மரம் தங்க சாமி நினைவு நாளில் பத்தாயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டது *மரம் தங்கசாமி நினைவு நாளில் காவேரி கூக்குரல் 1 லட்சத்து 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு* மர ஆர்வலரான தங்கசாமி ஐயாவின் நினைவு நாளை முன்னிட்டு காவேரி கூக்குரல் மூலம் தமிழகம் முழுவதும் 1,10,000 க்கும் மேற்பட்ட டிம்பர் மரக்கன்றுகள் நடப்பட்டன. மரம் தங்கசாமி அவர்களின் நினைவு நாளான செப்டம்பர் 16 அன்று மரங்கள் நடுவதை விவசாயிகள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் டிம்பர் மரங்கள் சாகுபடி செய்வதில் விவசாயிகளுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் மரம் தங்கசாமி ஐயா, தனது வாழ்நாள் முழுவதும் டிம்பர் மர சாகுபடியை பிரபலப்படுத்தியவர். மரம் சார்ந்த விவசாயம் காலத்தின் கட்டாயம் என விவசாயிகளுக்கு எடுத்துக்கூறி எண்ணற்ற விவசாயிகளை மரம் சார்ந்த விவசாயத்திற்கு மாற்றியவர். ஈஷாவின் ஆரம்பகால இயக்கமான பசுமைக் கரங்கள் திட்டத்துடன் இணைந்து பலகாலமாக செயல்புரிந்தவர். அவரது நினைவு நாளை சிறப்பிக்கும் வகையில் காவேரி கூக்குரல் மூலமாக தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் உள்ள 111 விவசாய நிலங்களில், 497 ஏக்கர் நிலப்பரப்பில் மொத்தம் 1,10, 906 டிம்பர் மரக்கன்றுகள் நடப்பட்டன. ஈஷாவின் தொடர் முயற்சிகளின் மூலம் தோராயமாக 13.3 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளன. மேலும், தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் அரச மரங்களை நடும் நோக்கில், பேரூர் மற்றும் தருமை ஆதீனங்களுடன் இணைந்து அரச மரக்கன்றுகள் நடும் பணியையும் காவேரி கூக்குரல் செயல்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு தமிழ்நாட்டில் மட்டும் 1.20 கோடி மரங்கள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 39,37,000 மரங்கள் நடப்பட்டுள்ளன. *மரம் சார்ந்த விவசாயத்தை ஊக்குவிக்கும் காவேரி கூக்குரல்* மரம் சார்ந்த விவசாயம் செய்யவிரும்பும் விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை காவேரி கூக்குரல் செய்து வருகிறது. தேக்கு, மலைவேம்பு, கருமருது, வேங்கை, மஞ்சள் கடம்பு, சந்தனம், செஞ்சந்தனம், குமிழ், மகாகனி போன்ற டிம்பர் மரங்களை விவசாயிகளுக்கு மலிவு விலையில் வழங்கி மர விவசாயம் செய்ய ஊக்குவிக்கிறது. இந்த டிம்பர் மரங்களை விவசாய நிலங்களில் நட்டு வளர்ப்பதன் மூலம் விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும். மேலும், மரங்களை வெட்டாமலே வருமானம் தரக்கூடிய வழிமுறைகளையும் காவேரி கூக்குரல் விவசாயிகளுக்கு பயிற்றுவிக்கிறது. டிம்பர் மரங்கள் 3 முதல் 5 வருடங்கள் வளர்ந்தபின், சமவெளிப் பகுதிகளில் காய்க்கக்கூடிய கரிமுண்டா மற்றும் பன்னியூர் மிளகு ரகங்களை ஊடுபயிராக மரங்களின் மீது வளர்ப்பதன் மூலம் தொடர் வருமானம் பெறமுடியும். ஈஷா மூலம் பயிற்சி பெற்ற எண்ணற்ற விவசாயிகள் தற்போது மிளகு மூலம் வருமானம் பெறுகின்றனர். மேலும் விவசாயிகளுக்கு ஊடுபயிர் சாகுபடி, உணவுக்காடு வளர்ப்பு, பழங்கள் மதிப்புக்கூட்டுதல், ஜாதிக்காய் மற்றும் நறுமணப்பயிர் சாகுபடி குறித்த பல்வேறு பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. இதன் மூலம் விவசாயிகள் வருமானத்தை அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகளை பெறுகிறார்கள். தமிழகம் முழுவதும் உள்ள ஈஷா நாற்றுப்பண்ணைகளில் விவசாயிகளுக்கு 5 ரூபாய்க்கு டிம்பர் மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன. மரக்கன்றுகளைப் பெறவும், மண்ணுக்கேற்ற மரங்கள் குறித்த ஆலோசனைகள் பெறவும், காவேரி கூக்குரல் மூலம் நடத்தப்படும் பயிற்சிகளில் பங்கேற்கவும் 80009 80009 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

- கும்பாபிஷேக விழாவில் முளைப்பாரி எடுத்து கும்மி அடித்து கொண்டாடிய பெண்கள். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே முள்ளால் கிராமத்தில் உள்ள சிவன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்தும்,கும்மி அடித்தும் விழாவில் கலந்து கொண்டனர்.1
