விராலிமலை தொகுதியில் சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்ய தயாரான மத்திய அரசு வழக்கறிஞர் மீது பா.ஜ.க வினர் தாக்குதல் விராலிமலை தொகுதியில் சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்ய தயாரான மத்திய அரசு வழக்கறிஞர் மீது பா.ஜ.க வினர் தாக்குதல் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்ட தொகுதி வானதிரையான்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையா மகன் வழக்கறிஞர் சண்முகசுந்தரம் (42). இவர் பாஜக முன்னாள் மேற்கு மாவட்ட பொதுச்செயலாளராக இருந்தவர். தற்போது, (மத்திய அரசு வழக்கறிஞராக உள்ளார். இவர் கடந்த 2021 ல் விராலிமலை தொகுதியில் போட்டியிட கட்சியில் விரும்ப மனு கொடுத்துள்ளார். அதே போல தற்போதும் விருப்ப மனு கொடுத்துள்ள நிலையில் விராலிமலை தொகுதி அதிமுக விற்கு ஒதுக்கப்பட்டு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இந்தநிலையில் இந்த முறையும் தனக்கு வாய்ப்பு கிடைக்க வில்லை என்ற நிலையில் தனது ஆதரவாளர்களிடம் ஆலோசனை செய்தவர் விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட நாளை புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்ய தயாராகி உள்ளார். இந்த நிலையில் விராலிமலை முருகன் கோயில், குடுமியான்மலை சிவன் கோயிலில் தரிசனம் செய்ய சிலருடன் சென்றவர் குடுமியான்மலை சிவன் கோயிலில் தரிசனம் செய்து விட்டு வெளியே வந்த போது பாஜக வினர் சிலர் சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்யக் கூடாது என்று கூறி பாஜக மத்திய அரசு வழக்கறிஞர் சுனமுகசுந்தரத்தை கடுமையாக தாக்கி உள்ளனர். இதை தடுக்கச் சென்ற வழக்கறிஞர் சண்முகசுந்தரம் கூட வந்தவர்களையும் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலையடுத்து காயமடைந்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் அன்னவாசல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து அன்னவாசல் போலிசார் விசாரனை செய்து வருகின்றனர். சொந்த கட்சி வழக்கறிஞரையே பாஜக நிர்வாகிகள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

- குடுமியான்மலை அகிலாண்டேஸ்வாரி சமேத சிகாகிரீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்தது இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள குடுமியான்மலையில் 7-ம் நூற்றாண்டை சேர்ந்த பிரசித்தி பெற்ற குடவரைக்கோவிலான அகிலாண்டேஸ்வாரி சமேத சிகாகிரீஸ்வரர் கோவில் உள்ளது.இக்கோவிலில் இந்த ஆண்டுக்காண பங்குனி உத்திரம் திருவிழா கடந்த 23-.ந்தேதி தொடங்கியது. அதனைதொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் ஒவ்வொரு நாளும் மண்டகபடி தாரர்கள் சார்பில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதிஉலா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடந்தது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் சிகாகிரீஸ்வரர், அகிலாண்டேஸ்வரி அம்பாளை, தேரில் எழுந்தருள செய்தனர். இதையடுத்து குதிரை ஆட்டம், மேளதாளம் முழங்க திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்தனர். தேர் முக்கிய வீதிகளின் வழியாக அசைந்தாடி வந்தது ஒவ்வொரு வீதியிலும் பக்தர்கள் கூடி நின்று தேங்காய், பூ, பழம் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின்னர் தேர் நிலையை வந்தடைந்தது. பின்னர் சாமிக்கு சிறப்பு ஆராதனை நடந்தது. இதில் குடுமியான்மலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு நீர்மோர், பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.இதில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்எல்ஏ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை இலுப்பூர் துணை கண்காணிப்பாளர் திவ்யா தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.1
- திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் வையம்பட்டியை சேர்ந்த கதிரவன் வேட்பாளராக தவெக தலைவர் விஜய் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து விஜயை சந்தித்து விட்டு மணப்பாறைக்கு ரயிலில் வருகை புரிந்தார். அப்போது மணப்பாறை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த தவெக நிர்வாகிகள் பெரும் திரளாக ரயில் நிலையத்தில் ஒன்று கூடி வேட்பாளர் கதிரவனுக்கு வரவேற்பு அளித்தனர்.1
- Post by பெரியசாமி2
- திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் குட்டம் ஊராட்சி தாசிர் பட்டியில் ஊர் நுழைவாயில் சுமார் 25 குடும்பங்கள் வசித்து வருகின்றனர் அவர்களுக்கு தெருக் குழாயில் தண்ணீர் என்பது ஒரு வருங்களாக பிரச்சனை இருந்து வருகிறது பலமுறை ஊராட்சி செயலாளர் ஜோனல் அவர்களிடம் கூறியும் கடைசியாக இரண்டு மாதங்களுக்கு முன்பு உங்களுக்கு ஒரு சின்டெக்ஸ் தனியாக வைத்துக் கொடுத்தால் தான் தண்ணீர் பிரச்சனை தீரும் என ஊராட்சி செயலாளர் தங்கவேல் அவர்கள் கூறினார் இதுவரை செவிடன் காதில் ஊதிய சங்கு போல் கண்டுகொள்ளவில்லை தற்போது வெயில் காலங்கள் தண்ணீர் இன்றி பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்த வருகின்றனர் தண்ணீருக்காக பெண்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் செல்ல வேண்டிய சூழல் உள்ளது தமிழக அரசின் திமுக அரசு இது சம்பந்தமாக அந்தக் கட்சியின் நிர்வாகிகளிடம் பேசியபோது அவர்களும் ஏன் அசிங்க படுத்துகிறீர்கள் என்று கூறுகின்றனர் என்று கூறுபவர்கள் யாருக்கு அந்த அசிங்கம் என்று தெரியவில்லையா உங்கள் கட்சிக்கு தானே அந்த அசிங்கம் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை கூட பூர்த்தி செய்து கொடுக்க முடியாத கட்சியாக உள்ளீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள் தற்போது இந்த தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால் பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்வோம் என கூறி வருகின்றனர் ...1
- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 1 லட்சத்து 30 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று நத்தம் விஸ்வநாதன் காலடியில் சமர்ப்பிப்போம் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் ஆத்தூர் அதிமுக வேட்பாளர் விஸ்வநாதன் சூளுரை1
- ஆத்தூர் தொகுதியில் 1 லட்சத்து 30 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று நத்தம் விஸ்வநாதன் காலடியில் சமர்ப்பிப்போம் என அதிமுக வேட்பாளர் விஸ்வநாதன் சூளுரை1
- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் சித்தரேவு ஊராட்சி 5-வது வார்டு பகுதியில் செயல்படும் பால்வாடி அருகில் உள்ள செப்டிக் டேங்க் மேற்பகுதி திறந்த நிலையில் இருந்ததால் குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் நிலை இருந்ததை கருத்தில் கொண்டு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்ததின் பேரில் ஊராட்சி பணியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குழந்தைகளின் பாதுகாப்பு நலன் கருதி திறந்து கிடந்த செப்டிக் டேங்க் மேல் புரத்தை பட்டிய கற்களால் உடனடியாக மூடினர். ஊராட்சி நிர்வாகத்தின் உடனடி நடவடிக்கையால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.1
- விராலிமலை தொகுதியில் சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்ய தயாரான மத்திய அரசு வழக்கறிஞர் மீது பா.ஜ.க வினர் தாக்குதலுக்கு உள்ளான வழக்கறிஞர் சண்முகசுந்தரம் பரபரப்பு பேட்டி1