தேனி அருகே கோட்டூரில் கோபிநாத சுவாமி வைகுண்ட ஏகாதேசி தேர் திருவிழாவில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு மாபெரும் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை நடத்தினார்கள். தேனி அருகே உள்ள கோட்டூரில் கோபிநாத சுவாமி வைகுண்ட ஏகாதேசி தேர் திருவிழாவில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை நடத்தினார்கள். கோட்டூரிலிருந்து டொம்புச்சேரி வரை உள்ள எட்டு கிலோமீட்டர் தூரம் வரை நடைபெற்ற இந்த மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில் தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஜோடி மாட்டு வண்டிகள் பங்கேற்றனர். இந்த போட்டியில் மாட்டு வண்டிகள் பந்தய எல்லையை நோக்கி சீறிப்பாய்ந்து சென்ற போது பங்கேற்ற மாடுகளையும் மாட்டு வண்டியை ஓட்டுபவர்களையும், உற்சாகப்படுத்தும் வகையில் சாலையோரம் நின்று பார்வையாளர்கள் ஏராளமானோர் ஆரவாரம் செய்து உற்சாக படுத்தினார்கள். இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் தட்டான் சிட்டு, தேன்சிட்டு, பூஞ்சிட்டு , நடுமாடு, பெரிய மாடு என 7 பிரிவுகளில் 200 க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் கலந்து கொண்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளுக்கும் வெற்றி பெற்ற சாரதிகளுக்கும் ரொக்க தொகையினை பரிசாக வழங்கினார்கள். மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் குடியரசு தொடங்கி வைத்தார்.மேலும் இந்த நிகழ்வில் திமுக தேனி தெற்கு ஒன்றிய செயலாளர் ரத்தினசபாபதி,வடக்கு ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி,வீரபாண்டி பேரூராட்சி சேர்மன் கீதா சசி,தேனி ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் மாலா காமராஜ்,வார்டு உறுப்பினர்கள், மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டுகளித்தனர். வீரபாண்டி காவல் நிலைய காவல்துறையினர் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

- கன்னியாகுமாரி மாவட்டதிற்க்கு ஈரான், ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் இருந்து வந்த வெளிநாட்டு பறவைகள்.1
- மாதா அமிர்தானந்த மாயி அவர்கள் ஆசிரமத்தில் நான் சந்தித்த இந்த நிகழ்ச்சி என் மனதை மாற்றியது. குறைந்த அளவான வளங்களை மட்டுமே நாம் பயன்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்தேன்.1
- ஓம் நமசிவாய 🙏 https://youtube.com/@muthucreatorcom1
- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அரசு மருத்துவமனை அருகே அங்கன்வாடி பணியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி பொன்னமராவதி ஒன்றியத்தில் பணியாற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சத்துணவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பொன்னமராவதி பகுதியைச் சேர்ந்த சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.1
- கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் நகர் கிராமத்தில் தேமுதிக கட்சியின் நிறுவனர் கேப்டன் விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நகர் கிளைக் கழகத்தின் சார்பாக 100-க்கும் மேற்பட்டவருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர், ஒன்றிய நிர்வாகிகள் கிளைக் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.2
- Post by 10491
- *சாலை விரிவாக்க பணி என்ற பெயரில் நூறாண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த கோயிலின் சுற்றுச்சுவர் இடிப்பு - போராட்டத்தில் ஈடுபட முயன்ற பொதுமக்கள் மற்றும் இந்து மக்கள் கட்சியினர்* *கோயிலை அகற்றும் பணியில் ஈடுபட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என இந்து மக்கள் கட்சியின் எச்சரிக்கை* தேனி மாவட்டம் தேனி அருகே தப்பகுண்டு பகுதியில் சுமார் நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சடேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது இந்தக் கோயிலில் தப்புகுண்டு மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கடந்த பல ஆண்டுகளாக வழிபட்டு வருகின்றனர் இந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விரிவாக்க பணி மேற்கொள்வதாக கூறி கோயிலின் சுற்று சுவர்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு இடித்துள்ளனர் மேலும் மின்கம்பங்கள் அமைப்பதற்கு கோயில் வளாகத்தில் உள்ள நூறாண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த அரசு மரம் இடையூறாக இருப்பதாக கூறி மின்சாரத்துறையினர் மரத்தை அகற்ற முயற்சி செய்தனர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் அந்தப் பகுதியில் சாலை விரிவாக்க பணி, மற்றும் மரம் அகற்றும் பணி நிறுத்தப்பட்டது இந்த நிலையில் கோயில் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டது குறித்து தேனி மாவட்ட இந்து மக்கள் கட்சி தொண்டரணி சார்பில் அப்பகுதி பொதுமக்களுடன் இணைந்து கோயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர் அதனைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி நிலையில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோயில் மற்றும் அரச மரத்தை அகற்றுவதை தடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர் இதுகுறித்து இந்து மக்கள் கட்சி தொண்டரணி துணைத் தலைவர் குரு ஐயப்பன் கூறுகையில் சாலை விரிவாக்க பணி என்ற பெயரில் நெடுஞ்சாலை துறையினர் எந்த அறிவிப்பும் இன்றி கோயில் சுற்றுச்சுவரை இடித்துள்ளனர் பொதுமக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து கோயில் மற்றும் அரச மரத்தை அகற்றும் பணியை நிறுத்தி மக்கள் வழிபட வழிவகை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளோம் கோயில் மற்றும் அரச மரத்தை அகற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் முடிவு எடுத்தால் தமிழ்நாடு முழுவதும் உள்ள இந்து இயக்க தலைவர்கள் மற்றும் அப்பகுதி மக்களை ஒன்றிணைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்தும் சூழல் உருவாகும் என்று தெரிவித்தார் பேட்டி - குரு ஐயப்பன் (மாநிலத் துணைத் தலைவர், இந்து மக்கள் கட்சி தொண்டரணி)1
- கடையில் வாங்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட் நல்ல தரமானதா என்று பார்க்க இதை பாருங்கள். பெரும்பாலும் ரசாயன கலவை கலந்தே வருகிறது கெட்டு போகாமல் இருப்பதற்கு.1
- *2 விநாடிகளில் 700 கிமீ வேகம் சீனா ரயில்வே உலக சாதனை* *. பெய்ஜிங்: சீனா மாக்லேவ் தொழில்நுட்பத்தில் உருவாக்கிய ரயில் 2 விநாடிகளில் மணிக்கு 700கி.மீ. வேகத்தில் சென்று உலக சாதனை படைத்துள்ளது.1