முன்னாள் முதலமைச்சர் தொகுதியில் போட்டியிடுவது எனக்கு பெருமையாக உள்ளது. எடப்பாடி தொகுதியில் உள்ள குறைகள், மருத்துவ வசதிகள் மற்றும் தரமான கல்வி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எடப்பாடி பரபரப்பு பேட்டி... சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பிரியதர்ஷினி, தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்... தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன... இந்நிலையில், எடப்பாடி கேட்டுக்கடை பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் பேரணியாக புறப்பட்ட பிரியதர்ஷினி, எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகம் சென்றடைந்து, தேர்தல் நடத்தும் அலுவலர் நடராஜனிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்... பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களுக்காக முழு களப் போராளியாக பணியாற்றுவேன் என்றும், முன்னாள் முதல்வர் போட்டியிட்ட தொகுதியில் போட்டியிடுவது பெருமையாக உள்ளது என்றும் தெரிவித்தார். மேலும்,எடப்பாடி தொகுதியில் உள்ள குறைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பேன் எனக் கூறிய அவர், மருத்துவ வசதிகளின் பற்றாக்குறை மற்றும் தரமான கல்வி இல்லாத பிரச்சனைகளை தீர்க்க முயற்சிப்பேன் என்றும் உறுதியளித்தார்... மக்களின் முழு ஆதரவு தமக்கு இருப்பதாகவும், நிச்சயமாக தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் பிரியதர்ஷினி தெரிவித்தார்...

- சங்ககிரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நித்யா அருண் ஏர் கலப்பையை சுமந்தபடி தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்... தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடக்கிறது.சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் வேட்புமனு தாக்கல் இன்று 30ஆம் தேதி தொடங்குகிறது... இதனையடுத்து மாநிலம் முழுவதும் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில் வேட்புமனு தாக்கலுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன... இந்நிலையில் சேலம் மாவட்டம் சங்ககிரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் நித்யா அருண் வேட்புமனு தாக்கல் செய்ய தங்கள் ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டவர்களுடன் உழவர் ஏர் கலப்பை தோலில் சுமந்தபடி இன்று சங்ககிரி மலைக்கோட்டையில் இருந்து கோட்டாட்சியர் அலுவலகம் வரை பேரணியாக சென்று சங்ககிரி தேர்தல் நடத்தும் அலுவலர் கேந்திரியாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்...1
- சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதியில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளில் சார்பில், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினரும், பாமக மேற்கு மாவட்ட செயலாளருமான எம்எல்ஏ சதாசிவம், சேலம் வடக்கு தொகுதியில் பாமக வேட்பாளராக இன்று அறிவிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இன்று சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் நடைபெற்ற, அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பேசிய அவர், வருகின்ற தேர்தலில் இந்த வடக்கு சட்டமன்றத் தொகுதியில் தான் முக்கியம் வெற்றி பெறுவேன் என்றும், தான் வெற்றி பெற்ற பிறகு வடக்கு தொகுதிக்கு ஏராளமான நன்மைகளை செய்ய உள்ளதாகவும் அவர் பேசினார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.1
- Post by Dharmaraj P1
- தவெக நாமக்கல் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக சி.எஸ். திலீப் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, புதுச்சத்திரம் வடக்கு ஒன்றியத் தலைமை சார்பில் பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்துக் கொண்டாடப்பட்டது. கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கித் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த அறிவிப்பு நாமக்கல் மாவட்ட தவெகவினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.1
- திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடக் கூடிய சத்தியபாமா வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருக்கு ஆதரவாக வந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தமிழகத்தில் திமுக ஆட்சியை வீழ்த்தக்கூடிய ஒரே சக்தியாக தமிழக வெற்றிக் கழகமும் அதன் தலைவர் விஜயும் இருப்பதாக மக்கள் எண்ணுகிறார்கள் , அது நிறைவேறும் என பேட்டி அளித்தார்.1
- பனங்காட்டுப்படை கட்சியின் சார்பாக தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராக அக்கட்சியின் நிறுவனர் ஆறுமுகபாண்டி என்ற ராக்கெட்ராஜா அவர்கள் இன்று வேட்பு மனு தாக்கல்செய்தார். உடன் மாநில இளைஞரணி தலைவர் அந்தோணி நாடார், டாக்டர் ராமசாமி,தொழிலதிபர் பாலாஜி, வழக்கறிஞர் பூர்ணிமா ஆகியோர் உடனிருந்தனர் .1
- கிருஷ்ணகிரிநகராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டுபகுதியில் ரம்ஜான் மற்றும் உரூஸ் திருவிழாவினை முன்னிட்டு ஹக்கே பஞ்சத்தன் பொதுஅறக்கட்டளை சார்பாக ஏழை எளிய மக்களுக்கு பிரியாணி உணவுவழங்கும் விழா நடைபெற்றது. ஹக்கே பஞ்சத்தன்பொது அறக்கட்டளை நிறுவனர் அன்சர் தலைமையில் நடைபெற்றது.சையத் பாஷா மலையின் மேல் உள்ள தர்காவில் சிறப்பு துவா பாத்தியா நடைபெற்றது1
- முன்னாள் முதலமைச்சர் தொகுதியில் போட்டியிடுவது எனக்கு பெருமையாக உள்ளது. எடப்பாடி தொகுதியில் உள்ள குறைகள், மருத்துவ வசதிகள் மற்றும் தரமான கல்வி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எடப்பாடி பரபரப்பு பேட்டி... சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பிரியதர்ஷினி, தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்... தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன... இந்நிலையில், எடப்பாடி கேட்டுக்கடை பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் பேரணியாக புறப்பட்ட பிரியதர்ஷினி, எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகம் சென்றடைந்து, தேர்தல் நடத்தும் அலுவலர் நடராஜனிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்... பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களுக்காக முழு களப் போராளியாக பணியாற்றுவேன் என்றும், முன்னாள் முதல்வர் போட்டியிட்ட தொகுதியில் போட்டியிடுவது பெருமையாக உள்ளது என்றும் தெரிவித்தார். மேலும்,எடப்பாடி தொகுதியில் உள்ள குறைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பேன் எனக் கூறிய அவர், மருத்துவ வசதிகளின் பற்றாக்குறை மற்றும் தரமான கல்வி இல்லாத பிரச்சனைகளை தீர்க்க முயற்சிப்பேன் என்றும் உறுதியளித்தார்... மக்களின் முழு ஆதரவு தமக்கு இருப்பதாகவும், நிச்சயமாக தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் பிரியதர்ஷினி தெரிவித்தார்...1