ஒகேனக்கல்லில் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்கவும் புகையில்லா போகி கொண்டாடவும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பணிகள் வந்து செல்கின்றனர் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் இருக்கவும் இன்று போகி பண்டிகை கொண்டாடப்படுவதாலும் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்கவும் புகையில்லா போகியை கொண்டாடவும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணிக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுலாத்துறை மற்றும் வட்டார வளர்ச்சி துறை சார்பில் தூய்மை பணியாளர்கள் கூத்தப்பாடி பஞ்சாயத்து பணியாளர்கள் ஒன்றிணைந்து இந்தப் பேரணி நடைபெற்றது இந்தப் பேரணியில் மாவட்ட உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கிருஷ்ணன் ,மாவட்ட சுற்றுலா அலுவலர் சங்கீதா ,பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சக்திவேல் ,லோகநாதன் ஆகியோர் இந்த பேரணியில் கலந்து கொண்டு ஒகேனக்கல் பேருந்து நிலையம், அருவிக்குச் செல்லக்கூடிய நடைபாதை, மீன் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் பேரணியாக சென்று அப்பகுதியில் உள்ள கடை உரிமையாளர்களுக்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பற்றி அச்சிடப்பட்ட நோட்டீஸ் வழங்கி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்பு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்த கடை உரிமையாளர்களுக்கு அபராதம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஒன்றிய பொறியாளர் (AE) தமிழரசு, ஒன்றியம் மேற்பார்வையாளர் செல்வம் (ஓவர்சீர்) பென்னாகரம் திமுக மத்திய ஒன்றிய பொறுப்பாளர் பச்சியப்பன், முன்னாள் ஒன்றிய செயலாளர் மடம் முருகேசன் மற்றும் அரசு அலுவலர்கள் தூய்மை பணியாளர்கள் கூத்தப்பாடி பஞ்சாயத்து பணியாளர்கள் பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.

- பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள் ரயில் நிலையத்தில் குவிந்ததால் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் திருப்பூர் பனியன் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று உறவினர்களுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாட ஆர்வம் காட்டி வருகின்றனர் இதன் காரணமாக திருப்பூரில் இருந்து சேலம் மொரப்பூர் காட்பாடி ஆம்பூர் வழியாக செல்லும் ரயில்கள் மற்றும் திருச்சி மார்க்க ரயில் உள்ளிட்டவற்றில் பயணிக்க பொதுமக்கள் ரயில் நிலையத்தில் குவிந்ததால் திருப்பூர் ரயில் நிலையத்தில் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. மாலை நாகர்கோவில் செல்லும் ரயிலுக்கும் அதிக அளவிலான வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்கள் அனைவரும் இருசக்கர வாகனங்களில் செல்வதாலும், தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக பொதுமக்கள் சிறுக சிறுக சென்றதால் பேருந்து நிலையங்களில் கூட்டம் இன்றி காணப்படுகிறது. மேலும் நீண்ட தூர பயணத்திற்கு ரயில் வசதியாக இருக்கும் என்பதாலும் கட்டணம் குறைவு என்பதாலும் ஏராளமானோர் ரயிலில் செல்ல முனைப்பு காட்டியதால் திருப்பூர் ரயில் நிலையத்தில் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது.1
- பென்னாகரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சாயத்துகளில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படுவது வழக்கம் இந்த நிலையில் பொங்கல் திருநாள் பல்வேறு இடங்களிலும் அரசு அலுவலகங்களிலும் சமத்துவ பொங்கலாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 23 பஞ்சாயத்துகளிலும் சமத்துவ பொங்கல் இன்று கொண்டாடப்பட்டது அதில் ஒரு பகுதியாக பருவதன அள்ளி பஞ்சாயத்திற்கு உட்பட்ட சமத்துவபுரம் பகுதியில் உள்ள மக்களுடன் ஒன்று இணைந்து ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் சக்திவேல், லோகநாதன் ஆகியோரின் ஏற்பாட்டில் மண்டல தொகுதி அலுவலர் மற்றும் உதவி செயற்பொறியாளர் மகேஷ் குமார் உதவி இயக்குனர் (பயிற்சி) தமிழ்செல்வன் ஆகியோர் தலைமையில் சமத்துவ பொங்கல் வைத்து மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் கோலப்போட்டி, கயிறு இழுத்தல், மியூசிக்கல் சேர், பானை உடைத்தல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது இறுதியாக சமத்துவபுரம் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த நிகழ்வில் ஒன்றிய பணி மேற்பார்வையாளர் செல்வம் பருவதன அள்ளி ஊராட்சி செயலாளர் முருகன் மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் சமத்துவ பொங்கல்லில் கலந்து கொண்டனர்.1
