Shuru
Apke Nagar Ki App…
அரிமளம் அருகே மது அருந்திவிட்டு பொது மக்களுக்கு இடையூறு செய்த நபர் கைது புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் இருந்து குளவாய்பட்டி செல்லும் சாலையில் நேற்று கார்த்திக் (36) என்பவர் மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்து கொண்டிருந்தார். இதனை அடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அரிமளம் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்டு பிணையில் விடுவித்தனர்.
Mayilvaganan
அரிமளம் அருகே மது அருந்திவிட்டு பொது மக்களுக்கு இடையூறு செய்த நபர் கைது புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் இருந்து குளவாய்பட்டி செல்லும் சாலையில் நேற்று கார்த்திக் (36) என்பவர் மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்து கொண்டிருந்தார். இதனை அடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அரிமளம் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்டு பிணையில் விடுவித்தனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- இடையாத்தூர் கிராமம் ஜல்லிக்கட்டு விழா2
- *புதுக்கோட்டை மாவட்டம் துவார் அருகே கெண்டையன்பட்டி ஸ்ரீ.வீரமாகாளியம்மன் கோயில் குடமுழுக்கு திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி எடுப்பு விழா நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று கும்மியடித்து குலவையிட்டு முளைப்பாரியை தலையில் சுமந்தவாறு ஊர்வலமாக எடுத்துச் சென்று வருகின்றனர்* புதுக்கோட்டை மாவட்டம் துவார் அருகே கெண்டையன்பட்டியில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த ஸ்ரீ.வீரமாகாளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் கும்பாபிஷேக விழா 18 வருடங்களுக்கு பிறகு வருகின்ற வெள்ளிக்கிழமை வெகு விமர்ச்சையாக நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு கெண்டையன்பட்டி விநாயகர் கோயிலில் கெண்டையன்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து முளைப்பாரியை வைத்து கும்மியடித்து குலவையிட்டு மேள தாள வாக்கியங்கள் முழங்க குதிரை நடனமிட கங்கை காவிரி உள்ளிட்ட புனித தலங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட புனித நீரை குடங்களில் நிரப்பி சிவாச்சாரியார்கள் தலையில் சுமத்தும், பெண்கள் முளைப்பாரியை தலையில் சுமந்தவாறும் வீரம்மா காளியம்மன் கோயிலை நோக்கி ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இந்நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் நிர்வாகத்தினர் மற்றும் கரைக்காரர்கள் கிராம பொதுமக்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.1
- திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ரெட்டமலைப்பட்டி அருகே கிரஷர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு தோப்புப்பட்டி பகுதியைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விவசாயம் மற்றும் கால்நடைகளை மட்டுமே மக்கள் நம்பி வாழ்ந்து வரும் நிலையில் கிரஷருக்கு அனுமதி கொடுத்தால் அந்த பகுதி மக்களின் நிலை மிக மோசமாகி விடும். ஆகவே அரசு கிரஷருக்கு அனுமதி கொடுக்ககூடாது என்று கூறி மணப்பாறை - ரெட்டியபட்டி சாலையில் குளத்துராம்பட்டி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் மற்றும் மணப்பாறை வட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களின் கருத்தை பெற்று தான் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது வரை அனுமதி வழங்கப்படவில்லை என்று பேச்சுவார்த்தையில் தெரிவித்ததை அடுத்து மக்கள் மறியலை கைவிட்டனர்.1
