logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

விராலிமலை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட சுயேட்ச்சையாக 8 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர் விராலிமலை சட்டமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளர்களாக இன்று பாலசுப்பிரமணியன்., திருவேந்திரன், ரமேஷ், பழனிச்சாமி, பாலவேல் முருகேசன், பாலசுப்ரமணியன், ஜோதிவேல், ஆகியோர் இலுப்பூர் தேர்தல் நடத்தும் அலுவலர் வருவாய் கோட்டாட்சியர் கோகுல் சிங்கிடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்

2 hrs ago
user_Batcha
Batcha
செய்தியாளர் இலுப்பூர், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
2 hrs ago

விராலிமலை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட சுயேட்ச்சையாக 8 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர் விராலிமலை சட்டமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளர்களாக இன்று பாலசுப்பிரமணியன்., திருவேந்திரன், ரமேஷ், பழனிச்சாமி, பாலவேல் முருகேசன், பாலசுப்ரமணியன், ஜோதிவேல், ஆகியோர் இலுப்பூர் தேர்தல் நடத்தும் அலுவலர் வருவாய் கோட்டாட்சியர் கோகுல் சிங்கிடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்

More news from தமிழ்நாடு and nearby areas
  • சிவகங்கை மாவட்டம் தேவகோட்டைராம் நகர் பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா முன்னிட்டு முருக வேலுக்கு பால், தயிர், இளநீர் , பஞ்சாமிர்தம் உள்ளிட்ட நவதிரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது தொடர்ந்து சிறப்பு அலங்காரம்,தீபாரதனையுடன் சிறப்பு வழிபாடு நடை பெற்றது , பக்தர்களுக்கு மதிய உணவு சமைக்கப்பட்டது உணவில் சிறப்பு தீபாரதனை காண்பிக்கப்பட்டு சுமார் 1000 க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    1
    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டைராம் நகர் பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா முன்னிட்டு
முருக வேலுக்கு பால், தயிர், இளநீர் , பஞ்சாமிர்தம் உள்ளிட்ட நவதிரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது தொடர்ந்து சிறப்பு அலங்காரம்,தீபாரதனையுடன் சிறப்பு வழிபாடு நடை பெற்றது , பக்தர்களுக்கு மதிய உணவு சமைக்கப்பட்டது உணவில் சிறப்பு தீபாரதனை காண்பிக்கப்பட்டு 
சுமார் 1000 க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    17 hrs ago
  • மதச்சார்பற்ற கூட்டணி கட்சி ஆத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக ஒன்றிய செயல் வீரர்கள் கூட்டம் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் ஆதி லட்சுமி புரத்தில் நடைபெற்றது. திமுக மாநில துணை பொதுச் செயலாளரும் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளரும் ஆகிய ஐ.பெரியசாமி கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். நிகழ்ச்சியில் மதசார்பற்ற கூட்டணி கட்சி மாவட்ட, ஒன்றிய, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந் திரளாக கலந்து கொண்டனர்.
    1
    மதச்சார்பற்ற கூட்டணி கட்சி ஆத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக ஒன்றிய செயல் வீரர்கள் கூட்டம் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் ஆதி லட்சுமி புரத்தில் நடைபெற்றது. திமுக மாநில துணை பொதுச் செயலாளரும் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளரும் ஆகிய ஐ.பெரியசாமி கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். நிகழ்ச்சியில் மதசார்பற்ற கூட்டணி கட்சி மாவட்ட, ஒன்றிய, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந் திரளாக கலந்து கொண்டனர்.
