Shuru
Apke Nagar Ki App…
திருச்சியில் ஆதவர் அர்ஜுனா கார் மோதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு எலும்பு முறிவு திருச்சி மரக்கடை பகுதியில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அதனை தொடர்ந்து பிரச்சாரம் முடித்துவிட்டு புறப்பட்டு சென்றபோது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர் சதீஷ் என்பவர் மீது ஆதவ் அர்ஜுனாவின் கார் மோதியது. இதில், காவலரின் கால் எலும்பு முறிந்தது. உடனடியாக அங்கு நின்றிருந்த தவெக தொண்டர்கள் அவரை தூக்கிச்சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர்.
Usha arun News
திருச்சியில் ஆதவர் அர்ஜுனா கார் மோதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு எலும்பு முறிவு திருச்சி மரக்கடை பகுதியில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அதனை தொடர்ந்து பிரச்சாரம் முடித்துவிட்டு புறப்பட்டு சென்றபோது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர் சதீஷ் என்பவர் மீது ஆதவ் அர்ஜுனாவின் கார் மோதியது. இதில், காவலரின் கால் எலும்பு முறிந்தது. உடனடியாக அங்கு நின்றிருந்த தவெக தொண்டர்கள் அவரை தூக்கிச்சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- திருச்சி மரக்கடை பகுதியில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அதனை தொடர்ந்து பிரச்சாரம் முடித்துவிட்டு புறப்பட்டு சென்றபோது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர் சதீஷ் என்பவர் மீது ஆதவ் அர்ஜுனாவின் கார் மோதியது. இதில், காவலரின் கால் எலும்பு முறிந்தது. உடனடியாக அங்கு நின்றிருந்த தவெக தொண்டர்கள் அவரை தூக்கிச்சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர்.1
- மணப்பாறை அருகே நடைபெற்ற தொட்டியப்பட்டி பாம்பாளம்மன் கோயில் திருவிழாவையொட்டி,கரகம் பாலித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு நாய்க்கா் இன மக்களின் தேவராட்டம், கரகம் அருள் சக்தியுடன் உயிரூட்டல் நிகழ்வுகள் நடைபெற்றன. தொடா்ந்து பல லட்சம் மதிப்பில் வானவேடிக்கை நிகழ்ச்சி, கரகம் பாலித்து அம்பாள் அருள் சக்தியுடன் ஆலயம் வந்தடைதல் நிகழ்வு நடைபெற்றது. தொடா்ந்து கோயில் வளாகத்தில் பொங்கலிடுதல், அங்கப்பிரதட்சணம், ஆடு - கோழி பலியிடுதல், மாவிளக்கு, கரும்புத்தொட்டில் என பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனா். மாலையில் நாய்க்கா் இன மக்களின் எருது விடும் நிகழ்ச்சி, தேவராட்டம் நடைபெற்றது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு களித்தனர்.1
- குடுமியான்மலை அகிலேண்டேஸ்வரி சமேத சிகாகிரீஸ்வரர் கோவிலில் தெப்போற்சவம் நடந்தது இதில் திரளன பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்திய தொல்பொருள் ஆய்வு சின்னமாகவும் இசைக்கானகல் வெட்டுகளால் புகழ்பெற்றதும், கல்மலையின் பக்கவாட்டில் குடவரையில் செதுக்கப்பட்டு தனித் தன்மையோடு விளங்கி வரும் புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை அகிலாண்டேஸ்வரி சமேத சிகாகிரீஸ்வரர் கோவில் பங்குனித்திருவிழா கடந்த 23-ந்தேதி தொடங்கிது அதனையொட்டி திரளான பக்தர்கள் பால்குடம் மற்றும் அலகு குத்தி நேர்த்திகடன் செலுத்தி வந்தனர் இதையொட்டி கடந்த 31-ந்தேதி தேரோட்டம் நடந்தது அதனையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்போற்சவம் இன்று இரவு நடந்தது. இதையொட்டி காலை நடராஜர் தரிசனமும், இரவு அகிலாண்டேஸ்வரி சமேத சிகாகிரீஸ்வரர் அலங்கார பல்லக்கில் திருவீதி உலாவும் நடந்தது. தொடர்ந்து நெல்லி ஊரணியில் மின்னொளியில் அமைக்கப்பட்ட தெப்பத் தேருக்கு எழுந்தருளினர். தொடர்ந்து அபிஷேகமும் மஹா தீபாராதனையும் நடந்தது. இதையடுத்து தெப்ப உற்சவம் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினரும் ஊர் பொதுமக்களும் செய்திருந்தனர். தெப்பத்திரு விழாவில் விழாவில் திரளான பொதுமக்களும் பக்தர்களும் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அன்னவாசல் போலீசார் செய்திருந்தனர். அகிலாண்டேஸ்வரி சமேத சிகாகிரீஸ்வரர் கோவில் தெப்ப திருவிழாவையொட்டி அன்னவாசல் காவல் துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் இணைந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.1
- திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அதிமுக மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம் இன்று (02-04-2026) வேடசந்தூர் தாசில்தார் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். உடன் குஜிலியம்பாறை வேடசந்தூர் வடமதுரை ஒன்றியங்களைச் சேர்ந்த செயலாளர் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.1
- குளித்தலையில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தெப்ப திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் உள்ள அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தெப்ப திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்வில் அயர்மலையிலிருந்து சுவாமிகள் அலங்காரத்துடன் கொண்டு வரப்பட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தெப்பத்தில் எழுந்தருளி தெப்பக்குளத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார் இந்நிகழ்வில் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்1
- பழநியில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பங்குனி உத்திர திருத்தேரோட்டம் நேற்று நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் திராளன பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்1
- Post by R. Suresh1
- தவெக தலைவர் விஜய் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக, திருச்சி விமான நிலையத்திலிருந்து பாலக்கரையில் உள்ள மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை பார்ப்பதற்காக முன்னால் சென்ற ஸ்கூட்டியிலிருந்து ஒரு பெண் உள்பட இருவர் தவறி கீழே விழுந்தனர். இதில்,பின்னால் வந்த போலீஸ் வாகனமும் ஸ்கூட்டியில் உரசியது. உடனடியாக விஜய் வாகனத்தில் இருந்து இறங்கி அவரை தூக்கி நலம் விசாரித்து அனுப்பி வைத்தார்.1