logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

கொட்டும் மழையிலும் தொடர்ந்த போராட்டம்: சேலம் உருக்காலை ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்! ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் உருக்காலை ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று (செப்-15) காலை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ​மாலையில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்து மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவிய நிலையில், கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என தொழிலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

14 hrs ago
user_K Suresh
K Suresh
Insurance Agent கங்காவல்லி, சேலம், தமிழ்நாடு•
14 hrs ago
47ef4c74-44dd-4a6e-8b5a-b64f923cbcae

கொட்டும் மழையிலும் தொடர்ந்த போராட்டம்: சேலம் உருக்காலை ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்! ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் உருக்காலை ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று (செப்-15) காலை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ​மாலையில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்து மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவிய நிலையில், கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என தொழிலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More news from தமிழ்நாடு and nearby areas
  • தனியார் பேருந்து ஓட்டுநரை தாக்கிய எஸ்.ஐ சிவசக்தி மீது புகார்.நடவடிக்கை எடுக்காவிட்டால் தனியார் பேருந்துகள் இயக்கப்படாது சங்கத்தின் தலைவர் எச்சரிக்கை ஆத்தூர்: சேலம் மாவட்டம் ஆத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து ஓட்டுநரை காவல் உதவி ஆய்வாளர் தாக்கியதாகக் கூறி, தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் சங்கத்தினர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். ஆத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று இரவு சுமார் 7.30 மணியளவில், பெரம்பலூர் செல்லும் தனியார் பேருந்தை வீரகனூர் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் அரவிந்தன் மற்றும் நடத்துனர் சதீஷ் ஆகியோர் இயக்கிக் கொண்டிருந்தனர். அப்போது ஏ.டி.சி. அதிகாரி வெங்கடேஷ், அந்த தனியார் பேருந்தை வழிமறித்ததாகவும், அரசு பேருந்து சென்ற பின்னரே தனியார் பேருந்தை இயக்க வேண்டும் என கூறி ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்று ஓட்டுனர் தெரிவித்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த  ஆத்தூர் நகர சப்-இன்ஸ்பெக்டர் சிவசக்தி வந்து உள்ளார், அப்போது ஓட்டுநர் அரவிந்தனை சரமாரியாக தாக்கி உள்ளார் என்று தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துனர் சங்கத்தினர் குற்றம்சாட்டினர்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த தனியார் பேருந்து ஓட்டுநர்கள், பேருந்துகள் வெளியே செல்லும் வழித்தடத்தை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சப்-இன்ஸ்பெக்டர் சிவசக்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து தனியார் பேருந்து ஓட்டுநர் சங்கத் தலைவர் கலைச்செல்வன் கூறுகையில், “எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தாமல் திடீரென ஓட்டுநரை தாக்கி உள்ளார் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இன்று மாவட்ட எஸ் பி ககு புகார் அளிக்க உள்ளார் என்று தெரிவித்தனர். மேலும் சங்க நிர்வாகிகள் கூறுகையில், “எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தாமல் திடீரென தாக்கியதால் மனவேதனை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில்  தனியார் பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் ஆத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு
    1
    தனியார் பேருந்து ஓட்டுநரை தாக்கிய எஸ்.ஐ சிவசக்தி மீது புகார்.நடவடிக்கை எடுக்காவிட்டால் தனியார் பேருந்துகள் இயக்கப்படாது சங்கத்தின் தலைவர் எச்சரிக்கை


ஆத்தூர்: சேலம் மாவட்டம் ஆத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து ஓட்டுநரை காவல் உதவி ஆய்வாளர் தாக்கியதாகக் கூறி, தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் சங்கத்தினர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
ஆத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று இரவு சுமார் 7.30 மணியளவில், பெரம்பலூர் செல்லும் தனியார் பேருந்தை வீரகனூர் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் அரவிந்தன் மற்றும் நடத்துனர் சதீஷ் ஆகியோர் இயக்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது ஏ.டி.சி. அதிகாரி வெங்கடேஷ், அந்த தனியார் பேருந்தை வழிமறித்ததாகவும், அரசு பேருந்து சென்ற பின்னரே தனியார் பேருந்தை இயக்க வேண்டும் என கூறி ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்று ஓட்டுனர் தெரிவித்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த  ஆத்தூர் நகர சப்-இன்ஸ்பெக்டர் சிவசக்தி வந்து உள்ளார், அப்போது ஓட்டுநர் அரவிந்தனை சரமாரியாக தாக்கி உள்ளார் என்று தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துனர் சங்கத்தினர் குற்றம்சாட்டினர்கள்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தனியார் பேருந்து ஓட்டுநர்கள், பேருந்துகள் வெளியே செல்லும் வழித்தடத்தை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சப்-இன்ஸ்பெக்டர் சிவசக்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
இதுகுறித்து தனியார் பேருந்து ஓட்டுநர் சங்கத் தலைவர் கலைச்செல்வன் கூறுகையில், “எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தாமல் திடீரென ஓட்டுநரை தாக்கி உள்ளார் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இன்று மாவட்ட எஸ் பி ககு புகார் அளிக்க உள்ளார் என்று தெரிவித்தனர்.
