குழு உணர்வு, துணிச்சல் மற்றும் நாட்டுப்பற்று போன்ற உயரிய பண்புகளை வளர்க்கும் வகையிலும் SCUBA DIVING செயல்பாடு பயனுள்ளதாக அமைந்தது.
SCUBA DIVING நிகழ்வு மாணவர்களின் உடல் மற்றும் மனத் திறன்களை மேம்படுத்தியதுடன், கடலைப் பாதுகாக்க வேண்டிய சமூகப் பொறுப்புணர்வையும் ஏற்படுத்தியது. இந்நிகழ்வு மறக்க முடியாத பயனுள்ள அனுபவமாக அமைந்தது என மாணவர்கள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியினை, திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கம் மற்றும் திண்டுக்கல் புனித மேரி மேல்நிலைப் பள்ளி இன்டராக்ட் சங்கம். இணைந்து செய்திருந்தனர் தொடர்ந்து  புனித மரியன்னை பள்ளி அருள்தந்தை ஸ்டீபன் லூர்து பிரகாசம் அவர்கள் நிர்வாகி மற்றும் தலைமை ஆசிரியர் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகளான 
சண்முகம் (உதவி ஆளுநர்),
பால சுந்தர், ரெங்கையா (தலைவர்),
மதன முனியப்பன் (தலைவர்),
மாணவர்களை பாராட்டினர். நிகழ்ச்சியினை NCC அலுவலர் ஜெரோம் நிக்கோலஸ் அவர்கள் ஒருங்கிணைத்தார்.
    user_DOMINIC SELVARAJ
    DOMINIC SELVARAJ
    திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    4 hrs ago
  • அவனியாபுரம் பால மீனாம்பிகை கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் 7 சென்ட் நிலத்தை மீட்க அரசுக்கு கோரிக்கை-கோவில் நிலம் முப்புதர் மண்டி ரவுடிகளின் கூடாரமாக மாறி இருப்பதாக வேதனை* *அவனியாபுரம் பால மீனாம்பிகை கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் 7 சென்ட் நிலத்தை மீட்க அரசுக்கு கோரிக்கை-கோவில் நிலம் முப்புதர் மண்டி ரவுடிகளின் கூடாரமாக மாறி இருப்பதாக வேதனை* திருக்கோவில் நிர்வாகத்தின் அலட்சியத்தினால் குடியிருப்பு பகுதியில் சுமார் 30 கோடி ரூபாய் மதிப்பிலான 2 ஏக்கர் பரப்பளவு நிலம் வருவாய் ஆதாரங்கள் இன்றி முட்புதர் மற்றும் ஆக்கிரமிப்பில் உள்ளது.‌ அவனியாபுரம் கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான இடம் விவசாய குத்தகைக்கு விடப்பட்டு 25 வருடங்களுக்கு மேல் விவசாயம் நடைபெறவில்லை அதற்கான நில குத்தகை தொகையும் அதிகாரிகள் வசூல் செய்யாமல் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு. மதுரை அவனியாபுரம் கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் 7 சென்ட் நிலம் அவனியாபுரம் வள்ளானந்தபுரம் பகுதியில் உள்ளது . இந்த இடத்தில் ஏராளமான குடியிருப்பு பகுதிகள் வந்துள்ள நிலையில் தற்போது ஒரு சென்ட் 15 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. சுமார் முப்பது கோடி மதிப்பிலான கோயிலுக்கு சொந்தமான இந்த நிலம் குத்தகைதாரர் வசம் கடந்த 25 வருடங்களாக இருப்பதாக கூறப்படுகிறது . மேலும் குத்தகைதாரர் கோவிலுக்கு சொந்தமான நிலத்திற்கு உரிய வாடகை எதுவும் செலுத்துவதில்லை, அவனியாபுரம் கல்யாணசுந்தரேஷ்வரர் பால மீனாம்பிகை திருக்கோவில் அறநிலைத்துறை அதிகாரிகளும் கோவிலுக்கு வர வேண்டிய வருவாய் ஆதாரத்தை முறையாக வசூல் கணக்கீடு செய்யாமல் அலட்சியமாக உள்ளனர். அவனியாபுரம் கிராமம் வல்லானந்தபுரம் பகுதியில் உள்ள சர்வே எண் 292க்கு கட்டுப்பட்ட 2 ஏக்கர் 7 சென்ட் நிலம் அவனியாபுரம் அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் பால மீனாம்பிகை திருக்கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் முறையான பராமரிப்பு இல்லாமல் முட் புதராகவும் ஆக்கிரமிப்பு மற்றும் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் உள்ளது . இங்கு பழைய வாகனங்கள் உபயோக படுத்தாமல் பராமரிக்கப்படாமல் நிறுத்தப்பட்டு அங்கு குடிகாரர்கள் திறந்தவெளி பார் போல் செயல்படுகிறது . இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையிலும் சமூக விரோதிகளின் புகழிடமாகவும் இந்த இடம் உள்ளதால் சுமார் 30 கோடி மதிப்பு மிக்க இந்த இடத்தை கைப்பற்றி அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் பால மீனாம்பிகை திருக்கோவில் நிர்வாகம் முட் புதர்களை அகற்றி வருவாயை பெருக்கும் விதமாக சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவிலுக்கு சொந்தமான நிலம் ரவுடிகளின் கூடாரமாக மாறி உள்ளது. இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். கோவில் இடத்தை மீட்க வேண்டும் இன்றைக்கு இந்து சமய அறநிலை துறை அமைச்சராக ஒரு இளைஞர் வந்துள்ளார். அவர் இதனை கருத்தில் கொண்டு கோவில் நிலத்தை மீட்டுத் தருவார் என நம்புகிறோம். அதேபோல் மதுரையில் பிரசித்தி பெற்ற தளமான பாண்டி முனீஸ்வரர் கோவிலுக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் வழங்கிய நிலத்தை கோவில் பூசாரிகள் பிளாட்டு போட்டுவிட்டனர். இது சம்பந்தமான அனைத்து ஆவணங்களும் கொண்டு அறநிலையத்துறையில் புகார் அளித்துள்ளோம் அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பேட்டி: சிங்கராஜ் வழக்கறிஞர், தென்னிந்திய நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமை பாதுகாப்போர் பொதுச் செயலாளர்.
