திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி NCC AIRWING மாணவர்கள் கடலைப் பாதுகாப்போம் – எதிர்காலத் தலை முறையைக் காப்போம்” என்ற நோக்கத்தை வலியுறுத்தி கடலுக்கடியில் விழிப்புணர்வு. புதுச்சேரியில் 26.08.2026 அன்று SCUBA DIVING செயல்பாடு நடைபெற்றது. இந்நிகழ்வில் திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி NCC AIRWING மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, கடலுக்கடியில் நீர் மூழ்கிப் பயிற்சி மற்றும் கடல் சூழலியல் தொடர்பான விழிப்புணர்வை பெற்றனர். SCUBA DIVING மூலம் மாணவர்கள் கடல் உயிரினங்கள், பவளப்பாறைகள் மற்றும் கடல் சூழலின் முக்கியத்துவத்தை நேரடியாக அறிந்து கொண்டனர். மேலும், நீருக்கடியில் பாதுகாப்பாக செயல்படுதல், குழு ஒருங்கிணைப்பு, ஒழுக்கம், தன்னம்பிக்கை, துணிச்சல் மற்றும் பொறுப்புணர்வு போன்ற பண்புகள் வளர்க்கப்பட்டன. இந்த நிகழ்வு “கடலைப் பாதுகாப்போம் – எதிர்காலத் தலை முறையைக் காப்போம்” என்ற நோக்கத்தை வலியுறுத்தும் வகையில் அமைந்தது. கடல் மாசுபாட்டைக் குறைத்தல், கடல் வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் கடல் உயிரினங்களின் வாழ்விடங்களைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்வு மாணவர்களுக்கு புதிய அனுபவத்தையும் சவால்களை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தையும் வழங்கியது. NCC-யின் ஒழுக்கம், தலைமைத்துவம், குழு உணர்வு, துணிச்சல் மற்றும் நாட்டுப்பற்று போன்ற உயரிய பண்புகளை வளர்க்கும் வகையிலும் SCUBA DIVING செயல்பாடு பயனுள்ளதாக அமைந்தது. SCUBA DIVING நிகழ்வு மாணவர்களின் உடல் மற்றும் மனத் திறன்களை மேம்படுத்தியதுடன், கடலைப் பாதுகாக்க வேண்டிய சமூகப் பொறுப்புணர்வையும் ஏற்படுத்தியது. இந்நிகழ்வு மறக்க முடியாத பயனுள்ள அனுபவமாக அமைந்தது என மாணவர்கள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியினை, திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கம் மற்றும் திண்டுக்கல் புனித மேரி மேல்நிலைப் பள்ளி இன்டராக்ட் சங்கம். இணைந்து செய்திருந்தனர் தொடர்ந்து புனித மரியன்னை பள்ளி அருள்தந்தை ஸ்டீபன் லூர்து பிரகாசம் அவர்கள் நிர்வாகி மற்றும் தலைமை ஆசிரியர் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகளான சண்முகம் (உதவி ஆளுநர்), பால சுந்தர், ரெங்கையா (தலைவர்), மதன முனியப்பன் (தலைவர்), மாணவர்களை பாராட்டினர். நிகழ்ச்சியினை NCC அலுவலர் ஜெரோம் நிக்கோலஸ் அவர்கள் ஒருங்கிணைத்தார்.
திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி NCC AIRWING மாணவர்கள் கடலைப் பாதுகாப்போம் – எதிர்காலத் தலை முறையைக் காப்போம்” என்ற நோக்கத்தை வலியுறுத்தி கடலுக்கடியில் விழிப்புணர்வு. புதுச்சேரியில் 26.08.2026 அன்று SCUBA DIVING செயல்பாடு நடைபெற்றது. இந்நிகழ்வில் திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி NCC AIRWING மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, கடலுக்கடியில் நீர் மூழ்கிப் பயிற்சி மற்றும் கடல் சூழலியல் தொடர்பான விழிப்புணர்வை பெற்றனர். SCUBA DIVING மூலம் மாணவர்கள் கடல் உயிரினங்கள், பவளப்பாறைகள் மற்றும் கடல் சூழலின் முக்கியத்துவத்தை நேரடியாக அறிந்து கொண்டனர். மேலும், நீருக்கடியில் பாதுகாப்பாக செயல்படுதல், குழு ஒருங்கிணைப்பு, ஒழுக்கம், தன்னம்பிக்கை, துணிச்சல் மற்றும் பொறுப்புணர்வு போன்ற பண்புகள் வளர்க்கப்பட்டன. இந்த நிகழ்வு “கடலைப் பாதுகாப்போம் – எதிர்காலத் தலை முறையைக் காப்போம்” என்ற நோக்கத்தை வலியுறுத்தும் வகையில் அமைந்தது. கடல் மாசுபாட்டைக் குறைத்தல், கடல் வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் கடல் உயிரினங்களின் வாழ்விடங்களைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்வு மாணவர்களுக்கு புதிய அனுபவத்தையும் சவால்களை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தையும் வழங்கியது. NCC-யின் ஒழுக்கம், தலைமைத்துவம், குழு உணர்வு, துணிச்சல் மற்றும் நாட்டுப்பற்று போன்ற உயரிய பண்புகளை வளர்க்கும் வகையிலும் SCUBA DIVING செயல்பாடு பயனுள்ளதாக அமைந்தது. SCUBA DIVING நிகழ்வு மாணவர்களின் உடல் மற்றும் மனத் திறன்களை மேம்படுத்தியதுடன், கடலைப் பாதுகாக்க வேண்டிய சமூகப் பொறுப்புணர்வையும் ஏற்படுத்தியது. இந்நிகழ்வு மறக்க முடியாத பயனுள்ள அனுபவமாக அமைந்தது என மாணவர்கள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியினை, திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கம் மற்றும் திண்டுக்கல் புனித மேரி மேல்நிலைப் பள்ளி இன்டராக்ட் சங்கம். இணைந்து செய்திருந்தனர் தொடர்ந்து புனித மரியன்னை பள்ளி அருள்தந்தை ஸ்டீபன் லூர்து பிரகாசம் அவர்கள் நிர்வாகி மற்றும் தலைமை ஆசிரியர் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகளான சண்முகம் (உதவி ஆளுநர்), பால சுந்தர், ரெங்கையா (தலைவர்), மதன முனியப்பன் (தலைவர்), மாணவர்களை பாராட்டினர். நிகழ்ச்சியினை NCC அலுவலர் ஜெரோம் நிக்கோலஸ் அவர்கள் ஒருங்கிணைத்தார்.
- திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி NCC AIRWING மாணவர்கள் கடலைப் பாதுகாப்போம் – எதிர்காலத் தலை முறையைக் காப்போம்” என்ற நோக்கத்தை வலியுறுத்தி கடலுக்கடியில் விழிப்புணர்வு. புதுச்சேரியில் 26.08.2026 அன்று SCUBA DIVING செயல்பாடு நடைபெற்றது. இந்நிகழ்வில் திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி NCC AIRWING மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, கடலுக்கடியில் நீர் மூழ்கிப் பயிற்சி மற்றும் கடல் சூழலியல் தொடர்பான விழிப்புணர்வை பெற்றனர். SCUBA DIVING மூலம் மாணவர்கள் கடல் உயிரினங்கள், பவளப்பாறைகள் மற்றும் கடல் சூழலின் முக்கியத்துவத்தை நேரடியாக அறிந்து கொண்டனர். மேலும், நீருக்கடியில் பாதுகாப்பாக செயல்படுதல், குழு ஒருங்கிணைப்பு, ஒழுக்கம், தன்னம்பிக்கை, துணிச்சல் மற்றும் பொறுப்புணர்வு போன்ற பண்புகள் வளர்க்கப்பட்டன. இந்த நிகழ்வு “கடலைப் பாதுகாப்போம் – எதிர்காலத் தலை முறையைக் காப்போம்” என்ற நோக்கத்தை வலியுறுத்தும் வகையில் அமைந்தது. கடல் மாசுபாட்டைக் குறைத்தல், கடல் வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் கடல் உயிரினங்களின் வாழ்விடங்களைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்வு மாணவர்களுக்கு புதிய அனுபவத்தையும் சவால்களை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தையும் வழங்கியது. NCC-யின் ஒழுக்கம், தலைமைத்துவம், குழு உணர்வு, துணிச்சல் மற்றும் நாட்டுப்பற்று போன்ற உயரிய பண்புகளை வளர்க்கும் வகையிலும் SCUBA DIVING செயல்பாடு பயனுள்ளதாக அமைந்தது. SCUBA DIVING நிகழ்வு மாணவர்களின் உடல் மற்றும் மனத் திறன்களை மேம்படுத்தியதுடன், கடலைப் பாதுகாக்க