மேலும் சங்க நிர்வாகிகள் கூறுகையில், “எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தாமல் திடீரென தாக்கியதால் மனவேதனை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில்  தனியார் பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தால் ஆத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஒரு
    user_Selva
    Selva
    ஆத்தூர், சேலம், தமிழ்நாடு•
    1 hr ago
  • ஆத்தூரில் பார்வையாளர்களைக் கவர்ந்த மாணவிகளின் பரதநாட்டியம்! ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட, அருள்மிகு வெள்ளப் பிள்ளையார் திருக்கோவிலில் நேற்று (செப் 14) விநாயகர் சதுர்த்தி விழாவினை ஒட்டி, கோயில் நிர்வாகம் சார்பில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில் சிவ கால கேஸ்தரா பரதநாட்டிய பள்ளி மாணவிகளின் ஆடிய பரத நடனம் பார்ப்போரைக் கவர்ந்தது. சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் நின்றவாறு, நடனத்தைக் கண்டு களித்து மாணவிகளை கைத்தட்டி உற்சாகப்படுத்தினர். இதனால் கோவில் சன்னதியில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
    1
    ஆத்தூரில் பார்வையாளர்களைக் கவர்ந்த மாணவிகளின் பரதநாட்டியம்!
ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட, அருள்மிகு வெள்ளப் பிள்ளையார் திருக்கோவிலில் நேற்று (செப் 14) விநாயகர் சதுர்த்தி விழாவினை ஒட்டி, கோயில் நிர்வாகம் சார்பில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில் சிவ கால கேஸ்தரா பரதநாட்டிய பள்ளி மாணவிகளின் ஆடிய பரத நடனம் பார்ப்போரைக் கவர்ந்தது. சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் நின்றவாறு, நடனத்தைக் கண்டு களித்து மாணவிகளை கைத்தட்டி உற்சாகப்படுத்தினர். இதனால் கோவில் சன்னதியில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
    user_Kannapiran S
    Kannapiran S
    Local News Reporter ஆத்தூர், சேலம், தமிழ்நாடு•
    11 hrs ago
  • ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தில் குளம்போல் தேங்கிய மழைநீரால் வாரச்சந்தை வியாபாரிகள், பயணிகள் கடும் அவதி... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. நகரில் பெய்த மழையால் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் மழைநீர் வெளியேற வழியின்றி குளம்போல் தேங்கியது. அதே பகுதியில் வாரச்சந்தை நடைபெற்ற நிலையில், சந்தை வியாபாரிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகினர். காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு சந்தை பொருட்கள் மழைநீரில் மூழ்கின. மேலும், பேருந்து நிலையத்தில் தேங்கிய மழைநீரால் பயணிகள், மாணவர்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர். மழைநீர் முறையாக வெளியேறுவதற்கான வசதி இல்லாததே தண்ணீர் தேங்குவதற்கு காரணம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
    1
    ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தில் குளம்போல் தேங்கிய மழைநீரால் வாரச்சந்தை வியாபாரிகள், பயணிகள் கடும் அவதி...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. நகரில் பெய்த மழையால் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் மழைநீர் வெளியேற வழியின்றி குளம்போல் தேங்கியது.
அதே பகுதியில் வாரச்சந்தை நடைபெற்ற நிலையில், சந்தை வியாபாரிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகினர். காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு சந்தை பொருட்கள் மழைநீரில் மூழ்கின.