    user_RAJA
    RAJA
    பத்திரிகையாளர் ஆத்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    4 hrs ago
  • தஞ்சாவூர் மாவட்டம்,  பாபநாசம் சட்ட மன்ற தொகுதி  அதிமுக  கட்சி செயல்வீரர்கள் மற்றும் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் பாபநாசம் தனியார் திருமண மண்டபத்தில்  நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு  தஞ்சை மேற்கு மாவட்ட  செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ரெத்தினசாமி   தலைமையிலும் மாநில கழகக் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் சரவணன் முன்னிலையிலும்  அதிமுக வேட்பாளர் துரை. சண்முகபிரபுவை அதிமுக நிர்வாகிகளுக்கு அறிமுகப்படுத்தி அதிமுக சாதனைகளை எடுத்துக் கூறி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என நிர்வாகிகள் மத்தியில் கேட்டுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து உமளாபாடி கிராமத்தைச் சேர்ந்த திமுகவினர் பெண்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இணைந்த அனைவருக்கும் பொன்னாடை போற்றி அதிமுகவின் வரவேற்றனர்.    கூட்டத்தில் அதிமுக மாவட்ட ஒன்றிய நகர கிளை கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    1
    தஞ்சாவூர் மாவட்டம்,  பாபநாசம் சட்ட மன்ற தொகுதி  அதிமுக  கட்சி செயல்வீரர்கள் மற்றும் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் பாபநாசம் தனியார் திருமண மண்டபத்தில்  நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு  தஞ்சை மேற்கு மாவட்ட  செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ரெத்தினசாமி   தலைமையிலும் மாநில கழகக் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் சரவணன் முன்னிலையிலும்  அதிமுக வேட்பாளர் துரை. சண்முகபிரபுவை அதிமுக நிர்வாகிகளுக்கு அறிமுகப்படுத்தி அதிமுக சாதனைகளை எடுத்துக் கூறி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என நிர்வாகிகள் மத்தியில் கேட்டுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து உமளாபாடி கிராமத்தைச் சேர்ந்த திமுகவினர் பெண்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இணைந்த அனைவருக்கும் பொன்னாடை போற்றி அதிமுகவின் வரவேற்றனர்.    கூட்டத்தில் அதிமுக மாவட்ட ஒன்றிய நகர கிளை கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    user_சிவகுமார்.மு
    சிவகுமார்.மு
    பத்திரிகையாளர் பாபநாசம், தஞ்சாவூர், தமிழ்நாடு•
    15 hrs ago
  • 2026 தேர்தலை முன்னிட்டு திமுக எம்பி கனிமொழி மானாமதுரையில் பரப்புரை தொடங்கினார். வேட்பாளர் தமிழரசி ரவிக்குமாருக்கு ஆதரவு திரட்டிய அவர், திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துரைத்து மக்களிடம் வாக்கு சேகரித்தார். பெண்கள் நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல திட்டங்கள் குறித்து பேசி, திமுக கூட்டணிக்கு ஆதரவு கோரினார்.
    1
    2026 தேர்தலை முன்னிட்டு திமுக எம்பி கனிமொழி மானாமதுரையில் பரப்புரை தொடங்கினார். வேட்பாளர் தமிழரசி ரவிக்குமாருக்கு ஆதரவு திரட்டிய அவர், திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துரைத்து மக்களிடம் வாக்கு சேகரித்தார். பெண்கள் நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல திட்டங்கள் குறித்து பேசி, திமுக கூட்டணிக்கு ஆதரவு கோரினார்.
    user_Santhosh Kumar V
    Santhosh Kumar V
    பத்திரிகையாளர் மானாமதுரை, சிவகங்கை, தமிழ்நாடு•
    5 hrs ago
  • Post by Sri ram
    1
    Post by Sri ram
    user_Sri ram
    Sri ram
    மன்னார்குடி, திருவாரூர், தமிழ்நாடு•
    14 hrs ago
  • விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி கலந்து கொண்டு உரையாற்றினார். கூட்டத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் கீழ் திருச்சுழி தொகுதியில் செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து விளக்கப்பட்டது. மேலும், இந்த நல்லாட்சி தொடர்ந்து நீடிக்கவும், தொகுதியின் வளர்ச்சி பாதை முன்னேறவும், வரும் தேர்தலில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில் ஒன்றியக் கழகச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    3
    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி கலந்து கொண்டு உரையாற்றினார்.
கூட்டத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் கீழ் திருச்சுழி தொகுதியில் செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து விளக்கப்பட்டது.
மேலும், இந்த நல்லாட்சி தொடர்ந்து நீடிக்கவும், தொகுதியின் வளர்ச்சி பாதை முன்னேறவும், வரும் தேர்தலில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் ஒன்றியக் கழகச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    user_குமார்
    குமார்
    Kariapatti, Virudhunagar•
    1 hr ago
  • திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திருச்சி உழவர் சந்தை அருகே பிரசார பொது கூட்டத்தில் பேசினார். கூட்டம் முடிந்து முதல்-அமைச்சர் சென்ற பிறகு மேடை அருகே இருந்த தி.மு.க. தொண்டரின் சட்டைப்பையில் இருந்து ஒருவர் ரூ.5 ஆயிரத்து 500-ஐ ஜேப்படி செய்தார். பின்னர் அவர் தப்பிச்செல்ல முயன்றபோது, அங்கிருந்த தொண்டர்கள் அவரை பிடித்து தாக்கினர். பின்னர், தில்லைநகர் போலீசிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் சென்னையை சேர்ந்த பாஸ்கர் (வயது 55) என்பதும், பணத்தை அவர் தான் ஜேப்படி செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர்.
