logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பெரிய பெருமாள் புரட்டாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம் செப்.20- ல் திருக்கல்யாணம், 23-ம் தேதி செப்பு தேரோட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உள்ள வட பத்திர சன்னதியில் பெரிய பெருமாள் அவதார திருவிழாவான புரட்டாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் செப்டம்பர் 20-ம் தேதி திருக்கல்யாணமும்,  23-ம் தேதி செப்பு தேரோட்டமும் நடைபெறுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மூலவர் வடபத்ரசயனர் (பெரிய பெருமாள்)  அவதார உற்சவமான புரட்டாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக ஶ்ரீதேவி பூதேவி சமேதராக பெரிய பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அதன்பின் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, காலை 11 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தினசரி காலை மண்டபங்களில் எழுந்தருளும் ஸ்ரீதேவி ஸ்ரீதேவி சமேத பெரிய பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனமும், மாலை வீதி உலாவும் நடைபெறுகிறது. பிரமோற்சவ விழாவில் செப்டம்பர் 19-ம் தேதி தங்க கருட சேவையும், 20-ம் தேதி மாலை 4 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத பெரியபெருமாள் திருக்கல்யாணமும், 21-ம் தேதி சயன சேவையும் நடைபெறுகிறது.  பெரிய பெருமாள் அவதரித்த பெரிய திருவோண நட்சத்திரத்தில் செப்டம்பர் 23- ம் தேதி காலை 7 மணிக்கு செப்பு தேரோட்டம் நடைபெற உள்ளது.இதில் மாவட்ட ஆட்சியர் ஷரண்யா அறி, நகராட்சி ஆணையாளர் குமார்,வட்டாட்சியர் அறிவானந்தம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். கோயில் செயல் அலுவலர் சக்கரையம்மாள் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

5 hrs ago
user_Prabakaran Praba
Prabakaran Praba
ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், தமிழ்நாடு•
5 hrs ago

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பெரிய பெருமாள் புரட்டாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம் செப்.20- ல் திருக்கல்யாணம், 23-ம் தேதி செப்பு தேரோட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உள்ள வட பத்திர சன்னதியில் பெரிய பெருமாள் அவதார திருவிழாவான புரட்டாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் செப்டம்பர் 20-ம் தேதி திருக்கல்யாணமும்,  23-ம் தேதி செப்பு தேரோட்டமும் நடைபெறுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மூலவர் வடபத்ரசயனர் (பெரிய பெருமாள்)  அவதார உற்சவமான புரட்டாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக ஶ்ரீதேவி பூதேவி சமேதராக பெரிய பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அதன்பின் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, காலை 11 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தினசரி காலை மண்டபங்களில் எழுந்தருளும் ஸ்ரீதேவி ஸ்ரீதேவி சமேத பெரிய பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனமும், மாலை வீதி உலாவும் நடைபெறுகிறது. பிரமோற்சவ விழாவில் செப்டம்பர் 19-ம் தேதி தங்க கருட சேவையும், 20-ம் தேதி மாலை 4 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத பெரியபெருமாள் திருக்கல்யாணமும், 21-ம் தேதி சயன சேவையும் நடைபெறுகிறது.  பெரிய பெருமாள் அவதரித்த பெரிய திருவோண நட்சத்திரத்தில் செப்டம்பர் 23- ம் தேதி காலை 7 மணிக்கு செப்பு தேரோட்டம் நடைபெற உள்ளது.இதில் மாவட்ட ஆட்சியர் ஷரண்யா அறி, நகராட்சி ஆணையாளர் குமார்,வட்டாட்சியர் அறிவானந்தம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். கோயில் செயல் அலுவலர் சக்கரையம்மாள் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பெரிய பெருமாள் புரட்டாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம் செப்.20- ல் திருக்கல்யாணம், 23-ம் தேதி செப்பு தேரோட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உள்ள வட பத்திர சன்னதியில் பெரிய பெருமாள் அவதார திருவிழாவான புரட்டாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் செப்டம்பர் 20-ம் தேதி திருக்கல்யாணமும்,  23-ம் தேதி செப்பு தேரோட்டமும் நடைபெறுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மூலவர் வடபத்ரசயனர் (பெரிய