*மலையை உடைக்கும் ஜேசிபி மாபியாக்கள் மீது செய்தி போட்டதால் செய்தியாளர் மீது கொலை வெறி தாக்குதல்* திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அரசு அனுமதியில்லாமல் லஞ்ச அதிகாரிகள் ஆதரவோடு மலையை ஜேசிபி ஹிட்டாச்சி இயந்திரங்களோடு அழித்து வருவது குறித்து செய்தி வெளியிட்ட *கொடைக்கானல் நியூஸ் தமிழ்.நியூஸ் ஜே செய்தியாளர் குறிஞ்சி வேல்* மீது ஜேசிபி ஹிட்டாச்சி பயன்படுத்தும் மாபியா கும்பல் கொலைவெறி தாக்குதல் செய்தியாளருக்கு மண்டை உடைந்து சிகிச்சை மாவட்ட காவல்துறை கொலை வெறி தாக்குதல் நடத்திய குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் செய்தியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் தமிழக பத்திரிக்கையாளர் சங்கத்தின் சார்பாக கோரிக்கை வைக்கின்றோம் தொடர்ந்து இது போன்ற சம்பவத்திற்கு பலத்த கண்டனமும் தெரிவிக்கின்றோம் தொடர்ந்து இதே நிலை நீடித்தால் பத்திரிக்கையாளர் அனைவரும் இணைந்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவதற்கும் தயாராக உள்ளோம்
*மலையை உடைக்கும் ஜேசிபி மாபியாக்கள் மீது செய்தி போட்டதால் செய்தியாளர் மீது கொலை வெறி தாக்குதல்* திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அரசு அனுமதியில்லாமல் லஞ்ச அதிகாரிகள் ஆதரவோடு மலையை ஜேசிபி ஹிட்டாச்சி இயந்திரங்களோடு அழித்து வருவது குறித்து செய்தி வெளியிட்ட *கொடைக்கானல் நியூஸ் தமிழ்.நியூஸ் ஜே செய்தியாளர் குறிஞ்சி வேல்* மீது ஜேசிபி ஹிட்டாச்சி பயன்படுத்தும் மாபியா கும்பல் கொலைவெறி தாக்குதல் செய்தியாளருக்கு மண்டை உடைந்து சிகிச்சை மாவட்ட காவல்துறை கொலை வெறி தாக்குதல் நடத்திய குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் செய்தியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் தமிழக பத்திரிக்கையாளர் சங்கத்தின் சார்பாக கோரிக்கை வைக்கின்றோம் தொடர்ந்து இது போன்ற சம்பவத்திற்கு பலத்த கண்டனமும் தெரிவிக்கின்றோம் தொடர்ந்து இதே நிலை நீடித்தால் பத்திரிக்கையாளர் அனைவரும் இணைந்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவதற்கும் தயாராக உள்ளோம்
- தவெக தலைவர் விஜய் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக, திருச்சி விமான நிலையத்திலிருந்து பாலக்கரையில் உள்ள மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை பார்ப்பதற்காக முன்னால் சென்ற ஸ்கூட்டியிலிருந்து ஒரு பெண் உள்பட இருவர் தவறி கீழே விழுந்தனர். இதில்,பின்னால் வந்த போலீஸ் வாகனமும் ஸ்கூட்டியில் உரசியது. உடனடியாக விஜய் வாகனத்தில் இருந்து இறங்கி அவரை தூக்கி நலம் விசாரித்து அனுப்பி வைத்தார்.1
- ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொத்தப்பட்டி,மணியாரம் பட்டி,சித்தைய கவுண்டன்பட்டி ஆகிய திமுக வேட்பாளர் மகாராஜன் வாக்கு சேவைக்கு சென்றபோது அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் பகுதியில் ஐந்து ஆண்டுகளாக எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்யவில்லை குடிநீர் சாலை வசதி உள்ளிட்ட வசதிகள் செய்து தரவில்லை என வேட்பாளர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது1
- மணப்பாறை அருகே நடைபெற்ற தொட்டியப்பட்டி பாம்பாளம்மன் கோயில் திருவிழாவையொட்டி,கரகம் பாலித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு நாய்க்கா் இன மக்களின் தேவராட்டம், கரகம் அருள் சக்தியுடன் உயிரூட்டல் நிகழ்வுகள் நடைபெற்றன. தொடா்ந்து பல லட்சம் மதிப்பில் வானவேடிக்கை நிகழ்ச்சி, கரகம் பாலித்து அம்பாள் அருள் சக்தியுடன் ஆலயம் வந்தடைதல் நிகழ்வு நடைபெற்றது. தொடா்ந்து கோயில் வளாகத்தில் பொங்கலிடுதல், அங்கப்பிரதட்சணம், ஆடு - கோழி பலியிடுதல், மாவிளக்கு, கரும்புத்தொட்டில் என பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனா். மாலையில் நாய்க்கா் இன மக்களின் எருது விடும் நிகழ்ச்சி, தேவராட்டம் நடைபெற்றது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு களித்தனர்.1
- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் இஸ்லாமிய ஜமாத்தார்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி, வரும் சட்டமன்றத் தேர்தலில் காரைக்குடி தொகுதியில் அக்கட்சியின் சார்பில் போட்டியிடும் கிழக்கு மாவட்டச் செயலாளர் மருத்துவர் T.K. பிரபு அவர்கள் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதன் ஒரு பகுதியாக, சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டாணம் சாலையில் அமைந்துள்ள பெரிய பள்ளிவாசலுக்கு சென்ற அவர், அங்குள்ள ஜமாத்தார்களை நேரில் சந்தித்து வரும் தேர்தலில் தனக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். இந்தச் சந்திப்பின் போது, ஜமாத் தலைவர் மஹபூப் பாட்சா மற்றும் பள்ளிவாசலின் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர். ஜமாத்தார்களிடம் கட்சியின் கொள்கைகளையும், தொகுதிக்கான தனது திட்டங்களையும் மருத்துவர் பிரபு எடுத்துரைத்தார். இந்த நிகழ்வில் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். இஸ்லாமிய சமூகத்தினரின் வாக்குகளைக் கவரும் நோக்கில் வேட்பாளரின் இந்தச் சந்திப்பு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.1
- விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி கலந்து கொண்டு உரையாற்றினார். கூட்டத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் கீழ் திருச்சுழி தொகுதியில் செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து விளக்கப்பட்டது. மேலும், இந்த நல்லாட்சி தொடர்ந்து நீடிக்கவும், தொகுதியின் வளர்ச்சி பாதை முன்னேறவும், வரும் தேர்தலில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில் ஒன்றியக் கழகச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.3
- விராலிமலை சட்டமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளர்களாக இன்று பாலசுப்பிரமணியன்., திருவேந்திரன், ரமேஷ், பழனிச்சாமி, பாலவேல் முருகேசன், பாலசுப்ரமணியன், ஜோதிவேல், ஆகியோர் இலுப்பூர் தேர்தல் நடத்தும் அலுவலர் வருவாய் கோட்டாட்சியர் கோகுல் சிங்கிடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்1
- கோவிலில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பொருட்கள் மட்டும் பணத்தை திருடிய சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டியில் காவல் நிலையம் எதிரே பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு பிள்ளை செல்வ முத்துமாரியம்மன் கோவிலில் அமைந்துள்ளது ப இக்கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே கோவில் உண்டியல் திறக்கப்பட்டு பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் க மற்றும் சாமிமுகம், கால், கை, உருவம், பொருத்திய தங்க நாணயங்கள் உண்டியலில் போடுவதை வழக்கமாக உள்ளது ப இந்நிலையில் இரவு கோவிலின் உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பக்தர்கள் செலுத்திய காணிக்கை உண்டியலை உடைத்து அதில் இருந்து பணம் மற்றும் தங்க நாணயங்களை திருடி சென்றுள்ளனர். மேலும் காவல் நிலையம் அருகே பொதுமக்கள் அதிகமாக செல்லும் பிரதான சாலையில் உள்ள இக்கோவிலில் இரவு மர்ம நபர்கள் கோவிலின் மதிலில் ஏறி குதித்து உள்ளே சென்று, உண்டியலை உடைத்து உள்ளே இருந்த பணம் மற்றும் பொருட்களை எடுத்து சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது . மேலும் இதேபோன்று தொடர்ந்து தேவதானப்பட்டி பகுதிகளில் திருட்டு சம்பவம் அதிக அளவில் நடைபெற்று வருவதாலும், இரவு நேரங்களில் முறையாக காவல் துறையினர் ரோந்து பணியில் செல்லாமல் இருப்பதே இது போன்ற திருட்டு சம்பவம் அதிகமாக நடைபெற்று வருவதாக சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து தேவதானப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்1
- திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திருச்சி உழவர் சந்தை அருகே பிரசார பொது கூட்டத்தில் பேசினார். கூட்டம் முடிந்து முதல்-அமைச்சர் சென்ற பிறகு மேடை அருகே இருந்த தி.மு.க. தொண்டரின் சட்டைப்பையில் இருந்து ஒருவர் ரூ.5 ஆயிரத்து 500-ஐ ஜேப்படி செய்தார். பின்னர் அவர் தப்பிச்செல்ல முயன்றபோது, அங்கிருந்த தொண்டர்கள் அவரை பிடித்து தாக்கினர். பின்னர், தில்லைநகர் போலீசிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் சென்னையை சேர்ந்த பாஸ்கர் (வயது 55) என்பதும், பணத்தை அவர் தான் ஜேப்படி செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர்.1
- முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பழனி செட்டிப்பட்டி பேரூராட்சியில் உள்ள குடியிருப்போர் சங்கத்தினர் மற்றும் பல்வேறு சமூகத்தை சேர்ந்த முக்கியஸ்தர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். தேனி மாவட்டம் போடி சட்டமன்றத் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். தனது தேர்தல் பிரச்சாரத்தை துவங்கிய பன்னீர்செல்வம் இன்று பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் உள்ள பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் மற்றும் குடியிருப்போர் நல சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பல்வேறு சமுதாய சேர்ந்த முக்கியஸ்தர்களுக்கு பாத்தியப்பட்ட கோவில்களில் வழிபாடு நடத்திய பின்பு அவர்களுடன் சிறிது நேரம் உரையாடி அனைவருக்கும் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி தனது வாக்கினை சேகரித்தார். அவருடன் தேனி வடக்கு மாவட்ட செயலாளரும் தேனி மக்களவை உறுப்பினருமான தங்க தமிழ் செல்வன் அவருடன் இணைந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.1