தமிழக வெற்றிக்கழக அரசின் பெரும் டெண்டர் முறைகேடு : அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு தாம்பரம் மாநகராட்சியில் (TCMC) டெண்டர் சட்ட விதியை அப்பட்டமாக மீறி, டெண்டர் கோரப்படும் முன்பே கூட்டுசதி செய்து பணிகளை முடித்து திறப்பு விழா செய்துள்ள மிகப்பெரிய முறைகேட்டை அறப்போர் இயக்கம் தகுந்த ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவோம் என உறுதியளித்து வந்த புதிய TVK அரசின் கீழ், இது போன்ற டெண்டர் முறைகேடுகள் நடைபெறுவது அதிர்ச்சியளிக்கிறது. இந்த முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர், தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாக இயக்குநர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) இயக்குநர் ஆகியோருக்கு அறப்போர் இயக்கம் விரிவான புகார் மனுவை ஆதாரங்களுடன் இன்று அனுப்பியுள்ளது. *முறைகேட்டின் பின்னணி மற்றும் ஆதாரங்கள்:* முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு (Contractors) சட்டவிரோதமாக டெண்டர்களை வழங்குவதற்காக, சுமார் ரூ. 45,90,000 மதிப்பிலான இரண்டு பணிகள் டெண்டர் வழங்கும் செயல்முறை முடிவடைவதற்கு முன்பாகவே பணிகள் முடிக்கப்பட்டு தாம்பரம் மாநகராட்சி ஆணையர் திரு. S. பாலச்சந்திரன் IAS மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. D. சரத்குமார் ஆகியோர் இந்த பணிகளைத் திறந்து வைத்து திறப்பு விழா நடத்தியுள்ளனர். இந்த சட்டவிரோத ஒதுக்கீட்டை முறைப்படுத்தவும், பணிகளை முன்கூட்டியே முடித்த ஒப்பந்ததாரருக்கு பணப்பட்டுவாடா செய்யவும் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் திரு. S. பாலச்சந்தர் IAS கண்துடைப்பிற்காக போலி டெண்டர்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். *ஒப்பந்தம் 1 - பெருங்களத்தூர் பாலம் ரவுண்டானா பணி (டெண்டர் எண்: 2026_DMA_691566_2):* இங்கு அசோகத் தூண் அமைத்தல் மற்றும் அழகுபடுத்தும் பணிகளுக்காக ரூ. 27,30,000 மதிப்பிலான டெண்டர் இணையதளத்தில் (TN Tenders portal) ஆகஸ்ட் 6, 2026 அன்று தான் வெளியிடப்பட்டது, இந்த டெண்டர் திறக்கப்பட வேண்டிய தேதி ஆகஸ்ட் 24, 2026 ஆகும். ஆனால், டெண்டர் அறிவிப்பு வெளியாவதற்கு 8 நாட்களுக்கு முன்பாகவே, அதாவது ஜூலை 29, 2026 அன்றே இப்பணி முடிக்கப்பட்டு அமைச்சர் மற்றும் அதிகாரிகளால் திறப்பு விழா செய்யப்பட்டுள்ளது. இதற்கான புகைப்படங்கள் அமைச்சர் மற்றும் தாம்பரம் மாநகராட்சியின் சமூக வலைதளப் பக்கங்களில் அதே நாளில் பதிவேற்றப்பட்டுள்ளன. *ஒப்பந்தம் 2 - சிட்லபாக்கம் ரவுண்டானா பணி (டெண்டர் எண்: 2026_DMA_691566_1):* தண்ணீர் சேமிப்பு விழிப்புணர்வு சிலை அமைத்தல் மற்றும் அழகுபடுத்தும் பணிகளுக்காக ரூ. 18,60,000 மதிப்பிலான டெண்டரும் ஆகஸ்ட் 6, 2026 அன்று தான் வெளியிடப்பட்டது. இதன் டெண்டர் திறப்பு தேதியும் ஆகஸ்ட் 24, 2026 ஆகும். ஆனால், ஆகஸ்ட் 10, 2026 அன்றே இந்த சிலை திறக்கப்பட்டு, அதற்கான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் அதே நாளில் பகிரப்பட்டுள்ளன. டெண்டர் திறக்கப்படுவதற்கு 14 நாட்களுக்கு முன்பாகவே பணி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது இது அதிகாரிகளுக்கும் ஒப்பந்ததாரருக்கும் இடையேயான சட்டவிரோத கூட்டணியை உறுதி செய்கிறது. *அதிகாரிகளின் திட்டமிட்ட இருட்டடிப்பு:* இந்த இரண்டு டெண்டர்களுக்கான நிதி ஏலங்கள் (Financial bids) ஆகஸ்ட் 24, 2026 அன்று திறக்கப்பட வேண்டிய நிலையில், இன்று வரை இணையதளத்தில் அவை "To_be_opened" என்ற நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளன. பங்கேற்ற ஒப்பந்ததாரர்கள் மற்றும் வெற்றி பெற்றவர் (L1 Bidder) யார் என்ற விவரங்களை மக்களிடம் இருந்து மறைக்கவே