பெருமாள்)  அவதார உற்சவமான புரட்டாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக ஶ்ரீதேவி பூதேவி சமேதராக பெரிய பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அதன்பின் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, காலை 11 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தினசரி காலை மண்டபங்களில் எழுந்தருளும் ஸ்ரீதேவி ஸ்ரீதேவி சமேத பெரிய பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனமும், மாலை வீதி உலாவும் நடைபெறுகிறது. பிரமோற்சவ விழாவில் செப்டம்பர் 19-ம் தேதி தங்க கருட சேவையும், 20-ம் தேதி மாலை 4 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத பெரியபெருமாள் திருக்கல்யாணமும், 21-ம் தேதி சயன சேவையும் நடைபெறுகிறது.  பெரிய பெருமாள் அவதரித்த பெரிய திருவோண நட்சத்திரத்தில் செப்டம்பர் 23- ம் தேதி காலை 7 மணிக்கு செப்பு தேரோட்டம் நடைபெற உள்ளது.இதில் மாவட்ட ஆட்சியர் ஷரண்யா அறி, நகராட்சி ஆணையாளர் குமார்,வட்டாட்சியர் அறிவானந்தம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். கோயில் செயல் அலுவலர் சக்கரையம்மாள் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
    1
    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பெரிய பெருமாள் புரட்டாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

செப்.20- ல் திருக்கல்யாணம், 23-ம் தேதி செப்பு தேரோட்டம்



ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உள்ள வட பத்திர சன்னதியில் பெரிய பெருமாள் அவதார திருவிழாவான புரட்டாசி பிரம்மோற்சவ விழா  கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் செப்டம்பர் 20-ம் தேதி திருக்கல்யாணமும்,  23-ம் தேதி செப்பு தேரோட்டமும் நடைபெறுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மூலவர் வடபத்ரசயனர் (பெரிய பெருமாள்)  அவதார உற்சவமான புரட்டாசி பிரம்மோற்சவ விழா  கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக ஶ்ரீதேவி பூதேவி சமேதராக பெரிய பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அதன்பின் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, காலை 11 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தினசரி காலை மண்டபங்களில் எழுந்தருளும் ஸ்ரீதேவி ஸ்ரீதேவி சமேத பெரிய பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனமும், மாலை வீதி உலாவும் நடைபெறுகிறது. பிரமோற்சவ விழாவில் செப்டம்பர் 19-ம் தேதி தங்க கருட சேவையும், 20-ம் தேதி மாலை 4 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத பெரியபெருமாள் திருக்கல்யாணமும், 21-ம் தேதி சயன சேவையும் நடைபெறுகிறது.  பெரிய பெருமாள் அவதரித்த பெரிய திருவோண நட்சத்திரத்தில் செப்டம்பர் 23- ம் தேதி காலை 7 மணிக்கு செப்பு தேரோட்டம் நடைபெற உள்ளது.இதில் மாவட்ட ஆட்சியர் ஷரண்யா அறி, நகராட்சி ஆணையாளர் குமார்,வட்டாட்சியர் அறிவானந்தம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கோயில் செயல் அலுவலர் சக்கரையம்மாள் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
    user_Prabakaran Praba
    Prabakaran Praba
    ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், தமிழ்நாடு•
    5 hrs ago
  • ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சயனர் புரட்டாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ வடபத்ரசயனர் திருக்கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது. மகாலட்சுமியின் அம்சமான ஸ்ரீ ஆண்டாள் மானிட பெண்ணாக அவதரித்து பாமாலை பாடி பின் பூமாலை சுற்றி ஸ்ரீரங்கநாதரை அடைந்தார் என்பது ஐதீகம்.ஆண்டாள் தினமும் தான் சூடி கலைந்த மாலையை ஸ்ரீரங்கநாதரின் அம்சமான ஸ்ரீ வடபத்ரசயனருக்குத்தான் சாற்றி வந்துள்ளார். இந்த வடபத்ர சயனருக்கான புரட்டாசி பிரமோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று துவங்கும் உற்சவம் 12 நாட்கள் நடைபெறும்.ஐந்தாம் திருநாள் தங்க கருட சேவையும், ஒன்பதாம் திருநாள்(23.09.26) செப்பு திருத்தேரோட்டமும் நடைபெற உள்ள நிலையில் தினந்தோறும் பூதேவி ஸ்ரீதேவி சமேத வடபத்ரசயனர் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பர். கொடியேற்ற நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.
