Shuru
Apke Nagar Ki App…
AQUA A5 RO SYSTEM . ONE YEAR WARRANTY ONE YEAR FREE SERVICE AVAILABLE ANY REQUIREMENT PLEASE TELL 8489104197
LOGU SOLUTIONS சாத்தூர்
AQUA A5 RO SYSTEM . ONE YEAR WARRANTY ONE YEAR FREE SERVICE AVAILABLE ANY REQUIREMENT PLEASE TELL 8489104197
More news from தமிழ்நாடு and nearby areas
- திருமங்கலம் பன்னிரண்டாவது வார்டு முனிசிபல் காலனி பகுதியில் சுமார் மூன்று மாத காலமாக கழிவுநீர் சாக்கடை அடைத்துக் கொண்டிருக்கிறது அதில் கொசு புழு உற்பத்தி ஆகிறது சிறுவர்களுக்கு காய்ச்சல் அப்பப்போது வருகிறது அதனால் சாக்கடை மற்றும் சாக்கடை போகும் பாதையை சரி செய்யுமாறு தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் நன்றி4
- மதுரை : சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஆகாஷ் என்ற பட்டியலின இளைஞர் காவல் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இது குறித்து புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிவகங்கை மாவட்ட காவல்துறை ஆகாஷ் என்ற இளைஞரை கொலை செய்துவிட்டது. இந்த மாவட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் ஒரே சாதியினராக இருந்து கொண்டு, சாதி சங்கங்களைப் போல செயல்படுகின்றனர். ஏற்கனவே மடப்புரம் கோவில் காவலாளி காவல்துறையினரால் கொல்லப்பட்ட சுவடு மறைவதற்குள் மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆகாஷ் என்ற இளைஞரின் காலை உடைத்தது காவல்துறைதான். ஆனால், அவர் பாலத்தில் இருந்து குதிக்க முயன்றதாக காவல்துறை பொய் சொல்கிறது என அவர் குற்றம் சாட்டினார்.1
- சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் விசாரணை கைதி ஆகாஷ் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நடத்தி வரும் சாலை மறியல் போராட்டம் 24 மணி நேரத்தைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது. இதனால் மதுரை–இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களுடன் அதிகாரிகள் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதும் உடன்பாடு எட்டப்படவில்லை. நள்ளிரவில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், அதிகாலையில் மானாமதுரை எம்.எல்.ஏ தமிழரசி ரவிக்குமார் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதற்கிடையில் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அவசர மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போராட்டம் தொடர்ந்து நடைபெறுவதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.1
- Post by மா.சுடலைமணி1
- மக்காச்சோளம் அதன் குறைந்தபட்ச ஆதார விலை ரூபாய் 2500 ஆக அறிவிக்க வேண்டும் விளாத்திகுளம் பகுதியில் மிளகாய் பயிரிட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூபாய் 15,000 எழுப்பீடு வழங்க வேண்டும் உழவு மற்றும் வண்டி காளை வைத்திருக்கும் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு தனி அடையாள அட்டை வழங்க வேண்டும் கடம்பா வடிகால் ஆக்கிரமிப்பை முழுவதும் அகத்திட வேண்டும் வாய்ப்பாட்டில் மாட்டுவண்டியில் வீட்டு உபயோகத்திற்கு மணல் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதியை வறட்சிதொகுதியாக அறிவிக்க வேண்டும்இவ்வாறு தமிழக ஏர் உழவன் அனைத்து விவசாயிகள் சங்கம் தலைவர் ராஜேஷ் உழவர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு2
- தேனி மாவட்டம் குன்னூர் அருகே அம்மாச்சியாபுரம் வைகை ஆற்றின் நீர் தேக்கத்தின் அடிப்படையில் பல ஏக்கர் நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பெய்த மழையினால் இந்த பகுதியில் உள்ள நெற்கதிர்கள் அனைத்தும் சாய்ந்து விட்டது இதனால் இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றன1
- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சியோன் நகரில் கடந்த 6 ஆம் தேதி இருவரை வாளால் வெட்டிய வழக்கில் கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் மற்றும் கோபி ஆகிய வரை போலீசார் கைது செய்தனர் இதில் ஆகாஷ் போலீசார் கைது செய்த போது மேல பசலை மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்ததில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் அதற்கான சிகிச்சை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஆகாஷ் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணமடைந்ததாக தெரிய வருகிறது இந்நிலையில் ஆகாஷின் மரணத்திற்கு காரணமான காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது உறவினர்கள் மானாமதுரையில் மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மூன்றாவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர் மதுரை உயர்நீதிமன்றம் தேசிய நெடுஞ்சாலைகளில் சாலை மறியல் போராட்டம் நடத்தக்கூடாது என்று உத்தரவிட்ட நிலையிலும் மூன்றாவது நாளாக இந்த போராட்டம் நடைபெற்று வருவதால் அப்பகுதியில் உள்ள பள்ளி மாணவ மாணவிகள் செல்வதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது அது மட்டுமல்லாமல் போக்குவரத்தும் 30 கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது இதனால் அப்பகுதியில் உள்ள இரண்டு தனியார் பள்ளிகள் பள்ளி வாகனங்கள் செல்ல முடியாததால் விடுமுறை விடப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது இந்தப் போராட்டம் நடத்தவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி பொதுமக்களில் கோரிக்கையாக உள்ளது.1
- திருச்சி: திமுக சார்பில் திருச்சியில் நடைபெற்ற மாநில மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் சிக்ஸர் அடித்து பிரம்மாண்ட வெற்றி பெற இப்போதே தயாராக வேண்டும் என அறைகூவல் விடுத்தார். மாநில உரிமைகளைத் தடுக்கும் நீட் தேர்வு, இந்தி திணிப்பு எனத் தமிழகத்திற்கு எதிராகச் செயல்படும் பாஜகவின் என்டிஏ கூட்டணிக்குத் தமிழகத்தில் எப்போதும் 'நோ என்ட்ரி' தான் எனத் தெரிவித்தார். திராவிட மாடல் ஆட்சி தொடரவும், தமிழ் மண்ணைக் காக்கவும் ஏழாவது முறையாக திமுகவே மீண்டும் வெல்லும் என அவர் உரையாற்றினார். (மாநாட்டின் பிரத்தியோக காட்சிகள்)1