Shuru
Apke Nagar Ki App…
ஒருநூறாம்வயல் அருகே யானை அட்டகாசம்! கன்னியாகுமரி மாவட்டம் ஒருநூறாம்வயல் அருகே புளிமூட்டுகாலை , வேப்பங்குழி பகுதி இன்று அதிகாலை (ஜன.7) யானை கூட்டம் திடீரென இறங்கி வாழை, கமுகு, தென்னை, நல்லமிளகு ஆகிய பயிர்களை நாசம் செய்துள்ளது. பயிர்கள் நாசமடைந்துள்ளதால் விவசாயிகள் வருத்தமடைந்தனர். மேலும் யானை வந்த பகுதிக்கு அருகில் பழங்குடி மக்கள் வசித்து வருவதால் மக்களுக்கு வனத்துறை அதிகாரிகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
Arukani Members South
ஒருநூறாம்வயல் அருகே யானை அட்டகாசம்! கன்னியாகுமரி மாவட்டம் ஒருநூறாம்வயல் அருகே புளிமூட்டுகாலை , வேப்பங்குழி பகுதி இன்று அதிகாலை (ஜன.7) யானை கூட்டம் திடீரென இறங்கி வாழை, கமுகு, தென்னை, நல்லமிளகு ஆகிய பயிர்களை நாசம் செய்துள்ளது. பயிர்கள் நாசமடைந்துள்ளதால் விவசாயிகள் வருத்தமடைந்தனர். மேலும் யானை வந்த பகுதிக்கு அருகில் பழங்குடி மக்கள் வசித்து வருவதால் மக்களுக்கு வனத்துறை அதிகாரிகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
More news from தமிழ்நாடு and nearby areas
- பத்மநாபபுரத்தில் நடைபெறும் மார்கழி பஜனை1
- திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசன்னா குமார் ஐஏஎஸ் அறிவுறுத்தலின்படி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் தலைகவசம் விழிப்புணர்வு சேரன் மகாதேவியில் இன்று நடைபெறது. சேரை காவல் துணை கண்காணிப்பாளர் அஸ்வத் அன்டோ ஆரோக்யராஜ் தலைமையில் பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்வில் சேரன்மகாதேவி காவல் ஆய்வாளர் தர்மராஜ் பத்தமடை காவல் ஆய்வாளர் ஜோதிலட்சுமி, மற்றும் நெய்னா முகமது ஸ்காட் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்1
- தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட வடகரை பேரூராட்சி பகுதியில் அண்ணா நகரைச் சார்ந்த திருமலைச்சாமி என்பவர் உடைய ஆட்டு கிடையில் நேற்று மாலை 7 மணி அளவில் வனவிலங்கு புகுந்து மர்மமான முறையில் 30 ஆடுகளை சேதப்படுத்தி கொன்று உள்ளது பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக வலியுறுத்துகின்றோம் இனிமேல் இது போன்ற அசம்பாவிதம் நடைபெறாமல் இருப்பதற்கு வனத்துறை வீரியமாக செயல்பட வேண்டும் விவசாயிகளையும் விவசாய நிலங்களையும் கால்நடைகளையும் பாதுகாத்திட வேண்டும் என்று வனத்துறையை எஸ்டிபிஐ கட்சி வடகரை நகரத் தலைவர் முஹம்மது இஸ்மாயில் கேட்டுக் கொண்டுள்ளார்1
- தூத்துக்குடி வேதாந்த ஸ்டெர்லைட் தொழிற்சாலை குழுமம் தலைவர் அணில் அகர்வார் மகன் அக்னி வேஷ் அகர்வால் அமெரிக்காவில் உயிர் இழப்பு பணிச்சறுக்கு விளையாட்டில் படுகாயம் அடைந்து நியூ யார்க் மவுண்ட் சினாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீர் மாரடைப்பு1
- "ஆண்டிபட்டியார் இராஜஹரிகாந்த் மக்கள் முன்னேற்ற இயக்க"த்தின் நிறுவனர்/ தலைவர் இராஜஹரிகாந்த், ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க தாமதப்படுத்தியதை கண்டித்து பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்பார்கள் அதுபோல ஜனநாயகன் படத்திற்கு ஏற்பட்டிருக்க கூடிய அநீதி வன்மையாக கண்டிக்கத்தக்கது விஜய் என்ற ஒரு தனி நபர் மீது உள்ள அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அந்தப் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் தாமதப்படுத்துவது வந்து மிகப்பெரிய அநீதி கமலஹாசன் அவர்களும் நான் ஏற்றுக்கொண்ட எனது தலைவர் ஐயா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் இதுவரை இந்த தணிக்கை சான்றிதழ் விஷயமாகவோ ஜனநாயகம் படத்திற்கு ஏற்பட்டுள்ள தடை காரணமாக பேசாமல் மௌனமாக இருப்பது மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது என அவர் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.1
