logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

மணப்பாறை ரெயில் நிலையம் அருகே பிரிண்டரஸ் கடையில் பயங்கர தீ விபத்து திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள ரயில்வே சாலையில் தர்மராஜ் என்பவரின் பிரிண்டர்ஸ் உள்ளார். பல்வேறு விதமான பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை கடையில் திடீரென புகை வருவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து மணப்பாறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் மணப்பாறை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் சி கொழுந்து விட்டு பயங்கரமாக மளமளவென கடை முழுவதும் பற்றி எரிய தொடங்கியது. இதனால் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வையம்பட்டி பகுதியில் இருந்து மற்றொரு தீயணைப்பு வாகனமும் தனியார் லாரிகளில் இருந்து தண்ணீரைக் கொண்டு வந்து தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரயில் நிலையம் அமைத்துள்ள பிரதான சாலை என்பதுடன் அதிக அளவிலான கடைகள் உள்ள பகுதி என்பதால் அந்தப் பகுதியில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது. தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.

8 hrs ago
user_Usha arun News
Usha arun News
Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
8 hrs ago

மணப்பாறை ரெயில் நிலையம் அருகே பிரிண்டரஸ் கடையில் பயங்கர தீ விபத்து திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள ரயில்வே சாலையில் தர்மராஜ் என்பவரின் பிரிண்டர்ஸ் உள்ளார். பல்வேறு விதமான பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை கடையில் திடீரென புகை வருவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து மணப்பாறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் மணப்பாறை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் சி கொழுந்து விட்டு பயங்கரமாக மளமளவென கடை முழுவதும் பற்றி எரிய தொடங்கியது. இதனால் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வையம்பட்டி பகுதியில் இருந்து மற்றொரு தீயணைப்பு வாகனமும் தனியார் லாரிகளில் இருந்து தண்ணீரைக் கொண்டு வந்து தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரயில் நிலையம் அமைத்துள்ள பிரதான சாலை என்பதுடன் அதிக அளவிலான கடைகள் உள்ள பகுதி என்பதால் அந்தப் பகுதியில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது. தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தேவகோட்டை சார் ஆட்சியர் அலுவலகத்தில் தனது மனைவி கயல்விழி, தாயார் அண்ணமாளுடன் வந்து சார் ஆட்சியர் ஆயூஸ் வெங்கட் வர்ஸிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, வேலையில்லாதவனுக்கு நான்காயிரம் கொடுப்பவன் நல்ல தலைவன் இல்லை என்றும், வேலை கொடுப்பவனே தலைவன். அவன்தான் சிறந்த ஆட்சியாளர் என்றவர், டாஸ்மார்க் கடையை திறந்து வைத்து விட்டு பெண்களுக்கு பாதுகாப்பு என்பது இப்படி சாத்தியம். மதுக்கடை வருமானத்தை வைத்து கொடுமையான ஆட்சி நடைபெறுவதை எப்படி சகித்து கொண்டு இருக்க முடியும் என கேள்வி எழுப்பினார். ஏற்கனவே 10.5 லட்சம் கோடி கடன் உள்ள நிலையில் மேலும் இலவச திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்றால் மேலும் பல லட்சம் கோடி கடன் வாங்கும் நிலை ஏற்படும் என குற்றம் சாட்டியவர், ஒவ்வொரு ஆண்டும் மக்களை வெள்ளத்தில் மிதக்கவிட்டு வெள்ள நிவாரணம் கொடுப்பது நல்ல ஆட்சி இல்லை. வெள்ள பாதிப்பு ஏற்படாமல் பாதுகாப்பது தான் நல்லாட்சி என கூறியவர், ஸ்டாலின் எதிர்கட்சியாக இருந்த போது இலவசங்களை மக்கள் விரும்பவில்லை என்று கூறிவிட்டு இப்போது திருப்பி இலவச திட்டங்களை அறிவிப்பதாக என குற்றம் சாட்டினார். ஸ்டாலின் 23 கட்சியுடன் கூட்டணி அமைத்து இருப்பது பயத்தினால் அவர்களிடம் நேர்மை துளி அளவும் இல்லை. ஐயா ராமதாஸ் எனக்கு மிகவும் பிடிக்கும். சாட்டை துரைமுருகன் ஐய்யாவை விமர்சனம் செய்ததை நான் கண்டித்தேன் என்றவர், நாடாளுமன்ற உறுப்பிரான திருமாவளவன் சட்டமன்ற தேர்தலில் நிற்பது ஏற்புடையது அல்ல என்றார். தொடர்ந்து ஓட்டுக்காக 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை காங்கிரஸ் மற்றும் பாஜக கொண்டு வந்ததாக குற்றம் சாட்டியவர், திட்டத்தால் எந்த ஒரு பலனும் இல்லை என்றவர், தனது கிராமத்தில் உள்ள அனைவரும் 100 நாள் திட்டத்திற்கு சென்று விட்டதால் தனியாக இருப்பதால் எனது தாயும் 100 நாள் வேலைக்கு சென்றதாகவும், அங்கு சென்று வேலை செய்யாமல் அமர்ந்து இருந்ததாகவும் கூறினார், இத்திட்டம் மூலம் நட்டு வைத்த மரங்கள் எத்தனை, சீரமைத்த சாலைகள் எத்தனை, தூர்வாரிய குளங்கள் எத்தனை என கேள்வி சீமான் எழுப்பினார்.