அதிகாரிகள் இவ்வாறு செய்துள்ளனர். மேலும், கடந்த 4 மாதங்களில் தாம்பரம் மாநகராட்சி வெளியிட்ட 565 டெண்டர்களில் 309 டெண்டர்கள் (சுமார் 54.69%) இதே போல இணையதளத்தில் திறக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஒரே ஒரு டெண்டர் மட்டுமே இறுதி நிலையை (AOC) அடைந்துள்ளது. இது தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் வெளிப்படைத்தன்மையின்றி, முறையான டெண்டர் நடைமுறைகளை திட்டமிட்டு புறக்கணிப்பதை காட்டுகிறது. *அறப்போர் இயக்கத்தின் கோரிக்கைகள்:* இது அதிகார துஷ்பிரயோகம், நம்பிக்கை துரோகம் மற்றும் டெண்டர் சட்டங்களை அப்பட்டமாக மீறும் குற்றச் செயலாகும். எனவே, அரசு உடனடியாக பின்வரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறப்போர் இயக்கம் வலியுறுத்துகிறது. 1. உடனடி பணியிடை நீக்கம் (Suspension): ஒப்பந்தப்புள்ளி கோரும் அலுவலரான தாம்பரம் மாநகராட்சி ஆணையர் S. பாலச்சந்தர் IAS மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். 2. துறை சார்ந்த உயர்மட்ட விசாரணை: இந்த டெண்டர் முறைகேடு குறித்து விரிவான உயர்மட்ட துறை சார்ந்த விசாரணை நடத்தி, குற்றவாளி என உறுதி செய்யப்படும் பட்சத்தில் ஆணையர் உட்பட அனைவரையும் பணிநீக்கம் (Dismissal) செய்ய வேண்டும். 3. DVAC கிரிமினல் வழக்கு: முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட இந்த போலி டெண்டர்கள் மூலம் ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகளுக்கு இடையே கூட்டுசதி , அரசுக்கு பண இழப்பு மற்றும் பண பரிமாற்றம் இருந்தததா என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) உடனடியாகக் கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். 4. பணப்பட்டுவாடா தடை (Stop Bill Payment): விதிமுறைகளை மீறி முடிக்கப்பட்ட இந்த இரண்டு பணிகளுக்கும் ஒப்பந்ததாரர்களுக்கு நிதி பட்டுவாடா செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும். 5. கருப்புப் பட்டியலில் சேர்த்தல் (Blacklisting): சட்டவிரோத டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்களைக் கருப்புப் பட்டியலில் சேர்த்து, அவர்கள் தமிழக அரசின் பிற டெண்டர்களில் பங்கேற்கத் தடை விதிக்க வேண்டும். டெண்டர் 6. வெளிப்படைத்தன்மை: இணையதளத்தில் ஒப்பந்தம் வழங்கப்படும் வரையிலான (AOC) அனைத்து நிலைகளையும் பொதுமக்களின் பார்வைக்கு வெளிப்படையாக உடனடியாகப் பதிவேற்ற வேண்டும். இத்தகைய ஒப்பந்த முறைகேடுகள் மீது தமிழக அரசு எவ்விதத் தயக்கமுமின்றி உடனடியாகவும் கடுமையாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
தமிழக வெற்றிக்கழக அரசின் பெரும் டெண்டர் முறைகேடு : அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு தாம்பரம் மாநகராட்சியில் (TCMC) டெண்டர் சட்ட விதியை அப்பட்டமாக மீறி, டெண்டர் கோரப்படும் முன்பே கூட்டுசதி செய்து பணிகளை முடித்து திறப்பு விழா செய்துள்ள மிகப்பெரிய முறைகேட்டை அறப்போர் இயக்கம் தகுந்த ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவோம் என உறுதியளித்து வந்த புதிய TVK அரசின் கீழ், இது போன்ற டெண்டர் முறைகேடுகள் நடைபெறுவது அதிர்ச்சியளிக்கிறது. இந்த முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர், தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாக இயக்குநர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) இயக்குநர் ஆகியோருக்கு அறப்போர் இயக்கம் விரிவான புகார் மனுவை ஆதாரங்களுடன் இன்று அனுப்பியுள்ளது. *முறைகேட்டின் பின்னணி மற்றும் ஆதாரங்கள்:* முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு (Contractors) சட்டவிரோதமாக டெண்டர்களை வழங்குவதற்காக, சுமார் ரூ. 