Shuru
Apke Nagar Ki App…
காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் சார்பில் நுகர்வோர் விழிப்புணர்வு கூட்டம். காவேரிப்பட்டணம்அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் சார்பில் நுகர்வோர் விழிப்புணர்வு நடைப்பெற்றது, பள்ளியின் தலைமை ஆசிரியர் வேந்தன் தலைமையில் நடைப்பெற்ற இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக சமுக நுகர்வேர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் சந்திரமோகன் கலந்துகொண்டார்.
FAYAZ
காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் சார்பில் நுகர்வோர் விழிப்புணர்வு கூட்டம். காவேரிப்பட்டணம்அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் சார்பில் நுகர்வோர் விழிப்புணர்வு நடைப்பெற்றது, பள்ளியின் தலைமை ஆசிரியர் வேந்தன் தலைமையில் நடைப்பெற்ற இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக சமுக நுகர்வேர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் சந்திரமோகன் கலந்துகொண்டார்.
More news from தமிழ்நாடு and nearby areas
- பாலக்கோடு: சாமியார் நகரில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் சாமி தரிசனம் தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே சாமியார் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி கணபதி பூஜையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. முக்கிய நிகழ்வான இன்று அதிகாலை கலச ஆராதனை, நவகிரக ஹோமம், பஞ்சசூக்த ஹோமம், துர்கா சகஸ்ரநாமம், மகா சாந்தி ஹோமம், வேதபாராயணம், பூர்ணாஹுதி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து கோ பூஜையும் நடைபெற்றது. இதையடுத்து யாகசாலையில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட புனித நீர் கலசங்களை கோயில் முக்கியஸ்தர்கள் தங்கள் தலைமேல் சுமந்து கோயிலுக்கு கொண்டு வந்தனர். பின்னர் வேதபாராயணர் பரந்தாமன் தலைமையில் கோயில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் மீதும் புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கும்பாபிஷேக விழாவில் சாமியார் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. விழாவில் ஊர்கவுண்டர் சுப்ரமணி, மந்திரிகவுண்டர் சின்னராஜ், கோல்காரர் ரமேஷ், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பொப்பிடி முருகேசன், பூசாரி மாரியப்பன் உள்ளிட்ட ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் விழாக்குழுவினர் மற்றும் சாமியார் நகர் பொதுமக்கள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.1
- கள்ளச்சாராயம் மற்றும் சட்டவிரோத மது போதை மருந்துகளால் ஏற்படும் தீமைகள் குறித்து ஓநாய், கொரில்லா குரங்கு பொம்மைள் மாணவ மாணவிகளிடம் விழிப்புணர்வு - சேலம் சரக காவல்துறை DIG, தருமபுரி மாவட்ட SP பங்கேற்பு தர்மபுரி மாவட்டம் அரூரில் தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் கள்ளச்சாராயம், சட்டவிரோத மது போதை மருந்துகளால் ஏற்படும் தீமைகள் குறித்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சி தர்மபுரி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சேலம் சரக காவல்த்துணை தலைவர் சந்தோஷ் ஹதிமேனி, மற்றும் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர், இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் காவல் துறை சார்பில் மாணவ மாணவிகளுக்கு கள்ளச்சாராயம் மற்றும் மது போதைகளால் நமது உடல் நலம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது, கள்ள சாராயத்தினால் மனிதர்களுக்கு நினைவாற்றல். மங்குதல், கண்பார்வை இழப்பு, நரம்புத் தளர்ச்சி, சிறுநீரகம், கல்லீரல், திடீர்மாரடைப்பு, வாந்தி, வயிற்றுப்புண், ரத்த அழுத்தம், இதய வீக்கம் ஆகியவை பாதிக்கப்படும் மேலும் நம் குடும்பத்தில் உள்ள உறவினர்கள் குடும்ப உறுப்பினர்கள் என அனைவரும் சுயமரியாதையை இழக்க நேரிடும், சமூக விரோத செயல்களில் ஈடுபட வழி வகுக்கும். குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் சாலை விபத்துகள் ஏற்பட்டு உயிர் இழப்பு ஏற்படலாம் என மாணவ மாணவிகளிடம் எடுத்துரைத்தனர், மேலும் போதைப் பொருட்களுக்கு எதிராக உறுதிமொழி எடுத்தனர். குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் விபத்துக்கள் ஏற்படுவதோடு அவர்களுக்கு இந்த குற்றத்திற்காக குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கலாம் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கள்ளச்சாராயத்தை