Shuru
Apke Nagar Ki App…
கொண்டமநாயக்கன்பட்டி மக்கள் தேர்தலை புறக்கணிக்க ஆர்ப்பாட்டம் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் வட்டம் கொண்டமநாயக்கன்பட்டி கிராமம் சர்வே எண் 1 மற்றும் சர்வே எண் 39 இல் அமைந்துள்ள அரசு அனுமதிக்கப்பட்டதை விட அதிக அளவு கனிம வளங்கள் திருடப்படுவதால் குவாரியை சுற்றி உள்ள பொது மக்களுக்கு பல நலக்குறைவுகள் ஏற்படுவதும் காற்று மாசு ஏற்பட்டு விவசாயத்தை அழித்து உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை பறித்து சுகாதார சீர்கேடு இயங்கும் கல்குவாரிகளை அரசு உடனடியாக நிறுத்த வேண்டுமாய் ஊர் பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி தேர்தலை புறக்கணிக்க ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது
DHINESH KUMAR
கொண்டமநாயக்கன்பட்டி மக்கள் தேர்தலை புறக்கணிக்க ஆர்ப்பாட்டம் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் வட்டம் கொண்டமநாயக்கன்பட்டி கிராமம் சர்வே எண் 1 மற்றும் சர்வே எண் 39 இல் அமைந்துள்ள அரசு அனுமதிக்கப்பட்டதை விட அதிக அளவு கனிம வளங்கள் திருடப்படுவதால் குவாரியை சுற்றி உள்ள பொது மக்களுக்கு பல நலக்குறைவுகள் ஏற்படுவதும் காற்று மாசு ஏற்பட்டு விவசாயத்தை அழித்து உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை பறித்து சுகாதார சீர்கேடு இயங்கும் கல்குவாரிகளை அரசு உடனடியாக நிறுத்த வேண்டுமாய் ஊர் பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி தேர்தலை புறக்கணிக்க ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது
More news from Salem and nearby areas
- சங்ககிரி அருகே ஒருக்காமலை வரதராஜ பெருமாள் கோவிலில் உண்டியல் பணம் கையாடல்:அறநிலையத்துறை அதிகாரி மீது சிசிடிவி காட்சி ஆதாரத்துடன் செயல் அலுவலர் போலீசில் புகார் அளித்துள்ளார்... சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே ஒருக்காமலையில் பிரசித்தி பெற்ற வரதராஜபெருமாள் திருக்கோவில் உள்ளது... இக்கோவிலுக்கு சொந்தமான உண்டியல் கடந்த 17ம்தேதி அறநிலையத்துறை சேலம் மண்டல இணை ஆணையர் உத்தரவின்படி, சேலம் சுகனேஸ்வரர் திருக்கோவில் உதவி ஆணையர் அம்சா மற்றும் எடப்பாடி இந்து அறநிலைத்துறை சரக ஆய்வாளர் கார்த்திகா ஆகியோர் முன்னிலையில் திறந்து அன்னதான மண்டபத்திற்கு மேல் உள்ள மண்டபத்தில் கணக்கிடப்பட்டது... அப்போது உண்டியல் காணிக்கையாக ரூ 12 லட்சத்து 38 ஆயிரத்து 44 இருந்தது.அந்த பணம் கோயில் வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டு ரசீது பெறப்பட்டது.இந்நிலையில் கோவில் உண்டியல் திறப்பு நிகழ்ச்சியின்போது பணத்தை திருடியதாக திருத்தொண்டர்கள் அறக்கட்டளையின் அறங்காவலர் அல்லிக்குட்டை இராதாகிருஷ்ணன் சென்னை இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு தகவல் தெரிவித்துள்ளார்... இது குறித்து நாமக்கல் நரசிம்ம பெருமாள் திருக்கோவில் செயல் அலுவலரிடம் புகார் வந்ததையொட்டி, நேற்று (1ந்தேதி) உண்டியல் திறப்பு நடைபெற்ற அன்னதான மண்டபத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.அப்போது உண்டியல் திறப்பு நிகழ்வுக்கு கண்காணிப்பு அதிகாரியாக வந்த அம்சா, உண்டியல் பணத்தை கையாடல் செய்தது கேமரா பதிவுகள் மூலம் தெரிய வந்தது... இது குறித்து சங்ககிரி வரதராஜ பெருமாள் திருக்கோயில் செயல் அலுவலர் மாலா நேற்று சங்ககிரி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் சங்ககிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்... சங்ககிரி அருகே வேலியே பயிரை மேய்ந்த கதையாக ஒருக்காமலை வரதராஜ பெருமாள் கோவில் பணத்தை பாதுகாக்கும் அதிகாரியே பணத்தை களவாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...1
