நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு விவேகானந்தா கலை அறிவியல் மகளிர் கல்லூரி தமிழ்த்துறை சார்பில் ஸ்ரீஆண்டாள் ஸ்ரீ அரங்கநாதர் திருக்கல்யாண நிகழ்வு வெகு விமர்சையாக கொண்டாடப் பட்டது. ஸ்ரீஆண்டாள் ஸ்ரீஅழகர் திருமண விழாவினை விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் மருத்துவர்.கிருபாநிதி கல்வி நிறுவனங்களின் இயக்குனர் மருத்துவர் நிவேதனா கிருபாநிதி ஆகியோர் நடத்தி வைத்தனர். தமிழர்களின் பக்தி நெறியைப் போற்றும் விதமாக அமைந்திருக்கும் திருப்பாவை என்னும் இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு இந்நிகழ்வு நடைபெற்றது. பெண்கள் தங்களின் வாழ்வில் மேன்மையடையவும், தங்களின் மனவலிமையை அதிகரிக்கவும் இத்திருக்கல்யாணம் நடைபெறும். தமிழ்த்துறையில் மார்கழி மாதத்தின் தொடக்கத்தில் ஆண்டாள் அழகராக மாணவிகள் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுடன் தமிழ்த்துறை அனைத்து மாணவிகளும், பாசுரம் பாடி நோன்பிருந்து ஆண்டாளை வழிபடுவர். மாதத்தின் இறுதியில் ஆண்டாள், அழகருக்கு நலுங்கு வைத்தல் நிகழ்வோடு தொடங்கி அவர்களுக்கு இறைத் தோற்றத்தில் அலங்கரித்து இத்திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது . மார்கழி திங்களாம் மதி நிறைந்த நல்ல நாளில் ஆண்டாளின் திருவருளைப் பெறுதல் பொருட்டு ஆண்டாள் அழகர் திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி விவேகானந்தா கல்வி நிறுவனத்தில் உள்ள ஸ்ரீவித்யா கணபதி கோவில் முளைப்பாரி எடுத்தல், இறைவழிபாடோடு ஆண்டாள் அழகரின் திருமண ஊர்வலம் தொடங்கியது. இதில் 200 முளைப்பாரிகள், 450 சீர்த்தட்டுக்கள், 1500 - க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளின் மயிலாட்டம், கரகாட்டம், தேவராட்டம், காவடியாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், தப்பாட்டம், கைச்சிலம்பாட்டம், கும்மியாட்டம், போன்ற பாரம்பரிய நடனங்களை ஆடியபடியே ஊர்வலம் சென்று, ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ அழகரின் திருமணம் விவேகானந்தா கலையரங்கில் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் பல்லாயிரக் கணக்கான மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் பேராசிரியர்கள் தமிழர்களின் பாரம்பரியமான வேட்டி, சேலையில் இவ்வூர்வலத்தில் கலந்து கொண்டனர். கலையரங்கில் வேத மந்திரங்கள் முழங்கமாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து அம்மானை விளையாட்டு தேங்காய் உருட்டுதல், பூப்பந்து எரிதல், அப்பளம் உடைத்தல்,பானை விளையாட்டு ஆகியவை நடைபெற்றது.இந்த திருமண நிகழ்வை மாணவிகள் உற்சாகத்துடன் கண்டு மகிழ்தனர் மதிய நிகழ்வாக மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும், அஸ்வதி குழுவினரின் நாட்டிய நிகழ்ச்சியும் விவேகானந்தா கலையரங்கில் சிறப்பாக நடைபெற்றது. விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் செயல் இயக்குநர் டாக்டர் எஸ்.குப்புசுவாமி, முதன்மை நிர்வாகி மீ.சொக்கலிங்கம், திறன் மேம்பாட்டு இயக்குநர் டாக்டர் வீ.குமரவேல், ஆராய்ச்சி இயக்குநர் டாக்டர் இரா.பாலகுருநாதன், நிர்வாக அதிகாரி டாக்டர் ராஜேந்திரன், கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர். விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியின் முதல்வர் டாக்டர் பி.பேபிஷகிலா இந்நிகழ்வை ஒங்கிணைத்து நடத்தினார். விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ம.