வைத்திருப்பது, தயாரித்ததோ, விற்பதோ, கடத்துவதோ, உபயோகிப்பதோ சட்டப்படி குற்றம் இந்த குற்றத்திற்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் குண்டர்தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கையும் உண்டு எனவும் மக்களிடமும் தன் குடும்பத்துவரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் மாணவ மாணவிகளிடம் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள் கள்ளச்சாராயத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு நாடகம் நடத்தினர் கள்ளச்சாராயம் மது போதை மருந்துகளால் ஏற்படும் தீமைகள் குறித்து கட்டுரை போட்டி ஓவியம் பேச்சுப்போட்டி ஆகிவத்தில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு காவல்துறை சார்பில் பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டன இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஏராளமான காவல்துறையினர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.1
- தமிழ்நாடு மக்கள் இயக்கம் அனைத்து தொழிற்சங்கங்களில் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..! தமிழ்நாடு மக்கள் இயக்கம் அனைத்து தொழிற்சங்கங்களில் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..! தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மக்கள் இயக்கம் அனைத்து தொழிற்சங்கங்களில் சார்பில் மாணவர்கள் இளைஞர்கள் பெண்கள் தொழிலாளர்கள் விவசாயிகள் விவசாய தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டும், ஜனநாயக உரிமைகள் மற்றும் ஜனநாயக நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும், வேலையின்மை மற்றும் ஒப்பந்த தொழிலாளர் சுரண்டல் வேண்டாம், நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழ்நாடு மக்கள் இயக்கம் தொழிற்சங்கங்களில் அனைத்து அமைப்பினர் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.1
- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் தேவலாபுரம் ஊராட்சியில் தனியார் கம்பனி கேட்டில் நாய் சிக்கியது தீ அணைப்பு வீரர்கள் நாயை மீட்டனர் *திருப்பத்தூர் மாவட்டம்* *தேவலாபுரத்தில் தொழிற்சாலை கேட்டில் சிக்கிய நாய் - தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்* திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் தாலுகா, மாதனூர் ஒன்றியம், தேவலாபுரம் ஊராட்சியில் இன்று (ஆகஸ்ட் 26) தனியார் தொழிற்சாலை ஒன்றின் இரும்பு கேட்டில் நாய் ஒன்று சிக்கிக்கொண்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் தீயணைப்பு வீரர்கள், பணியாளர்கள் உதவியுடன் கட்டர் மூலம் கேட் கம்பியை அறுத்து நாயை பத்திரமாக உயிருடன் மீட்டனர். தீயணைப்பு வீரர்களின் மனித நேயமிக்க செயலை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.1
- 25.08.2026 இன்று, அமலாக்கப் பணியகம். குற்றப்புலனய்வுத்துறை,சென்னை திருவண்ணாமலை மாவட்டம் காவல்துறை இணைந்து நடத்தும். கள்ளச்சராயம் மற்றும் சட்டவிரோத மதுபோதயினால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை ஒன்றியம் ஜமுனாமரத்தூர் புதிய பஸ் நிலையம் VJS திருமண மண்டபத்தில் தமிழ் நாடு காவல் துறை சார்பில் 25.08.2026 இன்று, அமலாக்கப் பணியகம். குற்றப்புலனய்வுத்துறை,சென்னை திருவண்ணாமலை மாவட்டம் காவல்துறை இணைந்து நடத்தும். கள்ளச்சராயம் மற்றும் சட்டவிரோத மதுபோதயினால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மதுவிலக்கு அமலாக்கத்துறை பிரிவு காவல் கண்காணிப்பளர், திரு.செந்தில் குமார் I.P.S. அவர்கள் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பளர் திரு.செந்தில் குமார் மற்றும் ஆரணி கோட்டாட்சியர் திரு. சிவகுமார் அவர்கள் போளூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் திரு பழனி அவர்கள் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் திரு.கோவிந்த சாமி ஆகியோர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.மேலும் கள்ளச்சாரத்தினால் ஏற்படும் தீமைகள் பற்றி ஆரணி சுமதி நாடக மன்றத்தினரால் கலை நிகழ்ச்சி சம்பந்தமாக விழிப்புணர்வு நிகழ்ச்சி. பள்ளி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பேச்சு போட்டிகள் ஓவிய போட்டிகள் கட்டுரை போட்டிகள் மற்றும் ஜமுனாமுத்தூர் மலை கிராமங்களில் பொதுமக்கள் மற்றும் மகளிர் சுய உதவிகளுக்கு இடையே கோலப் போட்டிகள் இசை நாற்காலி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு மதுவிலக்கு அமலாக்கத்துறை பிரிவு காவல் கண்காணிப்பளர், திரு.செந்தில் குமார் I.P.S. அவர்கள் கரங்களால் பரிசு பொருட்கள், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினர், மேலும் அவர் எழுதிய " பெரிதினும் பெரிது கேள் ! புத்தகம் ஒன்று நிகழ்ச்சில் பங்கேற்ற மகளிர் குழுவுக்கு புத்தகம் ஒன்று பரிசு வழங்கி நிகழ்ச்சியை முடித்தனர்.3
