பொியாா் திட்டமும் கலைஞர் சட்டமும் ஆண்களுக்கு நிகராக பெண்கள் வாழ்வில் ஓளிவிளக்கேற்றியுள்ளனா். அமைச்சர் கீதாஜீவன் மகளிா் அணி கூட்டத்தில் பெருமிதம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மகளிா்அணி மகளிா் தொண்டரணி ஆலோசனை கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட மகளிா் அணி அமைப்பாளர் கவிதாதேவி மகளிா் தொண்டரணி அமைப்பாளர் ராமலட்சுமி, ஆகியோா் முன்னிலைவகித்தனா். மாநகர மகளிா் அணிஅமைப்பாளர் ஜெயக்கனி வரவேற்புரையாற்றினாா். அமைச்சா் கீதாஜீவன் பேசுகையில் கனிமொழி எம்.பி பிறந்தநாள் விழா கொண்டாடுவது மகளிா் அணி செயல்பாடுகள் குறித்து நடைபெறுகின்ற கூட்டத்தில் பெண்கள் அதிக அளவில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சியடைகிறேன். பொியாா் கொண்டு வந்த திட்டத்தை கலைஞர் அதை சட்டமாக்கினாா். அதன்மூலம் பெண்களுக்கு சொத்தில் சமஉாிமை வேலைவாய்ப்பில் முக்கியத்துவம் 33 சதவீத இடஓதுக்கீடு மகளிா் சுய உதவிக்குழு தொடக்கம் என்று படிப்படியாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு ஆண்களுக்கு நிகராக பெண்களும் இருக்க வேண்டும் என்று கொண்டுவரப்பட்ட சட்டத்தினால்தான் இன்று மாநகரசெயலாளா் ஆனந்தசேகரனோடு நான் அமா்ந்திருக்கிறேன். பொதுவாழ்வில் 30 ஆண்டுகாலம் பணியாற்றி வருகிறேன். பெண்களுக்கு திமுக ஆட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு விடியல் பயணம் மகளிர் உாிமைத்தொகை ஆயிரம் வீதம் தமிழகத்தில் 1கோடியே 30 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது. உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனுவழங்கப்பட்டு அதில் விடுபட்டிருந்தாலும் அதை சுட்டிக்காட்டி மீண்டும் ஓரு மனுவாக அளித்தால் பாிசீலனை செய்து வழங்குவதற்காக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொிவித்ததோடு தற்போது வழங்கப்படும் உாிமைத்தொகை அதிகாித்து வழங்கப்படும் என்று கூறியுள்ளாா் கடந்த 26 மாதகாலமாக பலனடைந்து வருகின்ற மகளிா்கள் தனது தாய் தந்தை மற்றும் உறவினா்கள் பாா்க்க செல்வதற்கு விடியல் பயணமும் ஆயிரம் உாிமைத்தொகையும் மற்றவா்களை எதிா்பாா்க்காமல் உங்களை அழைத்து செல்வதற்கு வாய்ப்பாக கிடைத்துள்ளது. அதை சிலா் சேமித்து வைத்து அவசர தேவைக்கு தனது கணவருக்கு வழங்கும் நிலை இருக்கிறது. கலைஞர் வழியில் தளபதியாா் ஆட்சியில் நான்கரை ஆண்டுகாலம் திராவிட மாடல் ஆட்சியில் மகளிா் சுயஉதவி குழு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு விவசாய கடன் தள்ளுபடி கொரோனா காலத்தில் எல்லோருக்கும் 4 ஆயிரம் வழங்கப்பட்டு பொருளாதார வளா்ச்சி கிடைத்தது தற்போது மகளிா்களுக்கு 20 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. அதிலும் தொழில் செய்ய வேண்டும் என்றால் 30 லட்சம் வரைவழங்கப்படுகிறது. இப்படி ஓவ்வொரு மகளிா்களும் தொழில்முனைவோ்களாக உருவாக வேண்டும். என்று ஊக்குவிக்கப்படுகிறது. 