கள்ளச்சாராயம் மற்றும் சட்டவிரோத மது போதை மருந்துகளால் ஏற்படும் தீமைகள் குறித்து ஓநாய், கொரில்லா குரங்கு பொம்மைள் மாணவ மாணவிகளிடம் விழிப்புணர்வு - சேலம் சரக காவல்துறை DIG, தருமபுரி மாவட்ட SP பங்கேற்பு தர்மபுரி மாவட்டம் அரூரில் தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் கள்ளச்சாராயம், சட்டவிரோத மது போதை மருந்துகளால் ஏற்படும் தீமைகள் குறித்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சி தர்மபுரி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சேலம் சரக காவல்த்துணை தலைவர் சந்தோஷ் ஹதிமேனி, மற்றும் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர், இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் காவல் துறை சார்பில் மாணவ மாணவிகளுக்கு கள்ளச்சாராயம் மற்றும் மது போதைகளால் நமது உடல் நலம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது, கள்ள சாராயத்தினால் மனிதர்களுக்கு நினைவாற்றல். மங்குதல், கண்பார்வை இழப்பு, நரம்புத் தளர்ச்சி, சிறுநீரகம், கல்லீரல், திடீர்மாரடைப்பு, வாந்தி, வயிற்றுப்புண், ரத்த அழுத்தம், இதய வீக்கம் ஆகியவை பாதிக்கப்படும் மேலும் நம் குடும்பத்தில் உள்ள உறவினர்கள் குடும்ப உறுப்பினர்கள் என அனைவரும் சுயமரியாதையை இழக்க நேரிடும், சமூக விரோத செயல்களில் ஈடுபட வழி வகுக்கும். குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் சாலை விபத்துகள் ஏற்பட்டு உயிர் இழப்பு ஏற்படலாம் என மாணவ மாணவிகளிடம் எடுத்துரைத்தனர், மேலும் போதைப் பொருட்களுக்கு எதிராக உறுதிமொழி எடுத்தனர். குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் விபத்துக்கள் ஏற்படுவதோடு அவர்களுக்கு இந்த குற்றத்திற்காக குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கலாம் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கள்ளச்சாராயத்தை வைத்திருப்பது, தயாரித்ததோ, விற்பதோ, கடத்துவதோ, உபயோகிப்பதோ சட்டப்படி குற்றம் இந்த குற்றத்திற்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் குண்டர்தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கையும் உண்டு எனவும் மக்களிடமும் தன் குடும்பத்துவரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் மாணவ மாணவிகளிடம் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள் கள்ளச்சாராயத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு நாடகம் நடத்தினர் கள்ளச்சாராயம் மது போதை மருந்துகளால் ஏற்படும் தீமைகள் குறித்து கட்டுரை போட்டி ஓவியம் பேச்சுப்போட்டி ஆகிவத்தில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு காவல்துறை சார்பில் பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டன இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஏராளமான காவல்துறையினர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

- தருமபுரியில் கேப்டன் விஜயகாந்தின் 74வது பிறந்தநாள் விழா: கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கிய தேமுதிகவினர் தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் மறைந்த தேமுதிக தலைவர் மற்றும் கேப்டன் விஜயகாந்தின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு தேமுதிக சார்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தேமுதிக மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், விஜயகாந்தின் 74வது பிறந்தநாளை குறிக்கும் வகையில் பிரம்மாண்ட கேக் வெட்டப்பட்டது. பின்னர் கேக் துண்டுகள் பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டன. விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவுகளை போற்றும் வகையிலும், பொதுமக்களுடன் இணைந்து பிறந்தநாளை கொண்டாடும் வகையிலும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் தேமுதிக அவைத் தலைவர் டாக்டர் இளங்கோவன், நகர செயலாளர் சுரேஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். மேலும், 50-க்கும் மேற்பட்ட தேமுதிகவினர் பங்கேற்று கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி விஜயகாந்தின் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினர்.1
- தமிழ்நாடு மக்கள் இயக்கம் அனைத்து தொழிற்சங்கங்களில் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..! தமிழ்நாடு மக்கள் இயக்கம் அனைத்து தொழிற்சங்கங்களில் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..! தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மக்கள் இயக்கம் அனைத்து தொழிற்சங்கங்களில் சார்பில் மாணவர்கள் இளைஞர்கள் பெண்கள் தொழிலாளர்கள் விவசாயிகள் விவசாய தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டும், ஜனநாயக உரிமைகள் மற்றும் ஜனநாயக நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும், வேலையின்மை மற்றும் ஒப்பந்த தொழிலாளர் சுரண்டல் வேண்டாம், நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழ்நாடு மக்கள் இயக்கம் தொழிற்சங்கங்களில் அனைத்து அமைப்பினர் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.1