மேலும், பேருந்து நிலையத்தில் தேங்கிய மழைநீரால் பயணிகள், மாணவர்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர். மழைநீர் முறையாக வெளியேறுவதற்கான வசதி இல்லாததே தண்ணீர் தேங்குவதற்கு காரணம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
    user_Aravinth
    Aravinth
    ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    12 hrs ago
  • ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் காற்றுடன் மிதமான மழை... ராசிபுரம் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் காற்றுடன் மிதமான மழை... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது. ராசிபுரம், பட்டணம், வடுகம், நாமகிரிப்பேட்டை, குருசாமிபாளையம், வெண்ணந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான காற்றுடன் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காலை முதலே வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது பெய்து வரும் மழையால் வெப்பம் தணிந்து, ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இதமான குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. மழை காரணமாக சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக மிதமான மழை பெய்து வருகிறது....
    1
    ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் காற்றுடன் மிதமான மழை...

ராசிபுரம்
ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் காற்றுடன் மிதமான மழை...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது.
ராசிபுரம், பட்டணம், வடுகம், நாமகிரிப்பேட்டை, குருசாமிபாளையம், வெண்ணந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான காற்றுடன் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
காலை முதலே வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது பெய்து வரும் மழையால் வெப்பம் தணிந்து, ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இதமான குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. மழை காரணமாக சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக மிதமான மழை பெய்து வருகிறது....
    user_ILAYARAJA
    ILAYARAJA
    Local News Reporter ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    17 hrs ago
  • தொட்டியம் பவளக்கடை வீதியில்இந்து முன்னணி சார்பாக வைக்கப்பட்ட விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது திருச்சி மாவட்டம் தொட்டியம் பவளக்கடை வீதியில் இந்து முன்னணி சார்பாக விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு விநாயகருக்கு இரண்டாம் நாள் பூஜைகளும் அன்னதானமும் சிறப்பாக நடைபெற்றது விநாயகருக்கு அருகம்புல் மாலை தேங்காய் வாழைப்பழம் பொங்கல் சுண்டல் வைத்து படைத்து வழிபட்டனர் நிகழ்வில் இந்து முன்னணி நிர்வாகிகள் பக்தர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் அனைவருக்கும் கோவில் நிர்வாக சார்பில் பிரசாதம் அன்னதானம் வழங்கினர்
    1
    தொட்டியம் பவளக்கடை வீதியில்இந்து முன்னணி சார்பாக வைக்கப்பட்ட விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது
திருச்சி மாவட்டம் தொட்டியம் பவளக்கடை வீதியில் இந்து முன்னணி சார்பாக விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு விநாயகருக்கு இரண்டாம் நாள் பூஜைகளும் அன்னதானமும் சிறப்பாக நடைபெற்றது  விநாயகருக்கு அருகம்புல் மாலை தேங்காய் வாழைப்பழம் பொங்கல் சுண்டல் வைத்து படைத்து வழிபட்டனர் நிகழ்வில் இந்து முன்னணி நிர்வாகிகள் பக்தர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் அனைவருக்கும் கோவில் நிர்வாக சார்பில் பிரசாதம் அன்னதானம் வழங்கினர்
    user_Kumar reports musiri
    Kumar reports musiri
    Photographer முசிறி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    27 min ago
  • ராசிபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் பலத்த காற்றுடன் மழை ராசிபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. நகரில் பெய்த இந்த மழையால் பஸ் நிலையத்தில் மழை நீர் வெளியேற வழி இன்றி குளம் போல் நீர் தேங்கியது. இதனால் அங்கு கூடிய வார சந்தை வியாபாரிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகினர். காய்கறி பழங்கள் உள்ளிட்ட வார சந்தை பொருட்கள் நீரில் மூழ்கின. பயணிகள் மாணவர்கள் இருசக்கர வாகன ஓட்டிகள் என பலரும் பெரும் அவதிக்கு ஆளாகினர்.