    1
    ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சயனர் புரட்டாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ வடபத்ரசயனர் திருக்கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது. மகாலட்சுமியின் அம்சமான ஸ்ரீ ஆண்டாள் மானிட பெண்ணாக அவதரித்து பாமாலை பாடி பின் பூமாலை சுற்றி ஸ்ரீரங்கநாதரை அடைந்தார் என்பது ஐதீகம்.ஆண்டாள் தினமும் தான் சூடி கலைந்த மாலையை ஸ்ரீரங்கநாதரின் அம்சமான ஸ்ரீ வடபத்ரசயனருக்குத்தான் சாற்றி வந்துள்ளார். இந்த வடபத்ர சயனருக்கான புரட்டாசி பிரமோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. 
இன்று துவங்கும் உற்சவம் 12 நாட்கள் நடைபெறும்.ஐந்தாம் திருநாள் தங்க கருட சேவையும், ஒன்பதாம் திருநாள்(23.09.26) செப்பு திருத்தேரோட்டமும் நடைபெற உள்ள நிலையில் தினந்தோறும் பூதேவி ஸ்ரீதேவி சமேத வடபத்ரசயனர் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பர். கொடியேற்ற நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.
    user_Virudhunagar
    Virudhunagar
    Virudhunagar, Tamil Nadu•
    9 hrs ago
  • கோவில்பட்டியில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு மத நல்லிணக்கத்தையும், ஒற்றுமையும் வலியுறுத்தும் வகையில்  சிறுவர் சிறுமியர் விநாயகர், முருகன், வேடம் அணிந்து,பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புது கிராமத்தில் அமைந்துள்ள சக்தி விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி திருவிழா ஊர்வலம் ரயில் நிலையம் முன்பு மத நல்லிணக்கத்தையும்,ஒற்றுமையும் வலியுறுத்தும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவில் - சிறுவர் சிறுமியர் விநாயகர், முருகன், மேடம் அணிந்து,பக்தர்கள் 1008 பால்குடம், மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. பால்குடம் ஊர்வலத்தை கோவில்பட்டி திமுக கிழக்கு நகர செயலாளர் சுரேஷ்,தலைமையில் கோவில்பட்டி ரஜினிகாந்த் நற்பணி மன்றம் நகர செயலாளர் மகேஷ் பாலா முன்னணியில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார் இந்த ஊர்வலம் சாத்தூர் மெயின் ரோடு புது கிராமம் மெயின் ரோடு வழியாக வந்து ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோவிலுக்கு வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் நேத்திக்கடனை செலுத்தினர். இதில் சுற்று வட்டார பகுதியில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    1
    கோவில்பட்டியில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு மத நல்லிணக்கத்தையும், ஒற்றுமையும் வலியுறுத்தும் வகையில்  சிறுவர் சிறுமியர் விநாயகர், முருகன், வேடம் அணிந்து,பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புது கிராமத்தில் அமைந்துள்ள சக்தி விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி திருவிழா ஊர்வலம் ரயில் நிலையம் முன்பு மத நல்லிணக்கத்தையும்,ஒற்றுமையும் வலியுறுத்தும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவில் - சிறுவர் சிறுமியர் விநாயகர், முருகன், மேடம் அணிந்து,பக்தர்கள் 1008 பால்குடம், மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. பால்குடம் ஊர்வலத்தை கோவில்பட்டி திமுக கிழக்கு நகர செயலாளர் சுரேஷ்,தலைமையில் கோவில்பட்டி ரஜினிகாந்த் நற்பணி மன்றம் நகர செயலாளர் மகேஷ் பாலா முன்னணியில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார் இந்த ஊர்வலம் சாத்தூர் மெயின் ரோடு புது கிராமம் மெயின் ரோடு வழியாக வந்து ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோவிலுக்கு வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் நேத்திக்கடனை செலுத்தினர். இதில் சுற்று வட்டார பகுதியில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    user_News
    News
