ஓட்டப்பிடாரம் அருகே ஜம்புலிங்கபுரம் கிராமத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு கோகுலம் குரூப்ஸ் சார்பில் முதலாம் ஆண்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் சின்ன மாடு ,பூஞ்சிட்டு என இரு பிரிவாக மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. சின்ன மாடு பிரிவில் 7 வண்டிகளும் பூஞ்சிட்டு மாடு பிரிவில் 12 வண்டிகளும் கலந்து கொண்டன. போட்டிகளை கோவில்பட்டி நகர்மன்ற உறுப்பினரும் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் கவியரசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டியில் காளைகள் எல்கையை நோக்கி சீறிப்பாய்ந்தன. சின்னமாடு பிரிவில் துவரந்தை மணிமேகலை வண்டி முதலிடத்தையும், சக்கம்மாள்புரம் எம்.எஸ். கமலா இரண்டாவது இடத்தையும், நாலந்துல்லா உதயம் துரைப்பாண்டியன் வண்டி மூன்றாவது இடத்தையும், ஜம்புலிங்கபுரம் ஜெய ஸ்ரீ வண்டி நான்காவது இடத்தையும் பிடித்தன. பூஞ்சிட்டு பிரிவில் புதியம்புத்தூர் ராஜ் வண்டி முதலிடத்தையும், கச்சேரி தளவாய்புரம் தேவனுக்கே மகிமை வண்டி இரண்டாவது இடத்தையும்,முருகேச பாண்டியன் வண்டி மூன்றாவது இடத்தையும், மேல அரசடி எம். எம். பிரதர்ஸ் வண்டி நான்காவது இடத்தையும் பிடித்தன. போட்டிகளை சாலையின் இரு புறங்களிலும் பொதுமக்கள் கண்டு களித்தனர்.

- Post by N balu Nbalu1
- தூத்துக்குடி மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் மக்கள் தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் 75 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 12.12 25 அன்று அதிகாலை 00.01மணிக்கு சத்யா திரையரங்கில் சிறப்பு பாடல்கள் மற்றும் மேஷ்அப் காட்சிகளுடன் கேக் வெட்டி, வெடிகள் வெடித்து, வான வேடிக்கையுடன் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது.1
- Post by டேவிட் அந்தோனி1
- Romance 🤩1
- Post by Vijay Kumar1
- ஐயா வணக்கம் நான் மக்கள் சமூக பாதுகாப்பு சங்கம் காங்கேயம் கோட்ட தலைவராக உள்ளேன் காங்கேயத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது இந்த மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றன இந்நிலையில் இந்த மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள கோபுர மின்விளக்கு கடந்த ஒரு மாத காலமாக எரிவதில்லை இது சம்பந்தமாக மருத்துவமனை தலைமை அதிகாரியிடம் தெரிவிக்கப்பட்டது அவர்கள் இது இந்த வேலைகள் அனைத்தும் பொதுப்பணித்துறையில் உள்ள மின்சார பிரிவு ஆட்கள் செய்து வருவதால் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது என்று பதில் அளித்துள்ளார் ஆனால் இதுவரை அந்தப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை ஆகவே உடனடியாக இந்த கோரிக்கின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்1
- உலகில் உள்ள அழகான ரோடுகள்.1
- Post by N balu Nbalu1