திருவெறும்பூர் திமுக பேரூர் கழக இளைஞரணி செயலாளர், பேரூராட்சி 11-வது வார்டு கவுன்சிலர் மற்றும் அரசு மதுபான கடை பாரை நடத்தி வரும் ரஞ்சித் குமார் என்பவர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை. திருவெறும்பூர் அருகே பேரூராட்சி திமுக கவுன்சிலர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் பேரூராட்சிக்கு உட்பட்ட பாரதிபுரத்தை சேர்ந்தவர் அந்தோணிசாமி இவரது மகன் ரஞ்சித்குமார் (38) இவர் கூத்தைப்பார் பேரூராட்சியில் 11 வது வார்டு கவுன்சிலராகவும், திமுக பேரூர் கழக இளைஞரணி செயலாளர்களாகவும் உள்ளார். இந்த நிலையில் ரஞ்சித்குமார் சோழமாநகரில் புதிதாக வீடு கட்டி அண்மையில் குடியேறியுள்ளார். மேலும் இவர் திருவெறும்பூர் அரசு ஐடிஐ எதிரே உள்ள அரசு மதுபான கடை பாரை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு தனது தொழில் பாட்னரை சந்தித்துவிட்டு டூவிலரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் திருவெறும்பூரில் இருந்து நவல்பட்டு செல்லும் சாலையில் புது தெரு அருகே சென்றபோது, மர்ம நபர்கள் சிலர் அவரை மறித்து கட்டையால் தாக்கி பின்னர் அவரை அரிவாளால் தலை மற்றும் கால் தொடை பகுதியில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளனர். தலை சிதைக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்து இறந்த நிலையில் கிடந்த ரஞ்சித்குமாரை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து விட்டு உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்தனர். இது குறித்து தகவல் அறிந்த நவல்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இந்த தகவலை அறிந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து படுகொலை செய்யப்பட்டு இறந்து கிடந்த ரஞ்சித் குமாரின் உடலை பார்த்த கதறி அழுதனர். இதனிடையே நவல்பட்டு போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்குஅனுப்பி வைத்தனர்.. மேலும் தடய அறிவியல், கைரேகை நிபுணர்கள், மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். மேலும் மாவட்ட எஸ்பி செல்வ நாகரத்தினம், திருவெறும்பூர் ஏ எஸ் பி அரவிந்த் பனாவத் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் குறித்து நவல்பட்டு போலீசார் வழக்கு பதிவு கொலையாளிகள் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்பது குறித்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திமுக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
திருவெறும்பூர் திமுக பேரூர் கழக இளைஞரணி செயலாளர், பேரூராட்சி 11-வது வார்டு கவுன்சிலர் மற்றும் அரசு மதுபான கடை பாரை நடத்தி வரும் ரஞ்சித் குமார் என்பவர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை. திருவெறும்பூர் அருகே பேரூராட்சி திமுக கவுன்சிலர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் பேரூராட்சிக்கு உட்பட்ட பாரதிபுரத்தை சேர்ந்தவர் அந்தோணிசாமி இவரது மகன் ரஞ்சித்குமார் (38) இவர் கூத்தைப்பார் பேரூராட்சியில் 11 வது வார்டு கவுன்சிலராகவும், திமுக பேரூர் கழக இளைஞரணி செயலாளர்களாகவும் உள்ளார். இந்த நிலையில் ரஞ்சித்குமார் சோழமாநகரில் புதிதாக வீடு கட்டி அண்மையில் குடியேறியுள்ளார். மேலும் இவர் திருவெறும்பூர் அரசு ஐடிஐ எதிரே உள்ள அரசு மதுபான கடை பாரை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு தனது தொழில் பாட்னரை சந்தித்துவிட்டு டூவிலரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் திருவெறும்பூரில் இருந்து நவல்பட்டு செல்லும் சாலையில் புது தெரு அருகே சென்றபோது, மர்ம நபர்கள் சிலர் அவரை மறித்து கட்டையால் தாக்கி பின்னர் அவரை அரிவாளால் தலை மற்றும் கால் தொடை பகுதியில்
சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளனர். தலை சிதைக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்து இறந்த நிலையில் கிடந்த ரஞ்சித்குமாரை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து விட்டு உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்தனர். இது குறித்து தகவல் அறிந்த நவல்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இந்த தகவலை அறிந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து படுகொலை செய்யப்பட்டு இறந்து கிடந்த ரஞ்சித் குமாரின் உடலை பார்த்த கதறி அழுதனர். இதனிடையே நவல்பட்டு போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்குஅனுப்பி வைத்தனர்.. மேலும் தடய அறிவியல், கைரேகை நிபுணர்கள், மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். மேலும் மாவட்ட எஸ்பி செல்வ நாகரத்தினம், திருவெறும்பூர் ஏ எஸ் பி அரவிந்த் பனாவத் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் குறித்து நவல்பட்டு போலீசார் வழக்கு பதிவு கொலையாளிகள் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்பது குறித்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திமுக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
- Post by பெரியசாமி2
- இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்த விராலிமலை தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பேட்டி1
- திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதியில் இந்திய ஜனநாயக புலிகள் அமைப்பின் தலைவரும் நடிகருமான மன்சூர் அலிகான் சுயேச்சையாக போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை லால்குடி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீதரிடம் தாக்கல் செய்தார். இதன் மூலம் அவர் லால்குடி தொகுதியில் தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். இந்த நிகழ்வில் இப்பகுதியை சேர்ந்த ஏராளமான ஜனநாயக புலிகள் அமைப்பின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.1
- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற முதல் வேட்பாளராக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நதியா தமிழ்செல்வன் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடக்கவிருக்கிறது. இந்த சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. தமிழகத்தில் களம் காணும் திமுக கூட்டணி, அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி, நாதக, தவெக ஆகிய கட்சிகள் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டனர். தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கிய நிலையில் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நதியா தமிழ்செல்வன் போட்டியிடுகிறார். இவர் கந்தர்வக்கோட்டை வெள்ளை முனியன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து மேள தாள முழக்கத்தோடு ஊர்வலமாக புறப்பட்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை கந்தர்வகோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முதல் வேட்பாளராக வேட்புமனுவை தாக்கல் செய்தார்.1
- Post by Sri ram1
- அறந்தாங்கி தொகுதியில் பாஜக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி அறந்தை தொகுதிக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு அனைத்து காவி சொந்தங்களும் பாஜக கூட்டணி அறந்தைதொகுதியை பாஜக கைப்பற்றும்.. வெற்றிவேல் வீரவேல்10
- வேடசந்தூர் திண்டுக்கல் டு கரூர் தேசிய நெடுஞ்சாலையில் கல்வார்பட்டி சோதனை சாவடி அருகில் இரவு சரக்கு வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து யூடேன்னில் இருந்து சுமார் 100 அடிக்கு சாலையின் நடுவே தடுப்பிற்காக வைக்கப்பட்ட அலுமினிய தகடுகளை சேதப்படுத்தி நின்றது விபத்து சம்பந்தமாக காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்1
- திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள ரயில்வே சாலையில் தர்மராஜ் என்பவரின் பிரிண்டர்ஸ் உள்ளார். பல்வேறு விதமான பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை கடையில் திடீரென புகை வருவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து மணப்பாறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் மணப்பாறை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் சி கொழுந்து விட்டு பயங்கரமாக மளமளவென கடை முழுவதும் பற்றி எரிய தொடங்கியது. இதனால் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வையம்பட்டி பகுதியில் இருந்து மற்றொரு தீயணைப்பு வாகனமும் தனியார் லாரிகளில் இருந்து தண்ணீரைக் கொண்டு வந்து தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரயில் நிலையம் அமைத்துள்ள பிரதான சாலை என்பதுடன் அதிக அளவிலான கடைகள் உள்ள பகுதி என்பதால் அந்தப் பகுதியில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது. தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.1