Shuru
Apke Nagar Ki App…
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
Vinayagam Vinayagam
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
More news from Ranipet and nearby areas
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- வெலக்கல்நத்தம் அருகே உலகாண்ட ஈஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம் திருப்பத்தூர், டிச. 11- நாட்டறம்பள்ளி அருகே வெலக்கல்நத்தம் அடுத்த கிட்டப்பையனூர் கிராமத்தில் அமைந்து உள்ள சிவசக்தி ஆலயத்தில் அமைந்து உள்ள உலகாண்ட ஈஸ்வரன், உலகாண்ட நாயகி அங்காள பரமேஸ்வரி, வனபெரியாண்டச்சி, வனமுனீஸ்வரன், குபேர கணபதி, கல்யாண சுப்பிரமணியன், ஆஞ்சநேயர் ஆகிய சுவாமிகளுக்கு மஹா கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் நேற்று கணபதி ஹோமம், கணபதி பூஜை, மஹாபுன்யம், வாஸ்து ஹோமம், புண்ணியவாசம், அஷ்டபந்தன பிரதிஸ்டை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பல புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் அடங்கிய கலசம், மேள, தாளத்துடன் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, கோவில் கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. மேலும் புனிதநீர் பக்தர்கள் மீதும் தெளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து உலகாண்ட ஈஸ்வரன், உலகாண்ட நாயகி அங்காள பரமேஸ்வரி, வனபெரியாண்டச்சி, வனமுனீஸ்வரன், குபேர கணபதி, கல்யாண சுப்பிரமணியன், ஆஞ்சநேயர் ஆகிய சுவாமிகளுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஊர் கவுண்டர் செல்வராஜ் செய்து இருந்தார்.2
- தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் புதிய நகரப் பேருந்து துவக்க விழா பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன் தலைமையில் நடைபெற்றது. பாபநாசம் திமுக ஒன்றிய செயலாளர்கள் நாசர், தாமரைச்செல்வன், பாபநாசம் நகர செயலாளர் கபிலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கும்பகோணம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் கலந்துகொண்டு கும்பகோணத்திலிருந்து பாபநாசம் , அய்யம்பேட்டை, கண்டியூர் வழியாக திருவையாறு செல்லும் புதிய நகர பேருந்தினை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் மண்டல துணை மேலாளர் தங்கபாண்டியன், கும்பகோணம் கிளை மேலாளர் சுரேஷ், உதவி பொறியாளர் ராஜா , பாபநாசம் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சுமதிகண்ணதாசன், அய்யம்பேட்டை பேரூராட்சி தலைவர் புனிதவதிகுமார், பேரூராட்சி துணை தலைவர் அழகேசன்,பொதுக்குழு உறுப்பினர் ரேவதி நடராஜன்,பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் குமரேசன், பாபநாசம் சுகாதார ஆய்வாளர் பரமசிவம் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், ஓட்டுநர்கள், பொது சங்கப் பிரதிநிதிகள் ,நடத்துனர்கள், தொழில் நுட்ப பணியாளர்கள், மாவட்ட,ஒன்றிய,நகர, சார்பணி நிர்வாகிகள், கலந்து கொண்டனர்.1
- #ஓம் நமசிவாய 🙏 https://youtube.com/@muthucreatorcom1
- கணமழை காரணமாக சவுதிஅரேபியாவில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.1
- காஞ்சனா 3 🎥🩰1