கவிதா இந்நிகழ்ச்சியை முறைப்படுத்தினார். மேலும் விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் கல்லூரி முதல்வர்கள், துணை முதல்வர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டு இவ்விழாவினைச் சிறப்பித்தனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு விவேகானந்தா கலை அறிவியல் மகளிர் கல்லூரி தமிழ்த்துறை சார்பில் ஸ்ரீஆண்டாள் ஸ்ரீ அரங்கநாதர் திருக்கல்யாண நிகழ்வு வெகு விமர்சையாக கொண்டாடப் பட்டது. ஸ்ரீஆண்டாள் ஸ்ரீஅழகர் திருமண விழாவினை விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் மருத்துவர்.கிருபாநிதி கல்வி நிறுவனங்களின் இயக்குனர் மருத்துவர் நிவேதனா கிருபாநிதி ஆகியோர் நடத்தி வைத்தனர். தமிழர்களின் பக்தி நெறியைப் போற்றும் விதமாக அமைந்திருக்கும் திருப்பாவை என்னும் இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு இந்நிகழ்வு நடைபெற்றது. பெண்கள் தங்களின் வாழ்வில் மேன்மையடையவும், தங்களின் மனவலிமையை அதிகரிக்கவும் இத்திருக்கல்யாணம் நடைபெறும். தமிழ்த்துறையில் மார்கழி மாதத்தின் தொடக்கத்தில் ஆண்டாள் அழகராக மாணவிகள் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுடன் தமிழ்த்துறை அனைத்து மாணவிகளும், பாசுரம் பாடி நோன்பிருந்து ஆண்டாளை வழிபடுவர். மாதத்தின் இறுதியில் ஆண்டாள், அழகருக்கு நலுங்கு வைத்தல் நிகழ்வோடு தொடங்கி அவர்களுக்கு இறைத் தோற்றத்தில் அலங்கரித்து இத்திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது . மார்கழி திங்களாம் மதி நிறைந்த நல்ல நாளில் ஆண்டாளின் திருவருளைப் பெறுதல் பொருட்டு ஆண்டாள் அழகர் திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி விவேகானந்தா கல்வி நிறுவனத்தில் உள்ள ஸ்ரீவித்யா கணபதி கோவில் முளைப்பாரி எடுத்தல், இறைவழிபாடோடு ஆண்டாள் அழகரின் திருமண ஊர்வலம் தொடங்கியது. இதில் 200 முளைப்பாரிகள், 450 சீர்த்தட்டுக்கள், 1500 - க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளின் மயிலாட்டம், கரகாட்டம், தேவராட்டம், காவடியாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், தப்பாட்டம்,
கைச்சிலம்பாட்டம், கும்மியாட்டம், போன்ற பாரம்பரிய நடனங்களை ஆடியபடியே ஊர்வலம் சென்று, ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ அழகரின் திருமணம் விவேகானந்தா கலையரங்கில் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் பல்லாயிரக் கணக்கான மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் பேராசிரியர்கள் தமிழர்களின் பாரம்பரியமான வேட்டி, சேலையில் இவ்வூர்வலத்தில் கலந்து கொண்டனர். கலையரங்கில் வேத மந்திரங்கள் முழங்கமாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து அம்மானை விளையாட்டு தேங்காய் உருட்டுதல், பூப்பந்து எரிதல், அப்பளம் உடைத்தல்,பானை விளையாட்டு ஆகியவை நடைபெற்றது.இந்த திருமண நிகழ்வை மாணவிகள் உற்சாகத்துடன் கண்டு மகிழ்தனர் மதிய நிகழ்வாக மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும், அஸ்வதி குழுவினரின் நாட்டிய நிகழ்ச்சியும் விவேகானந்தா கலையரங்கில் சிறப்பாக நடைபெற்றது. விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் செயல் இயக்குநர் டாக்டர் எஸ்.குப்புசுவாமி, முதன்மை நிர்வாகி மீ.சொக்கலிங்கம், திறன் மேம்பாட்டு இயக்குநர் டாக்டர் வீ.குமரவேல், ஆராய்ச்சி இயக்குநர் டாக்டர் இரா.பாலகுருநாதன், நிர்வாக அதிகாரி டாக்டர் ராஜேந்திரன், கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர். விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியின் முதல்வர் டாக்டர் பி.பேபிஷகிலா இந்நிகழ்வை ஒங்கிணைத்து நடத்தினார். விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ம.கவிதா இந்நிகழ்ச்சியை முறைப்படுத்தினார். மேலும் விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் கல்லூரி முதல்வர்கள், துணை முதல்வர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டு இவ்விழாவினைச் சிறப்பித்தனர்.
- நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கிழக்கு மற்றும் மேற்கு நகர திமுக சார்பில் நகர அளவிலான திராவிட பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகள் நேற்றும் இன்றும்நடைபெற்றது. வாலிபால் மற்றும் கபடி போட்டிகள் நடைபெற்றது. இதில் கபடி போட்டிகளில் பத்துக்கும் மேற்பட்ட அணிகளும் வாலிபால் போட்டியில் 15க்கும் மேற்பட்ட அணிகளும் பங்கேற்று விளையாடினார்கள் இறுதி வாலிபால் போட்டியை திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் சேலம் கிழக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சேலம் ஏ வி எஸ் கல்லூரியின் முதல்வர் சீனிவாசன்திருச்செங்கோடு மேற்கு நகர திமுக பொறுப்பாளர் முன்னாள் நகர் மன்ற தலைவர் நடேசன் கிழக்கு நகர திமுக பொறுப்பாளர் நகர் மன்ற துணைத் தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.இந்தப் போட்டிகளில்நகர அளவிலான விளையாட்டு வீரர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.கபடி பிரிவில் முதலிடம் பிடித்த எஸ்.பி. என் A அணிக்கு 5 ஆயிரம் ரொக்கப் பரிசு கோப்பை, 2ம் இடம் பிடித்த எஸ்.பி. என் B அணிக்கு 4ஆயிரம் மற்றும் கோப்பை 3ம் இடம் பிடித்த அன்னைத் தமிழ் அணிக்கு 3 ஆயிரம் மற்றும் கோப்பை பரிசாக வழங்கப் பட்டது. இதே போல் வாலிபால் பிரிவில் முதல் பரிசு பெற்ற மாணிக் பிரண்ட்ஸ் அணிக்கு5000 ரொக்கப் பரிசு மற்றும் கோப்பை இரண்டாம் பரிசு பெற்ற சந்துரு பிரண்ட்ஸ் அணிக்கு 3000 ரொக்க பரிசு மற்றும் கோப்பை மூன்றாம் இடம் பிடித்த பி.ஆர்.சி அணிக்கு ரூ 3000 ரொக்க பரிசு மற்றும் கோப்பை வழங்கப்பட்டது1
- திருப்பூர் அருகே சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து1
- தர்மபுரி அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் காத்திருப்பு கூடம் தர்மபுரி எம்எல்ஏ எஸ் பி வெங்கடேஸ்வரன் திறந்து வைத்தார்.1
- ஒகேனக்கல் காவேரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு கூத்தப்பாடி ஊராட்சியில் அமைந்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த சில தினங்களாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பொழியும் பருவமழையின் அளவைப் பொறுத்து நீர்வரத்து அதிகரிப்பதும் சரிவதுமாக காணப்படுகிறது. நேற்று 700 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று (ஜன.12) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1000 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளதாக, மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.1
- திண்டுக்கல் 12/01/26 வானிலை மேகமூட்டத்துடன் லேசான வெப்பத்துடன் 11.50க்கு மலை பெய்யத் தொடங்கியது சுமார் அரை மணி நேரம் அளவான மலை பெய்தது1
- வேடசந்தூர் பூதிபுரம் பஞ்சாயத்து மகாலட்சுமிபுரம் ஐயர் மடம் குறும்பபட்டி இந்த பகுதிகளுக்கு செல்லும் மின்சாரத்தின் மின் மாற்றி பழுதடைந்துள்ளதால் பொதுமக்கள் மின்சாரம் இன்றி சிரமம் அடைந்து வருகின்றனர் கடந்த மூன்று நாட்களாக எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த மின்மாற்றியை மாற்றி கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் சார்பாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ML வேடசந்தூர் ஒன்றிய குழு சார்பாகவும் கோரிக்கை வைக்கப்படுகிறது1
- *மணப்பாறை அருகே பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய ஶ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர்.* *அரசுக்கு நன்றி தெரிவித்த மாணவர்கள்.* திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே கண்ணுடையான்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் அருகில் உள்ள கள்ளிப்பட்டி, மாதம் பட்டி, பூசாரிபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இப்பள்ளியில் மேல்நிலைக்கல்வி பயிலும் 427 மாணவ, மாணவிகளுக்கு ஶ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். தங்கள் ஊர்களில் இருந்து பள்ளிக்கு நடந்து வந்து சென்றதாகவும், தற்போது தமிழக அரசு மிதிவண்டி கொடுத்துள்ளதால் இனி பள்ளிக்கு வருவதில் உள்ள சிரமங்கள் குறையும் எனவும் மிதிவண்டி கொடுத்த தமிழக அரசுக்கு மாணவர்கள் நன்றி தெரிவித்தனர். விழாவில் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கியசாமி, தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் லக்ஷ்மணன், தகவல் தொழில் நுட்ப அணி ஶ்ரீரங்கம் தொகுதி ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் கார்த்திக்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொடியரசு, கைக்குடி சாமி, மலம்பட்டி சந்திரன், தகவல் தொழில் நுட்ப அணி ஶ்ரீரங்கம் தொகுதி ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் கார்த்திக்குமார், கிளைச்செயலாளர் இளையராஜா மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.1
- திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் காமராஜர் சிலை அருகே சேலத்தில் இருந்து கொடுமுடி நோக்கிச் சென்ற வந்த ஆம்னி வேனுக்குள்இருந்து திடீர் புகை எழுந்தது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடி சென்று காருக்குள் இருந்த பெண்களை மீட்டு தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து புகையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ பிடிக்காமல் தடுத்தனர். கேஸ் வண்டி என்பதால் திடீரென புகை எழுந்துள்ளது.இதுகுறித்து விசாரித்தபோதுகொடுமுடியைச் சேர்ந்த அன்வர் அலி என்பவரது மகன் இமாம் ஜாபர் சாதிக் என்பவருக்கு சொந்தமான ஆம்னி வேனில் சேலத்தில் நடந்த உறவினர் வீட்டு திருமணத்திற்கு ஓட்டுநர், 5 பெண்கள் 2 குழந்தைகள் ஒரு குழுவினரும் மற்றவர்கள் ஒரு டெம்போ ட்ராவலர் வேனிலும் சென்றுள்ளனர். திருமணம் முடிந்து திரும்பி வந்து கொண்டிருந்த போது டெம்போ ட்ராவலர் வேன் முன்னால் சென்றுவிட பின்னால் அன்வர் அலியின் மருமகன் அக்பர்லி ஓட்டி வந்தஆம்னி வேன் திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் காமராஜர் சிலை அருகே வரும்போது ஆம்னி வேனுக்குள் திடீரென புகை எழ ஆரம்பித்தது உடனடியாக காரை அக்பர் அலி ஓரம் கட்டி நிறுத்திய நிலையில் புகையுடன் கார் நிற்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் காரின் கதவுகளை திறந்து காருக்குள் இருந்தவர்களை மீட்டு அருகில் அமர வைத்தனர்.அந்த வழியாக வந்த கார் மெக்கானிக் ஒருவர் கேஸ் வெடித்து தீ பரவாமல் தடுக்க கார் கேஸ் குழாயைதுண்டித்தார் இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. உடனடியாக காருக்குள் இருந்து கீழே இறங்கி விடப்பட்ட ஐந்து பெண்கள் இரண்டு குழந்தைகளும் பதட்டம் அடைந்தனர். உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து சம்பவ இடத்திற்கு நிலைய அலுவர் கரிகாலன்உத்தரவன் பேரில், சிறப்பு உதவிநிலைய அலுவலர் நடராஜன் தலைமையில் வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீச்சி அடித்து புகையை கட்டுக்குள் கொண்டு வந்தனர் மேலும் தீ விபத்து ஏற்பட்டு விடாமல் பாதுகாத்தனர். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் காரை சாய்த்து காருக்குள் புகை வந்த இடம் முழுவதும் தண்ணீரை பீச்சி அடித்து புகையை கட்டுப்படுத்தினர்.காருக்குள் காரை ஓட்டி வந்த அக்பர் அலி அவரது மனைவி,அன்வர் அலியின் மனைவியும், அக்பர் அலியின் மாமியார் மற்றும் அன்வர் அலியின் தங்கை தம்பி மகள்கள் இரண்டு பேர் மற்றும் இரண்டு குழந்தைகள் இருந்து உள்ளனர். அதில்காருக்குள் புகை எழுந்ததால் அன்வர் அலியின் மனைவி மிகவும் பதட்டமான நிலையில் காணப்பட்டார். உடனடியாகதகவல் அறிந்து விரைந்து வந்த உறவினர்கள் அவரை ஆசுவாசப் படுத்திய வேறு காரில் அவரை ஊருக்கு அழைத்துச் சென்றனர்.சுமார் அரை மணி நேரம் நடந்த இந்த சம்பவத்தால் திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு பரபரப்பு ஏற்பட்டது.1