    1
    திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திருச்சி உழவர் சந்தை அருகே பிரசார பொது கூட்டத்தில் பேசினார். கூட்டம் முடிந்து முதல்-அமைச்சர் சென்ற பிறகு மேடை அருகே இருந்த தி.மு.க. தொண்டரின் சட்டைப்பையில் இருந்து ஒருவர் ரூ.5 ஆயிரத்து 500-ஐ ஜேப்படி செய்தார். பின்னர் அவர் தப்பிச்செல்ல முயன்றபோது, அங்கிருந்த தொண்டர்கள் அவரை பிடித்து தாக்கினர். பின்னர், தில்லைநகர் போலீசிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் சென்னையை சேர்ந்த பாஸ்கர் (வயது 55) என்பதும், பணத்தை அவர் தான் ஜேப்படி செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    16 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் சித்தரேவு,அய்யம்பாளையம் பகுதிகளில் உள்ள குடோன்களில் தேங்காய் உரிக்கப்பட்டு அதன் மட்டைகளை நார் கம்பெனிகள் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு பிரத்யேகமாக பாடி கட்டப்பட்ட லாரிகள் மூலமாக எடுத்துச் செல்லப்படும் மேல் புறத்தில் பாதுகாப்பாக தார்ப்பாய் கட்டாமல் கொண்டு செல்வதால் வேகதடைகளில் ஏறி இறங்கும் போதும் மரத்தின் கிளைகள் தட்டும் போதும் மட்டைகள் கீழே கொட்டுவதால் விபத்து அபாயம் ஏற்படுகிறது.
    1
    திண்டுக்கல் மாவட்டம் சித்தரேவு,அய்யம்பாளையம் பகுதிகளில் உள்ள  குடோன்களில் தேங்காய் உரிக்கப்பட்டு அதன் மட்டைகளை நார் கம்பெனிகள் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு பிரத்யேகமாக பாடி கட்டப்பட்ட லாரிகள் மூலமாக எடுத்துச் செல்லப்படும் மேல் புறத்தில் பாதுகாப்பாக தார்ப்பாய் கட்டாமல் கொண்டு செல்வதால் வேகதடைகளில் ஏறி இறங்கும் போதும் மரத்தின் கிளைகள் தட்டும் போதும் மட்டைகள் கீழே கொட்டுவதால் விபத்து அபாயம் ஏற்படுகிறது.
    user_RAJA
    RAJA
    பத்திரிகையாளர் ஆத்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    11 hrs ago
  • பாபநாசம் சட்டமன்ற தொகுதி திமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் திருக்கருகாவூர் அருகே தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தஞ்சை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் அன்பழகன் எம்எல்ஏ தலைமை வகித்தார். தொகுதி பொறுப்பாளர் எம்.ரெங்கசாமி, ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி,  திமுக  ஒன்றிய செயலாளர்கள். பி.எஸ்.குமார், தாமரைச்செல்வன். நாசர், ஆகியோர் முன்னிலை வகித்தனர். அம்மாபேட்டை  திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் தியாக சுரேஷ் அனைவரையும் வரவேற்று பேசினார். கூட்டத்தில் காங்கிரஸ், தேமுதிக, விசிக, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய ஜனநாயக கட்சி உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு வரும் சட்ட மன்ற தேர்தலில் பாபநாசத்தில் போட்டியிடும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர் ஷாஜகானை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என பேசினர். கூட்டத்தில் பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் ஷாஜகான் கலந்து கொண்டு தனக்கு வாக்களித்து வெற்றிபெற செய்யுமாறு  பேசினார். இந்த கூட்டத்தில்  மாவட்ட துணை செயலாளர்கள் கோவிஅய்யாராசு, துரைமுருகன்,   முன்னாள் தொகுதி பொறுப்பாளர் கே.வீ.கலைச்செல்வன். மற்றும் திமுக, காங்கிரஸ், உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
    1
    பாபநாசம் சட்டமன்ற தொகுதி திமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் திருக்கருகாவூர் அருகே  தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தஞ்சை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் அன்பழகன் எம்எல்ஏ தலைமை வகித்தார். தொகுதி பொறுப்பாளர் எம்.ரெங்கசாமி, ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி,  திமுக  ஒன்றிய செயலாளர்கள். பி.எஸ்.குமார், தாமரைச்செல்வன். நாசர், ஆகியோர் முன்னிலை வகித்தனர். அம்மாபேட்டை  திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் தியாக சுரேஷ் அனைவரையும் வரவேற்று பேசினார். கூட்டத்தில் காங்கிரஸ், தேமுதிக, விசிக, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய ஜனநாயக கட்சி உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு வரும் சட்ட மன்ற தேர்தலில் பாபநாசத்தில் போட்டியிடும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர் ஷாஜகானை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என பேசினர். கூட்டத்தில் பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் ஷாஜகான் கலந்து கொண்டு தனக்கு வாக்களித்து வெற்றிபெற செய்யுமாறு  பேசினார். இந்த கூட்டத்தில்  மாவட்ட துணை செயலாளர்கள் கோவிஅய்யாராசு, துரைமுருகன்,   முன்னாள் தொகுதி பொறுப்பாளர் கே.வீ.கலைச்செல்வன். மற்றும் திமுக, காங்கிரஸ், உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
    user_சிவகுமார்.மு
    சிவகுமார்.மு
    பத்திரிகையாளர் பாபநாசம், தஞ்சாவூர், தமிழ்நாடு•
    15 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.