Shuru
Apke Nagar Ki App…
Then karaikoti news
A Ari KUMARAN
Then karaikoti news
More news from தமிழ்நாடு and nearby areas
- நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையில் கட்டிட தொழிலாளர்கள் பல்வேறு வகையான கோரிக்கைகளை முன்வைத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் டிசம்பர் 26 வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகமும் நடைபெற்றது நிகழ்வில் கட்டிட தொழிலாளர்கள் மற்றும் மகளிர்கள் கலந்து கொண்டனர்1
- திமுக-வுக்கும் - தவெக-க்கும் தான் போட்டி என விஜய் சொல்லி வருகிறார் என்ற கேள்விக்கு பதில் அளித்த நாகேந்திரன்.. தம்பி விஜய் எது வேணும்னாலும் பேசலாம் இது சினிமா அல்ல.. தேர்தல் தேதி அறிவிக்க வேண்டும், வேட்பாளர் போட வேண்டும்.. வேட்பாளர்கள் விலை போகாமல் இருக்க வேண்டும், பூத் பொறுப்பாளர்கள் விலை போகாமல் இருக்க வேண்டும், முதலில் பூத் பொறுப்பாளர்கள் இருக்க வேண்டும், தவெக-க்கு கட்டமைப்பு கிடையாது.. 234 தொகுகள் உள்ளது.. 10 வேட்பாளர் பெயரை விஜய் சொல்ல முடியுமா என்றார். .............................. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் "தமிழகம் தலை நிமிர தமிழனனின் பயணம்" என்ற தலைப்பில் தமிழக பாஜக தலைவர் நயினா நாகேந்திரன் கிருஷ்ணன் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்ட பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது அவர் பேசுகையில்.. அதிமுக பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு எண்ணிக்கை குறித்து சமூக ஊடகங்களில் வரும் தகவல் உண்மை அல்ல.. தவறான செய்தி என்றும், கூட்டணி குறித்து விவாதம் மட்டும் நடந்து என்றார். பொங்கல் பண்டிகைக்கு பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணி பிறக்கட்சிகள் இணையும். பொருத்து இருங்கள் பொங்கல் இன்னும் வரவில்லை, தை பிறந்த உடன் பதில் கிடைக்கும் என கூறிய அவர், ஒபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் தற்போது என்டிஏ கூட்டணியில் இல்லை., ஒபிஎஸ் தனது கருத்தை சொல்லி உள்ளார்.. பொதுவாக அரசியலை பொருத்தவரை தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ளது. 24 மணி நேரத்திற்குள் கூட பல்வேறு மாற்றங்கள் வரலாம், அது சமயம் தான் ஓபிஎஸ்-ன் தேர்தல் கூட்டணி குறித்து தெரியவரும் என்றார். திமுக-வுக்கும் - தவெக-க்கும் தான் போட்டி என விஜய் சொல்லி வருகிறார் என்ற கேள்விக்கு பதில் அளித்த நாகேந்திரன்.. தம்பி விஜய் எது வேணும்னாலும் பேசலாம் இது சினிமா அல்ல.. தேர்தல் தேதி அறிவிக்க வேண்டும், வேட்பாளர் போட வேண்டும்.. வேட்பாளர்கள் விலை போகாமல் இருக்க வேண்டும், பூத் பொறுப்பாளர்கள் விலை போகாமல் இருக்க வேண்டும், முதலில் பூத் பொறுப்பாளர்கள் இருக்க வேண்டும், தவெக-க்கு கட்டமைப்பு கிடையாது.. 234 தொகுகள் உள்ளது.. 10 வேட்பாளர் பெயரை விஜய் சொல்ல முடியுமா என்றார். திமுகவுக்கு எதிராக ஒத்த கருத்து உள்ள கட்சிகள் NDA கூட்டணியில் இணைய வேண்டும். முன்வர, வரவேண்டும் என்றார்.1
- ஜமுனாமரத்தூர் : கோமுட்டி ஏரி அருகில்,கிணற்றில் இருந்து குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றபட்டு வரும் சூழலில், வனத்துறை பள்ளி ஆசிரியர் குடியிருப்பு பகுதியிலும் மற்றும் சொசைட்டி அருகாமையில் செல்லும் பைப் விரிசல் ஏற்பட்டிருந்ததை,way2news செய்த வெளியிட்டதன் மூலம் உள்ளாட்சித்துறை சார்ந்த பணியாளர்கள் பைப் சரி செய்தனர் இன்று 27/12/25 குடிநீர் தொட்டியில் ஏற்றபட்டு குடிநீர் மக்கள் பயன்பட்டிற்கு திறப்பு.3
