logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

பரந்தூர் விமான நிலையம் திட்டத்தை ரத்து செய்ததை இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வரவேற்கிறோம் என மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி" பரந்தூர் விமான நிலையம் திட்டத்தை ரத்து செய்ததை இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வரவேற்கிறோம் என மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி" திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ரயில் நிலையம் அருகில் உள்ள பொதுப்பணித்துறை மாளிகையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது, அப்போது அவர்  பேசுகையில், செங்கல்பட்டு அடுத்த பரந்தூர் பகுதியில் விவசாயிகளை பாதிக்கும் வகையில் கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட விமான நிலைய திட்டத்தை தற்போது ஆளும் தவெக அரசு ரத்து செய்துள்ளதை இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வரவேற்கிறோம். மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும், ஏழை எளிய மக்கள் மற்றும் பெண்கள் நலன் சார்ந்த திட்டங்களை நாங்கள் எப்போதும் வரவேற்போம், தற்போது நாட்டில் சர்க்கரை உற்பத்தி அதிகளவில் உள்ளது, ஆனால் ஒரு சில பெரும் முதலாளிகள் சர்க்கரையை பதுக்கி வைத்து தற்காலிக தட்டுப்பாட்டை உருவாக்கி உள்ளனர்,  இதை மத்திய அரசு உடனடியாக சரிசெய்ய வேண்டும், நாட்டறம்பள்ளி அடுத்த லட்சுமிபுரம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்கி அதே இடத்தில் வாழ வழிவகை செய்ய வேண்டும், தென்பெண்ணை பாலாறு இணைப்பு திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக செயல்படுத்த வேண்டும், டாஸ்மாக் கடை ஊழியர்களின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும், போக்குவரத்து கழக ஊழியர்களின் பணப்பலன்களை அவர்கள் ஓய்வு பெறும் போதே வழங்க வேண்டும் என பேசினார். இந்த நிகழ்வில் மாவட்ட செயலாளர் நந்தி, மாநில குழு உறுப்பினர் லெனின், மாவட்ட குழு உறுப்பினர் முல்லை, மாவட்ட பொருளாளர் வேணுகோபால், நகர செயலாளர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

3 hrs ago
user_Flower
Flower
Fruit & Vegetable Wholesaler திருப்பத்தூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
3 hrs ago
785a6e3c-440a-41f3-b142-12f9a3bdbd89

பரந்தூர் விமான நிலையம் திட்டத்தை ரத்து செய்ததை இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வரவேற்கிறோம் என மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி" பரந்தூர் விமான நிலையம் திட்டத்தை ரத்து செய்ததை இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வரவேற்கிறோம் என மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி" திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ரயில் நிலையம் அருகில் உள்ள பொதுப்பணித்துறை மாளிகையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது, அப்போது அவர்  பேசுகையில், செங்கல்பட்டு அடுத்த பரந்தூர் பகுதியில் விவசாயிகளை பாதிக்கும் வகையில் கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட விமான நிலைய திட்டத்தை தற்போது ஆளும் தவெக அரசு ரத்து செய்துள்ளதை இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வரவேற்கிறோம். மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும், ஏழை எளிய மக்கள் மற்றும் பெண்கள் நலன் சார்ந்த திட்டங்களை நாங்கள் எப்போதும் வரவேற்போம், தற்போது நாட்டில் சர்க்கரை உற்பத்தி அதிகளவில் உள்ளது, ஆனால் ஒரு சில பெரும் முதலாளிகள் சர்க்கரையை பதுக்கி வைத்து தற்காலிக தட்டுப்பாட்டை உருவாக்கி உள்ளனர்,  இதை மத்திய அரசு உடனடியாக சரிசெய்ய வேண்டும், நாட்டறம்பள்ளி அடுத்த