*ஶ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் 20 நாட்களுக்கு மேலாக குடிநீர் வழங்காததால் மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் ஈடுபட்டதால் பரபரப்பு* ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் கோடை காலம் தொடங்கும் முன்னரே குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு 20 நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் அதிருப்தி அடைந்த பொது மக்கள் மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் 100 ஆண்டுகள் சிறப்பு மிக்க ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் 33 வார்டுகளில் 1 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வாசித்து வருகின்றனர். ஶ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் செண்பகத்தோப்பு பேயனாற்றில் ஆழ்துளை கிணறு மற்றும் திறந்தவெளி கிணறுகள் அமைத்து மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு கடந்த 2007- ம் ஆண்டு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் நகராட்சியில் உள்ள 22 வார்டுகளுக்கு தாமிரபரணி குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது. தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தில் வழங்கப்பட்ட குடிநீருக்கு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு வழங்க வேண்டிய தொகையை நகராட்சி நிர்வாகம் நீண்ட காலமாக வழங்காமல் நிலுவை வைத்துள்ளதால் தேவையான அளவு குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதனால் செண்பகத்தோப்பு குடிநீர் மற்றும் தாமிரபரணி குடிநீர் இணைந்து வீடுகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோடைகாலம் தொடங்கும் முன்னரே குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு 20 நாட்களுக்கு மேலாகியும் குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் பொது மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்தில் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் இன்று காலை 10மணி அளவில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி 16-வது வார்டு பெரிய மாரியம்மன் கோயில் அருகே மதுரை கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியும், நகராட்சி ஆணையாளர் நேரில் வந்தால் தான் போராட்டத்தை கைவிடவும் எனக் கூறி தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு வந்தனர். பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி ஆணையாளர் நேரில் வந்து இன்று மாலை 6 மணிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் என உறுதி அளித்ததன் பேரில் சுமார் அரை மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனர்.

- ஜாதி வெறிசெயல் குடிக்கும் தண்ணிர் குழாயை அடைத்து இரு சமூகத்தினர் தண்ணியின்றி தவிக்கவிட்ட கிராமச்செயலாளர்(ஈஸ்வரன், கள்ளர்) கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சி, கம்பம் ஊராட்சி ஒன்றியம் தேனி மாவட்டம்1
- திருமங்கலம் முனிசிபல் காலனி 12வது வார்டு மூன்று மாதங்களால் அடைக்கப்பட்டிருக்கும் சாக்கடை கழிவுகள்1
- தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் என்பவர் திமுக மாவட்ட மாணவரணி அமைப்பாளராக இருந்துள்ளார் இவர் கெங்குவார்பட்டி பகுதியில் தனியார் மதுபான கடை வைத்து நடத்தி வருகிறார் இந்த கடையில் மதன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஸ்டீபன் தனியார் மதுபான கடை நடத்தி வருகிறார் இவருக்கும் சுதாகர் என்பவர் அரசு மதுபான கடையில் பார் எடுத்து நடத்தி வருகிறார் இருவருக்கும் ஏற்கனவே இந்த பார் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து உள்ளது இதனால் மதன் என்பவர் சுதாகர் நடத்தி வரும் ஹோட்டலுக்கு உணவருந்த சென்றபோது அங்கு கெங்குவார்பட்டி பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் இருந்துள்ளார் இருவருக்கும் ஓர் ஆண்டுகளுக்கு முன்பு முன் விரோதம் இருந்து வந்ததாகவும் இதனால் இருவருக்கும் அங்கு வாக்குவாதம் நடைபெற்று உள்ளது அப்போது மதனை முருகன், விமல் ராஜ் சந்தோஷ் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து தாக்கி உள்ளனர் இந்த பிரச்சனைக்கு காரணம் சுதாகர் என்று நினைத்து ஸ்டீபன் தூண்டுதலில் படி தனுஷ் மற்றும் இருவர் சேர்ந்து ஹோட்டலில் பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர். இதனை தகவல் அறிந்த சுதாகர் அங்கு வாட்ச்மேன்னாக பணிபுரியும் ஞானசேகர் என்பவரை இருசக்கர வாகனத்தை கொடுத்து யார் பெற்றோர் குண்டு வீசியது என போய் பார்த்து வாய் என கூறியுள்ளார் அப்போது அவர் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது சீசன் அரவிந்த் சக்தி பிரகாஷ் ஆகிய நான்கு பேரும் வழிமறித்து ஞானசேகரன் தாக்கி அவர் வந்த இருசக்கர வாகனத்தை தீ வைத்து எரித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து நான்கு பேரும் சுதாகர் ஓட்டலுக்கு வந்து சுதாகர் மற்றும் பிரபுவையும் தாக்கியுள்ளனர் இந்த இருதரப்பு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் பிரபு ஞானசேகர் மதன் ஆகிய மூன்று பேரும் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தேவதானப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஸ்டீபன் விமல் சந்தோஷ் தனுஷ் ஆகிய நான்கு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கெங்குவார்பட்டி பகுதியில் ஹோட்டலில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அப்பகுதி பொது மக்களிடையே அச்சமும் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது1