- தேனி வாசவி மஹாலில் வாசவி கிளப், வாசவீ கிளப் வனிதா பதவியேற்பு விழா நடந்தது தேனி பெரியகுளம் சாலையில் உள்ள வாசவி மஹாலில் தேனியில் செயல்பட்டு வரும் வாசவி கிளப் மற்றும் வாசவி கிளப் வனிதா புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு தலைவர்கள் சரவணன், ஷர்மிளா தலைமை வகிக்க, செயலாளர் பால நடராஜன், பொருளாளர்கள் ஹிந்ரஜீத் மற்றும் வைஷ்ணவி உள்ளிட்டோர் முன்னிலை வகிக்க, சிறப்பு அழைப்பாளராக இன்டர்நேஷனல் மல்டிபிள் துணை தலைவர் லால்பகதூர் சாஸ்திரி, கேபினட் செயலாளர் லட்சுமி பாலகிருஷ்ணன், கேபினட் பொருளாளர் ஸ்ரீபிரியா சத்யநாராயணன், மாவட்டத் துணை ஆளுநர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பிக்க மாவட்ட ஆளுநர் ஸ்ரீமதிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதன் அடிப்படையில் வாசவி கிளப் புதிய தலைவராக சீனிவாசன் செயலாளராக மணிகண்டன் பொருளாளராக வாசகன் உள்ளிட்டோரும் வாசவி கிளப் வனிதா தலைவராக தன்யா பார்வதி செயலாளராக சௌமியா பொருளாளராக சப்னா உள்ளிட்டோர் புதிய நிர்வாகிகளாக பதவியேற்று கொண்டனர் இதனை தொடர்ந்து தேவாரம் இமேஜ் ஹோமிற்க்கு போர்வைகள், ஏழை எளிய மற்றும் ஊனமுற்றவர்களுக்கு 5 கிலோ அரிசி பைகள் வழங்கப்பட்டது முன்னதாக வடபுதுபட்டியில் செயல்பட்டு வரும் அன்பு இல்லத்தில் உள்ளவர்களுக்கு காலை உணவும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் தேனி அல்லிநகரம் ஆரிய வைசிய மகாசபை தலைவர் ராமச்சந்திரன் மற்றும் அபெக்ஸ் நண்பர்கள் என ஏராளமான வாழ்த்துரை வழங்கினர். புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் முன்னாள் தலைவர் சரவணன் வரவேற்புரை ஆற்றினார் இந்த நிகழ்வில் IPC அலுவலர்களாக சேகர் ராம்குமார் ராஜா மாவட்ட உதவி செய்தி தொடர்பாளர் சுவாதி ஸ்ரீ சரவணகுமார் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீவித்யா பாலாஜி மண்டல தலைவர் நாகராஜன் வட்டாரத் தலைவர்கள் சரவணன், நாகலாவன்யா மண்டல செயலாளர் வெங்கட்ராமன் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் அவர்களது குடும்பத்தினர் பயனாளிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக வாசவி கிளப் வனிதா முன்னாள் தலைவர் சர்மிளா அனைவருக்கும் நன்றி கூறினார்1
- மகனை படுகொலை செய்த வழக்கில் தந்தைக்கு ஆயுள் தண்டனையும் தாய்க்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து தேனி நீதிமன்றம் தீர்ப்பு. தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள செங்கல்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அபிமன்னன் மனைவி ராஜா மணி தம்பதியருக்கு அஜித்குமார் (வயது 27) என்ற மகன் இருந்து வந்துள்ளார். அஜித் குமார் எந்த வேலைக்கும் போகாத நிலையில் நாள்தோறும் வீட்டிற்கு வந்து தாய் தந்தையுடன் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும், தந்தை இல்லாத நேரத்தில் தாயிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த தாய், தந்தை இருவரும் சேர்ந்து மகன் அஜித்குமாரை கயிற்றால் கழுத்தை இருக்கியதோடு அறிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளனர். இக்கொலை சம்பவம் தொடர்பாக வீரபாண்டி காவல் நிலையத்தில் தாய், தந்தை இருவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணை தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று வழக்கு விசாரணை முடிவு பெற்று மகனை கொலை செய்த குற்றத்திற்காக தாய், தந்தை இருவருக்கும் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் முதல் குற்றவாளியான தந்தை அபிமன்னனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 5000 ரூபாய் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் மூன்று மாத கால சிறை தண்டனையும், இரண்டாவது குற்றவாளியான தாய் ராஜாமணிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்ததோடு பத்தாயிரம் ரூபாய் அபராதம், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 மாத கால சிறை தண்டனையும் விதித்ததோடு, தண்டனையை ஏக காலத்திற்கு அனுபவிக்க வேண்டும் என மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சொர்ணம் ஜே. நடராஜன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.1
- சுசீந்திரம் எட்டாம் கொடையை முன்னிட்டு நடைபெற்ற வில்லுப்பாட்டு1