லட்சுமிபுரம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்கி அதே இடத்தில் வாழ வழிவகை செய்ய வேண்டும், தென்பெண்ணை பாலாறு இணைப்பு திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக செயல்படுத்த வேண்டும், டாஸ்மாக் கடை ஊழியர்களின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும், போக்குவரத்து கழக ஊழியர்களின் பணப்பலன்களை அவர்கள் ஓய்வு பெறும் போதே வழங்க வேண்டும் என பேசினார். இந்த நிகழ்வில் மாவட்ட செயலாளர் நந்தி, மாநில குழு உறுப்பினர் லெனின், மாவட்ட குழு உறுப்பினர் முல்லை, மாவட்ட பொருளாளர் வேணுகோபால், நகர செயலாளர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • லட்சுமிபுரம் பகுதியில் வசிக்கும் குடும்பங்களுக்கு பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் வேண்டுகோள் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை தந்திருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர் சந்திப்பில் கூறியது திருப்பத்தூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் தமிழக அரசால் கிடப்பில் வைத்துள்ள தென்பெண்ணை பாலாறு இணைப்பு திட்டம் நிறைவேற்ற வேண்டும். வெலக்கல்நாத்தம் ஊராட்சி லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட குடும்பம் வசித்து வருகிறது அவர்களுக்கு நிரந்தர பட்டா வழங்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர்களை அப்புறப்படுத்த கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்திற்கு அரசு மருத்துவக் கல்லூரி வேண்டும் அதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் பரந்தூர் விமான நிலையத்தை கைவிடப்பட்டதற்கு அரசை வரவேற்கிறேன் என கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெரிவித்துள்ளார். ஆசிரியர் தேர்வில் நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும். நமது மாநிலத்தின் கடை கோடி பணியாளரான தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்ற வேண்டும் தற்காலிக பணியாளர்களை நிரந்தர பணியாளராக பணியமர்த்த வேண்டும். வேளாண் பயிர் கடன்களை 100% தள்ளுபடி செய்ய முதலமைச்சர் அரசாணை வெளியிட வேண்டும் தமிழக வெற்றி கழக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்ற வேண்டும். தமிழக வெற்றி கழக அரசு ஆட்சி அமைப்பதை வெளியில் இருந்து ஆதரிக்கிறோம். ஆனால் கூட்டணி வைக்க மாட்டோம். மேலும் விலைவாசி உயர்வு, போக்குவரத்து கட்டணம் உயர்வு பால் விலை உயர்வு போன்றவற்றிற்கு எதிர்ப்பு குரலாய் நிற்போம் என அவர் செய்தியாளர்கள் மூலம் தெரிவித்துள்ளார் இந்நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் நந்தி மாவட்ட பொருளாளர் வேணுகோபால் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் முல்லை மாநில நிர்வாக குழு உறுப்பினர் லெனின் ஆகியோர் உடன் இருந்தனர்
    1
    லட்சுமிபுரம் பகுதியில் வசிக்கும் குடும்பங்களுக்கு பட்டா வழங்க  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் வேண்டுகோள்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை தந்திருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர் சந்திப்பில் கூறியது திருப்பத்தூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்  தமிழக அரசால் கிடப்பில் வைத்துள்ள தென்பெண்ணை பாலாறு இணைப்பு திட்டம் நிறைவேற்ற வேண்டும். வெலக்கல்நாத்தம் ஊராட்சி லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட குடும்பம் வசித்து வருகிறது அவர்களுக்கு நிரந்தர பட்டா வழங்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர்களை அப்புறப்படுத்த கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர்  மாவட்டத்திற்கு அரசு மருத்துவக் கல்லூரி வேண்டும் அதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்  