10 லட்சம் கடன்வாங்கினால் ஏழரை லட்சம் கட்டினால் போதும் இரண்டரை லட்சம் மாணியம் மாவட்ட தொழில்மையம் மூலம் தொழில் கடனும் வழங்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் தோழி விடுதி திறக்கப்பட்டு இரண்டு நாள் தங்கியிருந்து சில பணிகளை பாா்க்க வேண்டும் என்றால் அதை பயன்படுத்திக்கொள்ளலாம் ஆயிரம் கல்லூாி உதவித்தொகை பெற்று மாணவிகள் படித்து முடித்தபின் வெற்றி நிச்சயம் என்ற திட்டத்தின் மூலம் தொழில்பயிற்சி வழங்கப்படுகிறது. அதில் சமயலறை வரை அடக்கம் கனவு இல்லம் மூலம் வீடு கட்டிக்கொடுக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெண்கள் வாழ்வு உயா்ந்தால் தமிழ்நாடு உயரும் என்ற கொள்கையோடு எல்லோருக்கும் உாிமை கொடுக்கும் வகையில் நம்முடைய முதலமைச்சர் தளபதியாா் பணியாற்றி வருகிறாா் இந்த பணிகளை எல்லாம்நீங்கள் இருக்கின்ற பகுதிகளில் பொதுமக்கள் எடுத்துக்கூறி விழிப்புணா்வோடு செயல்பட வேண்டும். கடந்த 2021 24 ஆகிய தோ்தல்களில் நீங்களாற்றிய பணி பங்களிப்பு 2026லும் தொடர வேண்டும். அதற்கு அனைவரும் ஒற்றுமையுடன் எல்லோருடனும் இணைந்து பணியாற்றுங்கள் எஸ்ஐஆா் பணி முடிவு பெற்றுள்ளது. 19ம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வௌியிடப்படுகிறது. அதையும் சாிபாா்த்து விடுபட்டிருந்தவா்களை இணைக்க வேண்டும். தன்னம்பிக்கையோடு அனைவரும் வாழ வேண்டும் கனிமொழி எம்.பி பிறந்தநாளை தங்களது பகுதிகளில் நலத்திட்ட உதவிகளோடு கொண்டாட வேண்டும் என்று பேசினாா். 5.1.2026அன்று கனிமொழி எம்.பி பிறந்தநாளை யொட்டி மாவட்ட மகளிா் அணி சாா்பில் கேக்வெட்டுதல் ஆதரவற்ற முதியோா் இல்லங்களுக்கு உணவு வழங்குவதல் புத்தாடை வழங்குதல் அரசு மருத்துவமணையில் பழங்கள் வழங்குவது உள்பட நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட மகளிா் அணி சேர்ந்த அனைவருக்கும் சீருடை வழங்கப்பட்டது. முன்னதாக மாநகர மகளிா் அணி தலைவர் பாப்பாத்தி மறைவுக்கு ஓருநிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட அணி நிா்வாகிகள் செல்வி, பாா்வதி, தங்கமாாியம்மாள், அருணாதேவி, பொதுக்குழு உறுப்பினா் கஸ்தூாிதங்கம், மாநகர துணைச்செயலாளர் பிரமிளா, மாநகர அணி நிா்வாகிகள் இந்திரா, நாராயணவடிவு, பெல்லா, மண்டலத்தலைவர் கலைச்செல்வி, கவுன்சிலா்கள் நாகேஸ்வாி, மாியகீதா, பவாணி, சுப்புலட்சுமி, வைதேகி மற்றும் மகாலட்சுமி, தூத்துக்குடி கோவில்பட்டி விளாத்திகுளம் தொகுதிக்குட்பட்ட ஓன்றிய நகர பேரூா் அணி நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா். மாநகர மகளிா் தொண்டரணி அமைப்பாளா் ஜெயசீலி நன்றியுரையாற்றினாா். பாக்ஸ்: திமுகவை வீழ்த்தவேண்டும் என்று கொடிபிடித்துக்கொண்டு பல்வேறு கட்சிகள் தோ்தல் நேரத்தில் கிளம்பியுள்ளனா். அவா்களது நோக்கம் நாம் ஆட்சிக்கு வரவேண்டும் என்பது அல்ல. திமுகவை வீழ்த்த வேண்டும் என்று வருகிறாா்கள். அவா்களுக்கு எல்லாம் உங்களுடைய உழைப்பின் மூலம் 2026ல் பதிலடி கொடுக்க வேண்டும் தமிழகத்தில் உள்ள மேயா்களில் 11 போ் பெண்கள் மேயா்களாக உள்ளனா். கனிமொழி எம்.பியின் விடாமுயற்சி மூலம் விமானம் விாிவாக்கத்தால் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் இந்த மாவட்டத்தில் வருகின்றன. அதே போல் தோ்தல்நேரத்தில் பிஎல்2 பாகமுகவா்கள் பட்டியலில் பெண்கள் இடம் பெற வேண்டும் என்று தளபதியாா் உத்தரவிட்டிருந்தாா். நான் திமுகவில் மாவட்ட செயலாளராக பணியாற்றி வரும் ஒரு பெண் இதற்கெல்லாம் காரணம் தமிழக வளர்ச்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். என்ற அடிப்படையில் கலைஞர் வழியில் தளபதியாரும் பணியாற்றி வருவதுதான் காரணம் என்று அமைச்சர் கீதாஜீவன் கூறினாா்.