45,90,000 மதிப்பிலான இரண்டு பணிகள் டெண்டர் வழங்கும் செயல்முறை முடிவடைவதற்கு முன்பாகவே பணிகள் முடிக்கப்பட்டு தாம்பரம் மாநகராட்சி ஆணையர் திரு. S. பாலச்சந்திரன் IAS மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. D. சரத்குமார் ஆகியோர் இந்த பணிகளைத் திறந்து வைத்து திறப்பு விழா நடத்தியுள்ளனர். இந்த சட்டவிரோத ஒதுக்கீட்டை முறைப்படுத்தவும், பணிகளை முன்கூட்டியே முடித்த ஒப்பந்ததாரருக்கு பணப்பட்டுவாடா செய்யவும் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் திரு. S. பாலச்சந்தர் IAS கண்துடைப்பிற்காக போலி டெண்டர்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். *ஒப்பந்தம் 1 - பெருங்களத்தூர் பாலம் ரவுண்டானா பணி (டெண்டர் எண்: 2026_DMA_691566_2):* இங்கு அசோகத் தூண் அமைத்தல் மற்றும் அழகுபடுத்தும் பணிகளுக்காக ரூ. 27,30,000 மதிப்பிலான டெண்டர் இணையதளத்தில் (TN Tenders portal) ஆகஸ்ட் 6, 2026 அன்று தான் வெளியிடப்பட்டது, இந்த
டெண்டர் திறக்கப்பட வேண்டிய தேதி ஆகஸ்ட் 24, 2026 ஆகும். ஆனால், டெண்டர் அறிவிப்பு வெளியாவதற்கு 8 நாட்களுக்கு முன்பாகவே, அதாவது ஜூலை 29, 2026 அன்றே இப்பணி முடிக்கப்பட்டு அமைச்சர் மற்றும் அதிகாரிகளால் திறப்பு விழா செய்யப்பட்டுள்ளது. இதற்கான புகைப்படங்கள் அமைச்சர் மற்றும் தாம்பரம் மாநகராட்சியின் சமூக வலைதளப் பக்கங்களில் அதே நாளில் பதிவேற்றப்பட்டுள்ளன. *ஒப்பந்தம் 2 - சிட்லபாக்கம் ரவுண்டானா பணி (டெண்டர் எண்: 2026_DMA_691566_1):* தண்ணீர் சேமிப்பு விழிப்புணர்வு சிலை அமைத்தல் மற்றும் அழகுபடுத்தும் பணிகளுக்காக ரூ. 18,60,000 மதிப்பிலான டெண்டரும் ஆகஸ்ட் 6, 2026 அன்று தான் வெளியிடப்பட்டது. இதன் டெண்டர் திறப்பு தேதியும் ஆகஸ்ட் 24, 2026 ஆகும். ஆனால், ஆகஸ்ட் 10, 2026 அன்றே இந்த சிலை திறக்கப்பட்டு, அதற்கான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் அதே நாளில் பகிரப்பட்டுள்ளன. டெண்டர் திறக்கப்படுவதற்கு 14 நாட்களுக்கு முன்பாகவே பணி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது இது அதிகாரிகளுக்கும் ஒப்பந்ததாரருக்கும் இடையேயான சட்டவிரோத கூட்டணியை உறுதி செய்கிறது. *அதிகாரிகளின் திட்டமிட்ட இருட்டடிப்பு:* இந்த இரண்டு டெண்டர்களுக்கான நிதி ஏலங்கள் (Financial bids) ஆகஸ்ட் 24, 2026 அன்று திறக்கப்பட வேண்டிய நிலையில், இன்று வரை இணையதளத்தில் அவை "To_be_opened" என்ற நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளன. பங்கேற்ற ஒப்பந்ததாரர்கள் மற்றும் வெற்றி பெற்றவர் (L1 Bidder) யார் என்ற விவரங்களை மக்களிடம் இருந்து மறைக்கவே அதிகாரிகள் இவ்வாறு செய்துள்ளனர். மேலும், கடந்த 4 மாதங்களில் தாம்பரம் மாநகராட்சி வெளியிட்ட 565 டெண்டர்களில் 309 டெண்டர்கள் (சுமார் 54.69%) இதே போல இணையதளத்தில் திறக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஒரே ஒரு டெண்டர் மட்டுமே இறுதி நிலையை (AOC) அடைந்துள்ளது. இது தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் வெளிப்படைத்தன்மையின்றி, முறையான டெண்டர் நடைமுறைகளை திட்டமிட்டு புறக்கணிப்பதை காட்டுகிறது. *அறப்போர் இயக்கத்தின்
கோரிக்கைகள்:* இது அதிகார துஷ்பிரயோகம், நம்பிக்கை துரோகம் மற்றும் டெண்டர் சட்டங்களை அப்பட்டமாக மீறும் குற்றச் செயலாகும். எனவே, அரசு உடனடியாக பின்வரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறப்போர் இயக்கம் வலியுறுத்துகிறது. 1. உடனடி பணியிடை நீக்கம் (Suspension): ஒப்பந்தப்புள்ளி கோரும் அலுவலரான தாம்பரம் மாநகராட்சி ஆணையர் S. பாலச்சந்தர் IAS மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். 