Shuru
Apke Nagar Ki App…
சிவகங்கை தொகுதியில் கருணாஸ் போட்டி: திமுக கூட்டணியில் முக்குலத்தோர் புலிப்படை இணைப்பு 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமையிலான கூட்டணியில் முக்குலத்தோர் புலிப்படை இணைந்துள்ளதாக அதன் தலைவர் கருணாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், சிவகங்கை சட்டமன்றத் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட இருப்பதாக தெரிவித்தார். தங்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியும் தெரிவித்தார். மேலும், திமுக அரசின் மக்கள் நலத் திட்டங்கள் கூட்டணிக்கு பெரிய வெற்றியைத் தரும்
Santhosh Kumar V
சிவகங்கை தொகுதியில் கருணாஸ் போட்டி: திமுக கூட்டணியில் முக்குலத்தோர் புலிப்படை இணைப்பு 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமையிலான கூட்டணியில் முக்குலத்தோர் புலிப்படை இணைந்துள்ளதாக அதன் தலைவர் கருணாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், சிவகங்கை சட்டமன்றத் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட இருப்பதாக தெரிவித்தார். தங்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியும் தெரிவித்தார். மேலும், திமுக அரசின் மக்கள் நலத் திட்டங்கள் கூட்டணிக்கு பெரிய வெற்றியைத் தரும்
More news from தமிழ்நாடு and nearby areas
- 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமையிலான கூட்டணியில் முக்குலத்தோர் புலிப்படை இணைந்துள்ளதாக அதன் தலைவர் கருணாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், சிவகங்கை சட்டமன்றத் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட இருப்பதாக தெரிவித்தார். தங்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியும் தெரிவித்தார். மேலும், திமுக அரசின் மக்கள் நலத் திட்டங்கள் கூட்டணிக்கு பெரிய வெற்றியைத் தரும்1
- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம் நகரில் உள்ள சார் ஆட்சியர் அலுவலகத்தில் காரைக்குடி சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வேட்பாளர் டாக்டர் பிரபு வேட்பு மனு தாக்கல் செய்தார்,அதற்கு முன்னதாக த வெ க கட்சியினர் விசில் சத்தத்துடன், மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்,1
- விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஏற்பட்ட தகராறு தாக்குதலாக மாறி, பின்னர் சாலை மறியல் போராட்டமாகவும் பரவியதால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது. மல்லாங்கிணறு அருகே உள்ள முடியனூர் கிராமத்தில் அமைந்துள்ள ஆண்டிச்சியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக இரண்டு தரப்பினருக்கிடையே நீண்ட நாட்களாக பிரச்சனை இருந்து வந்தது. இந்த நிலையில், ஒரு தரப்பினர் விழா ஏற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, எதிர் தரப்பினர் “இங்கு சாமி கும்பிடக்கூடாது” என கூறி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. தகராறு திடீரென வன்முறையாக மாறி, அரிவாள், கம்பு, கட்டைகள் போன்ற ஆயுதங்களால் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் டில்லி கோச்சடை, சின்னமுத்து, முத்துவேல், முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், கும்பாபிஷேகத்திற்காக வைத்திருந்த பொருட்களும் சேதப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்யவில்லை என்ற குற்றச்சாட்டில், மற்றொரு தரப்பைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் மல்லாங்கிணறு பகுதியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது விருதுநகர் – காரியாபட்டி சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து, தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.1
- மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா அவர்கள் தனது தொகுதியின் தலைமை தேர்தல் பணிமனையை இன்று (மார்ச் .30) மாலை திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதையில் திறந்து வைத்து பேசினார். இந்நிகழ்வில் கூட்டணி கட்சி முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். வரும் ஏப்ரல் 4ம்தேதி வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் அன்றே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க இருப்பதாகவும் கூறினார்.1
- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் சித்தரேவு ஊராட்சி 5-வது வார்டு பகுதியில் செயல்படும் பால்வாடி அருகில் உள்ள செப்டிக் டேங்க் மேற்பகுதி திறந்த நிலையில் இருந்ததால் குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் நிலை இருந்ததை கருத்தில் கொண்டு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்ததின் பேரில் ஊராட்சி பணியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குழந்தைகளின் பாதுகாப்பு நலன் கருதி திறந்து கிடந்த செப்டிக் டேங்க் மேல் புரத்தை பட்டிய கற்களால் உடனடியாக மூடினர். ஊராட்சி நிர்வாகத்தின் உடனடி நடவடிக்கையால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.1
- Post by மா.கணேஷ்1
- இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்த விராலிமலை தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பேட்டி1
- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சண்முகப்பிரியா இன்று மானாமதுரை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதற்கு முன்பு, மானாமதுரையில் உள்ள தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் மேளதாளங்களுடன், ஏர் கலப்பையை சுமந்து மற்றும் ஜல்லிக்கட்டு காளையுடன் சுமார் 5 கிலோமீட்டர் ஊர்வலமாக வந்து மனு தாக்கல் செய்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.1