- காமராஜரை இழிவாக பேசிய யூடியூப்பர் முக்தாரை கைது செய்ய வலியுறுத்தி தூத்துக்குடியில் அனைத்து நாடார் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் : பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள், அமைப்புகள் பங்கேற்பு!! தூத்துக்குடி,டிச, 9 தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரை இழிவாக பேசிய யூடியூப்பர் முக்தாரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தூத்துக்குடியில் அனைத்து நாடார் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று 08.04.2025 மாலை 4 மணிக்கு விவிடி சிக்னல் அருகில் வைத்து நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு நாடார் பேரவை வழக்கறிஞர் பிரிவு மாநில தலைவர் எஸ்.ஜெயச்சந்திரன், பெருந்தலைவர் மக்கள் நல சங்கம் அமைப்பு நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் ஆகியோர் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பனங்காட்டு மக்கள் கழகம் மாநில வழக்கறிஞரணி செயலாளர் சிலுவை நாடார், தமிழ்நாடு நாடார் பேரவை தென்மண்டல தலைவர் பொன்ராஜ் சிவா, காமராஜர் லட்சிய பேரவை பிரசன்னா,ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநில வர்த்தக அணி செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன், காங்கிரஸ் ஐஎன்டியூசி பொதுச் செயலாளர் பெருமாள்சாமி, தமிழக வெற்றிக்கழக மாவட்ட பொறுப்பாளர் அஜிதா அக்னல், தமிழ்நாடு பறையர் பாதுகாப்பு மாநில தலைவர் இளவரச பாண்டியன், சத்திரிய சான்றோர் படை ஹரி நாடார், தமிழ்நாடு வணிகர் பேரமைப்பு தூத்துக்குடி மாவட்ட தலைவர் விநாயகமூர்த்தி, பனங்காட்டு மக்கள் கழக மாநில செயலாளர் சொர்ணவேல் குமார், பனங்காட்டு மக்கள் கழக மாவட்ட செயலாளர் அற்புதராஜ்,, சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட செயலாளர் அற்புதராஜ், நாம்தமிழர் கட்சியை சார்ந்த ரூபன், தமிழ்நாடு பனை பொருள் வாரிய வாரிய உறுப்பினர் காங்கிரஸ் எடிசன், பாஜக காசிலிங்கம், மூத்த வழக்கறிஞர் ராஜ ஜெயபால் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். முக்தார் அகமதுவை கண்டித்து பல்வேறு நாடார் அமைப்பினரும் பல்வேறு சமுக அமைப்பினரும் கலந்து கொண்டு முக்தார் அகமதுவை தமிழ்நாடு அரசு கைது செய்யாததை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் பேசியதாவது : உலக அளவில் பெருந்தலைவர் என்ற பெயர் காமராஜர் ஒருவருக்கு பொருத்தமானது. இவரது ஆட்சி காலத்தில் மக்களின் வாழ்வாதாரமான குடிநீர் சீராக தங்கு தடையின்றி கிடைப்பதற்காக எத்தனை அணைக்கட்டுகள் கட்டி உள்ளார் , இதன் மூலம் பலரும் பயன்படுத்துகிறார்கள் அதுபோல் அனைத்து தரப்பு குழந்தைகள் படிக்க வேண்டும் என அவர் கொண்டு வந்த திட்டங்கள் ஏராளம் ஆகையால் கல்விக்கண் திறந்த காமராஜர் என்று போற்றப்படும் உத்தமத் தலைவரை இழிவாக பேசி தனது வயிற்று பிழைப்பு நடத்தி வரும் முக்தார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து தரப்பு சமூகத்தினர்கள் மற்றும் அமைப்பினர்கள் காவல் நிலையத்தில் தொடர்ந்து புகார் அளித்த வரும் நிலையில் தமிழக அரசு இதுவரை ஒரு நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காத்து வருகிறது. இதை பார்க்கும் பொழுது திமுகவின் கைக்கூலியாக முக்தார் செயல்படுகிறார் என சந்தேகப்பட வேண்டியது உள்ளது. ஏற்கனவே திமுக எம்பி திருச்சி சிவா காமராஜரை இழிவாக பேசிய விஷயத்தில் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் போராட்டங்கள் நடைபெற்றது இந்த விஷயத்திலும் திமுக அரசு மௌனம் சாதித்தது மட்டுமல்லாமல் திருச்சி சிவாவை கண்டிக்க கூடவில்லை இனியும் உத்தமத் தலைவர் காமராஜரை இழிவாக பேச யாரையும் அனுமதிக்காமல் கடுமையான நடவடிக்கை எடுக்க அரசு முன்வர வேண்டும். பெருந்தலைவர் காமராஜரை சிலர் இழிவாக பேசி வருவதை திமுக அரசு நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பது வேதனை அளிக்கிறது இது கண்டனத்துக்குரிய செயலாகும். என