Shuru
Apke Nagar Ki App…
#அனைவருக்கும் இனிய காலை வணக்கம் வாழ்த்துக்கள்
Yuvaraj Tirupattur Dist News Reporter
#அனைவருக்கும் இனிய காலை வணக்கம் வாழ்த்துக்கள்
More news from Tiruvannamalai and nearby areas
- ஜமுனாமரத்தூர் : கோமுட்டி ஏரி அருகில்,கிணற்றில் இருந்து குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றபட்டு வரும் சூழலில், வனத்துறை பள்ளி ஆசிரியர் குடியிருப்பு பகுதியிலும் மற்றும் சொசைட்டி அருகாமையில் செல்லும் பைப் விரிசல் ஏற்பட்டிருந்ததை,way2news செய்த வெளியிட்டதன் மூலம் உள்ளாட்சித்துறை சார்ந்த பணியாளர்கள் பைப் சரி செய்தனர் இன்று 27/12/25 குடிநீர் தொட்டியில் ஏற்றபட்டு குடிநீர் மக்கள் பயன்பட்டிற்கு திறப்பு.3
- கெலமங்கலத்தில் இருசக்கர வாகனத் திருடன் பொதுமக்களால் பிடிப்பு – காவல்துறையில் ஒப்படைப்பு கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற நபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். கெலமங்கலம் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் ஒருவர் திருடிக் கொண்டு பைபாஸ் சாலை வழியாக செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதனை கவனித்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக அவரை துரத்தி மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அந்த நபர் மன்னன்வாடி பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. அவர் கூறிய தகவல்களின் உண்மை நிலையை உறுதி செய்யும் வகையில், பொதுமக்கள் அவரை கெலமங்கலம் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர், பிடிபட்ட நபரிடமும், இருசக்கர வாகனம் தொடர்பாகவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருட்டு சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, மேலான விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் பொதுமக்களின் விழிப்புணர்வும் சுறுசுறுப்பான செயல்பாடும் பாராட்டுக்குரியதாக அமைந்துள்ளது.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- திமுக-வுக்கும் - தவெக-க்கும் தான் போட்டி என விஜய் சொல்லி வருகிறார் என்ற கேள்விக்கு பதில் அளித்த நாகேந்திரன்.. தம்பி விஜய் எது வேணும்னாலும் பேசலாம் இது சினிமா அல்ல.. தேர்தல் தேதி அறிவிக்க வேண்டும், வேட்பாளர் போட வேண்டும்.. வேட்பாளர்கள் விலை போகாமல் இருக்க வேண்டும், பூத் பொறுப்பாளர்கள் விலை போகாமல் இருக்க வேண்டும், முதலில் பூத் பொறுப்பாளர்கள் இருக்க வேண்டும், தவெக-க்கு கட்டமைப்பு கிடையாது.. 234 தொகுகள் உள்ளது.. 10 வேட்பாளர் பெயரை விஜய் சொல்ல முடியுமா என்றார். .............................. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் "தமிழகம் தலை நிமிர தமிழனனின் பயணம்" என்ற தலைப்பில் தமிழக பாஜக தலைவர் நயினா நாகேந்திரன் கிருஷ்ணன் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்ட பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது அவர் பேசுகையில்.. அதிமுக பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு எண்ணிக்கை குறித்து சமூக ஊடகங்களில் வரும் தகவல் உண்மை அல்ல.. தவறான செய்தி என்றும், கூட்டணி குறித்து விவாதம் மட்டும் நடந்து என்றார். பொங்கல் பண்டிகைக்கு பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணி பிறக்கட்சிகள் இணையும். பொருத்து இருங்கள் பொங்கல் இன்னும் வரவில்லை, தை பிறந்த உடன் பதில் கிடைக்கும் என கூறிய அவர், ஒபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் தற்போது என்டிஏ கூட்டணியில் இல்லை., ஒபிஎஸ் தனது கருத்தை சொல்லி உள்ளார்.. பொதுவாக அரசியலை பொருத்தவரை தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ளது. 24 மணி நேரத்திற்குள் கூட பல்வேறு மாற்றங்கள் வரலாம், அது சமயம் தான் ஓபிஎஸ்-ன் தேர்தல் கூட்டணி குறித்து தெரியவரும் என்றார். திமுக-வுக்கும் - தவெக-க்கும் தான் போட்டி என விஜய் சொல்லி வருகிறார் என்ற கேள்விக்கு பதில் அளித்த நாகேந்திரன்.. தம்பி விஜய் எது வேணும்னாலும் பேசலாம் இது சினிமா அல்ல.. தேர்தல் தேதி அறிவிக்க வேண்டும், வேட்பாளர் போட வேண்டும்.. வேட்பாளர்கள் விலை போகாமல் இருக்க வேண்டும், பூத் பொறுப்பாளர்கள் விலை போகாமல் இருக்க வேண்டும், முதலில் பூத் பொறுப்பாளர்கள் இருக்க வேண்டும், தவெக-க்கு கட்டமைப்பு கிடையாது.. 234 தொகுகள் உள்ளது.. 10 வேட்பாளர் பெயரை விஜய் சொல்ல முடியுமா என்றார். திமுகவுக்கு எதிராக ஒத்த கருத்து உள்ள கட்சிகள் NDA கூட்டணியில் இணைய வேண்டும். முன்வர, வரவேண்டும் என்றார்.1
- நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையில் கட்டிட தொழிலாளர்கள் பல்வேறு வகையான கோரிக்கைகளை முன்வைத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் டிசம்பர் 26 வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகமும் நடைபெற்றது நிகழ்வில் கட்டிட தொழிலாளர்கள் மற்றும் மகளிர்கள் கலந்து கொண்டனர்1
- ஆத்தூர்: அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது 2 கார்கள் மோதி விபத்து பெண் படுகாயம் வக்கம்பட்டி அடுத்த ஹோலி கிராஸ் பள்ளி அருகே திண்டுக்கல் - வத்தலகுண்டு நெடுஞ்சாலையில் 2 இரு சக்கர வாகனங்கள் மீது 2 கார்கள் மோதி விபத்து இந்த விபத்தில் திண்டுக்கல், VMR-பட்டியை சேர்ந்த ஜெயினி கல்லூரியில் பணிபுரியும் ரேவதி என்பவர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் விபத்து குறித்து தலைமையிலான போலீசார் விசாரணை1
- புதுக்கோட்டை மாவட்டம் அண்டக்குளத்தில் நடைபெற்ற ஐயப்ப பக்தர்கள் பொது பஜனையில் இஸ்லாமியர்கள் பங்கேற்று தேநீர் வழங்கி அன்னதான நிகழ்வில் உணவு பரிமாறிய நிகழ்வு மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் பல இடங்களில் மதநல்லிணக்கநிகழ்ச்சிகள் நடந்து வருகின்றனர். இந்து திருவிழாவுக்கு இஸ்லாமியர்கள் பேனர் அடிப்பது, இந்து கோவில் நிர்வாக கமிட்டியில் இஸ்லாமியர்கள் பொறுப்பில் இருப்பது உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றனர். மேலும் முக்கிய பண்டிகைகளின் போது மதங்களை கடந்து அனைவரும் இணைந்து உணவு பகிர்ந்து உண்ணும் சம்பவங்கள் தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதிகளிலும் இன்றுவரை நடந்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் அண்டக்குளத்தில் ஐயப்பன் பக்தர்கள் சார்பில் பொது பஜனை நடைபெற்றது. இதில் அண்டக்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 2000கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் அதனை தொடர்ந்து அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த அண்ணதான நிகழ்ச்சியில் இஸ்லாமியர்கள் பங்கேற்று தேநீர் வழங்கியும் உணவு பரிமாறிய நிகழ்ச்சி மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கியது. அதனை தொடர்ந்து தேநீர் வழங்கி உணவு பரிமாறிய இஸ்லாமிய சகோதரர்களை ஐயப்ப பக்தர்கள் தொழுகைக்கு பிறகு நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து தொப்புள் கொடி உறவின் அருமையை பறைசாற்றினார்கள்.1
- சாலையை கடந்து சென்ற யானைக் கூட்டம் – வாகன போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஜவளகிரி வனப்பகுதிக்கு உட்பட்ட சூளகுண்டா சாலையில், இன்று காலை நேரத்தில் சுமார் 30-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சாலையை கடந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. காலை வேளையில் பணிக்காக சென்ற வாகனங்களை யானைக் கூட்டம் வழிமறித்ததால், அப்பகுதியில் சிறிது நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை பாதுகாப்பாக சாலையோரம் நிறுத்தி, யானைகள் சாலையை கடந்து செல்ல தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர். வனத்துறையினரின் கண்காணிப்பில் யானைக் கூட்டம் எந்தவித அசம்பாவிதமும் இன்றி சாலையை கடந்து மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதையடுத்து வாகன போக்குவரத்து வழக்க நிலைக்கு திரும்பியது. இந்த அபூர்வ நிகழ்வை நேரில் கண்ட பொதுமக்கள், தங்களது செல்போன்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து மகிழ்ந்தனர். யானைகள் பாதுகாப்பாக சென்றதை பார்த்து மக்கள் நிம்மதி அடைந்தனர். தேவைப்பட்டால்1