தூத்துக்குடி மாநகரில் இயங்கி வரும் வ.உ.சி கல்லூரி சுயநிதி பாடப்பிரிவு மாணவர்களுக்கு. நடைமுறையாக இருந்த காலை 8.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை வேலை நேரம், கடந்த ஒரு மாதத்திற்கு முன் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி ஆக மாற்றப்பட்டது. மாணவர்கள் மத்தியில் இது அதிருப்தியை உருவாக்கியது. மாணவ மாணவிகள் பேருந்து வசதியின்றி தவிக்கின்றனர். சுற்றுப்புற கிராமங்களில் உள்ள மாணவிகள் தங்கள் கிராமங்களுக்கு செல்ல இரவு 9 மணி வரை ஆகிறது. கிராம பேருந்து நிறுத்தத்தில் இறங்கி தங்கள் வீடுகளுக்கு செல்ல 2 முதல் 3 கிலோமீட்டர் வரை தனியாக நடந்து செல்லும் நிலை ஏற்படுகிறது. இது மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. கிராமப்புற மாணவிகள் தங்களின் கல்லூரி படிப்பை தொடர்வதே பெரிய சவாலாக இருக்கும் இந்த சமூகத்தில் இரவு நேரங்களில் தனியாக வருவதால் மேலும் இது சவாலாக மாறுகிறது. நேர மாற்றத்திற்காகவே பல மாணவிகள் தங்களது கல்லூரி படிப்பை நிறுத்திக் கொள்ள இது வழி வகுக்கிறது. இந்திய மாணவர் சங்கம் தூத்துக்குடி மாவட்ட குழு இது தொடர்பாக இரண்டு முறை மனு கல்லூரி முதல்வரிடம் கொடுக்கப்பட்டது. அதில் முதல்வர் கூறுகின்ற எந்த ஒரு கருத்தும் மாணவர்களால் ஏற்கப்படாத நிலையில், மாணவ மாணவிகள் (31/07/2025) அன்று இந்திய மாணவர் சங்கம் தலைமையில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அன்று நடந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், (01/08/2025) அன்றும் மாணவ மாணவிகள் இரண்டாவது நாளாக வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அன்று எந்த ஒரு பேச்சுவார்த்தைக்கும் வராமல் இருந்த நிர்வாகத்தால் மாணவர்கள் கல்லூரி வளாகத்திற்குள் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் அறிவித்தனர். அப்போது தலைமை தாங்கி கொண்டிருந்த இந்திய மாணவர் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளரை நிர்வாகம் மற்றும் கல்லூரி முதல்வர் ஒருமையில் பேசியும், வன்முறையிலும் ஈடுபட்டனர். அமைதியாக ஜனநாயக முறையில் போராடும் மாணவர்களை வன்முறையை ஏவிவிட்டு கலவரத்தை தூண்டும் விதமாக கல்லூரி நிர்வாகம் மற்றும் முதல்வர் நடந்து கொண்டனர். இது மிகவும் கண்டனத்திற்குரியது. எனவே இதில் உயர்கல்வி துறையும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக தலையிட்டு மாணவ மாணவியர்களின் கோரிக்கையை ஏற்று கல்லூரி நேரத்தை ஏற்கனவே இருந்த காலை நேர கல்லூரி ஆக மாற்றம் செய்து தரும்படி இந்திய மாணவர் சங்கம் தூத்துக்குடி மாவட்ட குழு சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

- குஜிலியம்பாறை: காடம்மநாயக்கனூரில் கார் கவிழ்ந்ததில் டிரைவர் உயிரிழப்பு குஜிலியம்பாறை தாலுகா ஆலம்பட்டி ஊராட்சி காடம நாயக்கனூரை சேர்ந்த டிரைவர் வினோத் (வயது 22). இவர் ஒரு காரில் ஆர்.வெள்ளோடு சென்று மளிகை கடையில் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு மீண்டும் தனது ஊரை நோக்கி சென்று கொண்டிருந்தார். கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து காடமனநாயக்கனூர் பகுதியில் சென்ற பொழுது தலை குப்புற கவிழ்ந்து விபத்துள்ளானது. இதில் படுகாயம் அடைந்த வினோத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து குஜிலியம்பாறை சப்-இன்ஸ்பெக்டர் விஜயலிங்கம் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.1
- ஆலங்குடி: குரு தட்சணாமூர்த்தி பகவானுக்கு சிறப்பு வழிபாடு ஆலங்குடி நகரில் அமைந்துள்ள 2-வ்து குருஸ்தலமாக அழைக்கப்படும் தர்மஸம்வர்த்தினி சமேத நாமபுரீஸ்வரர் கோயில் தனிச் சன்னதியில் வீற்றிருக்கும் குருபகவானுக்கு மார்கழி மாத வியாழனை முன்னிட்டு, இன்று சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று குரு தட்சிணாமூர்த்தி சுவாமியை தரிசித்து சென்றனர்.1
