மதுரை மாவட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கே.ஜே.பிரவீன் குமார் இ.ஆ.ப., அவர்கள் திருப்பரங்குன்றம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பெடரல் வங்கியின் சமூக பொறுப்பு நிதியின் மூலமாக ரூபாய் 2.72 இலட்சம் மதிப்பீட்டில் 50 மேசை இருக்கை நாற்காலிகளை மாணவ, மாணவிகளின் பயன்பாட்டிற்கு வழங்கி சிறப்புரை ஆற்றினார். மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கே.ஜே.பிரவீன் குமார் இ.ஆ.ப., அவர்கள் மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பெடரல் வங்கியின் சமூக பொறுப்பு நிதியின் மூலமாக ரூபாய் 2.72 இலட்சம் மதிப்பீட்டில் 50 மேசை இருக்கை நாற்காலிகளை மாணவ மாணவிகளின் பயன்பாட்டிற்கு வழங்கி சிறப்புரை ஆற்றினார். மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கே.ஜே.பிரவீன் குமார் இ.ஆ.ப., அவர்கள் தெரிவிக்கையில், திருப்பரங்குன்றம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் அனைவரும் மழைநீர் சேகரிப்பு, கழிவுநீர் சுத்திகரிப்பு மேலாண்மை மற்றும் கழிவுப்பொருட்களை அலங்காரப்பொருட்களாக மாற்றுதல் போன்ற பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார்கள். மதுரை மாவட்டத்தில் சுமார் 1200 க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளிகள் உள்ளன. அரசு கல்வித்துறைக்கு கீழ் சுமார் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். அரசு பள்ளி மாணவ, மாணவிகள் தற்பொழுது தன்னம்பிக்கையுடனும், தைரியத்துடனும் வளர்ந்து வருகிறார்கள். அவர்களின் வளர்ச்சிக்கு தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களின் ஒத்துழைப்பு தான் காரணம். மாவட்ட நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கிணங்க அண்ணாநகர் பெடரல் வங்கியின் சமூக பொறுப்பு நிதியின் மூலமாக ரூபாய் 2.72 இலட்சம் மதிப்பீட்டில் திருப்பரங்குன்றம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு 50 மேசை இருக்கை நாற்காலிகள் மாணவ, மாணவிகளின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கல்விக்காக பல்வேறு முன்மாதிரி திட்டங்களை கொண்டு வந்துள்ளார்கள். மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு அரசு இரண்டு, மூன்று மடங்கு கல்விக்காக நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. அரசு பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாணவ, மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதனால் மாணவ, மாணவிகள் தங்களுக்கு தேவையான புத்தகம், பேனா, பென்சில் போன்றவை வாங்கி நல்ல முறையில் படித்து பயன்பெறலாம். அரசு பள்ளி மாணவ, மாணவிகளை கல்வியில் மேலும் வளர்ச்சியடையச் செய்வதற்கு ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களுக்கும் தமிழ்நாடு அரசு பயிற்சி வழங்கி வருகிறது. மாதந்தோறும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக மாணவ, மாணவிகளின் கல்வி வளர்ச்சி குறித்து ஆசிரியர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. திருப்பரங்குன்றம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 223 மாணவிகள், 375 மாணவர்கள் என மொத்தம் 598 மாணவர்கள் பயின்று வருகிறார்கள். சென்ற ஆண்டு 10-ஆம் வகுப்பு ஆண்டு பொதுத் தேர்வில் 94% தேர்ச்சியும், 12 ஆம் வகுப்பில் 97% தேர்ச்சியும் பெற்றுள்ளனர். இந்த ஆண்டு 100% தேர்ச்சி பெறும் வகையில் மாணவ, மாணவிகள் அனைவரும் நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கே.ஜே.பிரவீன் குமார்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார். முன்னதாக பள்ளி வளாகத்தில் “குடிநீராகும் கூரை நீர்”, “கழிவுநீர் மேலாண்மை” மற்றும் “வழிபாட்டு மலர்களால் ஏற்படும் நீர் மாசுபாடு – காய்ந்த மலர்களில் இருந்து சாம்பிராணி தயாரித்தல்” உள்ளிட்ட சுற்றுச்சூழல் சார்ந்த புதுமையான மாணவ, மாணவிகளின் அறிவியல் படைப்புகளை பார்வையிட்டு, மாணவர்களின் புதுமை முயற்சிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் திரு.சந்திரன் அவர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு.சரவணக்குமார் அவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெடரல் வங்கி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

- மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் காத்திருப்பு போராட்டம் மதுரை, பிப்.17- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், மதுரை மாவட்டம் கரடிப்பட்டி மற்றும் மேலக் குயில்குடி பகுதிகளில் இடம்பெற்று வரும் நில ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும், அப்பகுதி இளைஞர்களுக்காக விளையாட்டு மைதானம் அமைக்க வலியுறுத்தியும் நாளை காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டம் பிப் - 17 செவ்வாய்க்கிழமை pமதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறும் என அமைப்பினர் தெரிவித்துள்ளனர். பொது மக்களின் பயன்பாட்டிற்கான நிலங்களை பாதுகாக்கவும், இளைஞர்களின் விளையாட்டு மற்றும் உடற்திறன் மேம்பாட்டிற்கான வசதிகளை உருவாக்கவும் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.3
- மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளாகத்தில் இன்று (பிப்.17) தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கம், தமிழ்நாடு பொது சுகாதார செவிலியர் கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் துணை செவிலியர் பணியிடங்களை ஒப்படைப்பு செய்யக்கூடாது, தனியார் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி மருந்து வழங்கக்கூடாது ,பெண் ஊழியர் என்பதால் பாரபட்சம் காட்டக்கூடாது, தற்காலிக செவிலியர்களை தடுப்பூசி பணியில் ஈடுபடுத்தக் கூடாது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி சுமார் 200க்கும் மேற்பட்ட செவிலியர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.1
- முன்னாள் மதுரை துணை மேயரும் திமுக பிரமுகருமன பி.எம். மன்னன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னையில் இன்று சந்தித்தார்1
- சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் எதிரே அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள் 14 வது நாளாக 22 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற கோரி 200க்கும் மேற்பட்ட பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள் கடந்த 3 தேதியிலிருந்து 14 வது நாளாக தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அவர்கள் 10 ஆண்டுகள் பணி முடித்த தகுதியான பணியாளர்களுக்கு அரசு பணியில் 50 சதவீத வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 12 கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் எதிரே கைகளில் தட்டுகளில் ஒலி எழுப்பி, ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒரு அங்கன்வாடி பணியாளர் நாங்கள் கெளரவமாக வாழ்ந்து இருப்போமே? இந்த வேலையை வழங்கி தெருவில் பிச்சை எடுக்க விட்டீர்களே என்று கண்ணீர் விட்டு கதறியது சோகத்தை ஏற்படுத்தியது.1
- திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே சங்காராட்டிகோட்டையில் கருப்பசாமி என்பவரின் பசுமாடு அவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடியது. தகவல் அறிந்த வத்தலகுண்டு தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் கிணற்றுக்குள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பசு மாட்டை உயிருடன் மீட்டு கருப்பசாமியிடம் ஒப்படைத்தனர் கிணற்றில் தண்ணீர் இல்லாததால் மாட்டிற்கு காயம் ஏற்பட்டது.1
- திண்டுக்கல் மாவட்டம் தவசிமடை ஊராட்சி விராலிப்பட்டியில். சக்தி கேந்திர அளவிலான. மக்கள் சந்திப்பு தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் . நடைபெற்றது இதில் பாஜக என் ஜி ஓ பிரிவு மாவட்ட தலைவர் சுரேஷ் உரையாற்றினார்1
- திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டை அருகாமையில் உள்ள கருங்குளம் முதல் வண்ணாந்துரை வரை உள்ள விவசாய விலை நிலங்களுக்கு செல்லும் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. தற்போது, நெல் அறுவடை காலம் என்பதால் விளைந்த நெல்களை அவ்வழியாக கொண்டு வருவதற்கு கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே துறை சார்ந்த அதிகாரிகள் கவனம் செலுத்தி சாலையை பராமரிப்பு செய்து தந்து உதவிட வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே அதிகாலை நேரத்தில் சாலையில் மரம் முறிந்து விழுந்தது. தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மரத்தை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதிகாலை நேரம் மக்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்ததால் விபத்து தவிர்க்கப்பட்டது1