    கோவில்பட்டி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    17 hrs ago
  • இந்து எழுச்சி முன்னணி 11ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் தேனியில் விமர்சியாக நடந்தது தேனியில் செயல்பட்டு வரும் இந்து எழுச்சி முன்னணி அமைப்பு சார்பில் 11ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது இந்த ஊர்வலத்திற்கு நிறுவனத் தலைவர் பொன் ரவி வழிகாட்டிட மாவட்ட தலைவர் ராமராஜ் தலைமை வகிக்க மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் முன்னிலையில் 11ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது இந்த ஊர்வலத்தில் செண்டா மேளம் முழங்க அரிசி கொம்பன் யானை முன் நின்று வழிநடத்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தலையில் முளைப்பாரி சுமந்தும், 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடங்கள் ஏந்தி ஊர்வலம் நடைபெற்றது போலீசாரால் அனுமதி வழங்கப்பட்டிருந்த அரண்மனை புதூர் முல்லை ஆற்றில் கரைக்க இந்த ஊர்வலமானது அல்லிநகரம் சாலை பிள்ளையார் கோவிலில் தொடங்கி பெரியகுளம் சாலை நேரு சிலை மதுரை சாலை வழியாக அரண்மனை புதூர் முல்லை ஆற்று பாலம் வந்தடைந்து அங்கு சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டு நகர் முழுவதும் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் திருமேனிகள் முல்லை ஆற்றில் கரைக்கப்பட்டது இந்த ஊர்வலத்திற்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அலெக்ஸாண்டர் ஜெரால்டு தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்
    1
    இந்து எழுச்சி முன்னணி 11ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் தேனியில் விமர்சியாக நடந்தது
தேனியில் செயல்பட்டு வரும் இந்து எழுச்சி முன்னணி அமைப்பு சார்பில் 11ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது இந்த ஊர்வலத்திற்கு நிறுவனத் தலைவர் பொன் ரவி வழிகாட்டிட மாவட்ட தலைவர் ராமராஜ் தலைமை வகிக்க மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் முன்னிலையில் 11ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது இந்த ஊர்வலத்தில் செண்டா மேளம் முழங்க அரிசி கொம்பன் யானை முன் நின்று வழிநடத்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தலையில் முளைப்பாரி சுமந்தும், 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடங்கள் ஏந்தி ஊர்வலம் நடைபெற்றது போலீசாரால் அனுமதி வழங்கப்பட்டிருந்த அரண்மனை புதூர் முல்லை ஆற்றில் கரைக்க இந்த ஊர்வலமானது அல்லிநகரம் சாலை பிள்ளையார் கோவிலில் தொடங்கி பெரியகுளம் சாலை நேரு சிலை மதுரை சாலை வழியாக அரண்மனை புதூர் முல்லை ஆற்று பாலம் வந்தடைந்து அங்கு சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டு நகர் முழுவதும் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் திருமேனிகள் முல்லை ஆற்றில் கரைக்கப்பட்டது இந்த ஊர்வலத்திற்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அலெக்ஸாண்டர் ஜெரால்டு தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்
    user_SARAVANAN K
    SARAVANAN K
    Local News Reporter தேனி, தேனி, தமிழ்நாடு•
    13 hrs ago
  • மாணவர்களுடன் காலை உணவு அருந்திய விருதுநகர் மாவட்ட ஆட்சியர். விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா ஹரி இ.ஆ.ப., அவர்கள் இன்று (15.09.2026) திருவில்லிபுத்தூர் நகராட்சிக்குட்பட்ட திரு.வி.க. தொடக்கப்பள்ளியில் செயல்படுத்தப்பட்டு வரும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவின் தரம், சுகாதாரம் மற்றும் உணவு வழங்கப்படும் முறைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவை அருந்தி, அவர்களுடன் கலந்துரையாடினார். மாணவர்களின் கல்வி, பள்ளியில் வழங்கப்படும் அடிப்படை வசதிகள் மற்றும் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆட்சியர் கேட்டறிந்தார்.