பரந்தூர் விமான நிலையத்தை கைவிடப்பட்டதற்கு அரசை வரவேற்கிறேன் என கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெரிவித்துள்ளார். ஆசிரியர் தேர்வில் நிரந்தர  விலக்கு அளிக்க வேண்டும். நமது மாநிலத்தின் கடை கோடி  பணியாளரான தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்ற வேண்டும் தற்காலிக பணியாளர்களை நிரந்தர பணியாளராக பணியமர்த்த வேண்டும். வேளாண் பயிர் கடன்களை 100% தள்ளுபடி செய்ய முதலமைச்சர்  அரசாணை வெளியிட வேண்டும் தமிழக வெற்றி கழக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்ற வேண்டும். தமிழக வெற்றி கழக அரசு ஆட்சி அமைப்பதை வெளியில் இருந்து ஆதரிக்கிறோம். ஆனால் கூட்டணி வைக்க மாட்டோம். மேலும் விலைவாசி உயர்வு, போக்குவரத்து கட்டணம் உயர்வு பால் விலை உயர்வு போன்றவற்றிற்கு எதிர்ப்பு குரலாய் நிற்போம் என அவர் செய்தியாளர்கள் மூலம் தெரிவித்துள்ளார் இந்நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  மாவட்டச் செயலாளர் நந்தி  மாவட்ட பொருளாளர் வேணுகோபால் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் முல்லை
மாநில நிர்வாக குழு உறுப்பினர் லெனின் ஆகியோர் உடன் இருந்தனர்
    user_KALAI REPORTER
    KALAI REPORTER
    Psychologist திருப்பத்தூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    5 hrs ago
  • திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் தேவலாபுரம் ஊராட்சியில் தனியார் கம்பனி கேட்டில் நாய் சிக்கியது தீ அணைப்பு வீரர்கள் நாயை மீட்டனர் *திருப்பத்தூர் மாவட்டம்* *தேவலாபுரத்தில் தொழிற்சாலை கேட்டில் சிக்கிய நாய் - தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்* திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் தாலுகா, மாதனூர் ஒன்றியம், தேவலாபுரம் ஊராட்சியில் இன்று (ஆகஸ்ட் 26) தனியார் தொழிற்சாலை ஒன்றின் இரும்பு கேட்டில் நாய் ஒன்று சிக்கிக்கொண்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் தீயணைப்பு வீரர்கள், பணியாளர்கள் உதவியுடன் கட்டர் மூலம் கேட் கம்பியை அறுத்து நாயை பத்திரமாக உயிருடன் மீட்டனர். தீயணைப்பு வீரர்களின் மனித நேயமிக்க செயலை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.
    1
    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் தேவலாபுரம் ஊராட்சியில் தனியார் கம்பனி கேட்டில் நாய் சிக்கியது தீ  அணைப்பு வீரர்கள் நாயை மீட்டனர்
*திருப்பத்தூர் மாவட்டம்*
*தேவலாபுரத்தில் தொழிற்சாலை கேட்டில் சிக்கிய நாய் - தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்*
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் தாலுகா, மாதனூர் ஒன்றியம், தேவலாபுரம் ஊராட்சியில் இன்று (ஆகஸ்ட் 26) தனியார் தொழிற்சாலை ஒன்றின் இரும்பு கேட்டில் நாய் ஒன்று சிக்கிக்கொண்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் தீயணைப்பு வீரர்கள், பணியாளர்கள் உதவியுடன் கட்டர் மூலம் கேட் கம்பியை அறுத்து நாயை பத்திரமாக உயிருடன் மீட்டனர்.
தீயணைப்பு வீரர்களின் மனித நேயமிக்க செயலை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.
    user_Yuvaraj Tirupattur Dist News R
    Yuvaraj Tirupattur Dist News R
    Grain Wholesaler ஆம்பூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    2 hrs ago
  • நேபாளத்தில் கடுமையான வெள்ளப்பெருக்கு; அடித்து செல்லப்பட்ட பாலம் திபெத்தில் இருந்து நேபாளத்திற்குள் வரும் போட்டே கோசி ஆற்றில் காலை 9 மணியளவில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் தாதிங் மாவட்டத்தின் மலேகு பகுதியில் உள்ள மலேகு பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் காட்சி!