    1
    ராசிபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் பலத்த காற்றுடன் மழை
ராசிபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. நகரில் பெய்த இந்த மழையால் பஸ் நிலையத்தில் மழை நீர் வெளியேற வழி இன்றி குளம் போல் நீர் தேங்கியது. இதனால் அங்கு கூடிய வார சந்தை வியாபாரிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகினர். காய்கறி பழங்கள் உள்ளிட்ட வார சந்தை பொருட்கள் நீரில் மூழ்கின. பயணிகள் மாணவர்கள் இருசக்கர வாகன ஓட்டிகள் என பலரும் பெரும் அவதிக்கு ஆளாகினர்.
    user_DHINESH KUMAR
    DHINESH KUMAR
    Local News Reporter Namakkal, Tamil Nadu•
    11 hrs ago
  • முசிறியில் அண்ணா பிறந்த தின விழா தமிழக வெற்றிக்கழக எம்எல்ஏ மற்றும் மாவட்டச் செயலாளர் இணைப்பு வழங்கி கொண்டாடினர். முசிறியில் அண்ணா பிறந்த தின விழா தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர் ஜெகன்மோகன், எம் எல் ஏ விக்னேஷ் ஆகியோர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடினர். நிகழ்ச்சியில் முசிறி நகரக் கழக செயலாளர்கள் சந்தோஷ் குமார், சந்திரகுமார் வழக்கறிஞர் ராஜசேகர், நகர இளைஞரணி செயலாளர் ஸ்ரீராம், நகர துணை செயலாளர் சிவக்குமார் உள்ளிட்ட ஒன்றிய, நகர கிளைக் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடினர்.
    1
    முசிறியில் அண்ணா பிறந்த தின விழா தமிழக வெற்றிக்கழக எம்எல்ஏ மற்றும் மாவட்டச் செயலாளர் இணைப்பு வழங்கி கொண்டாடினர்.

முசிறியில் அண்ணா பிறந்த தின விழா தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர் ஜெகன்மோகன், எம் எல் ஏ விக்னேஷ் ஆகியோர்  அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடினர். நிகழ்ச்சியில் முசிறி நகரக் கழக செயலாளர்கள் சந்தோஷ் குமார், சந்திரகுமார் வழக்கறிஞர் ராஜசேகர், நகர இளைஞரணி செயலாளர் ஸ்ரீராம், நகர துணை செயலாளர் சிவக்குமார் உள்ளிட்ட ஒன்றிய, நகர கிளைக் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடினர்.
    user_நா. முருகன்
    நா. முருகன்
    முசிறி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    16 hrs ago
  • ராசிபுரத்தில் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் பொதுமக்கள் அவதி ...... இராசிபுரம் ராசிபுரம் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளொன்றுக்கு சுமார் 3 முதல் 5 முறை வரை மின்வெட்டு ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுவதால் வீடுகளில் அன்றாட பணிகள் பாதிக்கப்படுவதுடன், குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மின்வெட்டு நேரங்களில் வீடுகளில் மின்விசிறி உள்ளிட்ட மின்சாதனங்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுவதால், இரவு நேரங்களில் குழந்தைகள் தூங்குவதிலும் சிரமம் ஏற்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும், சிறு வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்டவற்றின் பணிகளும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுவதால் மின்சாதனங்கள் பழுதாகும் அபாயமும் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே மழைக்கால சூழல் நிலவி வரும் நிலையில், இரவு நேரங்களில் ஏற்படும் மின்தடையால் சாலைகளிலும் இருள் சூழ்ந்து வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே ராசிபுரம் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டுக்கான காரணத்தை கண்டறிந்து, மின்விநியோகத்தை சீராக வழங்க மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    ராசிபுரத்தில் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் பொதுமக்கள் அவதி ......
இராசிபுரம்
ராசிபுரம் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளொன்றுக்கு சுமார் 3 முதல் 5 முறை வரை மின்வெட்டு ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுவதால் வீடுகளில் அன்றாட பணிகள் பாதிக்கப்படுவதுடன், குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
மின்வெட்டு நேரங்களில் வீடுகளில் மின்விசிறி உள்ளிட்ட மின்சாதனங்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுவதால், இரவு நேரங்களில் குழந்தைகள் தூங்குவதிலும் சிரமம் ஏற்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். 
மேலும், சிறு வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்டவற்றின் பணிகளும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுவதால் மின்சாதனங்கள் பழுதாகும் அபாயமும் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். 
ஏற்கனவே மழைக்கால சூழல் நிலவி வரும் நிலையில், இரவு நேரங்களில் ஏற்படும் மின்தடையால் சாலைகளிலும் இருள் சூழ்ந்து வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது.
எனவே ராசிபுரம் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டுக்கான காரணத்தை கண்டறிந்து, மின்விநியோகத்தை சீராக வழங்க மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_Aravinth
    Aravinth
    ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    12 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.