Shuru
Apke Nagar Ki App…
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
Vinayagam Vinayagam
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
More news from தமிழ்நாடு and nearby areas
- காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் பச்சையப்பன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 253மாணவர்களுக்கு காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவிஎம்பி எழிலரசன் விலையில்லா சைக்கிளை வழங்கி,பள்ளி மாணவர்களோடு கலந்துரையாடினார்.பின் தான் படித்த பள்ளி என்பதால் எம்எல்ஏ எழிலரசன் ஆர்வம் மிகுதியால் மாணவர்களுக்கு வழங்கிய சைக்கிள் ஒன்றை எடுத்துக்கொண்டு பள்ளி வளாகம் முழுவதும் சைக்கிள் ஓட்டி பள்ளியில் தனது பருவக் கால பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து மகிழ்ந்தார்.பள்ளி வளாகத்தில் பழைய பள்ளி மாணவனாகவே மாறி சைக்கிள் ஓட்டி மகிழ்ந்த எம்எல்ஏவின் செய்கையை பார்த்த பள்ளி மாணவர்கள் உற்சாகம் மிகிதியால் ஆரவாரம் செய்து எம்எல்ஏ-வை உற்சாகப்படுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஏகாம்பரம், மாவட்ட பொருளாளர் சன் பிராண்ட் கே.ஆறுமுகம், பகுதி செயலாளர் வெங்கடேசன் மற்றும் புதிய பிரமுகர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். இந்நிலையில் எம்.எல்.ஏ சைக்கிள் ஓட்டும் இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.1
- தர்மபுரி எஸ்.எம். ஆறுமுகம் பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழர் திருநாளாம் பொங்கல்பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கல்லூரி தலைவர் எஸ்.எம்.ஏ.வெங்கடேசன் தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர் கந்தசாமி முன்னிலை வகித்தார். கல்லூரி இயக்குனர் ஏ.எஸ். சதீஸ்ஆறுமுகம் பொங்கல் விழாவை தொடங்கி வைத்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். விழாவில் சர்க்கரை பொங்கல் அனைவருக்கும் வழங்கப்பட்டது. விழாவையொட்டி மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் கல்லூரி முதல்வர் கோவிந்தராஜன், கல்லூரி துணை முதல்வர் ஸ்ரீதரன், கல்லூரி நிர்வாக அலுவலர் விஜய் கார்த்திக் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்1
- தருமபுரியில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பொங்கல் திருவிழா பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளின் குத்தாட்டங்களுடன் பாரம்பரிய முறைப்படி கோலாகலமாக நடைபெற்றது. தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளில் பொங்கல் திருவிழா பொங்கல் வைத்து பாரம்பரிய முறைப்படி நடைபெற்று வருகிறது அதன் அடிப்படையில் தனியார் பச்சமுத்து மெட்ரிக் மேல்நிலை பள்ளி மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் பாரா மெடிக்கல்ஸ் கல்லூரிகளில் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடன போட்டி கயிறு இழுக்கும் போட்டிகள் உள்ளிட்டவைகளுடன் பொங்கல் திருவிழா நடைபெற்றது. அப்பொழுது மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி குழந்தைகள் வண்ண வண்ண உடை அணிந்து பொங்கல் வைத்து குத்தாட்டங்கள் ஆடியும் சிறப்பாக பொங்கல் திருவிழாவை கொண்டாடினர் தொடர்ந்து கல்லூரிகளில் பாரம்பரிய முறைப்படி மண்பானையில் பொங்கல் வைத்தும் வாழை கரும்பு உள்ளிட்டவைகளால் அலங்காரங்கள் செய்து பொங்கல் வைத்து கொண்டாடினர். தொடர்ந்து கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கயிறு இழுக்கும் போட்டி உறியடிக்கும் போட்டி மியூசிக்கல் சேர் நாற்காலி போட்டி உள்ளிட்டவைகளை வைத்து மாணவ மாணவிகளை உற்சாகமடைய செய்தனர் தொடர்ந்து இசைக்கு ஏற்ப மாணவ மாணவிகள் குத்தாட்டம் ஆடி அனைவரையும் மகிழ்ச்சியடைய செய்தனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகம் சார்பில் பரிசுகள் வழங்கி பெருமைப்படுத்தினர்1
- நல்லம்பள்ளியில் 2.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில் செவ்வாய் தோறும் ஆடுகள் விற்பனைக்காக சிறப்பு வார சந்தை, இன்று (ஜன.13) செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வார சந்தை பொங்கல் பண்டிகை முன்னிட்டு சிறப்பாக நடந்தது. இதில் தருமபுரி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும், சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல்,வேலூர் வெளி மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள், வியாபாரிகள் ஆடுகளை விற்க, வாங்க வந்திருந்தனர். மேலும், ஆடுகள் ரூ.3500 - ரூ.24,000 வரை, என ரூ.2.50 கோடிக்கு ஆடுகள் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.1
- Post by Chella Pandi1
- Post by ஆ.கார்த்திக் அணைத்து மக்கள் அரசியல் கட்சி1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- இந்திய மருத்துவ சங்க காஞ்சிபுரம் கிளை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நிகழ்வின் போது சாலையில் ஹெல்மெட் அணிந்துவந்த வாகன ஓட்டிகளுக்கு எஸ்.பி.சண்முகம் பரிசுகளை வழங்கினார். இந்திய மருத்துவ சங்க காஞ்சிபுரம் கிளை சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையிலிருந்து பல்வேறு முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில் மருத்துவர்கள் செவிலியர் மாணவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.பேருந்து நிலையம் அருகே இந்நிகழ்வில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் கலந்து கொண்டு சாலையில் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டி வந்த நபர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தும், ஹெல்மெட் அணியாத நபர்களுக்கு துண்டு பிரசுரங்கள் மூலம் சாலை பாதுகாப்பு குறித்து தெரிவித்து ஹெல்மெட் அணிய விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் மருத்துவர்கள் திடீரென ஏற்படும் மாரடைப்பின்போது மேற்கொள்ள வேண்டிய முதல் சிகிச்சை முறையை செய்து காண்பித்து பொதுமக்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அதனை செய்து காண்பிக்க பயிற்சி அளித்தனர்.1
- பொங்கல் பண்டிகைக்கு ஒரே நாள் உள்ள நிலையில் நல்லம்பள்ளி வார சந்தையில் 10 ஆயிரம் ஆடுகள் குவிந்தது சுமார் 8 கோடிக்கு மேல் விற்பனையால் விவசாயிகள் மகிழ்ச்சி1