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- நத்தம்: யூனியன் அலுவலகத்தில் மணப்புளிக்காடு கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து குடியேறும் போராட்டம் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் ஒன்றியம், குடகிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மணப்புளிக்காடு பகுதியில் வசிக்கும் 100-க்கும் மேற்பட குடும்பங்கள் 75 ஆண்டுகளுக்கும் மேலாகியும் சாலை வசதியும், மேம்பால வசதியும் செய்து தரப்படாததைக் கண்டித்து, முதலமைச்சரின் தனிப்பிரிவு,ஊராட்சி நிர்வாகம்,ஊராட்சி தலைவர்கள் உள்ளிட்டவர்களிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி நத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாபெரும் மக்கள் குடியேறும் போராட்டம் நடைபெற்றது.1
- திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் 26.12.2025 நேற்று ஏழு கிளைகளில் கொடி ஏற்றி இறுதியாக 11. மணி அளவில் வடமதுரை கட்சி அலுவலகத்திற்கு முன்பு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆம் ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் மற்றும் சுதந்திரப் போராட்ட தியாகி தோழர் இரா. நல்லகண்ணு அவர்களுக்கு நூறாவது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் வடமதுரை கட்சி அலுவலகத்திற்கு முன்பு கொடியேற்றி 101 லட்டு அனைத்து தோழர்களுக்கும் வழங்கப்பட்டது போஸ் சக்திவேல் திருமுருகன் பெருமாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் தெய்வேந்திரன் ஒன்றிய செயலாளர் இவர்கள் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது1
- புதுக்கோட்டை மாவட்டம் அண்டக்குளத்தில் நடைபெற்ற ஐயப்ப பக்தர்கள் பொது பஜனையில் இஸ்லாமியர்கள் பங்கேற்று தேநீர் வழங்கி அன்னதான நிகழ்வில் உணவு பரிமாறிய நிகழ்வு மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் பல இடங்களில் மதநல்லிணக்கநிகழ்ச்சிகள் நடந்து வருகின்றனர். இந்து திருவிழாவுக்கு இஸ்லாமியர்கள் பேனர் அடிப்பது, இந்து கோவில் நிர்வாக கமிட்டியில் இஸ்லாமியர்கள் பொறுப்பில் இருப்பது உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றனர். மேலும் முக்கிய பண்டிகைகளின் போது மதங்களை கடந்து அனைவரும் இணைந்து உணவு பகிர்ந்து உண்ணும் சம்பவங்கள் தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதிகளிலும் இன்றுவரை நடந்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் அண்டக்குளத்தில் ஐயப்பன் பக்தர்கள் சார்பில் பொது பஜனை நடைபெற்றது. இதில் அண்டக்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 2000கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் அதனை தொடர்ந்து அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த அண்ணதான நிகழ்ச்சியில் இஸ்லாமியர்கள் பங்கேற்று தேநீர் வழங்கியும் உணவு பரிமாறிய நிகழ்ச்சி மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கியது. அதனை தொடர்ந்து தேநீர் வழங்கி உணவு பரிமாறிய இஸ்லாமிய சகோதரர்களை ஐயப்ப பக்தர்கள் தொழுகைக்கு பிறகு நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து தொப்புள் கொடி உறவின் அருமையை பறைசாற்றினார்கள்.1
- நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் பகுதியில் உள்ள பனந்தோப்பில் நாக முத்து மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு திருநங்கைகள் இன்று மார்கழி மாத 12- நாள் முத்துமாரி அம்பாளுக்கு அபிஷேகங்கள் நடைபெற்று தீபாரதனையுடன் திருப்பாவை திருவெம்பாவை பாராயணம் பாடல்களை பாடி வழிபாடுகள் நடத்தினர் அப்பகுதியைச் சேர்ந்த திருநங்கைகளும் மக்களும் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர்2