logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10 -ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் தேர்வு மையத்தை கலெக்டர் ஆய்வு. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10 -ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெறும் தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

2 hrs ago
user_செல்வம்
செல்வம்
பத்திரிகையாளர் Krishnagiri, Tamil Nadu•
2 hrs ago
e0ef53fb-fa31-4c76-bb06-6627e766054c

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10 -ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் தேர்வு மையத்தை கலெக்டர் ஆய்வு. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10 -ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெறும் தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

More news from Tamil Nadu and nearby areas
  • ஊத்தங்கரையில் மகளிர் தினத்தை முன்னிட்டு அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மகளிர் தினத்தை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா வழிகாட்டி அறக்கட்டளை தலைவர் ஆடிட்டர் லோகநாதன் ஏற்பாட்டில் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் தமிழ் செல்வம் தலைமையில் சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான அசோக்குமார் கலந்துகொண்டு துரை ரீதியாக சாதனை புரிந்த மகளிருக்கு விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து கழக மகளிர்களுக்கு புடவைகளும் அசைவ விருந்துகளும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் சுந்தரவடிவேல், மாவட்ட துணை செயலாளர் சாகுல் அமீது, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மனோரஞ்சிதம் நாகராஜ், நகரக் கழக செயலாளர் சிக்னல் ஆறுமுகம், முன்னாள் நகர கழக செயலாளர் சிவானந்தம், ஒன்றிய கழக செயலாளர்கள் வேடி, வேங்கன், நரேஷ் குமார், சக்கரவர்த்தி, முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் தேவேந்திரன், நகர மாணவரணி செயலாளர் சம்பத் என்கிற கணேசன், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை ஒன்றிய செயலாளர் சக்திவேல், மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் ஆறுமுகம் உள்ளிட்ட ஏராளமான அதிமுக கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    1
    ஊத்தங்கரையில் மகளிர் தினத்தை முன்னிட்டு அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மகளிர் தினத்தை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா வழிகாட்டி அறக்கட்டளை தலைவர் 
ஆடிட்டர் லோகநாதன் ஏற்பாட்டில் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர்
தமிழ் செல்வம் தலைமையில் சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான அசோக்குமார் கலந்துகொண்டு துரை ரீதியாக சாதனை புரிந்த மகளிருக்கு விருதுகளை வழங்கி  சிறப்புரையாற்றினார்.  அதனைத் தொடர்ந்து கழக மகளிர்களுக்கு புடவைகளும் அசைவ விருந்துகளும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 
மாவட்ட பொருளாளர் சுந்தரவடிவேல், மாவட்ட துணை செயலாளர் சாகுல் அமீது, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மனோரஞ்சிதம் நாகராஜ், நகரக் கழக செயலாளர் சிக்னல் ஆறுமுகம், முன்னாள் நகர கழக செயலாளர் சிவானந்தம், ஒன்றிய கழக செயலாளர்கள் வேடி, வேங்கன், நரேஷ் குமார், சக்கரவர்த்தி, முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் தேவேந்திரன், 
நகர மாணவரணி செயலாளர் சம்பத் என்கிற கணேசன், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை ஒன்றிய செயலாளர் சக்திவேல், மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர்
ஆறுமுகம் உள்ளிட்ட ஏராளமான அதிமுக கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    user_செல்வம்
    செல்வம்
    பத்திரிகையாளர் Krishnagiri, Tamil Nadu•
    2 hrs ago
  • கிருஷ்ணகிரி அருகே உள்ள தானம்பட்டி கிராமத்தில்  5- ஆம் ஆண்டுமாபெரும் எருது விடும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
    1
    கிருஷ்ணகிரி அருகே உள்ள தானம்பட்டி கிராமத்தில்  5- ஆம் ஆண்டுமாபெரும் எருது விடும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • அதியமான்கோட்டை ஸ்ரீ தட்சணகாசி காலபைரவருக்கு தேய்பிறை அஸ்டமி :அதிகாலை பைரவருக்கு16 திரவியங்களால் அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டு சுவாமிக்கு விபூதி அலங்காரம்: ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கால பைரவர் அருள்பெற்றனர் தருமபுரியை அடுத்த அதியமான்கோட்டையில் மன்னர் அதியமானால் கட்டப்பட்ட தட்சணகாசி காலபைரவர் ஆலயம் காசிக்கு அடுத்ததாக பைரவருக்கென தனி ஆலயம் என்ற பெருமை பெற்ற காலபைரவர் ஆலயத்தில் இன்று மாசி மாத தேய்பிறை அஸ்டமி விழா