    1
    அவனியாபுரம் பால மீனாம்பிகை கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் 7 சென்ட் நிலத்தை மீட்க அரசுக்கு கோரிக்கை-கோவில் நிலம் முப்புதர் மண்டி ரவுடிகளின் கூடாரமாக மாறி இருப்பதாக வேதனை* 



*அவனியாபுரம் பால மீனாம்பிகை கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் 7 சென்ட் நிலத்தை மீட்க அரசுக்கு கோரிக்கை-கோவில் நிலம் முப்புதர் மண்டி ரவுடிகளின் கூடாரமாக மாறி இருப்பதாக வேதனை* 
திருக்கோவில் நிர்வாகத்தின் அலட்சியத்தினால் குடியிருப்பு பகுதியில் சுமார் 30 கோடி ரூபாய் மதிப்பிலான 2 ஏக்கர் பரப்பளவு நிலம் வருவாய் ஆதாரங்கள் இன்றி முட்புதர் மற்றும்  ஆக்கிரமிப்பில் உள்ளது.‌ அவனியாபுரம் கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான இடம் விவசாய குத்தகைக்கு விடப்பட்டு 25 வருடங்களுக்கு மேல் விவசாயம் நடைபெறவில்லை அதற்கான நில குத்தகை தொகையும் அதிகாரிகள் வசூல் செய்யாமல் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு.
மதுரை அவனியாபுரம் கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் 7 சென்ட் நிலம் அவனியாபுரம் வள்ளானந்தபுரம் பகுதியில் உள்ளது . இந்த இடத்தில் ஏராளமான குடியிருப்பு பகுதிகள் வந்துள்ள நிலையில் தற்போது ஒரு சென்ட் 15 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. சுமார் முப்பது கோடி மதிப்பிலான கோயிலுக்கு சொந்தமான இந்த நிலம் குத்தகைதாரர் வசம் கடந்த 25 வருடங்களாக இருப்பதாக கூறப்படுகிறது .
மேலும் குத்தகைதாரர் கோவிலுக்கு சொந்தமான நிலத்திற்கு உரிய வாடகை எதுவும் செலுத்துவதில்லை, அவனியாபுரம் கல்யாணசுந்தரேஷ்வரர் பால மீனாம்பிகை திருக்கோவில் அறநிலைத்துறை அதிகாரிகளும் கோவிலுக்கு வர வேண்டிய வருவாய் ஆதாரத்தை முறையாக வசூல் கணக்கீடு செய்யாமல் அலட்சியமாக உள்ளனர்.
அவனியாபுரம் கிராமம் வல்லானந்தபுரம் பகுதியில் உள்ள சர்வே எண் 292க்கு கட்டுப்பட்ட 2 ஏக்கர் 7 சென்ட் நிலம் அவனியாபுரம் அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் பால மீனாம்பிகை திருக்கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் முறையான பராமரிப்பு இல்லாமல் முட் புதராகவும் ஆக்கிரமிப்பு மற்றும்  சமூக விரோதிகளின் கூடாரமாகவும் உள்ளது .
இங்கு பழைய வாகனங்கள் உபயோக படுத்தாமல் பராமரிக்கப்படாமல்  நிறுத்தப்பட்டு அங்கு குடிகாரர்கள் திறந்தவெளி பார் போல் செயல்படுகிறது .
இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையிலும் சமூக விரோதிகளின் புகழிடமாகவும் இந்த இடம்  உள்ளதால் சுமார் 30 கோடி மதிப்பு மிக்க இந்த இடத்தை கைப்பற்றி அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் பால மீனாம்பிகை திருக்கோவில் நிர்வாகம் முட் புதர்களை அகற்றி வருவாயை பெருக்கும் விதமாக சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவிலுக்கு சொந்தமான நிலம் ரவுடிகளின் கூடாரமாக மாறி உள்ளது. இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். கோவில் இடத்தை மீட்க வேண்டும் இன்றைக்கு இந்து சமய அறநிலை துறை அமைச்சராக ஒரு இளைஞர் வந்துள்ளார். அவர் இதனை கருத்தில் கொண்டு கோவில் நிலத்தை மீட்டுத் தருவார் என நம்புகிறோம். அதேபோல் மதுரையில் பிரசித்தி பெற்ற தளமான பாண்டி முனீஸ்வரர் கோவிலுக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் வழங்கிய நிலத்தை கோவில் பூசாரிகள் பிளாட்டு போட்டுவிட்டனர். இது சம்பந்தமான அனைத்து ஆவணங்களும் கொண்டு அறநிலையத்துறையில் புகார் அளித்துள்ளோம் அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
பேட்டி:
சிங்கராஜ் 
வழக்கறிஞர், தென்னிந்திய நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமை பாதுகாப்போர் பொதுச் செயலாளர்.
    user_Dr R.VIJAY
    Dr R.VIJAY
    Local News Reporter மதுரை வடக்கு, மதுரை, தமிழ்நாடு•
    50 min ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.