*சாலை விரிவாக்க பணி என்ற பெயரில் நூறாண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த கோயிலின் சுற்றுச்சுவர் இடிப்பு - போராட்டத்தில் ஈடுபட முயன்ற பொதுமக்கள் மற்றும் இந்து மக்கள் கட்சியினர்* *கோயிலை அகற்றும் பணியில் ஈடுபட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என இந்து மக்கள் கட்சியின் எச்சரிக்கை* தேனி மாவட்டம் தேனி அருகே தப்பகுண்டு பகுதியில் சுமார் நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சடேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது இந்தக் கோயிலில் தப்புகுண்டு மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கடந்த பல ஆண்டுகளாக வழிபட்டு வருகின்றனர் இந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விரிவாக்க பணி மேற்கொள்வதாக கூறி கோயிலின் சுற்று சுவர்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு இடித்துள்ளனர் மேலும் மின்கம்பங்கள் அமைப்பதற்கு கோயில் வளாகத்தில் உள்ள நூறாண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த அரசு மரம் இடையூறாக இருப்பதாக கூறி மின்சாரத்துறையினர் மரத்தை அகற்ற முயற்சி செய்தனர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் அந்தப் பகுதியில் சாலை விரிவாக்க பணி, மற்றும் மரம் அகற்றும் பணி நிறுத்தப்பட்டது இந்த நிலையில் கோயில் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டது குறித்து தேனி மாவட்ட இந்து மக்கள் கட்சி தொண்டரணி சார்பில் அப்பகுதி பொதுமக்களுடன் இணைந்து கோயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர் அதனைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி நிலையில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோயில் மற்றும் அரச மரத்தை அகற்றுவதை தடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர் இதுகுறித்து இந்து மக்கள் கட்சி தொண்டரணி துணைத் தலைவர் குரு ஐயப்பன் கூறுகையில் சாலை விரிவாக்க பணி என்ற பெயரில் நெடுஞ்சாலை துறையினர் எந்த அறிவிப்பும் இன்றி கோயில் சுற்றுச்சுவரை இடித்துள்ளனர் பொதுமக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து கோயில் மற்றும் அரச மரத்தை அகற்றும் பணியை நிறுத்தி மக்கள் வழிபட வழிவகை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளோம் கோயில் மற்றும் அரச மரத்தை அகற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் முடிவு எடுத்தால் தமிழ்நாடு முழுவதும் உள்ள இந்து இயக்க தலைவர்கள் மற்றும் அப்பகுதி மக்களை ஒன்றிணைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்தும் சூழல் உருவாகும் என்று தெரிவித்தார் பேட்டி - குரு ஐயப்பன் (மாநிலத் துணைத் தலைவர், இந்து மக்கள் கட்சி தொண்டரணி)

- *காலிப் பணியிடங்கள் நிரப்புதல், பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துதல் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போட்டா - ஜியோ அமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்* தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போட்டா - ஜியோ அமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் திமுக அரசின் தேர்தல் வாக்குறுதியான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் அரசு அலுவலகங்களில் உள்ள அனைத்து துறைகளிலும் காலி பணியிடங்களில் உடனடியாக நிரப்பி பதவி உயர்வினை வழங்க வேண்டும் சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், செவிலியர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள் உள்ளிட்டோரின் பணிகளை நிரந்தரம் செய்து அவர்களுக்கு சிறப்பு கால முறை ஊதியம் வழங்க வேண்டும் 2012 ஆம் ஆண்டுக்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்ட இளநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு TET தகுதி தேர்வில் இருந்து விலக்களிக்க ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பணிபுரியும் பணியாளர்களை அரசு ஊழியராக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்1
- முல்லைப் பெரியாறு அணையில் புதுதில்லி C.S.M.R.S லிருந்து விஞ்ஞானி மணிஷ்குப்தா தலைமையில் 5 விஞ்ஞானிகள் மூலம் பிரதான அணையின் முகப்பினை R.O.V கருவி மூலம் நீருக்கு அடியில் ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வந்தது. இன்று அந்தப் பணி முடிவுற்றது. இந்த ஆய்வுப்பணியில் பெரியாறு அணை சிறப்புக் கோட்ட செயற்பொறியாளர் C. செல்வம் தலைமையில் தமிழ்நாடு நீர்வளத்துறை பொறியாளர்களும் கட்டப்பனா எம்.ஐ. டிவிசன் செயற்பொறியாளர் லெவின்ஸ் பாபு தலைமையில் கேரளா நீர்வளத்துறை பொறியாளர்களும் ஆய்வுப்பணி செய்தனர்.4