சிறப்பாக நடைபெற்றது இங்கு மாதம்தோறும் தேய்பிரை அஸ்டமி அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும், கர்நாடக மாநிலத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வரிகை புரிந்து பூசணி தீபமேற்றி வழிபாடு செய்கின்றனர் இன்று பைரவருக்கு அதிகாலை முதலே 16 திரவியங்களால், பால், தயிர், சந்தனம், விபூதி மஞ்சள், நெய், இளநீர் ஆகியவற்றை கலந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு விபூதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாவித்தார் காலபைரவர் தேய்பிறை அஸ்டமி விழாவில் சுவாமியை தரிசிக்க தருமபுரி மாவட்டம் முழுவதிலிருந்தும் அண்டை மாநிலம் கர்நாடகம், கேரளம், ஆந்திரா பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து நீண்டவரிசையில் காத்திருந்து காலபைரவரை வழிபட்டனர் இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் சிறப்பாக செய்தனர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது
    1
    அதியமான்கோட்டை ஸ்ரீ தட்சணகாசி காலபைரவருக்கு தேய்பிறை அஸ்டமி :அதிகாலை  பைரவருக்கு16 திரவியங்களால் அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டு சுவாமிக்கு விபூதி அலங்காரம்: ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கால பைரவர் அருள்பெற்றனர்
தருமபுரியை அடுத்த அதியமான்கோட்டையில் மன்னர் அதியமானால் கட்டப்பட்ட தட்சணகாசி காலபைரவர் ஆலயம் காசிக்கு அடுத்ததாக பைரவருக்கென தனி ஆலயம் என்ற பெருமை பெற்ற காலபைரவர் ஆலயத்தில் இன்று மாசி மாத தேய்பிறை அஸ்டமி விழா சிறப்பாக நடைபெற்றது
இங்கு மாதம்தோறும் தேய்பிரை அஸ்டமி அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும், கர்நாடக மாநிலத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வரிகை புரிந்து பூசணி தீபமேற்றி வழிபாடு செய்கின்றனர்
இன்று பைரவருக்கு அதிகாலை முதலே 16 திரவியங்களால், பால், தயிர், சந்தனம், விபூதி மஞ்சள், நெய், இளநீர் ஆகியவற்றை கலந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு விபூதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாவித்தார்
காலபைரவர்
தேய்பிறை அஸ்டமி  விழாவில் சுவாமியை தரிசிக்க தருமபுரி மாவட்டம் முழுவதிலிருந்தும் அண்டை மாநிலம் கர்நாடகம், கேரளம், ஆந்திரா பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து நீண்டவரிசையில் காத்திருந்து காலபைரவரை வழிபட்டனர்
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் சிறப்பாக செய்தனர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    21 min ago
  • தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு தர்மபுரி மாவட்ட மகிளா காங்கிரஸ் கட்சியின் சார்பில் இன்று புதன்கிழமை காலை மத்திய அரசின் தவறான வெளிநாட்டு கொள்கையின் காரணமாக கேஸ் தட்டுப்பாடு நிலவி வருவதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மகிலா காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ரோஜா கோவிந்த சுவாமி தலைமையில், மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோவி.சிற்றரசு முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    1
    தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு தர்மபுரி மாவட்ட மகிளா காங்கிரஸ் கட்சியின் சார்பில் இன்று புதன்கிழமை காலை மத்திய அரசின் தவறான வெளிநாட்டு கொள்கையின் காரணமாக கேஸ் தட்டுப்பாடு நிலவி வருவதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மகிலா காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ரோஜா கோவிந்த சுவாமி தலைமையில், மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோவி.சிற்றரசு முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    user_Raja
    Raja
    செய்தியாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் விஜய் (வயது 22), நாகராஜ் (வயது 21) இவர்கள் இருவரும் நண்பராக உள்ளனர். நாளை கோயில் திருவிழாவிற்காக துணி எடுப்பதற்காக ஆம்பூர் பகுதிக்கு சென்று மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது வளையாம்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு இரும்பு வேலி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அங்கிருந்தவர்கள் உடனடியாக இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு ஒரு நிலையில் இந்த விபத்து தொடர்பாக வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதே பகுதியில் கடந்த ஐந்து நாட்களில் மட்டும் 3 விபத்துக்கள் ஏற்பட்டு அதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் 15-ககும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    1
    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் விஜய் (வயது 22), நாகராஜ் (வயது 21) இவர்கள் இருவரும் நண்பராக உள்ளனர்.