- சேலத்தில் தானியங்கி கேமரா மூலம் அபராதம்! கண்காணிப்பு அறையை திறந்து வைத்த காவல் ஆணையாளர்... சேலம் மாநகர காவல் துறை சார்பில் போக்குவரத்து விதிமுறைகளை சரியாக பின்பற்றாத வாகனங்களை கண்காணித்து தானியங்கி கேமரா மூலம் அபராதம் பிரிக்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அதற்கான கண்காணிப்பு அதை திறப்பு விழா காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சேலம் மாநகர காவல் ஆணையாளர் ஜோசி நிர்மல் குமார் அவர்கள் காவல் கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்து தானியங்கி கேமராக்கள் செயல்படும் விதம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார். இந்த நிகழ்ச்சியில் மாநகர காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் பலர் கலந்து கொண்டனர்.1
- அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி, தமிழ்நாடு மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி தமிழ்நாடு மக்கள் இயக்கம் சார்பில் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்கவேண்டும்.ஜனநாயக உரிமைகள் மற்றும் ஜனநாயக நிறுவனங்களை பாதுகாக்கவேண்டும். வேலையின்மை மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர் சுரண்டலை கைவிடவேண்டும்.நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளைத் திரும்பப் பெறவேண்டும். கல்வி வணிகமயத்தையும், நீட் உள்ளிட்ட தேர்வு முறைகளை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும்.100 நாள் வேலைத் திட்டத்தை பாதுகாக்க வேண்டும் பெண்களுக்கு 33 சதஇடஒதுக்கீட்டை சட்டமாக்க வேண்டும்.சாதிய ஒடுக்குமுறை, ஆணவப் படுகொலைக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும். பழங்குடியின மக்களின் உரிமைகளை பாதுகாக்கவேண்டும்.மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத்தை வணிகமயமாக்குவதை கைவிடவேண்டும்.மாநில உரிமைகள், தாய்மொழி மற்றும் பண்பாட்டு உரிமைகளை பாதுகாக்கவேணடும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் சட்டங்களை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு ஏஐடியுசி மாவட்ட செயலாளர் கே.மணி தலைமை வகித்தார்.சிஐடியு மாநில துணைத்தலைவர் சி.நாகராசன் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர்கள் சோ.அருச்சுணன் , எஸ்.சின்னசாமி , விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் எம்.முத்து ,அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.மல்லிகா, ,ஏஐசிசிடியு மாவட்ட தலைவர் கே.கோவிந்தராஜ் ,மாவட்ட நிர்வாகிகள் சிவராமன் , ராகுல் டிராவிட் ஏஐடியுசி மாநிலக்குழு உறுப்பினர் ,ஏ.சி.மணி,ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.1
- கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா – பொதுமக்களுக்கு இனிப்பு, மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி கொண்டாடப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வடக்கு ஒன்றியம், கிளாக்காடு ஊராட்சி கண்ணூர் கிராமத்தில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா சிறப்பாக விழாவையொட்டி தேமுதிகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி விஜயகாந்தின் பிறந்தநாளை கொண்டாடினர். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் பேனாக்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாளை சிறப்பித்தனர்.1
- தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிர் அணி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள் சேலம் மாவட்டம் ஆத்தூர் புதிய பஸ் நிலையம் அருகே இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் – சேலம் கிழக்கு மாவட்ட மகளிர் அணி சார்பாக, தமிழக சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அறிவிக்கப்பட்ட ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்கள் மற்றும் மகளிர் வெற்றிப் பயணத் திட்டத்ததை அறிவித்ததை அடுத்து ஆத்தூர் பேருந்து நிலையத்தில் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமையில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.2