- தர்மபுரி நகராட்சி சார்பில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது தர்மபுரி நகராட்சி சார்பில் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் நகர மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது தலைமையில் நடந்தது இதில் நகராட்சி ஆணையர் சேகர் முன்னிலை வைத்தனர். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ மணி கடந்து கொண்டு சமத்துவ பொங்கல் இந்து கிறிஸ்டின் முஸ்லிம் ஆகியோர் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கழகச் செயலாளர். என் பி பெரியண்ணன் பச்சையப்பன். நகரக் கழக செயலாளர் நாட்டான் மாது. கௌதம். நகராட்சி துணைத் தலைவர் கே அன்பழகன் நகர்மன்ற உறுப்பினர்கள் மாதேஸ்வரன் ஜெகன் பாண்டியன் வாசுதேவன் முல்லைவேந்தன். கட்சி நிர்வாகிகள் நகராட்சி அலுவலர்கள் துப்புரவு பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் அனைவருக்கும் வழங்கப்பட்டது1
- திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், பால்னாங்குப்பம் பஸ் ஸ்டாப் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகாலில், ஊராட்சி பகுதிகளில் இருந்து கழிவுநீர் கலக்கப்படுகிறது. இது சுற்றுச்சூழல் மாசு மற்றும் பொதுச் சுகாதாரத்திற்கு மிகப்பெரிய ஆபத்தை உருவாக்குகிறது. அந்த வடிகால் திறந்த நிலையில் இருப்பதால், துர்நாற்றம், கொசு உற்பத்தி மற்றும் நோய் பரவும் அபாயம் அதிகமாக உள்ளது. இது Water (Prevention of Pollution) Act மற்றும் Swachh Bharat Mission விதிமுறைகளுக்கு எதிரானது. எனவே, தயவுசெய்து உடனடி ஆய்வு செய்து, கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்தவும், பொது மக்களின் வேண்டுகோள்1
- எடப்பாடியில் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து ஓவியப்போட்டி நடைபெற்றது... தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி, சேலம் மாவட்டம் எடப்பாடி காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து ஓவியப்போட்டி எடப்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் ஓவிய போட்டியானது காவல் ஆய்வாளர் பேபி தலைமையில் நடைபெற்றது... மேலும் இந்த ஓவியப் போட்டியில் வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசக்கூடாது,ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும்,அதிக வேகமாக செல்ல கூடாது, சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு சாலை பாதுகாப்பு குறித்து மாணவிகள் ஓவியத்தை வரைந்தனர்... மேலும் சாலை விபத்து குறித்து பள்ளி மாணவிகளிடம் காவல் ஆய்வாளர் எடுத்துக் கோரி பேசினார். அதன் பின்னர் ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கினார்.இதில் காவல் உதவி ஆய்வாளர் ஸ்ரீராம், தலைமை ஆசிரியர் செந்தில் ,ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்...1
- நாமக்கல் இராசிபுரம் அத்தனூர் பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி அவர்கள் நடனம் ஆடி சமத்துவ பொங்கலை துவக்கி வைத்தார்1
- திருவண்ணாமலை மாவட்டம் : ஜவ்வாது மலையில் மலைவாழ் மக்கள் வருடாவருடம் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று, அதாவது பொங்கல் திருநாளின் போகிப் பண்டிகை தமிழ் ஆண்டின் முதல் நாள் கொண்டாடப்படும் மேலும் சிறப்பு பொங்கல் சந்தையும் நடை பெற்றது இதில் புது துணி.கரும்பு காய்கறிகள் பொங்கலுக்கு தேவையான மளிகை பொருட்கள் வாங்கினர் இதனால் அனைத்து வியாபாரிகள் விற்பனையில் கலை கட்டியது1
- பெரும்பாலை அரசு ஆஸ்பத்திரியில் பாரம்பரிய முறைப்படி சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது உலகம் முழுவதும் தமிழர்கள் வாழும் இடங்களில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பெரும்பாலை ஆரம்ப அரசு ஆஸ்பத்திரியில் பாரம்பரிய முறைப்படி குத்துவிளக்கு ஏற்றி, மண் பானையில் பொங்கல் வைத்து சூரியனை வணங்கினர். ஆஸ்பத்திரியில் பணியாற்றும் ஊழியர்கள் ஒரே மாதிரியான வேட்டி, சேலைகள் அணிந்து மகிழ்ந்தனர் .மேலும் பொங்கல் வைத்த பின்னர் மியூசிக்கல் சேர்,பானை உடைத்தல், போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது . இதில் வெற்றி பெற்ற நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது .இந்த நிகழ்ச்சியில் டாக்டர் ராமச்சந்திரன்,மோகனா, மருந்தாளர் இலக்கியா, சுகாதார ஆய்வாளர் ராஜன் குமார் ,பூவரசன், நர்ஸ்கள் கண்ணகி,சுஜி, சர்மிளா,அம்சா,சுந்தரம்மாள், சரசு , பிரேம்குமார் மற்றும் ஆஸ்பத்திரியில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பாக கொண்டாடினர்.1