    1
    நேபாளத்தில் கடுமையான வெள்ளப்பெருக்கு; அடித்து செல்லப்பட்ட பாலம்
திபெத்தில் இருந்து நேபாளத்திற்குள் வரும் போட்டே கோசி ஆற்றில் காலை 9 மணியளவில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் தாதிங் மாவட்டத்தின் மலேகு பகுதியில் உள்ள மலேகு பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் காட்சி!
    user_Just Now Karimangalam
    Just Now Karimangalam
    Media company கரீமங்கலம், தருமபுரி, தமிழ்நாடு•
    1 hr ago
  • காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் குடிமக்கள்  நுகர்வோர் மன்றம் சார்பில் நுகர்வோர்  விழிப்புணர்வு கூட்டம். காவேரிப்பட்டணம்அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி  குடிமக்கள்  நுகர்வோர் மன்றம் சார்பில் நுகர்வோர்  விழிப்புணர்வு நடைப்பெற்றது, பள்ளியின் தலைமை ஆசிரியர் வேந்தன் தலைமையில் நடைப்பெற்ற இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக சமுக நுகர்வேர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர்  டாக்டர் சந்திரமோகன் கலந்துகொண்டார்.
    1
    காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் குடிமக்கள் 
நுகர்வோர் மன்றம் சார்பில் நுகர்வோர்  விழிப்புணர்வு கூட்டம்.


காவேரிப்பட்டணம்அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 
குடிமக்கள் 
நுகர்வோர் மன்றம் சார்பில் நுகர்வோர்  விழிப்புணர்வு
நடைப்பெற்றது, பள்ளியின் தலைமை ஆசிரியர் வேந்தன் தலைமையில் நடைப்பெற்ற இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக
சமுக நுகர்வேர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் 
டாக்டர் சந்திரமோகன் கலந்துகொண்டார்.
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    9 hrs ago
  • மாரண்டஅள்ளி அருகே ஏரியில் கிராவல் மண் கடத்தல் – 2 டிப்பர் லாரிகள் பறிமுதல் தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏரிகளில் இருந்து சட்டவிரோதமாக கிராவல் மண் கடத்தப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. குறிப்பாக, பஞ்சப்பள்ளி, செவத்தம்பட்டு, கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரிகளில் அனுமதியின்றி மண் அள்ளப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, சட்டவிரோத மண் கடத்தலை தடுக்க மாவட்ட ஆட்சியர் சரவணன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், தர்மபுரி புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் புவனமாணிக்கம் தலைமையிலான அதிகாரிகள் மாரண்டஅள்ளி அருகே கோவில்பட்டி கூட்ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக வந்த இரண்டு டிப்பர் லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில், ஏரியில் இருந்து வண்டல் மண் எடுக்க அனுமதி பெற்றுவிட்டு, அதற்கு பதிலாக அனுமதியின்றி கிராவல் மண் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, சுமார் ரூ.2 லட்சத்து 4 ஆயிரம் மதிப்புள்ள இரண்டு டிப்பர் லாரிகள் மற்றும் அவற்றில் இருந்த 4 யூனிட் கிராவல் மண்ணை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர், லாரிகள் மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன. இதுதொடர்பாக மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பஞ்சப்பள்ளியை சேர்ந்த ஓட்டுநர் அருள் (36), தொட்டபடகாண்டஅள்ளியை சேர்ந்த ஓட்டுநர் முனியப்பன் (29), செவத்தம்பட்டியை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் அருண்குமார் (48), வீரமணி (53) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏரிகளில் இருந்து தொடர்ந்து சட்டவிரோதமாக மண் கடத்தப்படுவதை தடுக்க அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
    1
    மாரண்டஅள்ளி அருகே ஏரியில் கிராவல் மண் கடத்தல் – 2 டிப்பர் லாரிகள் பறிமுதல்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏரிகளில் இருந்து சட்டவிரோதமாக கிராவல் மண் கடத்தப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன.
