முதல்-அமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் ‘சிங்கப்பெண் அதிரடிப் படை’ - அரசாணை வெளியீடு. தமிழக முதல்-அமைச்சராக விஜய் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். பதவி ஏற்றதும், வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்துக்கு முதல் கையெழுத்துபோட்டார். 2-வது கையெழுத்து *பெண்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவும், பெண்களின் பாதுகாப்பினை மேம்படுத்தவும் "சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை" திட்டத்துக்கு கையெழுத்துபோட்டார். இந்த நிலையில், ‘சிங்கப்பெண் அதிரடிப் படை’ முதல்-அமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், பெண்களின் பாதுகாப்பினை மேம்படுத்தும் பொருட்டு, தடுப்பு மற்றும் பாதுகாப்பு உத்திகளை முதன்மை மற்றும் ஒற்றை இலக்காகக் கொண்டு செயல்படக் கூடிய, ஒரு சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்படும். ஆபத்தில் உள்ள பெண்களுக்கு உதவிடும் வகையில், இப்படையினரின் இருப்பை வெளிப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகள் மூலம் பெண்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவும், இந்த சிறப்புப் படையை, போதுமான ஆளிநர்கள்/பணியாளர்கள் மற்றும் அதிநவீன வசதிகளுடன் மாநிலம் முழுவதும் உருவாக்கப்படும் முதல்-அமைச்சரின் அறிவிப்பினைத் தொடர்ந்து காவல்துறை இயக்குநர்/ காவல் படை தலைவர் அவர்கள் பெண்களின் பாதுகாப்பினை மேம்படுத்தும் பொருட்டு, தடுப்பு மற்றும் பாதுகாப்பு உத்திகளை முதன்மை மற்றும் ஒற்றை இலக்காகக் கொண்டு கூடிய, 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது. * குற்றச் சம்பவங்கள் நிகழ வாய்ப்புள்ள இடங்களை கண்டறிந்து கண்காணித்தல், பொது இடங்களில் கண்காணிப்பு மற்றும் தங்கள் இருப்பை மேம்படுத்தி, சுற்றுக்காவல் பணிகள் மேற்கொண்டு, குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்து, பொது இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்குதல். * பேருந்து நிறுத்தங்கள், ரெயில் நிலையங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைந்துள்ள இடங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிக அளவில் செல்லக்கூடிய மற்றும் நெருக்கடி மிகுந்த பகுதிகளில், தங்கள் இருப்பை அதிக அளவில் வெளிப்படுத்தி, சட்டவிரோத செயல்களை தடுத்தல். * புகார்கள் மீது விரைந்து உரிய நடவடிக்கை எடுத்தல். * பாதிக்கப்பட்ட நபர்களை மீட்டு, அவர்களது பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வதுடன், இதர ஆதரவுகள் கிடைத்திட வகை செய்வது உள்ளிட்ட உதவிகளை உரிய நேரத்தில் செய்தல். * சமூக நலத்துறை, கல்வித்துறை, அரசு சாரா தொண்டு நிறுனங்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட முகமைகளுடன் ஒருங்கிணைந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், சமூகத்தில் பலதரப்பட்ட மக்களை ஒருங்கிணைத்து, பெண்களின் பாதுகாப்பினை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபடுதல். காவல்துறை தலைமை இயக்குனரின் கருத்துருவினை அரசு கவனமுடன் ஆய்வு செய்து, பெண்களின் பாதுகாப்பினை மேம்படுத்தும் பொருட்டு, தடுப்பு மற்றும் பாதுகாப்பு உத்திகளை முதன்மை மற்றும் ஒற்றை இலக்காகக் கொண்டு செயல்படக் கூடிய, 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை' உருவாக்கவும் முதற்கட்டமாக காவல்துறை தலைமையகத்தில் பின்வரும் பணியிடங்களுக்கு நிர்வாக ஒப்புதல் அளித்து அரசு ஆணையிடுகிறது. இந்த 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை' முதல்-அமைச்சரின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

- திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகள் தொடர்பான மனுக்களை அளித்தனர். குடிநீர் வசதி, சாலை வசதி, மின்சாரம், நில பிரச்சனைகள், முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக ஏராளமான மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு மனுக்களை அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினர். மேலும், பொதுமக்களின் கோரிக்கைகள் விரைவாக பரிசீலனை செய்து தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.1