- கயத்தாறில் அஇஅதிமுக கிழக்கு ஒன்றியம், மேற்கு ஒன்றியம் ஆகிய இரண்டு ஓன்றிய செயல்வீரர்கள் கூட்டம் கயத்தாறு மகேஷ்வரி திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.இந்தஓன்றிய செயல்வீரர்கள் கூட்டத்திற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வகுமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் வண்டானம் கருப்பசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு வருகை புரிந்த அனைவரையும் மாவட்ட அம்மா பேரவைச் துணை செயலாளர் கருப்பசாமி பாண்டியன் வரவேற்று பேசினார்.கூட்டத்தில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் செ.ராஜ் சிறப்புரையாற்றினார்.இந்த செயல்வீரர்கள் கூட்டத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ்கட்சியின் மாவட்ட தலைவர் ராஜகோபால், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஒன்றிய கழக செயலாளர் மந்திரமூர்த்தி, நகர கழக செயலாளர் அருண், பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட பொருளாளர் சீனிவாசன், கயத்தாறு கிழக்கு ஒன்றிய தலைவர் இராமர் பாண்டியன், துணை தலைவர்கள் தங்கத்துரை, சுரேஷ் கண்ணன், இராமகிருஷ்ணன், பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் வேல்ச்சாமி, முன்னாள் எம் எல் ஏக்கள் சின்னப்பன், மோகன், மாவட்ட கலைப் பிரிவு செயலாளர் நவநீதகிருஷ்ணன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஆசூர் காளிப்பாண்டியன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் பாலகனேசன், மாவட்ட எம் ஜி ஆர் மன்ற இணைச் செயலாளர் குடியரசுபாண்டியன், கயத்தாறு நகர செயலாளர் கப்பல் ராமசாமி, மகளிர் அணி செல்லத்தாய், கோவில்பட்டி நகர செயலாளர் விஜயபாண்டியன், கோவில்பட்டி மேற்கு , கிழக்கு ஒன்றிய செயலாளர்கள் தூத்துக்குடி வடக்கு மாவட்ட எம். ஜி.ஆர் மன்ற செயலாளர் பூமாரியப்பன், துறையூர் கணேசன், பன்னீர் குளம் முத்துப்பாண்டியன், மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.4
- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை ஒட்டி மத்திய துணை ராணுவ பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி திருப்பரங்குன்றம் ஆர்ச் பகுதியில் இன்று (மார்ச்.10) மாலை தொடங்கியது. மதுரை மாநகர காவல் உதவி ஆணையர் சசி பிரியா தலைமையில் கொடி அணிவகுப்பு ஊர்வலத்தில் ஒடிசாவில் இருந்து வந்த 60 பேர் கொண்ட மத்திய துணை ராணுவ படை வீரர்கள் மற்றும் திருப்பரங்குன்றம், திருநகர் காவலர்கள் 30 பேர் இணைந்து கொடி அணிவிப்பு நடைபெற்றது. 16 கால் மண்டபம் ,கீழரத வீதி, பெரிய ரத வீதி வழியாக சன்னதி தெரு, மேலரத வீதி பஸ் ஸ்டாண்ட், திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனை, மற்றும் எக்கோ பார்க் வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது .1
- Post by ARULJEGAN1
- தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம் புத்தூரில் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நாதக வேட்பாளர் கோரிக்கை1
- தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள காக்கில் சிக்கையன் பட்டியை சேர்ந்தவர் லெனின் அவரது உறவினர் முருகன் ஆகிய இருவரும் இரண்டு சக்கர வாகனத்தில் உத்தமபாளையம் நகர் பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது தேனி குமுளி தேசிய நெடுஞ்சாலையில் கோவிந்தன் பட்டி அருகே அவர்கள் சென்று கொண்டிருந்தபோது அவர்களின் பின்புறம் வந்த கிரேன் வாகனம் இருசக்கர வாகனம் மீது எதிர்பாராத விதமாக மோதியுள்ளது. கிரேன் வாகனம் மோதியதில் நிலைதடுமாறி கீழே விழுந்த இருசக்கர வாகனத்தில் வந்த இருவரின் மீதும் கிரேன் வாகனத்தின் டயர் இருவரின் மீதும் ஏறியதில் பலத்த காயம் அடைந்துள்ளனர். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் இந்த விபத்து குறித்து உத்தமபாளையம் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அத்தகவலினை தொடர்ந்து விரைந்து வந்த காவல்துறையினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் பலத்த காயம் அடைந்த இருவரையும் உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்துள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கும் போது சிகிச்சை பலனின்றி லெனின் உயிரிழந்துள்ளார். மேலும் பலத்த காயம் அடைந்த முருகனை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று மேல் சிகிச்சை அளித்துள்ளனர். அப்போது மேல் சிகிச்சை பலன் அளிக்காமல் விபத்தில் காயம் அடைந்த மற்றொருவரானா முருகனும் உயிரிழந்துள்ளார். இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீது பின்புறமாக வந்த கிரேன் வாகனம் மோதி விபத்தை ஏற்படுத்தி ஒரே கிராமத்தைச் சேர்ந்த உறவினர்கள் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றது.1