- மணப்பாறை குடோனிலிருந்து வெளியேறும் வண்டுகளால், தூக்கத்தை தொலைத்த மக்கள். மணப்பாறையில் தமிழக அரசின் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் குடோனில் இருந்து வெளியேறும் வண்டுகளால், அப்பகுதியில் உள்ள வீடுகளில் மக்கள் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை பூமாலை பட்டி பகுதியில் ஒழுங்குமுறை கூடத்தின் குடோன் உள்ளது. இங்கு அரிசி, உள்ளிட்ட உணவு தானியங்கள் சேமித்து வைக்கப்பட்டு, பல்வேறு பகுதிகளுக்கு லாரிகள் மூலம் அனுப்பப்படுகிறது. குடோனில் உணவு தானியங்களுக்கு வண்டுகள் மற்றும் பூச்சிகளால் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க, மருந்து தெளித்து பராமரிப்பது வழக்கம். இந்த வழக்கத்தை கடந்த சில ஆண்டுகளாக கடைபிடிக்க மறந்துவிட்டதால் வண்டுகள், பூச்சிகள் அதிகமாக உருவாகி குடோனில் இருக்கும் உணவு தானியங்களை நாசம் செய்வதோடு, அருகில் வசிக்கும் மக்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகின்றன. குறிப்பாக மாலை 5 மணியிலிருந்து குடோனில் இருந்து அதிகளவில் வண்டுகள் வெளியேறி, வீடுகளுக்குள் புகுந்து மக்களின் நிம்மதியை கெடுத்து வருகின்றன. குடோனுக்கு அருகே உள்ள பூமாலைப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள் வண்டுகளால் அதிகம் பாதிக்கப் பட்டுள்ளனர். இது குறித்து பகுதிவாசிகள் கூறும்போது,வீடுகளில் வைத்துள்ள குடிநீர், உணவு பொருட்கள், படுக்கை விரிப்புகள் உள்ளிட்ட இடங்களில் வண்டுகள் வந்து விழுகின்றன. எங்களை கடித்தும் துன்புறுத்துகின்றன. இரவு நேரங்களில் தூங்க முடியாமல் தவிக்கிறோம். இருசக்கர வாகனங்களில் செல்வோரின் கண்களில் வண்டுகள் விழுந்து கண்களுக்கு கேடு விளைவிப்பதோடு, விபத்துகள் ஏற்படவும் காரணமாகின்றன. ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் குடோனில் வண்டுகள் உருவாகாமல் இருக்க முறையான வழிமுறைகளை கையாள வேண்டும். மாவட்ட நிர்வாகம் தான் எங்களை காக்க வேண்டும்” என்று பகுதிவாசிகள் வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் எதிரே அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள் 14 வது நாளாக 22 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற கோரி 200க்கும் மேற்பட்ட பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள் கடந்த 3 தேதியிலிருந்து 14 வது நாளாக தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அவர்கள் 10 ஆண்டுகள் பணி முடித்த தகுதியான பணியாளர்களுக்கு அரசு பணியில் 50 சதவீத வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 12 கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் எதிரே கைகளில் தட்டுகளில் ஒலி எழுப்பி, ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒரு அங்கன்வாடி பணியாளர் நாங்கள் கெளரவமாக வாழ்ந்து இருப்போமே? இந்த வேலையை வழங்கி தெருவில் பிச்சை எடுக்க விட்டீர்களே என்று கண்ணீர் விட்டு கதறியது சோகத்தை ஏற்படுத்தியது.1
- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த ஆலடிக்குமுளை ரவுண்டானா பகுதியில் சாலை ஓரங்களில் உள்ள தெருவிளக்கு எரியாததால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது அதிக போக்குவரத்து கொண்ட சாலையாக இருப்பதால் சாலையை கடக்கும் பொதுமக்கள் மற்றும் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர் அருகில் பேருந்து நிறுத்தம் இருப்பதால் தஞ்சாவூர் பஸ் பயணிகள் இறங்கி புதுக்கோட்டை செல்லும் பேருந்துக்காக சாலையை கடக்க வேண்டிய உள்ளது இரவு நேரங்களில் தெரு விளக்குகள் எரியதால் சாலை விபத்துக்கள் மற்றும் குற்றச்சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து தெரு விளக்குகள் சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை1
- மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் காத்திருப்பு போராட்டம் மதுரை, பிப்.17- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், மதுரை மாவட்டம் கரடிப்பட்டி மற்றும் மேலக் குயில்குடி பகுதிகளில் இடம்பெற்று வரும் நில ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும், அப்பகுதி இளைஞர்களுக்காக விளையாட்டு மைதானம் அமைக்க வலியுறுத்தியும் நாளை காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டம் பிப் - 17 செவ்வாய்க்கிழமை pமதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறும் என அமைப்பினர் தெரிவித்துள்ளனர். பொது மக்களின் பயன்பாட்டிற்கான நிலங்களை பாதுகாக்கவும், இளைஞர்களின் விளையாட்டு மற்றும் உடற்திறன் மேம்பாட்டிற்கான வசதிகளை உருவாக்கவும் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.3
- சுப்பராபட்டி கிராமம்1