- திருச்சி மரக்கடை பகுதியில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அதனை தொடர்ந்து பிரச்சாரம் முடித்துவிட்டு புறப்பட்டு சென்றபோது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர் சதீஷ் என்பவர் மீது ஆதவ் அர்ஜுனாவின் கார் மோதியது. இதில், காவலரின் கால் எலும்பு முறிந்தது. உடனடியாக அங்கு நின்றிருந்த தவெக தொண்டர்கள் அவரை தூக்கிச்சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர்.1
- மணப்பாறை அருகே நடைபெற்ற தொட்டியப்பட்டி பாம்பாளம்மன் கோயில் திருவிழாவையொட்டி,கரகம் பாலித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு நாய்க்கா் இன மக்களின் தேவராட்டம், கரகம் அருள் சக்தியுடன் உயிரூட்டல் நிகழ்வுகள் நடைபெற்றன. தொடா்ந்து பல லட்சம் மதிப்பில் வானவேடிக்கை நிகழ்ச்சி, கரகம் பாலித்து அம்பாள் அருள் சக்தியுடன் ஆலயம் வந்தடைதல் நிகழ்வு நடைபெற்றது. தொடா்ந்து கோயில் வளாகத்தில் பொங்கலிடுதல், அங்கப்பிரதட்சணம், ஆடு - கோழி பலியிடுதல், மாவிளக்கு, கரும்புத்தொட்டில் என பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனா். மாலையில் நாய்க்கா் இன மக்களின் எருது விடும் நிகழ்ச்சி, தேவராட்டம் நடைபெற்றது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு களித்தனர்.1
- விராலிமலை சட்டமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளர்களாக இன்று பாலசுப்பிரமணியன்., திருவேந்திரன், ரமேஷ், பழனிச்சாமி, பாலவேல் முருகேசன், பாலசுப்ரமணியன், ஜோதிவேல், ஆகியோர் இலுப்பூர் தேர்தல் நடத்தும் அலுவலர் வருவாய் கோட்டாட்சியர் கோகுல் சிங்கிடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்1
- கிருஷ்ணகிரி மாவட்டம், அரசு மருத்துவக்கல்லூரி கூட்டரங்கில், வாக்காளர்கள் தேர்தலில் 100 சதவிகிதம் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் "நான் உங்கள் கிரி” என்ற கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கான விழிப்புணர்வு சின்னத்துடன் கூடிய விழிப்புணர்வு குறும்படத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் குமார் இன்றுவெளியிட்டு, அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சி1
- கிருஷ்ணகிரி சட்ட மன்றத் தொகுதியில் சுயேட்ச்சை வேட்பாளராக சந்திரமோகன் வேட்புமனு. கிருஷ்ணகிரி சட்ட மன்றத் தொகுதியில் சுயேட்ச்சை வேட்பளாராக போட்டியிட டாக்டர் சந்திரமோகன் கிருஷ்ணகிரி வருவாய்கோட்டச்சியர் அலுவாகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஷாஜகான் அவர்களிடம் தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார். தமிழகத்தில் நடைப்பெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்னும் சிலநாள்களில் முடிய உள்ளதால் அரசியல் கட்சி வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவினை தாக்கல் செய்து வருகின்றனர், அதனடிப்படையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்ட மன்ற தொகுதிகளிலும் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களும் தனி கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதியில் சுயோட்சையாக போட்டியிட்டுள்ள சமுக ஆர்வாளரும், சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளருமான டாக்டர் சந்திரமோகன் இன்று தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார், முன்னதாக கேயிலில் பூஜைகள் செய்து கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாச்சியர் அலுவலத்தில் தேர்தல் நடத்தும் அலுவரும் வருவாய் கோட்டாச்சியருமான ஷாஜகான் அவர்களிடம் டாக்டர் சந்திரமோகன் தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார், இதனை அடுத்து டாக்டர் சந்திர மோகன் நகர மக்களிடம் தனக்கு வாக்கு சேகரிக்கும் பணியினை மேற்கொண்டார்.1