2. துறை சார்ந்த உயர்மட்ட விசாரணை: இந்த டெண்டர் முறைகேடு குறித்து விரிவான உயர்மட்ட துறை சார்ந்த விசாரணை நடத்தி, குற்றவாளி என உறுதி செய்யப்படும் பட்சத்தில் ஆணையர் உட்பட அனைவரையும் பணிநீக்கம் (Dismissal) செய்ய வேண்டும். 3. DVAC கிரிமினல் வழக்கு: முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட இந்த போலி டெண்டர்கள் மூலம் ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகளுக்கு இடையே கூட்டுசதி , அரசுக்கு பண இழப்பு மற்றும் பண பரிமாற்றம் இருந்தததா என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) உடனடியாகக் கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். 4. பணப்பட்டுவாடா தடை (Stop Bill Payment): விதிமுறைகளை மீறி முடிக்கப்பட்ட இந்த இரண்டு பணிகளுக்கும் ஒப்பந்ததாரர்களுக்கு நிதி பட்டுவாடா செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும். 5. கருப்புப் பட்டியலில் சேர்த்தல் (Blacklisting): சட்டவிரோத டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்களைக் கருப்புப் பட்டியலில் சேர்த்து, அவர்கள் தமிழக அரசின் பிற டெண்டர்களில் பங்கேற்கத் தடை விதிக்க வேண்டும். டெண்டர் 6. வெளிப்படைத்தன்மை: இணையதளத்தில் ஒப்பந்தம் வழங்கப்படும் வரையிலான (AOC) அனைத்து நிலைகளையும் பொதுமக்களின் பார்வைக்கு வெளிப்படையாக உடனடியாகப் பதிவேற்ற வேண்டும். இத்தகைய ஒப்பந்த முறைகேடுகள் மீது தமிழக அரசு எவ்விதத் தயக்கமுமின்றி உடனடியாகவும் கடுமையாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
- தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியில் குடிநீர் வேண்டி பெண்கள் சாலை மறியல் முயற்சி காவல் நிலையத்தில் பேரூராட்சி அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம் தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட சாத்தா கோவில்பட்டி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாகச் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்துப் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதிப் பெண்களும் பொதுமக்களும், தேவதானப்பட்டி காவல் நிலையம் அருகே திரண்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், மறியலில் ஈடுபட முயன்றவர்களைத் தடுத்து நிறுத்தி காவல் நிலையத்திற்குள் அழைத்துச் சென்றனர். தொடர்ந்து காவல் நிலையத்திற்குள் குவிந்த பொதுமக்கள், தங்களின் கோரிக்கையைக் கண்டுகொள்ளாத பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து அதிகாரிகளுடன் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, பேரூராட்சி அலுவலர்களைக் காவல் நிலையத்திற்கு வரவழைத்துக் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சாத்தா கோவில்பட்டி பகுதிக்கு உடனடியாகக் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பேரூராட்சி அதிகாரிகள் உறுதியளித்தனர். அதிகாரிகளின் இந்த உறுதியை ஏற்றுப் பொதுமக்கள் மற்றும் பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.1
- என் ஊர் திருவிழா நாளைக்கு கும்பாபிஷேகம் விழா எல்லோரும் வாங்க1
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பெரிய பெருமாள் புரட்டாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம் செப்.20- ல் திருக்கல்யாணம், 23-ம் தேதி செப்பு தேரோட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உள்ள வட பத்திர சன்னதியில் பெரிய பெருமாள் அவதார திருவிழாவான புரட்டாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் செப்டம்பர் 20-ம் தேதி திருக்கல்யாணமும், 23-ம் தேதி செப்பு தேரோட்டமும் நடைபெறுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மூலவர் வடபத்ரசயனர் (பெரிய பெருமாள்) அவதார உற்சவமான புரட்டாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக ஶ்ரீதேவி பூதேவி சமேதராக பெரிய பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அதன்பின் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, காலை 11 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தினசரி காலை மண்டபங்களில் எழுந்தருளும் ஸ்ரீதேவி ஸ்ரீதேவி சமேத பெரிய பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனமும், மாலை வீதி உலாவும் நடைபெறுகிறது. பிரமோற்சவ விழாவில் செப்டம்பர் 19-ம் தேதி தங்க கருட சேவையும், 20-ம் தேதி மாலை 4 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத பெரியபெருமாள் திருக்கல்யாணமும், 21-ம் தேதி சயன சேவையும் நடைபெறுகிறது. பெரிய பெருமாள் அவதரித்த பெரிய திருவோண நட்சத்திரத்தில் செப்டம்பர் 23- ம் தேதி காலை 7 மணிக்கு செப்பு தேரோட்டம் நடைபெற உள்ளது.இதில் மாவட்ட ஆட்சியர் ஷரண்யா அறி, நகராட்சி ஆணையாளர் குமார்,வட்டாட்சியர் அறிவானந்தம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். கோயில் செயல் அலுவலர் சக்கரையம்மாள் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.1
- ஶ்ரீ வைத்தியநாத தண்டாயுதபாணி ஆலயத்தில், செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள ஶ்ரீ வைத்தியநாத தண்டாயுதபாணி ஆலயத்தில், செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூசை நடைபெற்றது. தண்டாயுதபாணிக்கு 16 வகை வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சந்தானம் மற்றும் மலர் அலங்கரித்து மகா தீபராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து வெற்றிலை விளக்கு ஏற்றி சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.1
- இந்து எழுச்சி முன்னணி 11ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் தேனியில் விமர்சியாக நடந்தது தேனியில் செயல்பட்டு வரும் இந்து எழுச்சி முன்னணி அமைப்பு சார்பில் 11ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது இந்த ஊர்வலத்திற்கு நிறுவனத் தலைவர் பொன் ரவி வழிகாட்டிட மாவட்ட தலைவர் ராமராஜ் தலைமை வகிக்க மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் முன்னிலையில் 11ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது இந்த ஊர்வலத்தில் செண்டா மேளம் முழங்க அரிசி கொம்பன் யானை முன் நின்று வழிநடத்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தலையில் முளைப்பாரி சுமந்தும், 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடங்கள் ஏந்தி ஊர்வலம் நடைபெற்றது போலீசாரால் அனுமதி வழங்கப்பட்டிருந்த அரண்மனை புதூர் முல்லை ஆற்றில் கரைக்க இந்த ஊர்வலமானது அல்லிநகரம் சாலை பிள்ளையார் கோவிலில் தொடங்கி பெரியகுளம் சாலை நேரு சிலை மதுரை சாலை வழியாக அரண்மனை புதூர் முல்லை ஆற்று பாலம் வந்தடைந்து அங்கு சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டு நகர் முழுவதும் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் திருமேனிகள் முல்லை ஆற்றில் கரைக்கப்பட்டது இந்த ஊர்வலத்திற்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அலெக்ஸாண்டர் ஜெரால்டு தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்1