வேண்டிய சமூகப் பொறுப்புணர்வையும் ஏற்படுத்தியது. இந்நிகழ்வு மறக்க முடியாத பயனுள்ள அனுபவமாக அமைந்தது என மாணவர்கள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியினை, திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கம் மற்றும் திண்டுக்கல் புனித மேரி மேல்நிலைப் பள்ளி இன்டராக்ட் சங்கம். இணைந்து செய்திருந்தனர் தொடர்ந்து புனித மரியன்னை பள்ளி அருள்தந்தை ஸ்டீபன் லூர்து பிரகாசம் அவர்கள் நிர்வாகி மற்றும் தலைமை ஆசிரியர் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகளான சண்முகம் (உதவி ஆளுநர்), பால சுந்தர், ரெங்கையா (தலைவர்), மதன முனியப்பன் (தலைவர்), மாணவர்களை பாராட்டினர். நிகழ்ச்சியினை NCC அலுவலர் ஜெரோம் நிக்கோலஸ் அவர்கள் ஒருங்கிணைத்தார்.1
- திண்டுக்கல் பழனி சாலை வசந்த் அண்ட் கோ அருகே உள்ள திருமண மஹால்களில் ஒவ்வொரு முறையும் திருமணம் மற்றும் முக்கிய நிகழ்ச்சி நடக்கும்போது சாலை முழுவதும் பட்டாசு கொளுத்தி அவை தீயிட்டு எழுவதால் அங்கு விபத்து ஏற்படும் ஆபத்து ஏற்படுகிறது காவல்துறையினர் தொடர்ந்து கவனித்து அவைகளை அப்புறப்படுத்தி இந்த மாதிரி நிகழ்ச்சி நடக்காமல் இருந்தால் பொதுமக்கள் உயிர்களை காப்பாற்றலாம் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்1
- புதிய தீயணைப்பு நிலையத்தை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் காணொளி வாயிலாக திறந்து வைத்தார் சிங்கம்புணரியில் 40 ஆண்டுகளாக வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வந்த தீயணைப்பு நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. 1986-ல் துவங்கிய இந்த நிலையத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்ததை அடுத்து, 2021-ல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இன்று ₹2.46 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய நிலையத்தை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். தென் மண்டல துணை இயக்குநர் குமார் குத்துவிளக்கு ஏற்றி, மரக்கன்றுகள் நட்டார்.1
- முன்னாள் பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் கேரளாவில் யானை தாக்கி உயிர் இழப்பு *போடிநாயக்கனூரைச் சேர்ந்த முன்னாள் பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் கேரளாவில் யானை தாக்கி உயிர் இழப்பு . போடி மெட்டு அருகே சுமார் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தலக்குளம் அருகே உள்ள ஏலக்காய் தோட்ட பகுதியில் காட்டுயானை தாக்கியதில் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். கேரளா வனத்துறையினர் மற்றும் கேரள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இழப்பீடு வழங்க கோரி அப்போது ஒரு தோட்ட உரிமையாளர்கள் தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் நபர்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சித்த நிலையில் தமிழக கேரள எல்லை பகுதியான போடி மெ ட்டு மலைச் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் இருக்க கேரளா காவல்துறையினர் மற்றும் கேரள வனத்துறையினர் உரிய தீர்வு காண்பதாக உறுதி அளித்த நிலையில் போக்குவரத்து சீரானது. * தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் குப்பநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ஒச்சு என்ற ஒச்சப்பன் வயது சுமார் 65 . இவர் போடிநாயக்கனூர் நகர முன்னாள் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளில் ஒருவராக செயல்பட்டு வந்தார். தற்போது ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் செயலாற்றி வருவதாக கூறப்படுகிறது. இவரது மகளுக்கு தமிழக கேரள எல்லைப் பகுதியான போடி மெட்டு அருகே பூப்பாறை செல்லும் வழியில் போடிமெட்டில் இருந்து சுமார் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தலைக்குளம் பகுதியில் ஏலக்காய் தோட்டம் ஒன்று உள்ளது. இப்பகுதி யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். தற்போது அங்கு காய்கள் எடுக்கும் பணி நடைபெற்று வருவதால் ஒச்சப்பன் தனது மகளுக்கு உதவியாக ஏலத் தோட்டத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவம் நடந்த இன்று காலை அப்பகுதியில் சாரல் மழை பெய்து வந்த நிலையில் ஏலக்காய் தோட்ட