குறிப்பாக, பஞ்சப்பள்ளி, செவத்தம்பட்டு, கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரிகளில் அனுமதியின்றி மண் அள்ளப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, சட்டவிரோத மண் கடத்தலை தடுக்க மாவட்ட ஆட்சியர் சரவணன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில், தர்மபுரி புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் புவனமாணிக்கம் தலைமையிலான அதிகாரிகள் மாரண்டஅள்ளி அருகே கோவில்பட்டி கூட்ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சந்தேகத்திற்கிடமாக வந்த இரண்டு டிப்பர் லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில், ஏரியில் இருந்து வண்டல் மண் எடுக்க அனுமதி பெற்றுவிட்டு, அதற்கு பதிலாக அனுமதியின்றி கிராவல் மண் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, சுமார் ரூ.2 லட்சத்து 4 ஆயிரம் மதிப்புள்ள இரண்டு டிப்பர் லாரிகள் மற்றும் அவற்றில் இருந்த 4 யூனிட் கிராவல் மண்ணை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர், லாரிகள் மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.
இதுதொடர்பாக மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பஞ்சப்பள்ளியை சேர்ந்த ஓட்டுநர் அருள் (36), தொட்டபடகாண்டஅள்ளியை சேர்ந்த ஓட்டுநர் முனியப்பன் (29), செவத்தம்பட்டியை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் அருண்குமார் (48), வீரமணி (53) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏரிகளில் இருந்து தொடர்ந்து சட்டவிரோதமாக மண் கடத்தப்படுவதை தடுக்க அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
    user_SURENDIRAVARMA. C
    SURENDIRAVARMA. C
    Local News Reporter Palakkodu, Dharmapuri•
    1 hr ago
  • மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் 74-வது பிறந்தநாள்: தருமபுரியில் தேமுதிகவினர் கேக் வெட்டி கொண்டாட்டம்..! மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் 74-வது பிறந்தநாள்: தருமபுரியில் தேமுதிகவினர் கேக் வெட்டி கொண்டாட்டம் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவரும், மறைந்த மக்கள் தலைவருமான கேப்டன் விஜயகாந்தின் 74-வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் தேமுதிக தொண்டர்களால் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தருமபுரி மாவட்டத்தில் தேமுதிகவினர் கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். தருமபுரி நகர பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தேமுதிக மாவட்ட செயலாளர் குமார் தலைமை தாங்கினார். கேப்டன் விஜயகாந்தின் 74-வது பிறந்தநாளை குறிக்கும் வகையில் பிரமாண்ட கேக் தயார் செய்யப்பட்டு வெட்டப்பட்டது. பின்னர் அந்த கேக் அங்கு திரண்டிருந்த பொதுமக்கள், பயணிகள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தேமுதிக அவைத்தலைவர் டாக்டர் இளங்கோவன், நகர செயலாளர் சுரேஸ் உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட தேமுதிக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
    1
    மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் 74-வது பிறந்தநாள்: தருமபுரியில் தேமுதிகவினர் கேக் வெட்டி கொண்டாட்டம்..!
மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் 74-வது பிறந்தநாள்: தருமபுரியில் தேமுதிகவினர் கேக் வெட்டி கொண்டாட்டம்
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவரும், மறைந்த மக்கள் தலைவருமான கேப்டன் விஜயகாந்தின் 74-வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் தேமுதிக தொண்டர்களால் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தருமபுரி மாவட்டத்தில் தேமுதிகவினர் கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.