பேசினார். இதனைத் தொடர்ந்து பேசிய தமிழ்நாடு நாடார் பேரவை வழக்கறிஞர் பிரிவு மாநில தலைவர் ஜெயச்சந்திரன் பேசுகையில்: நாடார் சமுதாயத்தை இழிவு படுத்தியும், பெருந்தலைவர் காமராஜரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் மை இந்தியா என்ற யூடியூப் சேனலில் ஜாதி ரீதியாக இழிவுபடுத்தி ஊடக கோமாளி முக்தார் அகமது பேசியுள்ளார். பல்வேறு ஆதாரமில்லாத தவறான தகவல்களை கூறி இழிவாக பேசி ஜாதி துவேசத்துடன், ஜாதி வெறியை தூண்டிவிட்டு அதன் மூலம் ஜாதி கலவரத்தை ஏற்படுத்தி தமிழகத்தில் மிகப் பெரிய அளவில் ஜாதி கலவரம் உருவாக வஞ்சக கூட்டு சேர்ந்து சதி திட்டம் தீட்டி, கூட்டு சதி செய்து பண ஆதாயத்திற்காக பொய்யான அவதூறுகளை சமூக வலைதளங்களில் பரப்பி விட்டு சிறுமைப்படுத்த வேண்டும் என்றும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு, தேசவிரோத செயல்களில் ஈடுபட்டு தமிழ்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி அதன் மூலம் ஜாதி, மதகலவரம் தூண்ட திட்டமிட்டு செயல்பட்டு வரும் சமூக விரோதி முக்தார் அகமதுவையும் அவருக்கு பின்னணியில் இருந்து செயல்படும் சமூக விரோத கும்பல்கள் மீதும் புலன் விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும். மேலும் மை இந்தியா என்ற யூடியூப் சேனலை முடக்கம் செய்து, மேற்படி காமராஜர் பற்றியும், நாடார் சமுதாயம் பற்றியும் எந்த வித ஆதாரமில்லாமல் இழிவாக பேசிய பதிவுகளை உடனடியாக நீக்கம் செய்ய வேண்டும் அல்லாவிடில் நீதிமன்றம் மூலம் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று பேசினார். மேலும் அதனைத் தொடர்ந்து பேசிய பெருந்தலைவர் மக்கள் நல சங்கம் அமைப்பு நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் பேசியதாவது, கல்விக்கண் திறந்த காமராஜரை திமுக எம்பி திருச்சி சிவா இழிவாக பேசிய போதும் மற்றும் பல்வேறு காலகட்டங்களில் காமராஜர் குறித்து இழிவாக பேசிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூட தயங்கும் திமுக அரசை கண்டிக்கிறோம் . யூடியூப்பர் முக்தார் காமராஜரை இழிவாக பேசிய விஷயம் தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களையும் மிகவும் பாதித்துள்ளது. ஜாதி மத பேதமின்றி அனைவரும் நேசிக்கும் உத்தமத் தலைவரை இழிவாக பேசிய முத்தார் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீஸ் பாதுகாப்பு கொடுத்து பாதுகாப்பது வேதனை அளிக்கிறது. உடனடியாக முக்தார் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்யாவிட்டால் தமிழகம் முழுவதும் ஒரு கோடி நாடார் சொந்தங்கள் மற்றும் காமராஜரை நேசிக்கும் அனைத்து தரப்பினரும் இணைந்து திமுக கொடிக்கு அருகில் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நடத்தப்படும். தமிழக முதல்வர் தேர்தல் பிரச்சாரம் செய்ய வரும் வழியில் கருப்புக் கொடி ஏந்தி நாடார் சொந்தங்கள் தங்கள் எதிர்ப்பை காட்டுவோம் எனவும் தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சுமார் 100 பெண்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றார்கள். தூத்துக்குடியில் நடைபெற்ற இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு ஜாதி மதம் கட்சி பாகுபாடு இன்றி அனைத்து தரப்பினரும் பங்கேற்று தங்களது கண்டன உரையை பதிவு செய்தனர். என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அமைப்புகளில் நிர்வாகிகள் வணிகர்கள் இளைஞர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் குவிந்ததால் தென்பாகம் காவல் ஆய்வாளர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1