பகுதியில் காய்கள் குறித்து பார்வையிடச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு ஏலக்காய் செடி பகுதிகளில் யானை ஒன்று மறைந்திருந்ததாக கூறப்படுகிறது. நீண்ட நேரம் ஆகியும் தொட்ட பகுதிக்குச் சென்ற ஒச்சப்பன் வீட்டிற்கு திரும்பாததால் அங்கு உள்ளவர்கள் அவரை தேடிய பொழுது தோத்த பகுதியில் அவர் உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளார். உடனடியாக அருகில் உள்ளவர்களை அழைத்து அவரிடம் உயிருக்கு போராடிய நிலையில் யானை தாக்கியதாக கூறப்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக கேரளா வனத்துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டு நிலையில் உயிருக்கு போராடிய ஒச்சப்பனை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அடிமாலி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. செல்லும் வழியிலேயே பச்சையப்பன் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அடிமாலி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்பகுதியில் ஏலக்காய் செடியில் உள்ள குருத்துகளை உண்பதற்காக யானைகள் அதிகம் உலவும் சூழலில் அதிகாலையில் யானைத் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும்சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது . யானை தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து கேரள வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இதற்கிடையே இறந்தவருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறி அப்பகுதி தோட்ட உரிமையாளர்கள் தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் நபர்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சித்த நிலையில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக கேரளா மூணாறில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகன போக்குவரத்து பாதிக்க பட்ட நிலையில் காவல்துறையினர் வனத்துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காண்பதாக உறுதி அளித்த நிலையில் மீண்டும் போக்குவரத்து சீரானது.1
- மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் பூதமங்கலத்தில் இப்போது மழை பெய்து வருகிறது துறலுடன் கூடிய மழை பெய்து வருகிறது! மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் பூதமங்கலத்தில் இப்போது மழை பெய்து வருகிறது. தூறலுடன் கூடிய லேசான மழை பெய்து வருகிறது. அதிகமான மழை பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. மேகம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. காலையிலிருந்து அதிக வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் இப்போது மழை பெய்து வருகிறது. மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.1
- கர்ப்பிணிக்கு சிக்கலான முதுகுத்தண்டு அறுவைசிகிச்சை ஆரோக்கியமான குழந்தை பிறப்பு முதுகுத்தண்டுவட காசநோய் பாதிப்பால் நடக்க முடியாமல் அவதிப்பட்ட 28 வார கர்ப்பிணிக்கு, மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சவாலான முதுகுத்தண்டு அறுவைசிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. அறுவைசிகிச்சைக்குப் பின்னர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில், அந்த பெண் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்தார். 28 வயதான கர்ப்பிணிக்கு தொடர்ந்து கடுமையான முதுகுத்தண்டு வலி ஏற்பட்டதுடன், நடப்பதில் சிரமமும் மார்புக்குக் கீழ் உணர்விழப்பும் ஏற்பட்டது. மருத்துவப் பரிசோதனைகளில் முதுகுத்தண்டுவடத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக நரம்புகளுக்கு அதிக அழுத்தம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, முதுகுத்தண்டுவடத்தின் மீதான அழுத்தத்தை குறைக்கும் வகையில் Decompressive Laminectomy அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தாய் மற்றும் சேய் இருவரையும் காக்க வேண்டும் மற்றும் 28 வார கர்ப்பம் என்பதால் அறுவைசிகிச்சை மருத்துவர்களுக்கு மிகப்பெரும் சவாலாக இருந்தது தாயின் உயிருக்கும் உடல்நலத்திற்கும் சிகிச்சை அளிப்பதுடன், வயிற்றில் இருந்த கருவின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டியிருந்தது. பரிசோதனைகளில் T1–T2 பகுதியில் முதுகுத்தண்டு