- நேற்று செம்மொழி பூங்காவில் கூடய மக்கள்.1
- வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் திருட்டு பாலஜங்கமனஅள்ளி கிராமத்தை சேர்ந்த ரவிக்குமார் நேற்று முன்தினம் குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு தஞ்சாவூர் சென்று இருந்த நிலையில், நேற்று வீடு திரும்பி பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த 10.5 பவுன் தங்க நகை 4 லட்சம் பணம் திருடப்பட்டது தெரியவந்தது இது குறித்து அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் காவலர்கள் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்1
- அதியமான் கோட்டை ஸ்ரீ வீரகாரன் கோயில் 27ம் ஆண்டு திருவிழா வெகு விமர்சையாக கொண்டாட்டம் நல்லம்பள்ளி அருகே அதியமான் கோட்டை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ வீரகாரன் கோயில் 27ம் ஆண்டு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது, முக்கிய நாளான இன்று அதிகாலை முதலே சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்து பூக்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது. பக்தர்கள் குடும்பத்துடன் வந்து நேர்த்தி கடனை செலுத்தி சாமி தரிசனம் செய்தனர். இவ்விழாவில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ் விழாவிற்க்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்1
- Post by Moorthi Moorthi2
- புத்தாண்டு மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு சுருளி அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள் . தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலங்கலில் முக்கியமான ஒன்றாக உள்ளது. சுருளி அருவி சுற்றுலாத்தலமாகவும், மக்களின் புண்ணிய ஸ்தலமாகவும் விளங்குகிறது. இன்று புத்தாண்டு தினம் மற்றும் பள்ளிகளின் அரையாண்டு தொடர் விடுமுறை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் சுருளி அருவிக்கு குடும்பத்துடன் வருகை தந்து ஆர்ப்பரித்து கொட்டும் அருவியில் குளித்துவிட்டு, சுருளிஅருவியில் உள்ள பூத நாராயணன் கோவில், முருகன் கோயில், அண்ணாமலையார் கோவில் ஆகிய கோவில்களில் சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். குறிப்பாக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் வழியில் சுருளி அருவி அமைந்துள்ளதால் சபரிமலைக்கு செல்லும் ஐயப்பன் பக்தர்கள் அதிகப்படியாக சுருளி அருவியில் வந்து குளித்துவிட்டு செல்கின்றனர்.1
- திண்டுக்கல்லில் 14 மற்றும் 17-ம் நூற்றாண்டை சேர்ந்த உடன்கட்டை ஏறும் நடு கற்கள் கண்டுபிடிப்பு மேற்கு ரத வீதியில் கண்டெடுத்த நடுகல் வீரனின் தலை கொண்டை இடது புறம் சரிந்தும் முகத்தில் முறுக்கிய மீசையும் , இரு கைகளும் கூப்பி வணங்கிய நிலையில் இடது கால் மடக்கியும் வலது கால் தரையில் ஊன்றியும் சுகாசன நிலையில் உள்ளார். இவரின் அருகே மதுகுடுவை வைத்த நிலையில் உள்ளது. வீரன் அமைதி காலத்தில் இறந்தபின் அவர் மனைவி உடன்கட்டை ஏறி உள்ளார். இந்த நடுகல் 17 ம் நூற்றாண்டை சேர்ந்ததாகும் மற்றொன்று இந்த நடுகல்லின் காலம் 13 , 14-ம் நுாற்றாண்டை குறிப்பிடுகிறது1
- கலைஞர் பூங்காவில் குவிந்த மக்கள் ஆங்கில புத்தாண்டு இன்று பிறந்ததை முன்னிட்டு இன்று விடுமுறை நாளன்று புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட கலைஞர் பூங்காவில் ஏராளமான சிறுவர்கள் மற்றும் பெற்றோர்கள் கூடி சுற்றிப் பார்த்து மகிழ்ந்தனர். இன்று விடுமுறை பூங்காவில் உள்ள ஊஞ்சல் மற்றும் வெளி திரையரங்கம் மற்றும் விளையாட்டு திடல் மற்றும் நீர்வீழ்ச்சி உள்ளிட்ட இடங்களில் பெற்றோர்கள், குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்தனர்.1