குண்டடம் நால்ரோடு அருகே நூல் ஏற்றி சென்ற லாரி தீப்பிடித்து எரிந்து ரூபாய் 24 லட்சம் மதிப்பிலான நூல் சேதம். குண்டடம் நால்ரோடு அருகே நூல் ஏற்றிச் சென்ற லாரி தீப்பிடித்து எரிந்தது — ரூ.24 லட்சம் மதிப்பிலான நூல்கள் நாசம். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே குண்டடம் நால்ரோடு பிரிவு பகுதியில், நூல் ஏற்றிச் சென்ற லாரி திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் சுமார் ரூ.24 லட்சம் மதிப்பிலான நூல்கள் எரிந்து நாசமானது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் பகுதியில் உள்ள சண்முகவேல் மில்லில் இருந்து, கருவராயன்பட்டியைச் சேர்ந்த பெருமாள் மகன் அங்கமுத்து, அசோக் லேலாண்டு லாரியில் எட்டு டன் நூல்களை ஏற்றி, திருப்பூர் மாவட்டம் இடுவாய் பகுதியில் உள்ள தனியார் நூற்பாலை மில்லிற்கு கொண்டு சென்று கொண்டிருந்தார். தாராபுரம் வழியாக குண்டடம் நால்ரோடு பிரிவு பகுதிக்கு வந்தபோது, அதிக வெப்பத்தால் லாரியின் சைலன்சர் பகுதியில் இருந்து எழுந்த தீப்பொறி, மேலே ஏற்றியிருந்த நூல் மூட்டைகளின் மீது பட்டு, திடீரென தீப்பிடித்தது. சாலையில் சென்ற பிற வாகன ஓட்டிகள் இதை கவனித்து, லாரி ஓட்டுனர் அங்கமுத்துவிடம் தெரிவித்தனர். உடனே அவர் வாகனத்தை நிறுத்தி, கீழே இறங்கி தீயை அணைக்க முயன்றார். ஆனால் தீ வேகமாகப் பரவி, கரும்புகையுடன் எரியத் தொடங்கியது. தீ அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட அங்கமுத்துவுக்கு கை, கால், முகம் போன்ற இடங்களில் லேசான தீக்காயங்கள் ஏற்பட்டன. இதையடுத்து அப்பகுதி மக்கள் தாராபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் நிலைய அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில், பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வாகனத்துடன் விரைந்து சென்று, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீர் பீச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வர முயன்றும், நூல் மூட்டைகள் அதிகமாக இருந்ததால் தீ நீண்ட நேரம் எரிந்தது. இந்த சம்பவம் குறித்து குண்டடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேக் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாகனப் போக்குவரத்து அதிகமாக இருக்கும் புறவழிச் சாலை பகுதியில் லாரி தீப்பிடித்து எரிந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

- குண்டடம் நால்ரோடு அருகே நூல் ஏற்றிச் சென்ற லாரி தீப்பிடித்து எரிந்தது — ரூ.24 லட்சம் மதிப்பிலான நூல்கள் நாசம். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே குண்டடம் நால்ரோடு பிரிவு பகுதியில், நூல் ஏற்றிச் சென்ற லாரி திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் சுமார் ரூ.24 லட்சம் மதிப்பிலான நூல்கள் எரிந்து நாசமானது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் பகுதியில் உள்ள சண்முகவேல் மில்லில் இருந்து, கருவராயன்பட்டியைச் சேர்ந்த பெருமாள் மகன் அங்கமுத்து, அசோக் லேலாண்டு லாரியில் எட்டு டன் நூல்களை ஏற்றி, திருப்பூர் மாவட்டம் இடுவாய் பகுதியில் உள்ள தனியார் நூற்பாலை மில்லிற்கு கொண்டு சென்று கொண்டிருந்தார். தாராபுரம் வழியாக குண்டடம் நால்ரோடு பிரிவு பகுதிக்கு வந்தபோது, அதிக வெப்பத்தால் லாரியின் சைலன்சர் பகுதியில் இருந்து எழுந்த தீப்பொறி, மேலே ஏற்றியிருந்த நூல் மூட்டைகளின் மீது பட்டு, திடீரென தீப்பிடித்தது. சாலையில் சென்ற பிற வாகன ஓட்டிகள் இதை கவனித்து, லாரி ஓட்டுனர் அங்கமுத்துவிடம் தெரிவித்தனர். உடனே அவர் வாகனத்தை நிறுத்தி, கீழே இறங்கி தீயை அணைக்க முயன்றார். ஆனால் தீ வேகமாகப் பரவி, கரும்புகையுடன் எரியத் தொடங்கியது. தீ அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட அங்கமுத்துவுக்கு கை, கால், முகம் போன்ற இடங்களில் லேசான தீக்காயங்கள் ஏற்பட்டன. இதையடுத்து அப்பகுதி மக்கள் தாராபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் நிலைய அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில், பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வாகனத்துடன் விரைந்து சென்று, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீர் பீச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வர முயன்றும், நூல் மூட்டைகள் அதிகமாக இருந்ததால் தீ நீண்ட நேரம் எரிந்தது. இந்த சம்பவம் குறித்து குண்டடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேக் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாகனப் போக்குவரத்து அதிகமாக இருக்கும் புறவழிச் சாலை பகுதியில் லாரி தீப்பிடித்து எரிந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.1
- சிறு குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் முதல் பாதயாத்திரை ஆக பழனியை நோக்கி பெரும் திரளான பக்தர்கள் வந்து கொண்டுள்ளனர் அதை கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக பழனி வ உ சி பேருந்து நிலையத்தை பழனி தண்டாயுதம் கலைக்கல்லூரி வளாகத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளதுபங்குனி உத்திரத்தை முன்னிட்டு மாற்றி காவல் துறையினால் அமைக்கப்பட்டுள்ளது இதை பக்தர் கோடிகள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு கொடுத்து புதிய பேருந்து நிலையத்திற்கு சென்று தொலைதூரப் பேருந்துகள் அங்க நிறுத்தப்பட்டுள்ளது இதை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும்2
- திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா நடைபெற்ற வருகிறது. கடந்த 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்வு இன்று அதிகாலை தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.1
- வேடசந்தூர் திண்டுக்கல் டு கரூர் தேசிய நெடுஞ்சாலையில் கல்வார்பட்டி சோதனை சாவடி அருகில் இரவு சரக்கு வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து யூடேன்னில் இருந்து சுமார் 100 அடிக்கு சாலையின் நடுவே தடுப்பிற்காக வைக்கப்பட்ட அலுமினிய தகடுகளை சேதப்படுத்தி நின்றது விபத்து சம்பந்தமாக காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்1
- Post by அன்பரசு1
- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 1 லட்சத்து 30 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று நத்தம் விஸ்வநாதன் காலடியில் சமர்ப்பிப்போம் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் ஆத்தூர் அதிமுக வேட்பாளர் விஸ்வநாதன் சூளுரை1
- ஆத்தூர் தொகுதியில் 1 லட்சத்து 30 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று நத்தம் விஸ்வநாதன் காலடியில் சமர்ப்பிப்போம் என அதிமுக வேட்பாளர் விஸ்வநாதன் சூளுரை1
- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் சித்தரேவு ஊராட்சி 5-வது வார்டு பகுதியில் செயல்படும் பால்வாடி அருகில் உள்ள செப்டிக் டேங்க் மேற்பகுதி திறந்த நிலையில் இருந்ததால் குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் நிலை இருந்ததை கருத்தில் கொண்டு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்ததின் பேரில் ஊராட்சி பணியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குழந்தைகளின் பாதுகாப்பு நலன் கருதி திறந்து கிடந்த செப்டிக் டேங்க் மேல் புரத்தை பட்டிய கற்களால் உடனடியாக மூடினர். ஊராட்சி நிர்வாகத்தின் உடனடி நடவடிக்கையால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.1