    1
    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தேவகோட்டை சார் ஆட்சியர் அலுவலகத்தில்  தனது மனைவி கயல்விழி, தாயார் அண்ணமாளுடன் வந்து சார் ஆட்சியர் ஆயூஸ் வெங்கட் வர்ஸிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது,  
வேலையில்லாதவனுக்கு நான்காயிரம் கொடுப்பவன் நல்ல தலைவன் இல்லை என்றும், வேலை கொடுப்பவனே தலைவன். அவன்தான் சிறந்த ஆட்சியாளர் என்றவர்,
டாஸ்மார்க் கடையை திறந்து வைத்து விட்டு பெண்களுக்கு பாதுகாப்பு என்பது இப்படி சாத்தியம். மதுக்கடை வருமானத்தை வைத்து கொடுமையான ஆட்சி நடைபெறுவதை எப்படி சகித்து கொண்டு இருக்க முடியும் என கேள்வி எழுப்பினார். 
ஏற்கனவே 10.5 லட்சம் கோடி கடன் உள்ள நிலையில் மேலும் இலவச திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்றால் மேலும் பல லட்சம் கோடி கடன் வாங்கும் நிலை ஏற்படும் என குற்றம் சாட்டியவர்,
ஒவ்வொரு ஆண்டும் மக்களை வெள்ளத்தில் மிதக்கவிட்டு வெள்ள நிவாரணம் கொடுப்பது நல்ல ஆட்சி இல்லை. வெள்ள பாதிப்பு ஏற்படாமல் பாதுகாப்பது தான் நல்லாட்சி என கூறியவர்,
ஸ்டாலின் எதிர்கட்சியாக இருந்த போது இலவசங்களை மக்கள் விரும்பவில்லை என்று கூறிவிட்டு இப்போது திருப்பி இலவச திட்டங்களை அறிவிப்பதாக என குற்றம் சாட்டினார்.
ஸ்டாலின் 23 கட்சியுடன் கூட்டணி அமைத்து இருப்பது பயத்தினால் அவர்களிடம் நேர்மை துளி அளவும் இல்லை. 
ஐயா ராமதாஸ் எனக்கு மிகவும் பிடிக்கும். சாட்டை துரைமுருகன்  ஐய்யாவை விமர்சனம் செய்ததை நான் கண்டித்தேன் என்றவர், நாடாளுமன்ற உறுப்பிரான
திருமாவளவன் சட்டமன்ற தேர்தலில் நிற்பது ஏற்புடையது அல்ல என்றார். தொடர்ந்து ஓட்டுக்காக 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை காங்கிரஸ் மற்றும் பாஜக கொண்டு வந்ததாக குற்றம் சாட்டியவர், திட்டத்தால் எந்த ஒரு பலனும் இல்லை என்றவர், தனது கிராமத்தில் உள்ள  அனைவரும் 100 நாள் திட்டத்திற்கு  சென்று விட்டதால் தனியாக இருப்பதால் எனது தாயும் 100 நாள் வேலைக்கு சென்றதாகவும், அங்கு சென்று வேலை செய்யாமல் அமர்ந்து இருந்ததாகவும் கூறினார், இத்திட்டம் மூலம் நட்டு வைத்த மரங்கள் எத்தனை, சீரமைத்த சாலைகள் எத்தனை, தூர்வாரிய குளங்கள் எத்தனை என கேள்வி சீமான் எழுப்பினார்.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    19 hrs ago
  • மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா அவர்கள் தனது தொகுதியின் தலைமை தேர்தல் பணிமனையை இன்று (மார்ச் .30) மாலை திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதையில் திறந்து வைத்து பேசினார். இந்நிகழ்வில் கூட்டணி கட்சி முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். வரும் ஏப்ரல் 4ம்தேதி வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் அன்றே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க இருப்பதாகவும் கூறினார்.