- பாலக்கோடு அருகே கெயில் குழாயிலிருந்து வெளியேறிய நச்சுநீர் – விவசாய நிலத்தில் கலந்ததால் பசுமாடு உயிரிழப்பு தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே கெயில் குழாயை சுத்தம் செய்யும் பணியின்போது ஆயில் கலந்த நச்சுநீர் விவசாய நிலத்தில் விடப்பட்டதால் நச்சு நீர் கலந்த புல் மற்றும் பயிர்களை மேய்ந்த ஐந்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில், ஒரு பசுமாடு உயிரிழந்த சம்பவம் விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை முதல் ஓசூர் வரை தேசிய நெடுஞ்சாலை பகுதியில், சுமார் 74 கிலோமீட்டர் தொலைவிற்கு கொச்சி முதல் பெங்களூரு வரை செல்லும் கெயில் எரிவாயு குழாய் அமைக்கும் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த குழாய்களில் அவ்வப்போது பராமரிப்பு மற்றும் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில், பாலக்கோடு அருகே உள்ள ரெட்டியூர் கிராமப் பகுதியில் கெயில் குழாயை சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது குழாயில் இருந்து வெளியேறிய ஆயில் கலந்த கழிவுநீர் அதிக அளவில் விவசாய நிலப்பகுதியில் விடப்பட்டதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் விவசாய நிலத்தில் தேங்கியிருந்த தண்ணீரிலும், அப்பகுதியில் வளர்ந்திருந்த புல் மற்றும் பயிர்களிலும் நச்சுத்தன்மை கலந்ததாக கூறப்படுகிறது. இதனை அறியாமல் அப்பகுதியில் மேய்ச்சலுக்குச் சென்ற பசுமாடுகள், அந்த நிலத்தில் இருந்த புல் மற்றும் பயிர்களை மேய்ந்துள்ளன. இதையடுத்து ஐந்துக்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு வாந்தி, சோர்வு உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டு தொடர்ந்து உடல் நிலை மோசமடைந்த நிலையில், ஒரு பசுமாடு உயிரிழந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள விவசாயிகள், கெயில் குழாய் சுத்தம் செய்யும் பணியின்போது வெளியேற்றப்படும் கழிவுநீரை விவசாய நிலங்களிலும், பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் பயன்படுத்தும் பகுதிகளிலும் விடாமல், பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், உயிரிழந்த பசுமாட்டிற்கு உரிய இழப்பீடு வழங்குவதுடன், பாதிக்கப்பட்டுள்ள மற்ற கால்நடைகளுக்கு உடனடியாக கால்நடை மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். கெயில் குழாய் சுத்தம் செய்யும் பணியின்போது வெளியேற்றப்பட்டதாக கூறப்படும் ஆயில் கலந்த கழிவுநீரால் விவசாய நிலமும், கால்நடைகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, கழிவுநீர் விவசாய நிலத்தில் கலந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.1
- பாலக்கோட்டில் கேப்டன் விஜயகாந்த் 74வது பிறந்தநாள் விழா பாலக்கோட்டில் கேப்டன் விஜயகாந்த் 74வது பிறந்தநாள் விழா தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில், தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்தின் 74வது பிறந்தநாள் விழா கட்சி சார்பில் சிறப்பாக நடைபெற்றது. பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தேமுதிக தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் விஜயசங்கர் தலைமை வகித்தார். நகர செயலாளர் முருகன் வரவேற்றார். மாவட்ட இளைஞரணி செயலாளர் கணேசன், பொதுக்குழு உறுப்பினர் ரத்தினம், மத்திய ஒன்றிய செயலாளர் முயற்சி முருகேசன், வடக்கு ஒன்றிய செயலாளர் ஞானவேல், தெற்கு ஒன்றிய செயலாளர் முனுசாமி, ஒன்றிய பொருளாளர் ரங்கன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். விழாவில், பேருந்து நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த கேப்டன் விஜயகாந்தின் திருவுருவப் படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டதுடன், அன்னதானமும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அவைத்தலைவர் கிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளர் இந்திராணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாளை கொண்டாடினர்.1
- சேலத்தில் தானியங்கி கேமரா மூலம் அபராதம்! கண்காணிப்பு அறையை திறந்து வைத்த காவல் ஆணையாளர்... சேலம் மாநகர காவல் துறை சார்பில் போக்குவரத்து விதிமுறைகளை சரியாக பின்பற்றாத வாகனங்களை கண்காணித்து தானியங்கி கேமரா மூலம் அபராதம் பிரிக்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அதற்கான கண்காணிப்பு அதை திறப்பு விழா காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சேலம் மாநகர காவல் ஆணையாளர் ஜோசி நிர்மல் குமார் அவர்கள் காவல் கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்து தானியங்கி கேமராக்கள் செயல்படும் விதம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார். இந்த நிகழ்ச்சியில் மாநகர காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் பலர் கலந்து கொண்டனர்.1
- கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா – பொதுமக்களுக்கு இனிப்பு, மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி கொண்டாடப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வடக்கு ஒன்றியம், கிளாக்காடு ஊராட்சி கண்ணூர் கிராமத்தில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா சிறப்பாக விழாவையொட்டி தேமுதிகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி விஜயகாந்தின் பிறந்தநாளை கொண்டாடினர். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் பேனாக்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாளை சிறப்பித்தனர்.1
- கள்ளச்சாராயம் மற்றும் சட்டவிரோத மது போதை மருந்துகளால் ஏற்படும் தீமைகள் குறித்து ஓநாய், கொரில்லா குரங்கு பொம்மைள் மாணவ மாணவிகளிடம் விழிப்புணர்வு - சேலம் சரக காவல்துறை DIG, தருமபுரி மாவட்ட SP பங்கேற்பு தர்மபுரி மாவட்டம் அரூரில் தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் கள்ளச்சாராயம், சட்டவிரோத மது போதை மருந்துகளால் ஏற்படும் தீமைகள் குறித்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சி தர்மபுரி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சேலம் சரக காவல்த்துணை தலைவர் சந்தோஷ் ஹதிமேனி, மற்றும் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர், இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் காவல் துறை சார்பில் மாணவ மாணவிகளுக்கு கள்ளச்சாராயம் மற்றும் மது போதைகளால் நமது உடல் நலம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது, கள்ள சாராயத்தினால் மனிதர்களுக்கு நினைவாற்றல். மங்குதல், கண்பார்வை இழப்பு, நரம்புத் தளர்ச்சி, சிறுநீரகம், கல்லீரல், திடீர்மாரடைப்பு, வாந்தி, வயிற்றுப்புண், ரத்த அழுத்தம், இதய வீக்கம் ஆகியவை பாதிக்கப்படும் மேலும் நம் குடும்பத்தில் உள்ள உறவினர்கள் குடும்ப உறுப்பினர்கள் என அனைவரும் சுயமரியாதையை இழக்க நேரிடும், சமூக விரோத செயல்களில் ஈடுபட வழி வகுக்கும். குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் சாலை விபத்துகள் ஏற்பட்டு உயிர் இழப்பு ஏற்படலாம் என மாணவ மாணவிகளிடம் எடுத்துரைத்தனர், மேலும் போதைப் பொருட்களுக்கு எதிராக உறுதிமொழி எடுத்தனர். குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் விபத்துக்கள் ஏற்படுவதோடு அவர்களுக்கு இந்த குற்றத்திற்காக குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கலாம் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கள்ளச்சாராயத்தை வைத்திருப்பது, தயாரித்ததோ, விற்பதோ, கடத்துவதோ, உபயோகிப்பதோ சட்டப்படி குற்றம் இந்த குற்றத்திற்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் குண்டர்தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கையும் உண்டு எனவும் மக்களிடமும் தன் குடும்பத்துவரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் மாணவ மாணவிகளிடம் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள் கள்ளச்சாராயத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு நாடகம் நடத்தினர் கள்ளச்சாராயம் மது போதை மருந்துகளால் ஏற்படும் தீமைகள் குறித்து கட்டுரை போட்டி ஓவியம் பேச்சுப்போட்டி ஆகிவத்தில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு காவல்துறை சார்பில் பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டன இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஏராளமான காவல்துறையினர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.1
- ஊத்தங்கரை அருகே அனுமதி பெறாத செங்கல் சூளை. லோடு ஏற்றும்போது செங்கல் சரிந்து விழுந்து ஒருவர் உயிரிலப்பு. ஊத்தங்கரை அருகே அனுமதி பெறாத செங்கல் சூளை. லோடு ஏற்றும்போது செங்கல் சரிந்து விழுந்து ஒருவர் பலி. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சென்னப்பநாய்க்கனூர் அருகே கலைஞர் நகரைச் சேர்ந்த நாகலிங்கம் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளை இயங்கி வருகிறது, இந்த செங்கல் சூளை அனுமதி பெறாமல் நடைபெறுவது மட்டுமின்றி இரவு நேரங்களில் சூளைக்கு தேவையான செம்மண்னை இரவு நேரங்களில் அனுமதியின்றி திருடுவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை டிராக்டரில் செங்கல் லோடு ஏற்றிக்கொண்டிருக்கும் போது திப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பவர் மீது செங்கல் சரிந்து விழுந்தது, அருகில் இருந்தவர் சேகரை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் ஆனால் மருத்துவர் இறந்துவிட்டதாக தெரிவித்தாக கூறப்படுகிறது. இதுபோன்று ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதி பெறாத பாதுகாப்பின்றி செயல்படும் செங்கல் சூலைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1