- ஒட்டன்சத்திரம் 2 வது வார்டு பெரியாஞ் செட்டி பட்டியில் கண் திருஸ்டி கணபதியை இளைஞர் அணி சார்பாக வழிபாடு செய்தனர் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட 2 வது வார்டு, பெரியாஞ்செட்டிபட்டியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கண்திருஷ்டி கணபதியை சிறப்பு வழிபாடு செய்தனர். இக்கண்திருஸ்டி கணபதி இராஜகணபதியாய் சிம்மாசனத்தில் அமர்ந்து கம்பீரமாய் கண்திருஷ்டி களை நீக்குவதை தம் பணியாய் வைத்திருப்பது போல் சிலை அமைந்திருந்தது. இன்று கணபதிக்கு சிறப்புபூஜைகள் செய்து வழிபாடு செய்தனர். அதன் பின்னர் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நீண்ட வரிசையில் இருந்து கண்திருஷ்டி கணபதியை தரிசனம் செய்தனர் பக்தர்களுக்கு விழா கமிட்டியாரின் சார்பாக கொழுக்கட்டை, சுண்டல், தக்காளி சாதம், அவல் பிரசாதமாக வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை பி.கண்ணன் ,நா.மதன்குமார், ப.முருகானந்தம் ,விஷ்ணு,சரவணன்,தமிழரசன்,அருண்குமார்,பிரவீன்,ஆ.இ.ஹரிகிருஷ்ணன், ஆ.ஹரிகிருஸ்ணன் தலைமையிலான விழாக்கமிட்டியார்கள் சிறப்பாக செய்திருந்தனர்.2
- விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி நடைபெற்று வருவதை விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பார்வையிட்டார். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் விருதுநகர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில், தந்தை பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ஆம் தேதி முதல் சமூக நீதி மற்றும் 69% இட ஒதுக்கீட்டை பாதுகாக்கும் பிரச்சார இயக்கம் தொடங்கப்பட உள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளரும், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினருமான மாணிக்கம் தாகூர் தெரிவித்து உள்ளார். மேலும் ஜாதிவாரி கணக்கெடுப்பில் மோடி அரசு செய்துவரும் துரோகத்தை மக்களிடம் அம்பலப்படுத்தவும், அதன் விளைவாக 69% இடஒதுக்கீட்டுக்கு உருவாகியுள்ள ஆபத்தைத் தடுக்கவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஓபிசி பிரிவு சார்பில் செப்டம்பர் 17 அன்று மாலை 4 மணிக்குச் சென்னை சத்தியமூர்த்தி பவனில் பிரச்சார இயக்கம் தொடங்கப்படுகிறது. இந்த பிரச்சார இயக்கத்தை திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் இந்த இயக்கத்தைத் தொடங்கி வைக்கிறார். மேலும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் குலாம் அகமது மீர், செயலாளர் நவீன் தீத் ஆல்வா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர் மேலும் 2022-23-இல் நடைபெற்ற பாரத் ஜோடா நியாய யாத்திரையின் போதிருந்தே காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஜாதிவாரி கணக்கெடுப்பைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். பிற்படுத்தப்பட்ட (ஓபிசி) மற்றும் ஆதிதிராவிட சமூகங்களின் உண்மையான எண்ணிக்கையையும், அவர்களின் வாழ்வாதாரம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு நிலையை அறிந்துகொள்ளவும், இடஒதுக்கீடு கிடைக்காத சமூகங்களுக்குச் சமமான வாய்ப்பை அளிக்கவும் (Equal Distribution) நம்பகமான தரவுகள் அவசியமாகும். மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களில் ஜாதிவாரி தகவல்களை 'Open-ended' ஆகப் பதிவிடாமல், 'Drop-down Drop-box' முறையில் துல்லியமாகப் பதிவுசெய்ய வேண்டும் என்று ஆகஸ்ட் 12 அன்று ராகுல் காந்தி கடிதம் எழுதியும் மத்திய அரசு அதை நிராகரித்துள்ளது. மேலும் மத்திய பாஜக அரசின் ஏமாற்று வேலையை கண்டித்துத் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் சார்பில் கீழ்க்கண்டவாறு கூட்டங்கள் நடைபெற உள்ளன என்றார். மேலும் மழை காலத்திற்குப் பிறகு 2027 ஜனவரி மாதத்தில் ராகுல் காந்தியைத் தமிழகத்திற்கு அழைத்துவந்து, அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்துப் பிரம்மாண்ட சமூக நீதி மாநாடு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை அனைத்துக் கட்சிகளும் ஆதரித்த நிலையில், அன்றைய தினம் திமுக செய்த அமளி காரணமாக அவையில் இருந்து வெளியேற்றப்பட்டு அந்த தீர்மானத்தில் பங்கெடுக்க முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது என்றார். தமிழகத்தில் த.வெ.