    1
    மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா அவர்கள்  தனது தொகுதியின் தலைமை தேர்தல் பணிமனையை இன்று (மார்ச் .30) மாலை திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதையில் திறந்து வைத்து பேசினார்.
இந்நிகழ்வில் கூட்டணி கட்சி முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள்  கலந்து கொண்டனர். வரும் ஏப்ரல் 4ம்தேதி வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் அன்றே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க இருப்பதாகவும் கூறினார்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    19 hrs ago
  • மதுரை: திமுக ஐடி விங் இணையதளத்தில் வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளது. அந்த வீடியோவின் கீழ் வெயிலில் மண்டை சூடாகி விட்டது போல்... என்ற வாசகம் பதிவிடப்பட்டுள்ளது. ​இந்த வீடியோ திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐடி விங் இணையதளத்தில் இருந்து பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் பதிவேற்றம் செய்துள்ள இந்த வீடியோவிற்கு கீழே வெயிலில் மண்டை சூடாகி விட்டது போல்... என்ற வாசகம் பதிவிடப்பட்டுள்ளது. அதை அப்படியே வாசகர்களுக்கு ஒரு செய்தியாளர் என்ற அடிப்படையில் தந்துள்ளேன். கூடுதல் விவரங்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐடி விங் முகநூல் பக்கத்தில் காணலாம்.
    1
    மதுரை: திமுக ஐடி விங் இணையதளத்தில் வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளது. அந்த வீடியோவின் கீழ் வெயிலில் மண்டை சூடாகி விட்டது போல்... என்ற வாசகம் பதிவிடப்பட்டுள்ளது.
​இந்த வீடியோ திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐடி விங் இணையதளத்தில் இருந்து பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் பதிவேற்றம் செய்துள்ள இந்த வீடியோவிற்கு கீழே வெயிலில் மண்டை சூடாகி விட்டது போல்... என்ற வாசகம் பதிவிடப்பட்டுள்ளது. அதை அப்படியே வாசகர்களுக்கு ஒரு செய்தியாளர் என்ற அடிப்படையில் தந்துள்ளேன். கூடுதல் விவரங்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐடி விங் முகநூல் பக்கத்தில் காணலாம்.
    user_N-KIPSRA
    N-KIPSRA
    மதுரை வடக்கு, மதுரை, தமிழ்நாடு•
    22 hrs ago
  • அறந்தாங்கி தொகுதியில் பாஜக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி அறந்தை தொகுதிக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு அனைத்து காவி சொந்தங்களும் பாஜக கூட்டணி அறந்தைதொகுதியை பாஜக கைப்பற்றும்.. வெற்றிவேல் வீரவேல்
    10
    அறந்தாங்கி தொகுதியில் பாஜக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி அறந்தை தொகுதிக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு அனைத்து காவி சொந்தங்களும் பாஜக கூட்டணி அறந்தைதொகுதியை பாஜக கைப்பற்றும்.. வெற்றிவேல் வீரவேல்
    user_Ramakrishn Ramakrishna
    Ramakrishn Ramakrishna
    அறந்தாங்கி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    23 hrs ago
  • விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஏற்பட்ட தகராறு தாக்குதலாக மாறி, பின்னர் சாலை மறியல் போராட்டமாகவும் பரவியதால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது. மல்லாங்கிணறு அருகே உள்ள முடியனூர் கிராமத்தில் அமைந்துள்ள ஆண்டிச்சியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக இரண்டு தரப்பினருக்கிடையே நீண்ட நாட்களாக பிரச்சனை இருந்து வந்தது. இந்த நிலையில், ஒரு தரப்பினர் விழா ஏற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, எதிர் தரப்பினர் “இங்கு சாமி கும்பிடக்கூடாது” என கூறி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. தகராறு திடீரென வன்முறையாக மாறி, அரிவாள், கம்பு, கட்டைகள் போன்ற ஆயுதங்களால் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் டில்லி கோச்சடை, சின்னமுத்து, முத்துவேல், முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், கும்பாபிஷேகத்திற்காக வைத்திருந்த பொருட்களும் சேதப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்யவில்லை என்ற குற்றச்சாட்டில், மற்றொரு தரப்பைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் மல்லாங்கிணறு பகுதியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது விருதுநகர் – காரியாபட்டி சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து, தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    1
    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஏற்பட்ட தகராறு தாக்குதலாக மாறி, பின்னர் சாலை மறியல் போராட்டமாகவும் பரவியதால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது.