- தருமபுரி சந்தைப்பேட்டை ஆட்டுச் சந்தையில் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட 340 ஆடுகள் விற்பனைக்கு வந்தன. சிறிய குட்டிகள் ₹2000 முதல் பெரிய ஆடுகள் ₹24,000 வரை விற்பனையாகி, மொத்தமாக ₹43 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.1
- முதல் முப்பது நிமிடங்களிலேயே கோடிக்கணக்கான பார்வைகளை பெற்றது. திரு ராகுல் காந்தி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் திரு விஜய் ஆகியோருக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் ஆதரவு, மோடி அரசை தெளிவாக பதற்றமடையச் செய்துள்ளது. இந்த காணொளி வெளியான முதல் முப்பது நிமிடங்களிலேயே கோடிக்கணக்கான பார்வைகளை பெற்றது.1
- तमिलनाडु की राजनीति में एक नया अध्याय शुरू हो गया जब Vijay ने मुख्यमंत्री पद की शपथ ली। विधानसभा में विजय जोसेफ़ थलापति का अंदाज़ सबसे अलग नजर आया। उन्होंने पूरे आत्मविश्वास और गंभीरता के साथ ईश्वर के नाम पर संविधान के प्रति निष्ठा की शपथ ली। शपथ लेते हुए विजय ने कहा कि वह भारत की संप्रभुता और अखंडता को अक्षुण्ण रखेंगे और मुख्यमंत्री पद के कर्तव्यों का श्रद्धापूर्वक निर्वाह करेंगे। उनके शपथ ग्रहण का वीडियो और तस्वीरें सोशल मीडिया पर तेजी से वायरल हो रही हैं। समर्थक इसे तमिलनाडु की राजनीति में “नए दौर की शुरुआत” बता रहे हैं।1
- ஸ்பானிய டிவியில் இருந்து ஹாலிவுட் நட்சத்திரமாக உயர்ந்த ஆனா டி அர்மாஸ், தனது பன்முகத் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். 'ஜான் விக்' போன்ற அதிரடிப் படங்களிலும், ஆஸ்கர் பரிந்துரை பெற்ற நாடகங்களிலும் ஜொலித்துள்ளார். இவர் தற்போது கலாச்சார ஐகானாகவும், முன்னணி பிராண்டுகளின் உலகளாவிய தூதுவராகவும் திகழ்கிறார்.1
- உதயநிதி ஸ்டாலினை சூழ்ந்த கேமராக்கள். - வாயை திறக்காமல் காரில் ஏறிய சம்பவம். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பதவி ஏற்கும் விழா நடைபெற்றது. இவ்விழா முடிவடையும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் வெளியேறிய போது தொலைக்காட்சி கேமராக்கள் அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி சூழ்ந்து கொண்டனர். இதனை துளியும் பொருட்படுத்தாமல் உதயநிதி ஸ்டாலின் மௌனம் காத்து தனது காரில் ஏறி புறப்பட்டு சென்றதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.1
- எடப்பாடி பழனிசாமிக்கு வணக்கம் வைக்காத சம்பவம்! நெட்டிசன்கள் அதிரடி தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவு பெற்று வெற்றி பெற்ற சட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று சட்டமன்ற வளாகத்தில் சபாநாயகர் முன்பு பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்க வரும் முன்பு முதல்வர் ஜோசப் விஜய்யை பார்த்து மரியாதை நிமித்தமாக வணக்கம் வைத்தார், ஆனால் முதல்வர் ஜோசப் விஜையோ எடப்பாடி பழனிசாமியை கண்டு கொள்ளாமல் பதில் வணக்கம் வைக்காதது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அதிமுகவினரும் நெட்டிசன்களும் கூறும்போது, இந்நாள் முதல்வர், முன்னாள் முதல்வருக்கு பதில் வணக்கம் வைக்காதது அவர்கள் வகிக்கின்ற பதவியை அவமதிக்கும் செயலாகும், மரியாதை நிமித்தமாக கூட வணக்கம் வைக்காத ஒரு முதல்வர் இவர் தான் தமிழகத்தை 5 வருடத்திற்கு ஆளப்போகிறாரா, ஓபிஎஸ்-க்கு வணக்கம் வைக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வணக்கம் வைக்காதது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.1
- தர்மபுரி பாரதிபுரம் போக்குவரத்து அலுவலகம் முன்பு தமிழக வெற்றி கழக போக்குவரத்து தொழிலாளர்கள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக அவர்கள் இவ்வாறு செய்தனர்.1