- தனியார் பேருந்து ஓட்டுநரை தாக்கிய எஸ்.ஐ சிவசக்தி மீது புகார்.நடவடிக்கை எடுக்காவிட்டால் தனியார் பேருந்துகள் இயக்கப்படாது சங்கத்தின் தலைவர் எச்சரிக்கை ஆத்தூர்: சேலம் மாவட்டம் ஆத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து ஓட்டுநரை காவல் உதவி ஆய்வாளர் தாக்கியதாகக் கூறி, தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் சங்கத்தினர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். ஆத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று இரவு சுமார் 7.30 மணியளவில், பெரம்பலூர் செல்லும் தனியார் பேருந்தை வீரகனூர் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் அரவிந்தன் மற்றும் நடத்துனர் சதீஷ் ஆகியோர் இயக்கிக் கொண்டிருந்தனர். அப்போது ஏ.டி.சி. அதிகாரி வெங்கடேஷ், அந்த தனியார் பேருந்தை வழிமறித்ததாகவும், அரசு பேருந்து சென்ற பின்னரே தனியார் பேருந்தை இயக்க வேண்டும் என கூறி ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்று ஓட்டுனர் தெரிவித்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆத்தூர் நகர சப்-இன்ஸ்பெக்டர் சிவசக்தி வந்து உள்ளார், அப்போது ஓட்டுநர் அரவிந்தனை சரமாரியாக தாக்கி உள்ளார் என்று தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துனர் சங்கத்தினர் குற்றம்சாட்டினர்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த தனியார் பேருந்து ஓட்டுநர்கள், பேருந்துகள் வெளியே செல்லும் வழித்தடத்தை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சப்-இன்ஸ்பெக்டர் சிவசக்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து தனியார் பேருந்து ஓட்டுநர் சங்கத் தலைவர் கலைச்செல்வன் கூறுகையில், “எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தாமல் திடீரென ஓட்டுநரை தாக்கி உள்ளார் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இன்று மாவட்ட எஸ் பி ககு புகார் அளிக்க உள்ளார் என்று தெரிவித்தனர். மேலும் சங்க நிர்வாகிகள் கூறுகையில், “எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தாமல் திடீரென தாக்கியதால் மனவேதனை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் தனியார் பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் ஆத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு1
- ஆத்தூரில் பார்வையாளர்களைக் கவர்ந்த மாணவிகளின் பரதநாட்டியம்! ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட, அருள்மிகு வெள்ளப் பிள்ளையார் திருக்கோவிலில் நேற்று (செப் 14) விநாயகர் சதுர்த்தி விழாவினை ஒட்டி, கோயில் நிர்வாகம் சார்பில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில் சிவ கால கேஸ்தரா பரதநாட்டிய பள்ளி மாணவிகளின் ஆடிய பரத நடனம் பார்ப்போரைக் கவர்ந்தது. சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் நின்றவாறு, நடனத்தைக் கண்டு களித்து மாணவிகளை கைத்தட்டி உற்சாகப்படுத்தினர். இதனால் கோவில் சன்னதியில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.1
- முசிறியில் கிளை நூலகத்தில் இளைஞர்கள் திறன் மேம்பாட்டு பயலரகம். முசிறியில் கிளை நூலகத்தில் இளைஞர்கள் திறன் மேம்பாட்டு பயலரங்கம், திருச்சி மாவட்டம் முசிறி கிளை நூலகத்தில் வாசகர் வட்டம் மற்றும் களம் இலக்கிய அமைப்பு இணைந்து நடத்திய இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிலரங்கம் நடைபெற்றது. பயிலரங்கத்திற்கு ரமேஷ் பாபு தலைமை தாங்கினார் பாலசுப்பிரமணியன் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மென் திறன் பயிற்றுனர் ஆர்த்தி சிகரம் தொடுகின்ற தலைப்பில் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். முன்னதாக வாசகர் வட்ட தலைவி சித்ரா அனைவரையும் வரவேற்றார். நிகழ்வில் பாலசுப்பிரமணியன்,பாலசேகர் மற்றும் கிளை நூலக வாசர் வட்டத்தைச் சேர்ந்த வர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவில் சுப்பிரமணியன் அனைவருக்கும் நன்றி கூறினார்.1