- பக்கா பாலிடிக்ஸ் பகுதிக்கு.... காங்கிரஸ் கொடி ஒன்று கூட இல்லை.. வீணா போனவன் வைஸ் சேர்மனாய் இருந்தும், கொடி கட்டவில்லை எடப்பாடியில் நடந்த திமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகி M.P.S.மணி குமுறல்.... சேலம் மாவட்டம் எடப்பாடியில் திமுக கூட்டணி கட்சிகளின் செயல்வீர்கள் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், சேலம் எம்பி செல்வகணபதி ஆகியோர் தலைமையில் நடந்தது... இதில் கலந்துகொண்ட காங்கிரஸ் , தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயற்குழு உறுப்பினர் M.P.S.மணி, பேசுகையில்,சேலம் மாவட்டம் எடப்பாடியின் நகராட்சி சேர்மன் ஆக முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் பலர் இருந்துள்ளனர்... வாழப்பாடி ராமமூர்த்தியை தோற்கடிக்க செய்தவர் எம்பி செல்வகணபதி, அவர் தனது தேர்தல் வித்தையை எடப்பாடி,சங்ககிரி,மேட்டூர் தொகுதிகளில் இப்போது காட்ட வேண்டும்... காங்கிரஸில் பல தியாகங்கள் செய்துள்ளோம். நான் செல்வகணபதிக்கு செல்ல பிள்ளை. கடந்த காலங்களில் காங்கிரஸ் கொடி கட்டவில்லை என சண்டை போட்டுள்ளேன். நான் மாவட்ட தலைவராக இருக்கும்போது 15 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கிக் கொண்டு திருப்பூரில் இருந்து கொடி வாங்கி வந்து கட்டினேன். ஆனால் இன்று ஒரு கொடி கூட கட்டவில்லை. வீணாய் போன காங்கிரசைச் சேர்ந்த எடப்பாடி நகராட்சி துணை சேர்மனாய் இருந்தும் கொடி கட்டப்படவில்லை. கொடி கட்ட வேண்டுகோளாக விடுகிறேன். ஒரு உற்சாகப்படுத்தும் வகையில் கொடியை கட்டி இருக்கலாம். அங்கு 5 கொடி கொடுத்தால் எங்களுக்கு ஒரு கொடி கொடுங்கள். அப்பதான் கட்சியையும் கூட்டணியும் ஒருங்கிணைக்க முடியும். இந்த தொகுதியை நாங்கள் ஜெயித்துக் கொடுக்கிறோம். ஒரு காலத்தில் எடப்பாடி காங்கிரசின் முனிசிபாலிட்டியாக இருந்தது. எனவே மீண்டும் அந்த பதவியை எங்களுக்கு தர வேண்டும். நான் 50 ஆண்டுகளாக காங்கிரஸில் இருந்து விட்டேன். இன்னும் ஒரு பஞ்சாயத்துக்கு கூட மெம்பராக இல்லை. மேடையிலேயே காங்கிரஸ் உதவி சேர்மனை காங்கிரஸ் நிர்வாகி வறுத்தெடுத்த இந்த நிகழ்வு கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது...1
- தவெக தலைவர் விஜய் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக, திருச்சி விமான நிலையத்திலிருந்து பாலக்கரையில் உள்ள மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை பார்ப்பதற்காக முன்னால் சென்ற ஸ்கூட்டியிலிருந்து ஒரு பெண் உள்பட இருவர் தவறி கீழே விழுந்தனர். இதில்,பின்னால் வந்த போலீஸ் வாகனமும் ஸ்கூட்டியில் உரசியது. உடனடியாக விஜய் வாகனத்தில் இருந்து இறங்கி அவரை தூக்கி நலம் விசாரித்து அனுப்பி வைத்தார்.1
- *மலையை உடைக்கும் ஜேசிபி மாபியாக்கள் மீது செய்தி போட்டதால் செய்தியாளர் மீது கொலை வெறி தாக்குதல்* திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அரசு அனுமதியில்லாமல் லஞ்ச அதிகாரிகள் ஆதரவோடு மலையை ஜேசிபி ஹிட்டாச்சி இயந்திரங்களோடு அழித்து வருவது குறித்து செய்தி வெளியிட்ட *கொடைக்கானல் நியூஸ் தமிழ்.நியூஸ் ஜே செய்தியாளர் குறிஞ்சி வேல்* மீது ஜேசிபி ஹிட்டாச்சி பயன்படுத்தும் மாபியா கும்பல் கொலைவெறி தாக்குதல் செய்தியாளருக்கு மண்டை உடைந்து சிகிச்சை மாவட்ட காவல்துறை கொலை வெறி தாக்குதல் நடத்திய குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் செய்தியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் தமிழக பத்திரிக்கையாளர் சங்கத்தின் சார்பாக கோரிக்கை வைக்கின்றோம் தொடர்ந்து இது போன்ற சம்பவத்திற்கு பலத்த கண்டனமும் தெரிவிக்கின்றோம் தொடர்ந்து இதே நிலை நீடித்தால் பத்திரிக்கையாளர் அனைவரும் இணைந்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவதற்கும் தயாராக உள்ளோம்1