பாதிப்பு, முதுகுத்தண்டில் கூன் விழுந்தது போன்ற மாற்றம் மற்றும் நரம்பு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இது ‘பாட்ஸ் ஸ்பைன்’ எனப்படும் முதுகுத்தண்டுவட காசநோய் பாதிப்பாக இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். C3–T4 பகுதியில் சிக்கலான அறுவைசிகிச்சையை தொடர்ந்து முதுகுத்தண்டுவடத்தை நிலைநிறுத்தும் வகையில் C3–T4 பகுதியில் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பல மணி நேரம் நோயாளியை குப்புறப் படுக்க வேண்டியிருந்ததால், தாய் மற்றும் கருவின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகளின் போது கருவை கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்கவும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அறுவைசிகிச்சைக்குப் பின்னர் நோயாளியின் உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டது. அவர் மீண்டும் நன்றாக நடக்கத் தொடங்கினார். தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருந்த நிலையில், பின்னர் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்தார். முதுகுத்தண்டுவட அறுவைசிகிச்சை துறைத்தலைவரும் முதுநிலை நிபுணருமான டாக்டர் கே. செல்வகுமரன், முதுநிலை நிபுணர் டாக்டர் கே. எம். கவில் தலைமையிலான மருத்துவக் குழுவினர் அறுவைசிகிச்சையை மேற்கொண்டனர். இது மதுரையில் மருத்துவத் துறையின் மிகப்பெரிய சாதனையாக அமைந்துள்ளது.1
- திண்டுக்கல்லில் மின் கசிவு காரணமாக துணிக்கடையில் தீ விபத்து உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு திண்டுக்கல் கிழக்குரத வீதியில் சுப்ரமணியம் டெக்ஸ்டைல்ஸ் செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு வழக்கம் போல் கடையை மூடி விட்டு ஊழியர்கள் கிளம்பிச் சென்றனர். இந்நிலையில் இன்று 27.08.26 காலை கடையின் முன்பக்கம் வைத்துள்ள கண்ணாடி ஷோகேஸ் அருகே மின் கசிவு காரணமாக திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. பூட்டி இருந்த கடையில் இருந்து புகை வருவதை கண்ட பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறை துரிதமாக செயல்பட்டு கடைக்குள் தீ பரவாமல் கட்டுப்படுத்தினர். மேலும் கடையின் முன்பக்கம் உள்ள கண்ணாடி ஷோகேஸ் மற்றும் அது சுற்றி உள்ள பகுதியில் பரவிய தீயை உடனடியாக அணைத்தனர். இந்த தீ விபத்தினால் பெரும் அளவில் பொருட் சேதம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.1
- மணப்பாறையில் ரெயில்வே மேம்பாலத்தின் அடியில் பற்றி எரிந்த தீ : கடும் புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதி திருச்சி மாவட்டம் மணப்பாறை திண்டுக்கல் சாலையில் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் அருகே தனியார் பள்ளி, விடுதி, நுகர்பொருள் வாணிபக் கிடங்கு, தேவாலயம், - மருத்துவமனை மற்றும் குடியிருப்புகள் அதிக அளவில் உள்ளன. இந்நிலையில் பாலத்திற்கு அடியில் ரெயில்வே தண்டவாளம் அருகே மின் மாற்றிக்கு எதிரே அதிக அளவில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் பிளாஸ்டிக் கழிவுகள், கருப்பு சக்கை, பல்வேறு விதமான குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இந்த நிலையில் நேற்று மதியம் திடீரென அந்த குப்பையில் தீப்பற்றி எரிந்தது. இந்த தீ ரெயில்வே மின் இணைப்பு அருகேயும், மின் மாற்றி அருகேயும் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக தீ எரிந்ததோடு அந்த இடத்தில் இருந்து கரும் புகை கிளம்பியது. இதனால் அந்த பகுதியே கடும் புகை மூட்டமாக காட்சி அளித்ததுடன் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதுமட்டுமின்றி அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளையும் புகை சூழ்ந்து கொண்டதால் மக்கள் மூச்சு விட கூட கடும் சிரமப்பட்டனர். இவ்வாறு தீ பற்றி எரியும் சம்பவம் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. பாலத்தின் அடியில் குப்பைகளை கொட்டுவதால் தான் அடிக்கடி தீவிபத்து ஏற்பட்டு வருகிறது. இப்பகுதியில் பள்ளி உள்ளதால் மாணவ -மாணவிகள் தொற்று நோய்க்கு ஆளாகும் நிலையும் உள்ளது. ஆகவே திண்டுக்கல் சாலை ரெயில்வே மேம்பாலத்தின் அடியில் குப்பை கொட்டுவதை தடுக்க நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.4