நாளை கோயில் திருவிழாவிற்காக துணி எடுப்பதற்காக ஆம்பூர் பகுதிக்கு சென்று மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது வளையாம்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு இரும்பு வேலி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு  படுகாயம் அடைந்தனர்.
அங்கிருந்தவர்கள் உடனடியாக இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு ஒரு நிலையில் இந்த விபத்து தொடர்பாக வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
மேலும் இதே பகுதியில் கடந்த ஐந்து நாட்களில் மட்டும் 3 விபத்துக்கள் ஏற்பட்டு அதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் 15-ககும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    user_Suji
    Suji
    Tirupathur, Tamil Nadu•
    6 hrs ago
  • எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலை ஓரத்தில் ஆங்காங்கே நடத்தப்படும் இறைச்சி கடைகளை ஒரே இடத்தில் நடத்த வேண்டும் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் வைத்த கோரிக்கை... அனைவரது கோரிக்கையும் ஏற்றுக்கொண்டு ஒருமனதாக நிறைவேற்றலாம் என ஒத்துழைப்பு வழங்கிய நகர மன்ற தலைவர்... சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சியில் மன்றக் கூட்டம் நகர்மன்ற தலைவர் பாஷா தலைமையில் நடைபெற்றது.இதில் நகராட்சி ஆணையாளர் கோபிநாத் , திமுக, அதிமுக நகர மன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்... இந்த நகர்மன்ற கூட்டத்தில் நகராட்சி முழுவதும் உள்ள பகுதிகளில் மின்விளக்கு பராமரிப்பு, தார் சாலை, சாக்கடை வசதி முறையாக செய்யப்படவில்லை எனக் கூறி அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனால் மன்றக் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது... மேலும் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட சாலையோர பகுதிகளில் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள இறைச்சி கடைகளை அகற்றி ஒரு பொதுவான இடத்தை தேர்வு செய்து அங்கு இறைச்சி கடைகளை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிமுக மன்ற உறுப்பினர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஒருமனதாக நிறைவேற்ற ஒத்துழைப்பு வழங்குமாறு நகர மன்ற தலைவர் கேட்டுக்கொண்டார்... அதனை தொடர்ந்து 82 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது...
    1
    எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலை ஓரத்தில் ஆங்காங்கே நடத்தப்படும் இறைச்சி கடைகளை ஒரே இடத்தில் நடத்த வேண்டும் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் வைத்த கோரிக்கை... அனைவரது கோரிக்கையும் ஏற்றுக்கொண்டு ஒருமனதாக நிறைவேற்றலாம் என ஒத்துழைப்பு வழங்கிய நகர மன்ற தலைவர்...
சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சியில் மன்றக் கூட்டம் நகர்மன்ற தலைவர் பாஷா தலைமையில் நடைபெற்றது.இதில்  நகராட்சி ஆணையாளர்  கோபிநாத் , திமுக, அதிமுக நகர மன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்... 
இந்த நகர்மன்ற கூட்டத்தில் நகராட்சி முழுவதும் உள்ள பகுதிகளில் மின்விளக்கு பராமரிப்பு, தார் சாலை, சாக்கடை வசதி  முறையாக செய்யப்படவில்லை எனக் கூறி அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனால் மன்றக் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது...
மேலும் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட சாலையோர பகுதிகளில் ஆங்காங்கே  அமைக்கப்பட்டுள்ள இறைச்சி கடைகளை அகற்றி ஒரு பொதுவான இடத்தை தேர்வு செய்து அங்கு இறைச்சி கடைகளை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிமுக மன்ற உறுப்பினர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஒருமனதாக  நிறைவேற்ற ஒத்துழைப்பு வழங்குமாறு நகர மன்ற தலைவர் கேட்டுக்கொண்டார்...