- தரமான தார் சாலை அமைத்து தர பழனியப்பா நகர் நல சங்க நிர்வாகிகள் கோரிக்கை புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட பழனியப்பா நகர் பகுதியில் கடந்த 20 வருட காலமாக சாலை வசதி இல்லை தற்போது மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தார் சாலை அமைக்கும் பணி நடந்து வந்த நிலையில் பழனியப்பா நகர் நல சங்க நிர்வாகிகள் தரமான தார்சாலை அமைத்து தர வேண்டும் என்றும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோரிக்கை வைத்தனர் ஆனால் மாநகராட்சி நிர்வாக அதிகாரிகள் செவி சாய்க்கவில்லை இதனால் தார்சாலை அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது விரைவில் தார் சாலை அமைத்து தர கோரிக்கை வைத்த பொதுமக்கள்1
- திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் சீலை பிள்ளையார்புத்தூர் சமூக மக்கள் கொண்டாடும் மதுக்கரை செல்லாயி விநாயகர் சதுர்த்தி விழா திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் சீலை பிள்ளையார் புத்தூரில் சமூக மக்கள் கொண்டாடும்... மதுக்கரை செல்லாயி - விநாயகர் சதுர்த்தி விழா பல ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை சீப்ளாபுத்தூர் கிராமத்தில் தூக்கு தேர் திருவிழா நடந்த போது... மதுக்கரை செல்லாயி தேர் - வன்னியர் தெரு வந்தது... பூஜை நிறைவு செய்த போது... பக்தர்களால் தேரை தூக்க முடியாமல் போனதால்... தேரை கலைத்து விட்டு.தனித்தனியாக. தூக்கி சென்றுள்ளனர்... அன்றிலிருந்து மதுக்கரை செல்லாயி வன்னியர் தெருவில் குடிகொண்டிருப்பதாக... மக்கள் நம்புகிறார்கள்... மேலும் தேர் நிற்கும் இடத்தில் தரையில் தினமும் பூஜை செய்து வழிபாடு செய்கின்றனர்...திருக்கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடினர் நிகழ்வில் பல்வேறு சமூக மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்1
- உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் 250 மரக்கன்றுகள் உலக ஓசோன் இனத்தை முன்னிட்டு புதுக்கோட்டை அருகே நான் தான் குடி அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட வன அலுவலர் கணேசலிங்கம் தலைமையில் 250 மரக்கன்றுகள் பள்ளி வளாகத்தில் நட்டு வைத்து உலக ஓசான் தின விழிப்புணர்வு அவர்களுக்கு ஏற்படுத்தினார்கள் நெகிழிப் பையை தவிர்க்க வேண்டும் மரம் வளர்க்க வேண்டும் மழை பெற வேண்டும் சுற்றுச்சூழல் பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட உறுதிமொழிகள் மாணவர்கள் வாசித்தனர்1
- முசிறி அருகே காட்டுப்புத்தூரில் சைக்கிளில் பைக் மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவர் பலி காட்டுப்புத்தூர் போலீஸ் விசாரணை கே குமார் செய்தியாளர் முசிறி முசிறி அருகே காட்டுப்புத்தூர் அருகே பைக் –சைக்கிள் மோதல் இருவர் உயிரிழப்பு திருச்சி மாவட்டம் முசிறி அருகே காட்டுப்புத்தூர் அருகே பைக் மற்றும் சைக்கிளும் நேருக்கு நேர் நேற்று இரவு மோதி கொண்டதில் இருவரும் உயிரிழந்தனர். காட்டுப்புத்தூர் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (50). விவசாய வேலை செய்து வந்தவர் நேற்று இரவு வளையப்பட்டிக்கு தனது பைக்கில் சென்றுவிட்டு, காட்டுப்புத்தூர் நோக்கி வந்துள்ளார், இதேபோல், குளத்துப்பாளையம் கிராமத்தை சேர்ந்த கணேசன் (52) கூலி வேலை செய்து வரும் இவர் காட்டுப்புத்தூர் சென்று விட்டு தனது சைக்கிளில் குளத்துப்பாளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக பைக்கும், சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது .விபத்தில் காயமடைந்த இருவரையும் அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு காட்டுப்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சேர்த்தனர் , அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்து காட்டுப்புத்தூர் போலீஸார் சம்பவயிடத்திற்க்கு விரைந்து சென்று, இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இந்த விபத்து குறித்து காட்டுப்புத்தூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.1
- காஞ்சிபுரம் : மானாம்பதி ஊராட்சியில் நியாயவிலை கடையில் மாவட்ட ஆட்சியர் சினேகா ஆய்வு.! காஞ்சிபுரம் மாவட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம் மானாம்பதி ஊராட்சியில் உள்ள நியாயவிலைக்கடையில் மாவட்ட ஆட்சித் தலைவர் சினேகா அவர்கள் நியாயவிலை கடையில் பொருட்கள் தரம் மற்றும் இருப்பு குறித்து ஆய்வு செய்தார். இந்த நிகழ்வில் மாவட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.1