மல்லாங்கிணறு அருகே உள்ள முடியனூர் கிராமத்தில் அமைந்துள்ள ஆண்டிச்சியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக இரண்டு தரப்பினருக்கிடையே நீண்ட நாட்களாக பிரச்சனை இருந்து வந்தது.
இந்த நிலையில், ஒரு தரப்பினர் விழா ஏற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, எதிர் தரப்பினர் “இங்கு சாமி கும்பிடக்கூடாது” என கூறி தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
தகராறு திடீரென வன்முறையாக மாறி,
அரிவாள், கம்பு, கட்டைகள் போன்ற ஆயுதங்களால் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் டில்லி கோச்சடை, சின்னமுத்து, முத்துவேல், முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும், கும்பாபிஷேகத்திற்காக வைத்திருந்த பொருட்களும் சேதப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்யவில்லை என்ற குற்றச்சாட்டில்,
மற்றொரு தரப்பைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் மல்லாங்கிணறு பகுதியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது
விருதுநகர் – காரியாபட்டி சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது
சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து,
தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்தனர்.
இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்,
போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    user_குமார்
    குமார்
    Kariapatti, Virudhunagar•
    47 min ago
  • ஆண்டிபட்டியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த காளியம்மன் கோவில் பங்குனித் திருவிழா சிங்கமுக வாகனத்தில் எழுந்தருளி இரவு முழுவதும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த காளியம்மனுக்கு 10அடி உயர மாலை சாத்தி வீதிகள் தோறும் நீண்ட நேரம் காத்திருந்து சாமி சரிசனம் செய்த பக்தர்கள் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது நூற்றாண்டு பழமையான காளியம்மன் கோவில் நகரில் உருவான முதல் கோவிலாக விளங்கிவரும் இந்த காளியம்மன் கோவில் பங்குனி திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் 4ம் நாள் நிகழ்ச்சியான இன்று காளியம்மன் சிங்கமுக வாகனத்தில் எழுந்தருளி நவரத்தன நகை மாலை அணிந்து அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த நிலையில் காளியம்மனுக்கு தேனி மதுரை தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள கடைகள் தோறும் 10அடி உயர மாலை அணிவித்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் இரவு முழுவதும் ஆண்டிபட்டி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்த காளியம்மனுக்கு வீதிகள் தோறும் தூங்காமல் இரவு முழுவதும் நீண்ட நேரமாக காத்திருந்து தங்களது வீடுகளுக்கு முன்பு மாலைகள் பூ பழம் பூஜை பொருள்களுடன் அம்மனுக்கு பூஜை செய்து வழிபட்டனர்.பின்னர் இரவு முழுவதும் ஆண்டிபட்டி நகரில் முக்கிய வீதிகளில் வலம் வந்த காளியம்மன் அதிகாலையில் மீண்டும் கோவிலை வந்து அடைந்தார். .
    1
    ஆண்டிபட்டியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த காளியம்மன் கோவில் பங்குனித் திருவிழா
சிங்கமுக  வாகனத்தில்  எழுந்தருளி இரவு முழுவதும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த காளியம்மனுக்கு
10அடி உயர மாலை சாத்தி வீதிகள் தோறும் நீண்ட நேரம் காத்திருந்து
சாமி சரிசனம் செய்த பக்தர்கள்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது நூற்றாண்டு 
பழமையான காளியம்மன் கோவில் நகரில் உருவான முதல் கோவிலாக விளங்கிவரும் இந்த காளியம்மன் கோவில் பங்குனி திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் 4ம் நாள் நிகழ்ச்சியான இன்று காளியம்மன் சிங்கமுக வாகனத்தில் எழுந்தருளி நவரத்தன நகை மாலை அணிந்து  அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த நிலையில் காளியம்மனுக்கு தேனி மதுரை தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள கடைகள் தோறும் 10அடி உயர மாலை அணிவித்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் இரவு முழுவதும் ஆண்டிபட்டி நகரின் முக்கிய  வீதிகளின் வழியாக வலம் வந்த காளியம்மனுக்கு வீதிகள் தோறும் தூங்காமல் இரவு முழுவதும் நீண்ட நேரமாக காத்திருந்து தங்களது வீடுகளுக்கு முன்பு மாலைகள் பூ பழம் பூஜை பொருள்களுடன் அம்மனுக்கு பூஜை செய்து வழிபட்டனர்.பின்னர் இரவு முழுவதும் ஆண்டிபட்டி நகரில் முக்கிய வீதிகளில் வலம் வந்த காளியம்மன் அதிகாலையில் மீண்டும் கோவிலை வந்து அடைந்தார்.