    1
    மாணவர்களுடன் காலை உணவு அருந்திய விருதுநகர் மாவட்ட ஆட்சியர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா ஹரி இ.ஆ.ப., அவர்கள் இன்று (15.09.2026) திருவில்லிபுத்தூர் நகராட்சிக்குட்பட்ட திரு.வி.க. தொடக்கப்பள்ளியில் செயல்படுத்தப்பட்டு வரும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவின் தரம், சுகாதாரம் மற்றும் உணவு வழங்கப்படும் முறைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவை அருந்தி, அவர்களுடன் கலந்துரையாடினார்.
மாணவர்களின் கல்வி, பள்ளியில் வழங்கப்படும் அடிப்படை வசதிகள் மற்றும் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆட்சியர் கேட்டறிந்தார்.
    user_குமார்
    குமார்
    Local News Reporter காரியாபட்டி, விருதுநகர், தமிழ்நாடு•
    18 hrs ago
  • தேனி மாவட்டம் பெரியகுளத்தில் காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலம் வராக நதியில் சிலைகள் கரைப்பு தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இந்து முன்னணி சார்பில் 37-ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பெரியகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள காமாட்சிபுரம், எ.புதுப்பட்டி, தாமரைக்குளம், தெ.கள்ளிப்பட்டி, வடுகபட்டி, மேல்மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, இன்று காலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆனைத் தொடர்ந்து இன்று மாலை வேளையில் அனைத்துச் சிலைகளும் பெரியகுளம் மதுரை சாலையில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் பகுதிக்குக் கொண்டு வரப்பட்டன. அதைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பாட்டம் சுருள் கத்தி, வால் சுற்றுதல், உள்ளிட்ட விளையாட்டுக்களுடன் அரண்மனைத் தெரு, வி.ஆர்.பி தெரு, தென்கரை சுதந்திர வீதி மற்றும் அக்ரகாரம் வழியாக முக்கிய வீதிகளில் விநாயகர் சிலை ஊர்வலம் சென்றது. சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற இந்த ஊர்வலத்தின் முடிவில், அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி கோவில் அருகே உள்ள வராக நதி ஆற்றில் சிலைகள் அனைத்தும் பாதுகாப்பாகக் கரைக்கப்பட்டன. அமைதியான முறையில் ஊர்வலம் நடைபெறுவதற்காக, பெரியகுளம் காவல்துறை கண்காணிப்பாளர் நல்லு தலைமையில், 18 காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 650 -க்கும் மேற்பட்ட காவலர்கள் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
    1
    தேனி மாவட்டம் பெரியகுளத்தில் காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலம்  வராக நதியில் சிலைகள் கரைப்பு
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இந்து முன்னணி சார்பில் 37-ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
பெரியகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள காமாட்சிபுரம், எ.புதுப்பட்டி, தாமரைக்குளம், தெ.கள்ளிப்பட்டி, வடுகபட்டி, மேல்மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, இன்று காலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஆனைத் தொடர்ந்து இன்று மாலை வேளையில் அனைத்துச் சிலைகளும் பெரியகுளம் மதுரை சாலையில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் பகுதிக்குக் கொண்டு வரப்பட்டன. 
அதைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பாட்டம் சுருள் கத்தி, வால்  சுற்றுதல், உள்ளிட்ட விளையாட்டுக்களுடன்  அரண்மனைத் தெரு, வி.ஆர்.பி தெரு, தென்கரை சுதந்திர வீதி மற்றும் அக்ரகாரம் வழியாக முக்கிய வீதிகளில் விநாயகர் சிலை ஊர்வலம் சென்றது.
சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற இந்த ஊர்வலத்தின் முடிவில், அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி கோவில் அருகே உள்ள வராக நதி ஆற்றில் சிலைகள் அனைத்தும் பாதுகாப்பாகக் கரைக்கப்பட்டன.
அமைதியான முறையில் ஊர்வலம் நடைபெறுவதற்காக, பெரியகுளம் காவல்துறை கண்காணிப்பாளர்  நல்லு தலைமையில், 18 காவல்  ஆய்வாளர்கள் உள்ளிட்ட தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 650 -க்கும் மேற்பட்ட காவலர்கள் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
    user_VIGNESH
    VIGNESH
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    18 hrs ago
  • தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியில் குடிநீர் வேண்டி பெண்கள் சாலை மறியல் முயற்சி காவல் நிலையத்தில் பேரூராட்சி அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம் ​ தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட சாத்தா கோவில்பட்டி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாகச் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. ​இது குறித்துப் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதிப் பெண்களும் பொதுமக்களும், தேவதானப்பட்டி காவல் நிலையம் அருகே திரண்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். ​அப்போது அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், மறியலில் ஈடுபட முயன்றவர்களைத் தடுத்து நிறுத்தி காவல் நிலையத்திற்குள் அழைத்துச் சென்றனர். தொடர்ந்து காவல் நிலையத்திற்குள் குவிந்த பொதுமக்கள், தங்களின் கோரிக்கையைக் கண்டுகொள்ளாத பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து அதிகாரிகளுடன் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ​இதனைத் தொடர்ந்து, பேரூராட்சி அலுவலர்களைக் காவல் நிலையத்திற்கு வரவழைத்துக் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சாத்தா கோவில்பட்டி பகுதிக்கு உடனடியாகக் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பேரூராட்சி அதிகாரிகள் உறுதியளித்தனர். ​அதிகாரிகளின் இந்த உறுதியை ஏற்றுப் பொதுமக்கள் மற்றும் பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    1
    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியில் குடிநீர் வேண்டி பெண்கள் சாலை மறியல் முயற்சி காவல் நிலையத்தில் பேரூராட்சி அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்
​
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட சாத்தா கோவில்பட்டி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாகச் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
​இது குறித்துப் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதிப் பெண்களும் பொதுமக்களும், தேவதானப்பட்டி காவல் நிலையம் அருகே திரண்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
​அப்போது அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், மறியலில் ஈடுபட முயன்றவர்களைத் தடுத்து நிறுத்தி காவல் நிலையத்திற்குள் அழைத்துச் சென்றனர். 
தொடர்ந்து காவல் நிலையத்திற்குள் குவிந்த பொதுமக்கள், தங்களின் கோரிக்கையைக் கண்டுகொள்ளாத பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து அதிகாரிகளுடன் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
​இதனைத் தொடர்ந்து, பேரூராட்சி அலுவலர்களைக் காவல் நிலையத்திற்கு வரவழைத்துக் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சாத்தா கோவில்பட்டி பகுதிக்கு உடனடியாகக் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பேரூராட்சி அதிகாரிகள் உறுதியளித்தனர்.
​அதிகாரிகளின் இந்த உறுதியை ஏற்றுப் பொதுமக்கள் மற்றும் பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    13 hrs ago
  • ஸ்ரீவில்லிபுத்தூரில்  பேரறிஞர் அண்ணாவின் 118 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 118 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் தொண்டர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.  இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருஉருவ சிலைக்கு தமிழக வெற்றிக்கழக ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் எம்ஜிஆர் அவர்களின் திருஉருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர்  இனிப்புகள்  வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக்காக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    1
    ஸ்ரீவில்லிபுத்தூரில்  பேரறிஞர் அண்ணாவின் 118 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 118 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நாடு முழுவதும்  தொண்டர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். 
இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருஉருவ சிலைக்கு தமிழக வெற்றிக்கழக ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் எம்ஜிஆர் அவர்களின் திருஉருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர்  இனிப்புகள்  வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக்காக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    user_Prabakaran Praba
    Prabakaran Praba
    ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், தமிழ்நாடு•
    16 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.