- தேனி அருகே கோட்டூரில் கோபிநாத சுவாமி வைகுண்ட ஏகாதேசி தேர் திருவிழாவில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு மாபெரும் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை நடத்தினார்கள். தேனி அருகே உள்ள கோட்டூரில் கோபிநாத சுவாமி வைகுண்ட ஏகாதேசி தேர் திருவிழாவில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை நடத்தினார்கள். கோட்டூரிலிருந்து டொம்புச்சேரி வரை உள்ள எட்டு கிலோமீட்டர் தூரம் வரை நடைபெற்ற இந்த மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில் தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஜோடி மாட்டு வண்டிகள் பங்கேற்றனர். இந்த போட்டியில் மாட்டு வண்டிகள் பந்தய எல்லையை நோக்கி சீறிப்பாய்ந்து சென்ற போது பங்கேற்ற மாடுகளையும் மாட்டு வண்டியை ஓட்டுபவர்களையும், உற்சாகப்படுத்தும் வகையில் சாலையோரம் நின்று பார்வையாளர்கள் ஏராளமானோர் ஆரவாரம் செய்து உற்சாக படுத்தினார்கள். இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் தட்டான் சிட்டு, தேன்சிட்டு, பூஞ்சிட்டு , நடுமாடு, பெரிய மாடு என 7 பிரிவுகளில் 200 க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் கலந்து கொண்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளுக்கும் வெற்றி பெற்ற சாரதிகளுக்கும் ரொக்க தொகையினை பரிசாக வழங்கினார்கள். மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் குடியரசு தொடங்கி வைத்தார்.மேலும் இந்த நிகழ்வில் திமுக தேனி தெற்கு ஒன்றிய செயலாளர் ரத்தினசபாபதி,வடக்கு ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி,வீரபாண்டி பேரூராட்சி சேர்மன் கீதா சசி,தேனி ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் மாலா காமராஜ்,வார்டு உறுப்பினர்கள், மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டுகளித்தனர். வீரபாண்டி காவல் நிலைய காவல்துறையினர் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.1
- வேடசந்தூர் சேனங்கோட்டை துணை மின் நிலையம் அருகில் இந்த மின்கம்பத்தில் செடி கொடிகள் மின் வயர்களில் சுற்றி கொண்டு உள்ளது இதனால் மின் கம்பத்தில் கீழே வருபவர்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த மின்கம்பங்களில் உள்ள செடி கொடிகளை அகற்றி கொடுக்க வேண்டுமென்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை.1
- பனி சீசனில் மக்கள் மகிழ்ச்சியுடன்.1
- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அரசு மருத்துவமனை அருகே அங்கன்வாடி பணியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி பொன்னமராவதி ஒன்றியத்தில் பணியாற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சத்துணவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பொன்னமராவதி பகுதியைச் சேர்ந்த சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.1
- ஓம் நமசிவாய 🙏 https://youtube.com/@muthucreatorcom1
- பெரியகுளத்தில் சாலையில் கழிவு நீர் தேங்கி இருப்பதால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம் தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை சுப்பையா தெரு கழிவுநீர் சாலையில் தேங்கி இருப்பதால் அவளியாக செல்லும் மாணவர்கள் குழந்தைகள் பொதுமக்கள் முதியோர்கள் சிரமத்துடன் சென்று வருகின்றனர் மேலும் இச்சாலை வழியாக காந்தி சிலை மாரியம்மன் கோவில் கடைவீதி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலையாகவும் உள்ளது இச்சாலையில் கழிவுநீர் தேங்கிருப்பதால் துர்நாற்றம் வீசுவதாலும் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியப் போக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர் மேலும் பொதுமக்களே நலன் மற்றும் அக்கறையில் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாத பெரியகுளம் நகராட்சி நிர்வாகம் வரி வசூல் செய்வதில் மட்டுமே முன் புறமாக உள்ளது மேலும் பொது மக்களின் அடிப்படை வசதிகளை முறையாக செய்யாத நகர மன்ற தலைவர் மற்றும் நகராட்சி நிர்வாக அதிகாரிகள் புகார் அளித்தாலும் அதை கண்டுகொள்ளாமல் உள்ளனர் இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருவதாலும் கழிவுநீர் தேங்கி இருக்கும் பகுதியில் கழிவுநீர் தேங்காமல் அகற்றி சுத்தம் செய்து மேலும் அப்பகுதியில் கழிவுநீர் தேங்காமல் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்1