தருமபுரி நகர பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தேமுதிக மாவட்ட செயலாளர் குமார் தலைமை தாங்கினார். கேப்டன் விஜயகாந்தின் 74-வது பிறந்தநாளை குறிக்கும் வகையில்  பிரமாண்ட கேக் தயார் செய்யப்பட்டு வெட்டப்பட்டது. பின்னர் அந்த கேக் அங்கு திரண்டிருந்த பொதுமக்கள், பயணிகள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தேமுதிக அவைத்தலைவர் டாக்டர் இளங்கோவன், நகர செயலாளர் சுரேஸ் உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட தேமுதிக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
    user_DPI EXPRESS NEWS
    DPI EXPRESS NEWS
    Psychologist Dharmapuri, Tamil Nadu•
    6 hrs ago
  • பாலக்கோட்டில் முறைகேடாக செயல்படும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையமா? – நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக புகார்! தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு போக்குவரத்து பணிமனை அருகே சமீபகாலமாக செயல்பட்டு வரும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தண்ணீர் பற்றாக்குறை நிலவும் பகுதியில் ஆழ்துளை கிணறு மூலம் அதிகளவில் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும், இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி, மாவட்ட ஆட்சியர் உரிய ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளார். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான எர்ரனஅள்ளி, கரகதஅள்ளி, பேளாரஅள்ளி உள்ளிட்ட ஊராட்சிப் பகுதிகள் வறட்சியின் தாக்கத்தை எதிர்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இப்பகுதிகளில் போதிய மழையின்மை மற்றும் நீராதாரங்கள் குறைந்து வருவதால், விவசாயம் மேற்கொள்வதில் விவசாயிகள் சிரமம் அடைந்து வருவதுடன், கால்நடைகளுக்கு தேவையான தண்ணீரை வழங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டு வருவதாகவும், சில பகுதிகளில் குடிநீருக்காக பொதுமக்கள் சிரமப்படுவதாகவும் சமூக ஆர்வலர் தெரிவித்துள்ளார். இந்த சூழ்நிலையில், பாலக்கோடு அரசு போக்குவரத்து பணிமனை அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருவதாகவும், அங்கு ஆழ்துளை கிணறு மூலம் தினசரி பல ஆயிரம் லிட்டர் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு, சுத்திகரிப்பு செய்யப்பட்ட பின்னர் விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பாலக்கோடு அவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன், மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், ஏற்கனவே தண்ணீர் பற்றாக்குறை நிலவி வரும் பாலக்கோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீரை வணிக நோக்கத்திற்காக அதிகளவில் உறிஞ்சினால், அதன் தாக்கம் பொதுமக்களின் குடிநீர் ஆதாரங்களிலும் ஏற்படும் என தெரிவித்துள்ளார். குறிப்பாக, வீடுகள் மற்றும் விவசாய பயன்பாட்டிற்காக பொதுமக்கள் அமைத்துள்ள ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து வருவதாகவும், இதே நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் அந்த ஆழ்துளை கிணறுகளும் வறண்டு போகும் அபாயம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், வணிக நோக்கில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படுவதற்கு சம்பந்தப்பட்ட துறைகளின் உரிய அனுமதிகள் பெறப்பட்டுள்ளதா, நிலத்தடி நீரை எடுப்பதற்கான அனுமதி உள்ளதா, அனுமதி பெற்ற இடத்திலேயே சுத்திகரிப்பு நிலையம் செயல்படுகிறதா என்பது குறித்து அதிகாரிகள் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அனுமதி பெற்ற இடம் வேறு பகுதியாக இருந்து, பாலக்கோடு நகரப் பகுதியில் வேறு இடத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வந்தால், அது தொடர்பாகவும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். மேலும், குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடு காரணமாக சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், பொதுமக்களின் குடிநீர் தேவைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனால், மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை, உள்ளாட்சி அமைப்பு, குடிநீர் வழங்கல் மற்றும் நிலத்தடி நீர் தொடர்புடைய அதிகாரிகளை கொண்டு சம்பந்தப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நேரில் ஆய்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆய்வின்போது, நிலையத்திற்கு தேவையான அனைத்து அரசு அனுமதிகளும் பெறப்பட்டுள்ளதா, நிலத்தடி நீர் எடுக்க அனுமதி உள்ளதா, எவ்வளவு அளவு தண்ணீர் உறிஞ்சப்படுகிறது, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எவ்வாறு விற்பனை செய்யப்படுகிறது உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர் தெரிவித்துள்ளார். தண்ணீர் பற்றாக்குறை நிலவும் பகுதியில் வணிக நோக்கத்திற்காக நிலத்தடி நீர் அதிகளவில் உறிஞ்சப்படுவதாக எழுந்துள்ள புகார் குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக விசாரணை நடத்தி, விதிமீறல்கள் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. பேட்டி : சரவணன் - சமூக ஆர்வலர்
    1
    பாலக்கோட்டில் முறைகேடாக செயல்படும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையமா? – நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக புகார்!

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு போக்குவரத்து பணிமனை அருகே சமீபகாலமாக செயல்பட்டு வரும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 
தண்ணீர் பற்றாக்குறை நிலவும் பகுதியில் ஆழ்துளை கிணறு மூலம் அதிகளவில் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும், இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி, மாவட்ட ஆட்சியர் உரிய ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான எர்ரனஅள்ளி, கரகதஅள்ளி, பேளாரஅள்ளி உள்ளிட்ட ஊராட்சிப் பகுதிகள் வறட்சியின் தாக்கத்தை எதிர்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
இப்பகுதிகளில் போதிய மழையின்மை மற்றும் நீராதாரங்கள் குறைந்து வருவதால், விவசாயம் மேற்கொள்வதில் விவசாயிகள் சிரமம் அடைந்து வருவதுடன், கால்நடைகளுக்கு தேவையான தண்ணீரை வழங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டு வருவதாகவும், சில பகுதிகளில் குடிநீருக்காக பொதுமக்கள் சிரமப்படுவதாகவும் சமூக ஆர்வலர் தெரிவித்துள்ளார்.
இந்த சூழ்நிலையில், பாலக்கோடு அரசு போக்குவரத்து பணிமனை அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருவதாகவும், அங்கு ஆழ்துளை கிணறு மூலம் தினசரி பல ஆயிரம் லிட்டர் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு, சுத்திகரிப்பு செய்யப்பட்ட பின்னர் விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து பாலக்கோடு அவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன், மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில், ஏற்கனவே தண்ணீர் பற்றாக்குறை நிலவி வரும் பாலக்கோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீரை வணிக நோக்கத்திற்காக அதிகளவில் உறிஞ்சினால், அதன் தாக்கம் பொதுமக்களின் குடிநீர் ஆதாரங்களிலும் ஏற்படும் என தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, வீடுகள் மற்றும் விவசாய பயன்பாட்டிற்காக பொதுமக்கள் அமைத்துள்ள ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து வருவதாகவும், இதே நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் அந்த ஆழ்துளை கிணறுகளும் வறண்டு போகும் அபாயம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், வணிக நோக்கில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படுவதற்கு சம்பந்தப்பட்ட துறைகளின் உரிய அனுமதிகள் பெறப்பட்டுள்ளதா, நிலத்தடி நீரை எடுப்பதற்கான அனுமதி உள்ளதா, அனுமதி பெற்ற இடத்திலேயே சுத்திகரிப்பு நிலையம் செயல்படுகிறதா என்பது குறித்து அதிகாரிகள் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
அனுமதி பெற்ற இடம் வேறு பகுதியாக இருந்து, பாலக்கோடு நகரப் பகுதியில் வேறு இடத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வந்தால், அது தொடர்பாகவும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடு காரணமாக சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், பொதுமக்களின் குடிநீர் தேவைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனால், மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை, உள்ளாட்சி அமைப்பு, குடிநீர் வழங்கல் மற்றும் நிலத்தடி நீர் தொடர்புடைய அதிகாரிகளை கொண்டு சம்பந்தப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நேரில் ஆய்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஆய்வின்போது, நிலையத்திற்கு தேவையான அனைத்து அரசு அனுமதிகளும் பெறப்பட்டுள்ளதா, நிலத்தடி நீர் எடுக்க அனுமதி உள்ளதா, எவ்வளவு அளவு தண்ணீர் உறிஞ்சப்படுகிறது, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எவ்வாறு விற்பனை செய்யப்படுகிறது உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர் தெரிவித்துள்ளார்.