- மருமகள் உலகம் எப்படி இருக்கு என்று பாருங்கள்1
- Post by N balu Nbalu1
- Post by Mr Mr. Gandhi1
- தஞ்சாவூர் பற்றிய ஒரு குறிப்பு.1
- பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள சர்க்கார் பதி (Sarkarpathi), இயற்கை எழில் கொஞ்சும் ஆனைமலைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான இடமாகும். இதன் வரலாறு முக்கியமாக பரம்பிக்குளம் - ஆழியாறு (PAP) திட்டத்தோடும், மின்சார உற்பத்தியோடும் நெருங்கிய தொடர்புடையது. சர்க்கார் பதியின் முக்கிய வரலாற்று மற்றும் சிறப்பம்சங்கள் இதோ: 1. மின் உற்பத்தி நிலையம் (Sarkarpathy Power House) சர்க்கார் பதியின் நவீன கால வரலாறு 1960-களில் தொடங்குகிறது. தொடக்கம்: இங்குள்ள நீர்மின் உற்பத்தி நிலையம் 1966-ம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்தது. திறன்: இது 30 மெகாவாட் (30 MW) மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. செயல்பாடு: பரம்பிக்குளம் மற்றும் தூணக்கடவு அணைகளில் இருந்து வரும் தண்ணீர், ஒரு சுரங்கப்பாதை வழியாக சர்க்கார் பதிக்கு கொண்டு வரப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இங்கிருந்து வெளியேறும் தண்ணீர் மீண்டும் ஆழியாறு அணைக்குச் செல்கிறது. 2. பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம் (PAP Project) சர்க்கார் பதி என்பது இந்த பிரம்மாண்டமான நீர் மேலாண்மை திட்டத்தின் ஒரு முக்கியப் புள்ளியாகும். கேரளா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் ஒப்பந்தத்தின்படி, மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகளைத் திருப்பி, விவசாயம் மற்றும் மின்சாரத்திற்காகப் பயன்படுத்தும் திட்டத்தில் சர்க்கார் பதி ஒரு பாலமாகச் செயல்படுகிறது. 3. பழங்குடியினர் வரலாறு "பதி" என்ற சொல்லே பழங்குடியின மக்களின் வாழ்விடத்தைக் குறிப்பதாகும் (உதாரணமாக: ஒழலப்பதி, சர்க்கார் பதி). இந்தப் பகுதியில் காலங்காலமாக மலசர், மலை மலசர் போன்ற பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களது கலாச்சாரம் மற்றும் வாழ்வியல் முறைகள் ஆனைமலைக் காடுகளுடன் பிணைந்துள்ளன. 4. இயற்கை மற்றும் சுற்றுலா அமைவிடம்: இது ஆனைமலை புலிகள் காப்பகப் பகுதியில் அமைந்துள்ளது. அடர்ந்த காடுகள் மற்றும் யானைகள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியாகும். சிறப்பு: இங்கிருந்து டாப்ஸ்லிப் (Topslip) செல்லும் பாதை மிகவும் அழகானது. இங்குள்ள "சர்க்கார் பதி நிலத்தடி மின் நிலையம்" ஆசியாவிலேயே குறிப்பிடத்தக்க ஒன்றாகும். சுருக்கமாக: சர்க்கார் பதி என்பது வெறும் ஊர் மட்டுமல்ல, தமிழகத்தின் மின்சாரம் மற்றும் விவசாயத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு முக்கியத் தொழில்நுட்ப மையமாகவும், பழங்குடி மக்களின் பூர்வீக நிலமாகவும் விளங்குகிறது.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- 18-12-2023 இதே நாளில் பெய்த கனமழையால் தூத்துக்குடி மாவட்டம் கோரம் பள்ளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கு1
- தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட கிழக்கு மண்டல மக்கள் குறை தீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. (17-12-2025) புதன்கிழமை தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட கிழக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையாளர் பிரியங்கா முன்னிலையில் நடைபெற்றது இந்த முகாமில் பொதுமக்களிடமிருந்து சொத்து வரி, குடிநீர் விநியோகம், பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்குதல், பெயர் மாற்றங்கள், பிறப்பு–இறப்பு சான்றிதழ் திருத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டன. மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் துணை ஆணையர்கள் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் இந்த இந்த முகாமில் தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கு அதற்கான சான்றிதழ்களை உரியவர்களுக்கு மேயர் வழங்கினார்.1