அதனை தொடர்ந்து 82  தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது...
    user_Srianand
    Srianand
    பத்திரிகையாளர் Edappadi, Salem•
    25 min ago
  • நாமக்கல் மாவட்டம் வையப்பமலையில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள தார் சாலையை நேற்று மார்ச் 10 ஆம் தேதி ஸ்டாலின் முதல்வர் அவர்கள் காணொளி வாயிலாக திறந்து வைத்தார் அதனை தொடர்ந்து மலைப் பாதை வழியாக அமைச்சர் மதிவேந்தன், ஈஸ்வரன் எம் எல் ஏ, ஊர் பொதுமக்கள் ஆகியோர் பாலசுப்பரமணியன் சுவாமி தரிசனத்தை காண்பதற்கு பசு கன்றுடன் மேளதாளத்துடன் யாத்திரை செய்தனர்
    1
    நாமக்கல் மாவட்டம் வையப்பமலையில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள தார் சாலையை நேற்று மார்ச் 10 ஆம் தேதி ஸ்டாலின் முதல்வர் அவர்கள் காணொளி வாயிலாக திறந்து வைத்தார் அதனை தொடர்ந்து மலைப் பாதை வழியாக அமைச்சர் மதிவேந்தன், ஈஸ்வரன் எம் எல் ஏ, ஊர் பொதுமக்கள் ஆகியோர் பாலசுப்பரமணியன் சுவாமி தரிசனத்தை காண்பதற்கு பசு கன்றுடன் மேளதாளத்துடன் யாத்திரை செய்தனர்
    user_கணேஷ் G
    கணேஷ் G
    Local News Reporter ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    8 hrs ago
  • திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வீரவர்கோயில் பகுதியில் பெங்களூர் சென்னை ரயில்வே மார்க்கத்தின் அருகில் புதர் போல் இருந்த மஞ்சுபுல் தீப்பற்றி எரிவதை அறிந்த அப்பகுதி மக்கள் ரயில்வே துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர் தகவலின் பேரில் ரயில்வே போலீசார் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்ததின் பேரில் ஆம்பூர் தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று ரயில் தண்டவாளத்தின் அருகில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீர் பீய்ச்சியடித்து கட்டுக்குள் கொண்டு வந்தனர் தண்டவாளத்தின் அருகில் உயர் மின்னழுத்த கம்பிகள் செல்வதால் தீயணைப்புத் துறையினர் தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது மேலும் அதே பகுதியில் ஏற்கனவே தண்டவாளத்தின் மீது கற்கள் வைத்து ரயிலை கவிழ்க்க சதி திட்டம் தீட்டப்பட்டது மற்றொரு முறை இதே போன்று சமூக விரோதிகளால் தண்டவாளம் அருகில் உள்ள மஞ்சுபுல் தீயிட்டு கொளுத்தியது போன்ற தொடர் சமூக விரோத செயல்கள் அப்பகுதியில் நடைபெற்று வருவதால் ரயில்வே காவல் துறையினர் மற்றும் ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்
    1
    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வீரவர்கோயில் பகுதியில் பெங்களூர் சென்னை ரயில்வே மார்க்கத்தின் அருகில் புதர் போல் இருந்த மஞ்சுபுல் தீப்பற்றி எரிவதை அறிந்த அப்பகுதி மக்கள் ரயில்வே துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர் தகவலின் பேரில்  ரயில்வே போலீசார் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்ததின் பேரில் ஆம்பூர் தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று ரயில் தண்டவாளத்தின் அருகில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீர் பீய்ச்சியடித்து கட்டுக்குள் கொண்டு வந்தனர் தண்டவாளத்தின் அருகில் உயர் மின்னழுத்த கம்பிகள் செல்வதால் தீயணைப்புத் துறையினர் தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது 
மேலும் அதே பகுதியில் ஏற்கனவே  தண்டவாளத்தின் மீது கற்கள் வைத்து ரயிலை கவிழ்க்க சதி திட்டம் தீட்டப்பட்டது மற்றொரு முறை இதே போன்று சமூக விரோதிகளால் தண்டவாளம் அருகில் உள்ள மஞ்சுபுல் தீயிட்டு கொளுத்தியது போன்ற தொடர் சமூக விரோத செயல்கள் அப்பகுதியில் நடைபெற்று வருவதால் ரயில்வே காவல் துறையினர் மற்றும் ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்
    user_Suji
    Suji
    Tirupathur, Tamil Nadu•
    6 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.