.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • மதுரை அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் 30.03.2026 திங்கட்கிழமை சந்திர சோமவார பிரதோசத்தை முன்னிட்டு மாலை ஸ்ரீ நந்தியம் பெருமானுக்கு மூலவர் பிரதோஷ நாயகர் நாயகி சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் நாயகி திருக்கோவில் பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்து பிரதோஷ பூஜை நிறைவு பெற்றது. இந்நிகழ்விற்கு வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
    1
    மதுரை அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் 
30.03.2026 திங்கட்கிழமை   சந்திர  சோமவார பிரதோசத்தை முன்னிட்டு  மாலை ஸ்ரீ நந்தியம் பெருமானுக்கு மூலவர் பிரதோஷ நாயகர் நாயகி சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் நாயகி திருக்கோவில் பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்து பிரதோஷ பூஜை நிறைவு பெற்றது. இந்நிகழ்விற்கு வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    19 hrs ago
  • போடிநாயக்கனூர் ஜக்கமநாயக்கன்பட்டி அருகே உள்ள காளியம்மன் கோவில் திருவிழா. 300, மேற்பட்ட பெண்கள் பால் குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஜக்கம்மா நாயக்கன்பட்டி திருமலாபுரம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது அருள்மிகு காளியம்மன் கோவில். இங்கு இன்று பங்குனி மாத உற்சவத்தை முன்னிட்டு செண்டை மேளம் முழங்க,சிலம்பாட்டம், கோலாட்டம், ஆட்டம் பாட்டத்துடன் சுமார் 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் சுமந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் ஊர்வலமாக நடந்து வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர். அதனைத்தொடர்ந்து பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்த பால் குடங்களை கொண்டு காளியம்மன் கோவிலில் உள்ள மூலவர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.
    1
    போடிநாயக்கனூர் ஜக்கமநாயக்கன்பட்டி அருகே உள்ள காளியம்மன் கோவில் திருவிழா.
300, மேற்பட்ட பெண்கள் பால் குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஜக்கம்மா நாயக்கன்பட்டி திருமலாபுரம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது அருள்மிகு காளியம்மன் கோவில்.
இங்கு இன்று பங்குனி மாத உற்சவத்தை முன்னிட்டு செண்டை மேளம் முழங்க,சிலம்பாட்டம், கோலாட்டம், ஆட்டம் பாட்டத்துடன் சுமார் 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் சுமந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் ஊர்வலமாக நடந்து வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.
அதனைத்தொடர்ந்து பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்த பால் குடங்களை கொண்டு காளியம்மன் கோவிலில் உள்ள மூலவர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமையிலான கூட்டணியில் முக்குலத்தோர் புலிப்படை இணைந்துள்ளதாக அதன் தலைவர் கருணாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், சிவகங்கை சட்டமன்றத் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட இருப்பதாக தெரிவித்தார். தங்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியும் தெரிவித்தார். மேலும், திமுக அரசின் மக்கள் நலத் திட்டங்கள் கூட்டணிக்கு பெரிய வெற்றியைத் தரும்
    1
    2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமையிலான கூட்டணியில் முக்குலத்தோர் புலிப்படை இணைந்துள்ளதாக அதன் தலைவர் கருணாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், சிவகங்கை சட்டமன்றத் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட இருப்பதாக தெரிவித்தார். தங்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியும் தெரிவித்தார்.
மேலும், திமுக அரசின் மக்கள் நலத் திட்டங்கள் கூட்டணிக்கு பெரிய வெற்றியைத் தரும்
    user_Santhosh Kumar V
    Santhosh Kumar V
    பத்திரிகையாளர் மானாமதுரை, சிவகங்கை, தமிழ்நாடு•
    2 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.