க தலைமையில் நேர்மையான, லஞ்சமற்ற ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சிக்கு ஆதரவளிக்கும் இடதுசாரி கட்சிகள், இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிட எடுத்த முடிவு ஆச்சரியமளித்தாலும், அதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். மேலும் சட்டமன்றத்தில் ஆதரவு தரும் இடதுசாரிகள் மக்கள் மன்றத்தில் ஆதரவு தருவதை யோசிப்பது என்பதும் இடைத்தேர்தலில் தனித்து நிற்பதும் என்னை போன்றவர் களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது மேலும் இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடுவதை இடதுசாரிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என விருப்பம் இருந்தாலும் அவற்றை அவர்கள் செய்ய மாட்டார்கள் என்றார் எனவும் அவர்களின் முடிவை கனத்த இதயத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார். மேலும் வரவிருக்கும் இடைத் தேர்தலில் த.வெ.க வேட்பாளரின் வெற்றிக்கு காங்கிரஸ் கட்சித் தோழர்கள் தீவிரமாக பணியாற்று வார்கள் என்றார் மேலும் அரசு பேருந்துகளில் தவெக கட்சி கொடியின் வண்ணம் அடிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதில் அளித்த மாணிக்கம் தாகூர் எம்பி அரசு பேருந்துகளில் வண்ணம் மாற்றப்பட்டு உள்ளதை பார்க்காமல் பேருந்தினுள் இருக்கக்கூடிய வசதிகளை பார்க்க வேண்டும் முந்தைய காலங்களில் குடை பிடித்து சென்ற காலம் இருக்கிறதும் அப்படியில்லாமல் பேருந்தின் வசதிகள் முன்னேற்றப்பட்டு இருக்கிறது என பார்க்க வேண்டும். என்றும் தெரிவித்தார்1
- மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் மறைந்த முன்னாள் முதல்வரும் பேரறிஞர் அண்ணா அவர்களின் 118 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ வெங்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் தேனி மாவட்டம் பெரியகுளம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ வெங்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் இந்நிகழ்ச்சியில் தெற்கு நகரக் கழகச் செயலாளர் VDR,பாலா, வடக்கு நகர் கழக செயலாளர் VS.தினேஷ், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பாலாஜி, நகர் மன்ற உறுப்பினர்கள் வெங்கடேசன் பால்பாண்டி, மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் மாஞ்சோலை செல்வம், அம்மா பேரவை இணைச் செயலாளர் முருகன்,நகர அவை தலைவர் மோகன், தொழிற்சங்க செயலாளரா ஜீவானந்தம் அடுத்து,மாவட்டத் துணைத் தலைவர் தர்மலிங்கம் வார்டு செயலாளர்கள் சார்பணி நிர்வாகிகள் உள்ளிட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமான கலந்துகொண்டு அறிஞர் அண்ணாவின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்1
- பெரியகுளத்தில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை பெரியகுளம் MLA தொடங்கி வைத்தார் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு பெரியகுளத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடந்தது வராக நதியில் கரைப்பதற்கு போலீசாரால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது இதனைத் தொடர்ந்து பெரியகுளம் நகர் முழுவதும் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தநூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் திருமேனிகளை ஊர்வலமாக எடுத்து வந்து வராக நதியில் கரைக்கப்பட்டது முன்னதாக இந்த ஊர்வலத்தை பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன் தொடங்கி வைத்தார் நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் உள்ளிட்ட இந்து முன்னணி மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் பாஜக நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர்கள் கலந்து கொண்டனர்1