தண்ணீர் பற்றாக்குறை நிலவும் பகுதியில் வணிக நோக்கத்திற்காக நிலத்தடி நீர் அதிகளவில் உறிஞ்சப்படுவதாக எழுந்துள்ள புகார் குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக விசாரணை நடத்தி, விதிமீறல்கள் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 
பேட்டி :  சரவணன் - சமூக ஆர்வலர்
    user_Just Now Karimangalam
    Just Now Karimangalam
    Media company கரீமங்கலம், தருமபுரி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • ஊத்தங்கரை அருகே அனுமதி பெறாத செங்கல் சூளை. லோடு ஏற்றும்போது செங்கல் சரிந்து விழுந்து ஒருவர் உயிரிலப்பு. ஊத்தங்கரை அருகே அனுமதி பெறாத செங்கல் சூளை. லோடு ஏற்றும்போது செங்கல் சரிந்து விழுந்து ஒருவர் பலி. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சென்னப்பநாய்க்கனூர் அருகே கலைஞர் நகரைச் சேர்ந்த நாகலிங்கம் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளை இயங்கி வருகிறது, இந்த செங்கல் சூளை அனுமதி பெறாமல் நடைபெறுவது மட்டுமின்றி இரவு நேரங்களில் சூளைக்கு தேவையான செம்மண்னை இரவு நேரங்களில் அனுமதியின்றி திருடுவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை டிராக்டரில் செங்கல் லோடு ஏற்றிக்கொண்டிருக்கும் போது திப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பவர் மீது செங்கல் சரிந்து விழுந்தது, அருகில் இருந்தவர் சேகரை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் ஆனால் மருத்துவர் இறந்துவிட்டதாக தெரிவித்தாக கூறப்படுகிறது. இதுபோன்று ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதி பெறாத பாதுகாப்பின்றி செயல்படும் செங்கல் சூலைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    ஊத்தங்கரை அருகே அனுமதி பெறாத செங்கல் சூளை.
லோடு ஏற்றும்போது செங்கல் சரிந்து விழுந்து ஒருவர் உயிரிலப்பு.
ஊத்தங்கரை அருகே அனுமதி பெறாத செங்கல் சூளை.
லோடு ஏற்றும்போது செங்கல் சரிந்து விழுந்து ஒருவர் பலி.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சென்னப்பநாய்க்கனூர் அருகே கலைஞர் நகரைச் சேர்ந்த நாகலிங்கம் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளை இயங்கி வருகிறது, இந்த செங்கல் சூளை அனுமதி பெறாமல் நடைபெறுவது மட்டுமின்றி இரவு நேரங்களில் சூளைக்கு தேவையான செம்மண்னை இரவு நேரங்களில் அனுமதியின்றி  திருடுவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில்  செவ்வாய்க்கிழமை காலை டிராக்டரில் செங்கல் லோடு ஏற்றிக்கொண்டிருக்கும் போது திப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பவர் மீது செங்கல் சரிந்து விழுந்தது, அருகில் இருந்தவர் சேகரை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் ஆனால் மருத்துவர் இறந்துவிட்டதாக தெரிவித்தாக கூறப்படுகிறது. இதுபோன்று ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதிகளில் 
அனுமதி பெறாத பாதுகாப்பின்றி செயல்படும் செங்கல் சூலைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_செல்வம்
    செல்வம்
    பத்திரிகையாளர் Krishnagiri, Tamil Nadu•
    23 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.